Published : 24 May 2020 04:43 PM
Last Updated : 24 May 2020 04:43 PM

மூலம், பூராடம், உத்திராடம்; வார நட்சத்திர பலன்கள் - (மே 25 முதல் 31 வரை) 

’சொல்வாக்கு ஜோதிடர்’ ஜெயம் சரவணன்

மூலம் -
எடுத்துக்கொண்ட முயற்சிகளில் வெற்றி பெறும் வாரம். தேவைகள் பூர்த்தியாகும்.
குடும்பத்தில் அமைதி தொடர வேண்டுமானால் விட்டுக்கொடுத்துச் செல்லவேண்டும். பிடிவாத குணத்தை மாற்றிக்கொள்ள வேண்டும். கணவன்-மனைவிக்குள் கருத்துவேறுபாடுகள் தொடங்குவதற்கு முன்பு சமாதானமாக செல்ல வேண்டும்.
பிரிந்த தம்பதியினர் மீண்டும் ஒன்று சேரும் வாய்ப்பு உள்ளது.
அலுவலகத்தில் கூடுதல் பொறுப்புகள் கிடைக்கும். தொழிலில் நல்ல வளர்ச்சி முன்னேற்றம் ஏற்படும். புதிய தொழில் வாய்ப்புகள் கிடைக்கும்.
வியாபாரிகள் தங்கள் வியாபாரத்தில் வளர்ச்சியும் லாபமும் கிடைக்கப்பெறுவார்கள். பெண்கள் தங்களின் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் காண்பார்கள். பூர்வீகச் சொத்து சம்பந்தமான விஷயங்கள் சாதகமாக இருக்கும்.
மாணவர்கள் கல்வியில் நல்ல முன்னேற்றம் காண்பார்கள். உயர்கல்வி பயிலும் மாணவர்கள் தேர்வுகளில் நல்ல தேர்ச்சி விகிதம் பெறுவார்கள். கலைஞர்களுக்கு நல்ல ஒப்பந்தங்கள் கிடைக்கும்.

இந்த வாரம் -

திங்கள்-
செலவுகள் அதிகமாக இருக்கும். வீண் அலைச்சல்கள் ஏற்படும்.தேவை இல்லாமல் மற்றவர் மீது கோபத்தைக் காட்ட வேண்டாம். குடும்ப உறுப்பினர்களிடம் எரிச்சல் கோபத்தை வெளிப்படுத்தாமல் இருப்பது நல்லது. வியாபாரத்தில் எதிர்பார்த்த உதவிகள் கிடைப்பது தாமதமாகும்.

செவ்வாய்-
தேவையான உதவிகள் கிடைக்கும். மருத்துவச் செலவுகள் குறையும். ஆரோக்கியத்தில் இருந்த அச்சுறுத்தல் விலகும். மன நிம்மதியும் மனநிறைவும் ஏற்படும். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் இருக்கும். அரசு வழியில் ஆதாயம் கிடைக்கும். இளைய சகோதரரிடம் ஏற்பட்டிருந்த கருத்துவேறுபாடுகள் மறையும். தாய்வழி உறவினர்களிடம் மீண்டும் சமாதானம் ஏற்படும்.


புதன் -
எதிர்பார்த்த பண உதவி கிடைக்கும். யாரிடமாவது கடன் கேட்டிருந்தால், கடன் கிடைக்கும் வாய்ப்பு உள்ளது. முக்கியமான பிரச்சினைகள் அனைத்தும் தீரும். அலுவலகத்திலிருந்து வரவேண்டிய சலுகைகள் இன்று கிடைக்கும். வியாபாரத்தில் புதிய உத்திகளைக் கையாள்வதற்கு திட்டங்களைத் தீட்டுவீர்கள்.

வியாழன் -
எடுத்துக்கொண்ட முயற்சிகள் அனைத்தும் வெற்றியாகும். பணத்தேவைகள் பூர்த்தியாகும். வியாபார விஷயங்கள் சாதகமாக இருக்கும். பெண்களுக்கு ஆரோக்கிய அச்சுறுத்தல்களும் ஆரோக்கியத்தில் முன்னேற்றமும் ஏற்படும். சொத்து தொடர்பான விஷயங்களில் நல்ல முடிவு கிடைக்கும்.

வெள்ளி -
உற்சாகமான நாளாக இருக்கும். எடுத்துக்கொண்ட வேலைகள் அனைத்தையும் சிறப்பாக செய்து முடிப்பீர்கள். தேங்கி நின்ற வேலைகள் அனைத்தையும் இன்று சுறுசுறுப்பாக செய்து முடித்து விடுவீர்கள். பணத்தேவைகள் உடனுக்குடன் பூர்த்தியாகும். தொழில் தொடர்பான உதவிகள் கிடைக்கும். வியாபாரத்தில் எதிர்பாராத லாபம் கிடைக்கும்.

சனி-
குடும்ப நலன் சார்ந்த சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். சோம்பல் அதிகரிக்கும். தேவையற்ற எரிச்சல் குழப்பம் உண்டாகும். சம்பந்தமில்லாத விஷயங்களை போட்டுக் குழப்பிக் கொள்வீர்கள். பொறுமையும் நிதானமும் மிக மிக அவசியம். பயணங்களைத் தவிர்க்க வேண்டும்.

