Published : 24 May 2020 04:16 PM
Last Updated : 24 May 2020 04:16 PM

விசாகம், அனுஷம், கேட்டை; வார நட்சத்திர பலன்கள் - (மே 25 முதல் 31 வரை) 

’சொல்வாக்கு ஜோதிடர்’ ஜெயம் சரவணன்


விசாகம் -
நன்மைகள் பலவாறாக நடக்கும். தேவைகள் உடனுக்குடன் பூர்த்தியாகும்.
எடுத்துக்கொண்ட வேலைகள் அனைத்தும் சாதகமாகவும் லாபகரமாகவும் இருக்கும். தாய்மாமன் வழி உறவுகளிடம் ஏற்பட்டிருந்த பகை உணர்ச்சி மாறும். தந்தைவழி சொத்துக்கள் பாகம் பிரிப்பதில் ஏற்பட்டிருந்த குழப்பங்கள் முடிவுக்கு வந்து, பாகப்பிரிவினைகள் சுமுகமாக முடிவடையும்.
அலுவலக நெருக்கடிகள் தீரும். வியாபாரத்தில் லாபம் இருக்கும். சீரான வளர்ச்சியும் ஏற்படும். தொழில் தொடர்பாக வேண்டிய உதவிகளும் ஒப்பந்தங்களும் கிடைக்கும்.
மாணவர்கள் கல்வியில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். பெண்களின் தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். உறவினர்களுடன் ஏற்பட்டிருந்த வருத்தங்கள் நீங்கும்.
கலைஞர்களுக்கு நல்ல வாய்ப்புகள் கிடைக்கும்.

இந்த வாரம் -

திங்கள்-
அலுவலகப் பணியில் இயல்பான நிலையே இருக்கும். வியாபாரத்தில் வளர்ச்சி இருக்கும். தொழில் தொடர்பான உதவிகளும் சலுகைகளும் கிடைக்கப் பெறுவீர்கள். பெண்களுக்கு கடன் பிரச்சினைகள் தீரும் வாய்ப்பு உள்ளது. அதற்கான பண உதவிகள் கிடைக்கும்.

செவ்வாய்-
பணத்தேவைகள் உடனுக்குடன் பூர்த்தியாகும். எதிர்பார்த்த வியாபார வாய்ப்பு கிடைக்கும். தொழில் தொடர்பாக வேண்டிய உதவி கிடைக்கும். சகோதர வழி உறவுகள் மூலம் உதவிகள் கிடைக்கப் பெறுவீர்கள். நெருங்கிய நண்பரால் பண உதவி கிடைக்கும்.

புதன்-
வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். பெண்களுக்கு சுயதொழில் தொடங்குவது தொடர்பான உதவிகள் கிடைக்கும். திருமணம் உள்ளிட்ட சுப காரியப் பேச்சுவார்த்தைகள் சுமுகமாக முடிவடையும். புத்திரபாக்கியம் இல்லாதவர்களுக்கு புத்திரபாக்கியம் உறுதியான தகவல் இன்று கிடைக்கும்.

வியாழன்-
பொறுமை மிக மிக அவசியம். நிதானத்தை இழக்கக்கூடாது. பேசும் வார்த்தைகளில் கவனம் வேண்டும். அலுவலகப் பணிகளில் அலட்சியம் கூடாது. குடும்பத்தாருடன் இணக்கமாக இருக்க வேண்டும். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களிடம் அனுசரித்துச் செல்லவேண்டும்.

வெள்ளி-
திட்டமிடாத காரியங்களிலும் வெற்றி கிடைக்கும். எதிர்பாராத பணம் வரும். வியாபாரத்தில் வரவேண்டிய பாக்கிகள் வசூலாகும். தொழில் தொடர்பாக எதிர்பார்த்த அரசின் சலுகைகள் கிடைக்கும். கணவன் மனைவி ஒற்றுமை அதிகரிக்கும். குழந்தைகளுடன் மகிழ்ச்சிகரமான செயல்களைச் செய்து மகிழ்வீர்கள்.

சனி-
எதிர்பாராத செலவுகள் ஏற்படும்.பராமரிப்புச் செலவுகள் கூடுதலாகும். எதிர்பாராத செலவுகள் ஏற்படும் வாய்ப்பு உள்ளது. வியாபாரம் தொடர்பான பயணம் ஏற்படும். பயணத்தால் அலைச்சல்கள் அதிகரிக்கும்.

ஞாயிறு-
வியாபார வாய்ப்புகள் தேடி வரும். வியாபார வளர்ச்சி சீராக இருக்கும்.நண்பர்களோடு இணைந்து புதிய தொழில் தொடங்கும் முயற்சிகளில் இறங்குவீர்கள். அதற்கான ஆலோசனைகளை இன்று நடத்துவீர்கள். குடும்பத்தாருடன் வெளியில் சென்றுவரத் திட்டமிடுவீர்கள்.

