Published : 24 May 2020 17:46 pm

Updated : 24 May 2020 17:46 pm

 

Published : 24 May 2020 05:46 PM
Last Updated : 24 May 2020 05:46 PM

பூரட்டாதி, உத்திரட்டாதி, ரேவதி; வார நட்சத்திர பலன்கள் - (மே 25 முதல் 31 வரை) 

vaara-natchatira-palangal

’சொல்வாக்கு ஜோதிடர்’ ஜெயம் சரவணன்


பூரட்டாதி -
முயற்சிகளில் முன்னேற்றம் ஏற்படும் வாரம்.
ஆரோக்கியத்தில் முன்னேற்றம் ஏற்படும். மருத்துவச் செலவுகள் வெகுவாக குறையும். தாயாரின் உடல்நிலை திருப்திகரமாக இருக்கும். தாய்வழி உறவுகளிடம் ஏற்பட்ட பகை உணர்வு மாறும். சகோதர சகோதரிகளிடம் ஒற்றுமை ஏற்படும்.
உத்தியோகத்தில் எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும். தொழிலில் நல்ல வளர்ச்சி இருக்கும். வியாபார வளர்ச்சி சீராக இருக்கும். வியாபாரம் தொடர்பாக புதிய வாய்ப்புகள் கிடைக்கும். குடும்பத்தில் அமைதி நிலவும்.
திருமணம் உள்ளிட்ட சுப நிகழ்வுகள் நடப்பதற்கான வாய்ப்புகள் உண்டு. வீடு மனை தொடர்பான சொத்து விஷயங்கள் சாதகமாக இருக்கும். கலைஞர்களுக்கு நல்ல வாய்ப்புகள் கிடைக்கும். மாணவர்கள் கல்வியில் முன்னேற்றம் ஏற்படும்.

இந்த வாரம் -

திங்கள்-
திட்டமிட்ட காரியங்களைத் திட்டமிட்டபடியே செய்து முடிப்பீர்கள். பணவரவு பல வழிகளிலும் இருக்கும். பல விதத்திலும் வருமானம் வருவதற்கான வாய்ப்புகள் உண்டு. வியாபார வளர்ச்சி அமோகமாக இருக்கும். தொழில் வளர்ச்சி சிறப்பாக இருக்கும். குடும்பத்திற்குத் தேவையான பொருட்களை வாங்கித் தந்து குடும்பத்தினரை மகிழ்ச்சியாக வைத்திருப்பீர்கள்.

செவ்வாய்-
எடுத்துக்கொண்ட முயற்சிகளில் முன்னேற்றம் ஏற்படும். உத்தியோகத்தில் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். தாமதமாகிக் கொண்டிருந்த அலுவலக வேலைகள் சுறுசுறுப்பாக செய்து முடிப்பீர்கள். சொத்து சம்பந்தமாக எதிர்பார்த்த கடன் உதவி கிடைக்கும்.

புதன்-
அலைச்சல்களும் அதனால் உடல் உபாதைகளும் ஏற்படும். சிறிய அளவிலான மருத்துவச் செலவு ஏற்பட வாய்ப்பு உண்டு. மற்றவர்கள் நலனுக்காக நீங்கள் அதிகம் உழைக்க வேண்டியதிருக்கும்.

வியாழன்-
ஆரோக்கிய பிரச்சினைகள் முற்றிலுமாக விலகும். அல்லது மாற்று மருத்துவ சிகிச்சை மேற் கொள்வீர்கள். அதன் காரணமாக நோய்த் தாக்கம் வெகுவாகக் குறையும் வாய்ப்பு உள்ளது. கடன் பிரச்சினைகள் முடிவுக்கு வரும். பழைய பொருட்களை மாற்றி புதிய பொருட்கள் வாங்குவீர்கள். நண்பர்களால் ஆதாயம் ஏற்படும். வியாபார வளர்ச்சி சீராக இருக்கும்.

வெள்ளி-
பேச்சுவார்த்தைகளில் கவனமாக இருக்கவேண்டும். அலுவலகத்திலும் அக்கம்பக்கத்தினருடனும் கவனமாகப் பேசுங்கள். தேவையற்ற விவாதங்களைச் செய்ய வேண்டாம்.

