Published : 27 Apr 2020 03:52 PM
Last Updated : 27 Apr 2020 03:52 PM

திருவோணம், அவிட்டம், சதயம் (ஏப்ரல் 27 முதல் மே 3 வரை) - இந்தவாரம் உங்களுக்கு இப்படித்தான்! 

- ‘சொல்வாக்கு ஜோதிடர்’ ஜெயம் சரவணன்

திருவோணம் -
நன்மைகள் மிகுதியாக நடக்கும் வாரம். தேவைகள் உடனுக்குடன் பூர்த்தியாகும்.
மனக் குழப்பங்களும் தேவையற்ற சிந்தனைகளும் அடிக்கடி தோன்றும். குலதெய்வத்தை மனதில் நினைத்துக் கொள்ளுங்கள். பிரச்சினைகள் குறையும். குடும்பத்தில் ஒற்றுமை நீடிக்கும். கணவன் மனைவி உறவு பலப்படும்.
அலுவலகப் பணிகளில் இயல்பான நிலை தொடர்ந்தாலும் ஒரு சிலருக்கு கூடுதல் பொறுப்புகள் கிடைப்பதால் அழுத்தம் அதிகரிக்கும். எடுத்துக்கொண்ட வேலைகளை முடிப்பதில் தாமதமும் ஏற்படும்.
வியாபாரத்தில் திருப்திகரமான லாபம் கிடைக்கும். சீரான வளர்ச்சி ஏற்படும். தொழில் தொடர்பாக வேண்டிய உதவிகளும், ஒப்பந்தங்களும் கிடைக்கும்.
மாணவர்கள் கல்வியில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். பெண்கள் தங்கள் தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும்.திருமணம் உள்ளிட்ட விஷயங்கள் பேசி முடிக்கப்படும். மாணவர்களுக்கு ஞாபகத் திறன் குறையும். கலைஞர்களுக்கு நல்ல வாய்ப்புகள் கிடைக்கும்.

இந்த வாரம் -

திங்கள்-
அவசரமான முடிவுகள் எடுக்க வேண்டாம். புதிய முயற்சிகளில் ஈடுபட வேண்டாம். பணவரவில் தாமதம் ஏற்படும். வியாபாரம் மற்றும் தொழிலில் ஒரு சில நெருக்கடிகள் தோன்றும். குடும்பத்தில் இருப்பவர்களிடம் தேவையில்லாத வாக்குவாதங்களில் ஈடுபட வேண்டாம்.

செவ்வாய்-
மன உளைச்சல்கள் தீரும் நாள். ஆரோக்கியம் சீராகும். மனதை அழுத்திக் கொண்டிருந்த ஒரு பிரச்சினை இன்று முடிவுக்கு வரும். அலுவலகப் பணிகளில் ஆர்வம் ஏற்படும். பணத்தேவைகள் உடனுக்குடன் பூர்த்தியாகும். எதிர்பார்த்த வியாபார வாய்ப்பு கிடைக்கும். தொழில் தொடர்பாக வேண்டிய உதவி கிடைக்கும்.

புதன்-
பணத்தேவைகள் உடனுக்குடன் பூர்த்தியாகும். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். பெண்களுக்கு சுயதொழில் தொடங்குவது தொடர்பான உதவிகள் கிடைக்கும். நண்பர்கள் மூலம் ஒரு சில உதவிகள் கிடைக்கப் பெறுவீர்கள். தூரத்து உறவினர்கள் தேவையான உதவிகளைச் செய்து தருவார்கள்.

வியாழன்-
நினைத்தது நிறைவேறும் நாள். புதிதாக தொழில் தொடங்குவது அல்லது புதிதாக வியாபாரம் தொடங்குவது போன்ற விஷயங்கள் சாதகமாக இருக்கும். வங்கிக் கடன் தொடர்பாக நல்ல தகவல் கிடைக்கும். திருமணமாகாத பெண்களுக்கு திருமணம் தொடர்பான விஷயங்கள் இன்று நல்ல முடிவிற்கு வரும்.

வெள்ளி-
புதிய முயற்சிகளில் ஈடுபடாமல் இருப்பது நல்லது. அவசரமான முடிவுகளை எடுக்க வேண்டாம். தொழில் அல்லது வியாபாரம் தொடர்பாக நெருக்கடிகள் தோன்றும். குடும்பத்தினரிடம் அன்பு காட்டுங்கள். கோபத்தை வெளிப்படுத்தாமல் இருப்பது நல்லது. பேசுகின்ற வார்த்தைகளில் அதிக கவனம் வேண்டும். யாரிடமும் எதற்காகவும் வாக்குறுதி கொடுக்காமல் இருக்க வேண்டும்.

சனி-
நேற்றைய பிரச்சினைகள் அனைத்தும் இன்று முடிவுக்கு வரும். அலுவலகப் பணிகளை சரியாக செய்து முடிப்பீர்கள். தொழில் வியாபாரத்தில் லாபம் இருக்கும். நெருக்கடியான நிலைகள் அனைத்தும் மாறும். சுயமாக முடிவெடுத்து முன்னேற்றம் காண்பீர்கள்.