வணங்க வேண்டிய தெய்வம் -
ஸ்ரீதட்சிணாமூர்த்தி குருபகவானுக்கு மஞ்சள் வஸ்திரம் சாற்றி கொண்டைக் கடலை நிவேதனம் செய்து வணங்குங்கள். நன்மைகள் பெருகும். பணவரவு தாராளமாக இருக்கும்.
************************************
அனுஷம் -

எதிர்பார்ப்புகள் நிறைவேறும் வாரம். தேவைக்கேற்ற பணவரவு இருக்கும்.
குடும்ப உறவுகள் பலப்படும். கணவன் மனைவிக்குள் ஏற்பட்டு இருந்த மனவருத்தங்கள் அகலும். ஒரு பெரிய மனிதரின் உதவியோடு மீண்டும் ஒன்று சேர்வார்கள். சண்டை சச்சரவுகள் அனைத்தும் சமாதானமாகும்.
இளைய சகோதரரிடம் ஏற்பட்ட மன வருத்தங்கள் அகலும். விட்டுக் கொடுத்து சென்றால் உறவுகள் பலப்படும் என்பதை உணருங்கள்.
ஒருசிலருக்கு உத்தியோகத்தில் சில சலுகைகள் கிடைக்கும். உடல்நலத்தில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் ஏற்படும். வியாபாரம் வளர்ச்சியடையும். வரவேண்டிய பாக்கிகள் வசூலாகும். தொழில் வளர்ச்சி சீராக இருக்கும். புதிய தொழில் வாய்ப்புகள் கிடைக்கும்.
பெண்களுக்கு எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். கலைஞர்களுக்கு நல்ல வாய்ப்புகள் கிடைக்கும். குறிப்பாக பெண் நண்பர்களால் வாய்ப்புகள் கிடைக்கும்.

இந்த வாரம்-

திங்கள்-
நண்பர்களால் உதவிகள் கிடைக்கும். எதிர்பார்த்த பணவரவு கிடைக்கும். உத்தியோகம் தொடர்பான நல்ல தகவல் கிடைக்கும். குடும்பத்தினரின் தேவைகள் அனைத்தும் பூர்த்தி செய்து தருவீர்கள். வீட்டிற்கு தேவையான அத்தியாவசியப் பொருட்களை வாங்குவீர்கள்.

செவ்வாய்-
முடிக்க வேண்டிய வேலைகளை இன்று சுறுசுறுப்பாக செய்து முடிப்பீர்கள். எதிர்பார்த்த பண உதவி கிடைக்கும். வியாபாரத்தில் லாபம் உண்டாகும். எதிர்பார்த்த கடன் கிடைக்கும். பிள்ளைகளின் எதிர்காலம் கருதி சேமிப்பில் ஈடுபடுவீர்கள்.

புதன்-
குடும்ப பிரச்சினைகள் முடிவுக்கு வரும். எதிர்பார்த்த வேலைவாய்ப்பு பற்றிய தகவல் கிடைக்கும். வியாபாரத்தில் லாபம் கிடைக்கும். உறவினர்களால் ஆதாயம் உண்டாகும். நண்பர்கள் தேடி வந்து உதவி செய்வார்கள்.

வியாழன்-
செலவுகள் ஏற்படும். பயணங்கள் ஏற்படும். பயணங்களால் ஆதாயம் கிட்டும். அலுவலகத்தில் சக ஊழியர்களின் பாராட்டுக்களைப் பெறுவீர்கள். தொழிலுக்கு அரசு உதவி கிடைக்கும். பெண்களுக்கு வேலை தொடர்பான நல்லதகவல் கிடைக்கும். ஆபரணச் சேர்க்கையும் உண்டு.

வெள்ளி-
எடுத்துக்கொண்ட வேலைகள் அனைத்தையும் சிறப்பாக செய்து முடிப்பீர்கள். பணவரவு எதிர்பாரத அளவுக்கு தாராளமாக இருக்கும். சொத்து வாங்குவது விற்பது தொடர்பான விஷயங்கள் ஆதாயம் தருவதாக இருக்கும். எந்தத் துறையினராக இருந்தாலும் முழுமையான வெற்றி கிடைக்கும்.

சனி-
வியாபாரத்தில் லாபம் இருமடங்காக இருக்கும். நண்பர்கள் உறுதுணையாக இருப்பார்கள். அவர்களால் ஆதாயம் கிடைக்கும். தொழில் தொடர்பான ஒப்பந்தங்கள் இறுதி நிலையை எட்டும். எதிர்பார்த்த பணம் எதிர்பார்த்தபடியே கிடைக்கும்.

ஞாயிறு-
வீண்செலவுகள் ஏற்படும். பிள்ளைகளால் சங்கடங்கள் ஏற்படும். உடல் நலத்தில் சற்று பாதிப்பு ஏற்படும். மருத்துவச் செலவு உண்டு. பயணங்களைத் தவிர்க்க வேண்டும்.