சனி-
மனதை வருத்திக் கொண்டிருந்த முக்கியமான பிரச்சினைகள் இன்று முடிவுக்கு வரும். தொழில் தொடர்பான ஒப்பந்தங்கள் கிடைக்கும். எதிர்பார்த்த கடனுதவி கிடைக்கும். குடும்பத்தினரின் தேவைகளைப் பூர்த்தி செய்து தருவீர்கள். அத்தியாவசியப் பொருட்களை வாங்குவீர்கள்.

ஞாயிறு-
குடும்பத்தில் ஒற்றுமை நீடிக்கும். மனவருத்தங்கள் நீங்கும். வியாபாரத்தில் வளர்ச்சி எதிர்பார்த்தபடியே இருக்கும். லாபம் கிடைக்கப் பெறுவீர்கள். தொழிலுக்குத் தேவையான சலுகைகளும் உதவிகளும் கிடைக்கும்.திருமணம் உள்ளிட்ட சுபகாரிய பேச்சுவார்த்தைகள் முடிவுக்கு வரும்.

வணங்கவேண்டிய தெய்வம்-
பிரச்சினைகளைத் தீர்க்கும் ஸ்ரீ துர்கை வழிபாடு செய்யுங்கள். நன்மைகள் அதிகமாகும்.
****************************


உத்திரட்டாதி -
பண வரவுகளால் மன நிறைவு உண்டாகும்.
குடும்பத்தில் ஒற்றுமை நிலவும். குடும்பத்தில் இதுவரை இருந்து வந்த பிரச்சினைகள் நல்ல முடிவுக்கு வரும். இளைய சகோதரியின் குடும்பத்துக்கு உதவிகள் செய்ய வேண்டிய சூழ்நிலை உருவாகும். சகோதரிகளின் குழந்தைகளுக்கு சுபகாரிய விசேஷங்கள் முடிவாகும்.
பெண்களுக்கு திருமணம் உள்ளிட்ட சுபகாரியங்கள் முடிவாகும். திருமணம் நடந்து குழந்தை பாக்கியத்திற்காக ஏங்கியவர்களுக்கு இந்த வாரம் குழந்தை பாக்கியம் பற்றிய நல்ல தகவல் உறுதியாகும்.
அலுவலகப் பணியில் கூடுதல் பொறுப்புகள் கிடைக்கும். வழக்கமாகச் செய்யும் வேலையை விட அதிகமாக வேலைகளைச் செய்ய வேண்டியது வரும்.
வியாபார வளர்ச்சி அமோகமாக இருக்கும். தொழில் தொடர்பாகத் தேவையான அனைத்து உதவிகளும் கிடைக்கும். சொத்து சம்பந்தமான பிரச்சினைகள் ஏதும் இருந்தால் இந்த வாரம் அந்தப் பிரச்சினைகள் அனைத்தும் தீரும். மாணவர்களுக்கு கல்வியில் எதிர்பார்த்த முன்னேற்றம் கிடைக்கும்.

இந்த வாரம் -

திங்கள்-
வருமானம் இரு மடங்காக இருக்கும். எதிர்பார்த்த உதவிகள் அனைத்தும் கிடைக்கும். உத்தியோகத்தில் நீண்ட நாட்களாக வசூலாகாத பணம் வசூலாகும். புதிதாக தொழில் தொடங்கும் முயற்சி சாதகமாக இருக்கும். சிறு தூரப் பயணங்களால் வியாபார விஷயங்கள் சாதகமாக முடியும்.

செவ்வாய்-
வீண் விரயங்கள் ஏற்படும் வாய்ப்பு உண்டு. வீட்டு உபயோகப் பொருட்கள் பழுது ஏற்படும். செலவுகள் எதிர்பாராத அளவிற்கு இருக்கும். அலுவலகம் மற்றும் பணிபுரியும் இடங்களில் வீண் விவாதங்கள் செய்ய வேண்டாம்.

புதன்-
செலவுகளும் செலவுகளுக்கேற்ற வருமானமும் உண்டாகும். நீண்ட நாள் மனதை வருத்திக் கொண்டு இருந்த பிரச்சினை இன்று முடிவுக்கு வரும். வங்கிக் கடன் தொடர்பான சிக்கல்கள் தீரும். தொழில் தொடர்பான ஒப்பந்தங்கள் ஏற்படும். மாணவர்களுக்கு எதிர்பார்த்த கல்வி தொடர்பான உதவிகள் கிடைக்கும்.