ஞாயிறு -
பெரும் நன்மைகள் ஏற்படும் நாள். பணவரவுகள் தாராளமாக இருக்கும். எடுத்துக்கொண்ட வேலைகள் அனைத்தும் வெற்றிகரமாக முடியும். வியாபார பேச்சுவார்த்தைகள் சாதகமாக இருக்கும். வரவேண்டிய பாக்கிகள் வசூலாகும். தொழில் தொடர்பாக முக்கிய தகவல் கிடைக்கும். அது மனநிறைவைத் தருவதாக இருக்கும்.

வணங்க வேண்டிய தெய்வம் -
அனுமனுக்கு வடைமாலை சாற்றி வழிபடுங்கள். நன்மைகள் அதிகரிக்கும். குடும்ப பிரச்சினைகள் தீரும்.
******************


பூராடம் -
எடுத்துக்கொண்ட முயற்சிகள் அனைத்தும் வெற்றியாகும் வாரம். தேவைகள் பூர்த்தியாகும்.
குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். திருமணம் ஆகாதவர்களுக்கு திருமணம் நடக்கும். குழந்தைகளுக்கு காது குத்துதல், மொட்டை அடித்தல் போன்ற சுப நிகழ்ச்சிகள் நடக்கும். அதற்காக குடும்பத்தாருடன் இணைந்து ஆலோசனை செய்வீர்கள்.
அலுவலகத்தில் எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும். தொழிலில் தேவையான உதவிகள் கிடைக்கும்.வியாபார வளர்ச்சி சீராக இருக்கும். வியாபார இடத்தை மாற்றி அமைக்கும் பணிகளை செய்வீர்கள்.
பெண்களுக்கு தந்தைவழி உறவுகளால் ஆதாயம் ஏற்படும். கலைத்துறையில் இருப்பவர்களுக்கு தேவையான உதவிகள் கிடைக்கும். பணத்தட்டுப்பாடு வராது.

இந்த வாரம் -

திங்கள் -
உத்யோகத்தில் எதிர்பார்த்த நல்ல தகவல் கிடைக்கும். சொத்துகள் சம்பந்தமான பிரச்சினைகளில் முன்னேற்றம் ஏற்படும். எதிர்பார்த்த கடனுதவி கிடைக்கும். வீட்டுக் கடன் கிடைக்கும் வாய்ப்பு உள்ளது.

செவ்வாய்-
எதிர்பார்த்த தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். பணவரவு தாராளமாக இருக்கும். உதவிகள் அதிகம் கிடைக்கப்பெறுவீர்கள். மருத்துவச் செலவுகள் கணிசமாகக் குறையும். கணவன் மனைவிக்குள் ஏற்பட்ட கருத்துவேறுபாடுகள் மறைந்து ஒற்றுமை ஏற்படும்.

வியாழன் -
சுபகாரிய பேச்சுவார்த்தைகளில் முன்னேற்றம் ஏற்படும். பெண்களுக்குத் திருமணம் சம்பந்தப்பட்ட முயற்சிகள் சாதகமாக இருக்கும். வியாபார விஷயமாக பயணம் ஏற்படும். தரகு மற்றும் கமிஷன் தொழிலில் இருப்பவர்களுக்கு வருமானம் திருப்திகரமாக இருக்கும். புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும் வாய்ப்பு உள்ளது.

வெள்ளி -
வீண் விவாதப் பேச்சுக்கள் வேண்டாம். அலுவலகத்தில் அமைதியாக உங்கள் பணியை மட்டும் கவனியுங்கள். மற்றவர்களுடைய பணியில் தலையிடாதீர்கள். அக்கம்பக்கத்தினருடன் சச்சரவுகளில் ஈடுபட வேண்டாம் கோபத்தைக் கட்டுப்படுத்துங்கள். பயணங்களைத் தவிர்த்து விடுங்கள். கைப்பொருளை பத்திரமாக பார்த்துக்கொள்ளுங்கள்.

சனி-
நீண்ட நாளாக எதிர்பார்த்துக் கொண்டிருந்த நல்ல தகவல் இன்று வந்துசேரும். வியாபாரம் தொடர்பாக எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். அதன் மூலம் ஆதாயம் கிடைக்கும். தொழிலுக்குத் தேவையான உதவிகள் கிடைக்கும்.

ஞாயிறு -
தாமதமாகிக் கொண்டிருந்த வேலைகள் அனைத்தும் செய்து முடிப்பீர்கள். வியாபார ஒப்பந்தங்கள் நிறைவேறும். எதிர்பார்த்த பணவரவு கிடைக்கும். வீடு விற்பது வாங்குவது போன்ற விஷயங்கள் சாதகமாக இருக்கும்.