வணங்க வேண்டிய தெய்வம்-
காவல் தெய்வங்களாக இருக்கும் அய்யனார், அங்காளம்மன் முதலான எல்லை தெய்வங்களை வணங்கி வாருங்கள். நன்மைகள் நடக்கும்.
********************************
கேட்டை -

எடுத்துக்கொண்ட முயற்சிகளில் எளிதான வெற்றியைக் காண்பீர்கள்.
முக்கியமான விஷயங்களில் அதிக கவனம் எடுத்துக்கொள்ள வேண்டும். குடும்பத்தாருடன் இணக்கமாக இருக்க வேண்டும். தேவையற்ற சச்சரவுகளில் ஈடுபடக் கூடாது .
கோபத்தை கட்டுப்படுத்த வேண்டும். உணர்ச்சிவசப்பட்டு எடுக்கும் முடிவுகள் தவறாகவே முடியும். சொத்து விஷயத்தில் வீண் பிடிவாதம் பிடிக்க வேண்டாம். அலுவலக வேலைகளில் சகஜமான நிலையே இருக்கும்.
தொழில் வளர்ச்சி சீராக இருக்கும். சிலருக்கு கடன் பிரச்சினைகள் நெருக்கடி தருவதாக இருக்கும். வியாபார வளர்ச்சி சிறப்பாக இருக்கும். பெண்களுக்கு திருமண முயற்சிகள் கைகூடும்.
மாணவர்களுக்கு கல்வியில் எதிர்பார்த்த நன்மைகள் கிடைக்கும். கலைஞர்களுக்கு நண்பர்களால் உதவிகள் கிடைக்கும்.

இந்த வாரம் -

திங்கள்-
அலுவல் தொடர்பாக தேங்கி நின்ற வேலைகள் அனைத்தும் முடியும். தொழில் தொடர்பான வாய்ப்புகள் மனநிறைவைத் தரும். எதிர்பார்த்த கடனுதவி கிடைக்கும். வியாபார ஒப்பந்தம் ஏற்படும்.

செவ்வாய்-
தேவையற்ற சர்ச்சையில் சிக்க வேண்டாம். அடுத்தவர்கள் விஷயத்தில் தலையிடுவது பிரச்சினையை உண்டு பண்ணும். சிறிய விஷயம் கூட உங்களுக்கு கோபத்தை ஏற்படுத்துவதாக இருக்கும். சுய கட்டுப்பாடு தேவை.

புதன்-
மனநிம்மதி ஏற்படும் நாள். பிரச்சினைகள் முடிவுக்கு வரும். வியாபாரத்தில் லாபம் உண்டாகும். குடும்ப பிரச்சினைகள் தீரும். தொழில் வளர்ச்சி மனநிறைவைத் தரும். கடன் பிரச்சினைகள் கட்டுக்குள் இருக்கும்.


வியாழன்-
லாபகரமான நாளாக இருக்கும். தொழில் வளர்ச்சி சிறப்பாக இருக்கும். வியாபாரத்தில் புதிய முயற்சிகளில் ஈடுபட்டு வெற்றி காணக்கூடியதாக இருக்கும். வேலையில் வரவேண்டிய நிலுவை தொடர்பான தகவல் கிடைக்கும்.

வெள்ளி-
குடும்பத்தினர் தேவைகளைப் பூர்த்தி செய்வீர்கள். குடும்பத்திற்குத் தேவையான பொருட்களை வாங்குவீர்கள். குழந்தைகளுடன் நேரத்தைச் செலவிடுவீர்கள். கணவன்-மனைவிக்குள் இருந்த பிணக்குகள் தீரும். வியாபார வளர்ச்சி நன்றாக இருக்கும். பணத்தேவைகள் உடனுக்குடன் பூர்த்தியாகும். இல்லத்தில் சுபகாரியம் தொடர்பான பேச்சுவார்த்தைகள் நடக்கும்.

சனி-
வரவும் செலவும் சமமாக இருக்கும். எதிர்பார்த்த பண உதவி கிடைக்கும். வியாபாரம் தொடர்பாக ஆதாயம் ஏற்படும். குடும்பத்தினர் ஒத்துழைப்பு சிறப்பாக இருக்கும். தொழில் தொடர்பான சந்திப்புகள் மனநிறைவைத் தரும்.

ஞாயிறு-
எதிர்பார்ப்புகள் சற்று ஏமாற்றம் தரும். வீண் விவாதம் வேண்டாம். எதிர்பாராத செலவுகள் ஏற்படும்.அடுத்தவர் விஷயத்தில் தலையிடாமல் இருக்க வேண்டும். சமூக வலைதள பயன்பாட்டை குறைத்துக் கொள்ளுங்கள்.

வணங்கவேண்டிய தெய்வம்-
உக்கிர தெய்வமான காளி அன்னையை வணங்குங்கள். நன்மைகள் அதிகமாகும். நினைத்தது நிறைவேறும்.
**************************

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x