வியாழன்-
அலுவல வேலையில் சக ஊழியர்களுக்கு உதவுவீர்கள். நண்பர்களுடனான தொழில் தொடர்பான பேச்சுவார்த்தைகள் சாதகமாக இருக்கும். வியாபாரத்தில் நீண்டநாளாக எதிர்பார்த்துக் கொண்டிருந்த நல்ல தகவல் கிடைக்கும்.

வெள்ளி-
நல்ல பலன்கள் நடைபெறும் நாள். ஆரோக்கிய பிரச்சினைகள் தீரும். கடன் தொடர்பான முக்கியமான பிரச்சினை ஒன்று முடிவுக்கு வரும். சொத்து சம்பந்தமான பாகப்பிரிவினைகள் சுமுகமாக முடிவடையும். தொழில் தொடர்பாக தேவையான உதவிகள் கிடைக்கும் வியாபார வளர்ச்சி சீராக இருக்கும் லாபம் கிடைக்கப் பெறுவீர்கள்.

சனி-
செலவுகள் எதிர்பாராத வகையில் ஏற்படும். சிக்கனமாக இருக்க வேண்டியது அவசியம்.நண்பர்களுடனும் உறவினர்களுடனும் பேசும்போது கவனமாக இருங்கள். வார்த்தைகளில் கவனம் தேவை. குடும்பத்தாருடன் இணக்கமாக இருங்கள். அவர்களிடம் தேவையில்லாத வாக்கு வாதங்கள் செய்து கொண்டிருக்க வேண்டாம்.

ஞாயிறு-
நீண்ட நாளாக எதிர்பார்த்துக் கொண்டிருந்த நல்ல தகவல் கிடைக்கும். சுபகாரிய பேச்சுவார்த்தைகள் சுமுகமாக முடிவடையும். வியாபார ஒப்பந்தங்கள் நிறைவேறும். தொழில் தொடர்பான முக்கிய சந்திப்புகளில் புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கப் பெறுவீர்கள்.

வணங்க வேண்டிய தெய்வம்-
ஸ்ரீ மகாசக்தி பிரத்தியங்கிரா அன்னையை வணங்குங்கள். நன்மைகள் அதிகரிக்கும். தேவைகள் பூர்த்தியாகும். தடைகள் அகலும்.
***************************


ரேவதி -
எதிர்பார்த்த அனைத்து உதவிகளும் கிடைக்கும். பணத்தேவைகள் உடனுக்குடன் பூர்த்தியாகும்.
கடன் தொடர்பான பிரச்சினைகள் முடிவுக்கு வரும். குடும்பத்தில் ஏற்பட்டிருந்த குழப்பமான நிலை மாறும். வாழ்க்கைத் துணையின் உறவினர்களால் உதவிகள் கிடைக்கும்.
சகோதர ஒற்றுமை மேலோங்கும். பாகப்பிரிவினைகள் ஒழுங்காகும். தந்தையின் உடல்நலத்தில் முன்னேற்றம் ஏற்படும். அலுவலகத்தில் சக ஊழியர்களின் உதவியால் எடுத்துக்கொண்ட வேலைகளை விரைவாக செய்து முடிப்பீர்கள்.
தொழில் மற்றும் வியாபாரத்தில் எதிர்பார்த்த அனைத்து உதவிகளும் கிடைக்கும். அரசு வழியில் தேவையான உதவிகள் கிடைக்கப் பெறுவீர்கள். வங்கிக் கடன் கிடைக்கும் வாய்ப்பு உள்ளது.
வியாபாரத்தில் புதிய கிளைகள் தொடங்கத் தேவையான உதவிகள் கிடைக்கும். பெண்களுக்கு புதிய முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். சுயதொழில் தொடர்பான விஷயங்களில் ஆதரவு கிடைக்கும். குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் பற்றிய பேச்சுவார்த்தைகளில் முன்னேற்றம் ஏற்படும். கலைஞர்களுக்கு புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும்.

இந்த வாரம் -

திங்கள்-
தாமதமாகிக் கொண்டிருந்த வேலைகளை இன்று முழுமூச்சாக செய்து முடிப்பீர்கள். தொழில் தொடர்பான நல்ல வாய்ப்புகள் கிடைக்கும். வியாபார வளர்ச்சி அமோகமாக இருக்கும். பெண்களின் திருமணம் தொடர்பான விஷயங்கள் சாதகமாக இருக்கும்.