வணங்கவேண்டிய தெய்வம்-
ஸ்ரீ லக்ஷ்மி நரசிம்மர் வழிபாடு செய்யுங்கள். ஸ்ரீ மகாலட்சுமி அஷ்டோத்திரம் பாராயணம் செய்யுங்கள். நன்மைகள் கூடுதலாகும். முயற்சிகளில் வெற்றி கிடைக்கும்.
*******************************

உத்திராடம் -
நிதானமாக செயல்பட்டு காரியங்களை சாதித்துக் கொள்ளும் வாரம்.
புதிய வேலை வாய்ப்புகள் கிடைக்கும். வேலைக்கு விண்ணப்பம் செய்ய இந்த வாரம் சாதகமாக இருப்பதால் இதுவரை வேலை இல்லாமல் இருந்தவர்களும், ஏற்கெனவே பணியில் இருந்து வேறு நிறுவனத்திற்கு மாற நினைப்பவர்களும் விண்ணப்பிக்கலாம்.
அலுவலகத்தில் கூடுதல் பொறுப்புகள் கிடைக்கும். புதிய பணிகள் கூடுதலாக கிடைக்கும். தொழிலில் புதிய வாய்ப்புகள் கிடைக்கப் பெறுவீர்கள்.
வியாபாரிகளுக்கு வியாபாரத்தை விரிவுபடுத்துவதற்கான உதவிகள் கிடைக்கும். பெண்கள் தாங்கள் எடுத்துக்கொண்ட முயற்சிகள் அனைத்திலும் வெற்றி காண்பார்கள்.
திருமண முயற்சிகள் கைகூடும். தந்தை வழி சொத்துகள் கிடைக்கும் வாய்ப்பு உண்டு. கலைஞர்களுக்கு நல்ல வாய்ப்புகள் கிடைக்கும். நண்பர்களின் உதவியால் ஒப்பந்தங்களும் கிடைக்கப் பெறுவீர்கள்.

இந்த வாரம் -

திங்கள் -
சம்பந்தம் இல்லாத விஷயங்களில் தலையிட வேண்டாம். மற்றவர்கள் பிரச்சினைகளில் கருத்துக் கூறாமல் இருப்பது நல்லது. அலுவலகத்தில் அனைவரையும் அனுசரித்துச் செல்லவேண்டும்.

செவ்வாய்-
சிறு தூரப் பயணம் ஒன்று ஏற்படும். அந்தப் பயணத்தால் ஆதாயம் கிடைக்கப் பெறுவீர்கள். தொழில் தொடர்பான வாய்ப்புகள் கிடைக்கும். அதற்கு அரசின் உதவிகளும் கிடைக்கும். வியாபாரத்தில் நல்ல வளர்ச்சி உண்டாகும். திருமண முயற்சிகளில் முன்னேற்றம் ஏற்படும்.

புதன் -
அலுவலகத்தில் பணிச்சுமை கூடும். அரசு வழி நிர்ப்பந்தங்கள் அதிகரிக்கும். வியாபாரம் தொடர்பான விஷயங்களில் இழுபறியான நிலை நீடிக்கும். வங்கிக் கடன் தொடர்பான விஷயங்கள் சற்று தள்ளிப் போகும்.குடும்பச் செலவுகள் அதிகமாக இருக்கும்.

வியாழன் -
எதிர்பார்த்த உதவிகள் அனைத்தும் கிடைக்கும். பழைய கடனை அடைக்க புதிய கடன் ஒன்று பெறுவீர்கள். வியாபார வளர்ச்சி சீராக இருக்கும். தொழில் தொடர்பான ஒப்பந்தங்கள் ஏற்படும் வாய்ப்பு உள்ளது. குடும்பத்தின் தேவைகள் பூர்த்தியாகும்.

வெள்ளி-
அத்தியாவசிய பயணங்கள் தவிர மற்ற பயணங்களைத் தவிர்த்து விடுங்கள். கோபத்தை குறைத்துக் கொள்ள வேண்டும். உணர்ச்சிவசப்பட்டு எந்த முடிவுகளையும் எடுக்கக் கூடாது.வீண் செலவுகள், விரயங்கள் ஏற்படும்.

சனி -
உத்தியோகத்தில் எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும். இதுவரை வேலை இல்லாமல் இருந்தவர்களுக்கு இன்று வேலைக்கான தகவல் கிடைக்கும். கடன் தொடர்பான பிரச்சினைகள் பேசித் தீர்க்கப்படும்.

ஞாயிறு-
நீண்ட நாளாக எதிர்பார்த்துக் கொண்டிருந்த உதவிகள் கிடைக்கும். சொந்த வீடு வாங்குவது தொடர்பான விஷயங்கள் சாதகமாக இருக்கும். தாய்வழி உறவினர்களால் நன்மைகள் ஏற்படும். திருமணம் தொடர்பான முயற்சிகள் இன்று சுமுகமான முடிவுக்கு வரும். வியாபாரத்தில் லாபம் பெருகும்.

வணங்கவேண்டிய தெய்வம் -
விநாயகப் பெருமானுக்கு எருக்கம்பூ மாலை மற்றும் அருகம்புல் சாற்றி வழிபடுங்கள். நன்மைகள் அதிகமாகும். முயற்சிகளில் வெற்றி கிடைக்கும்.
*********************

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x