செவ்வாய்-
எடுத்துக்கொண்ட வேலைகள் அனைத்தும் முழு வெற்றியைக் கொடுக்க கூடியதாக இருக்கும். பணவரவு தாராளமாக இருக்கும். எதிர்பார்த்த விஷயங்கள் அனைத்தும் உங்களுக்கு சாதகமாக இருக்கும். வியாபாரத்தில் வரவேண்டிய பாக்கிகள் வசூலாகும். உறவினர்களிடம் ஏற்பட்ட வருத்தங்கள் நீங்கும்.

புதன்-
எதிர்காலம் பற்றிய கவலை தோன்றும். வாழ்க்கைத்துணையின் ஆரோக்கிய பாதிப்புகள் குறையும். மருத்துவச் செலவுகள் குறையும். தொழிலில் ஒரு சில விஷயங்களைத் திட்டமிட்டு செயல்படுத்தி வெற்றிக்கு வழி வகுப்பீர்கள்.

வியாழன்-
நல்ல விஷயங்கள் அதிகமாக ஏற்படும் நாள். மனம் மகிழும் சம்பவங்கள் நடக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். தொலைபேசி வழித் தகவல் ஆனந்தத்தைத் தரும். மொத்தத்தில் மகிழ்ச்சிகரமான நாள்.



வெள்ளி-
குடும்பத்தினர் தேவைகள் அனைத்தையும் பூர்த்தி செய்து தரக்கூடிய நாளாக இருக்கும். தொழில் தொடர்பான புதிய தொழில்நுட்பங்களைப் பயன்படுத்த ஆரம்பிப்பீர்கள்.வியாபார வளர்ச்சி சீராக இருக்கும்.

சனி-
சகோதரர்களுடன் மனம்விட்டுப் பேசி முக்கியமான பிரச்சினைகளில் தீர்வு காண்பீர்கள். அலுவலக வேலைகளில் இருந்த சுணக்கமான நிலை மாறி, எளிதாக செய்து முடிப்பீர்கள். வியாபாரத்தில் புதிய வாடிக்கையாளர்கள் கிடைக்கப்பெறுவீர்கள்.

ஞாயிறு-
தேவையற்ற பயணங்களை மேற்கொள்ள வேண்டாம். வாகனப் பழுது சரி செய்வீர்கள். வீட்டு உபயோகப் பொருட்களில் ஏற்பட்ட பழுதுகளை சரி செய்வீர்கள் அல்லது புதிதாக மாற்றி வாங்குவீர்கள். செலவுகள் அதிகமாக ஏற்படும் நாள்.

வணங்க வேண்டிய தெய்வம்-
முருகப்பெருமானை வணங்குங்கள். சண்முக கவசம் பாராயணம் செய்யுங்கள். நன்மைகள் அதிக அளவில் ஏற்படும். நினைத்தது நிறைவேறும்.
***************************

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.

அன்பு வாசகர்களே....


இந்த ஊரடங்கு காலத்தில் வீட்டை விட்டு வெளியே வராமல் நமக்கு நாமே சமூக விலகல் ( Social Distancing) செய்து கொள்வோம். செய்தி ஊடகங்களின் வழியே உலகுடன் தொடர்பில் இருப்போம். பொதுவெளியில் இருந்து தனிமைப்படுத்திக் கொண்டு கரோனா பரவலைத் தடுப்பதில் நம் பங்கை முழுமையாக இந்த சமூகத்துக்கு அளிப்போம்.


CoVid-19 கரோனா தடுப்பு / விழிப்புணர்வு கையேடு - இலவசமாக டவுன்லோடு செய்து பயன்பெறுங்கள்!


- வாசகர்கள் நலனில் அக்கறையுடன் இந்து தமிழ் திசை

தவறவிடாதீர்!

பூரட்டாதிஉத்திரட்டாதிரேவதி; வார நட்சத்திர பலன்கள் - (மே 25 முதல் 31 வரை)சொல்வாக்கு ஜோதிடர் ஜெயம் சரவணன்

Sign up to receive our newsletter in your inbox every day!

You May Like

More From This Category

More From this Author