ஞாயிறு-
வியாபார வாய்ப்புகள் தேடி வரும். வியாபார வளர்ச்சி சீராக இருக்கும். தொழில் தொடர்பான உதவிகளும் முதலீடுகளும் கிடைக்கும் வாய்ப்பு உள்ளது. தேவையான பண உதவி கிடைக்கும். குடும்பத்தினர் தேவைகளை பூர்த்தி செய்து தருவீர்கள்.

வணங்க வேண்டிய தெய்வம்-
மகா விஷ்ணுவை வழிபாடு செய்யுங்கள். ஸ்ரீ லட்சுமி சகஸ்ரநாமம் கேளுங்கள். நன்மைகள் பெருகும். பணவரவு தாராளமாக இருக்கும்.
*********************************


அவிட்டம் -
எதிர்பார்ப்புகள் நிறைவேறும் வாரம். வரவும் செலவும் சமமாக இருக்கும்.
சுபகாரிய விஷயங்களுக்காக செலவுகள் செய்ய வேண்டியதிருக்கும்.
உத்தியோகத்தில் இடமாற்றமும் அல்லது பதவி மாற்றம் போன்றவை ஏற்படும். உடல்நலத்தில் முன்னேற்றம் ஏற்படும்.
உறவினர்களால் ஏற்பட்ட பிரச்சினைகள் முடிவுக்கு வரும். வியாபாரம் வளர்ச்சியடையும். வரவேண்டிய பாக்கிகள் வசூலாகும். தொழில் வளர்ச்சி சீராக இருக்கும். புதிய தொழில் வாய்ப்புகள் கிடைக்கும்.
பெண்களுக்கு எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். சகோதரர்களுடன் சொத்து தொடர்பான பிரச்சினைகளில் சமாதானம் ஏற்படும். மாணவர்கள் கல்வியில் முன்னேற்றம் ஏற்படும். கலைஞர்களுக்கு நண்பர்கள் உதவியால் வாய்ப்புகள் கிடைக்கும்.

இந்த வாரம்-

திங்கள்-
எதிர்பார்த்த பணவரவு கிடைக்கும். உத்தியோகம் தொடர்பாக பதவி மாற்றம் பற்றிய தகவல் கிடைக்கும். குடும்பத்தினரின் தேவைகள் அனைத்தும் பூர்த்தி செய்து தருவீர்கள். இளைய சகோதரர் மூலம் ஆதாயம் கிடைக்கும்.

செவ்வாய்-
எடுத்துக்கொண்ட வேலைகள் அனைத்தும் இன்று எளிதாக செய்து முடிப்பீர்கள். எதிர்பார்த்த பண உதவி கிடைக்கும். வியாபாரத்தில் லாபம் உண்டாகும். எதிர்பார்த்த கடன் கிடைக்கும். திருமணம் தொடர்பான நல்ல தகவல் கிடைக்கும்.

புதன்-
குடும்ப பிரச்சினைகள் முடிவுக்கு வரும். வியாபாரத்தில் லாபம் கிடைக்கும். உறவினர்களால் ஆதாயம் உண்டாகும். நண்பர்கள் தேடி வந்து உதவி செய்யவார்கள். தொழில் தொடர்பாக சாதகமான தகவல் ஒன்று வந்து சேரும். அயல்நாட்டில் இருந்து நண்பர் ஒருவர் மனம் மகிழும் செய்தியைத் தருவார்.

வியாழன்-
நிதானமாகச் செயல்பட வேண்டிய நாள். அவசர முடிவுகள் எடுக்க வேண்டாம். அலுவலக ஊழியர்களிடமும் அக்கம்பக்கத்தினருடனும் வீண் வாக்குவாதங்கள் செய்ய வேண்டாம். உறவினர்களிடம் பேசும்போது வார்த்தைகளில் கவனமாக இருக்க வேண்டும்.

வெள்ளி-
எடுத்துக்கொண்ட வேலைகள் அனைத்தையும் சிறப்பாக செய்து முடிப்பீர்கள். பணவரவு எதிர்பாராத அளவுக்கு தாராளமாக இருக்கும். தொழில் தொடர்பான தேவையான வாய்ப்புகளும் உதவிகளும் கிடைக்கும்.வியாபாரத்தில் புதிய வியாபார வாய்ப்புகள் கிடைக்கும். எதிர்பார்த்த லாபம் கிடைக்கும்.

சனி-
நண்பர்கள் உறுதுணையாக இருப்பார்கள். அவர்களால் ஆதாயம் கிடைக்கும். தொழில் தொடர்பான உதவிகள் கிடைக்கும். போட்டி நிறுவனங்களின் நெருக்கடிகள் விலகும். சொத்து தொடர்பாக சகோதரர்களுடன் சமாதானம் ஏற்படும்.

ஞாயிறு-
வீண்செலவுகள் ஏற்படும்.நண்பர்களால் சங்கடங்கள் ஏற்படும். உடல் நலத்தில் சற்று பாதிப்பு ஏற்படும். வீட்டு உபயோகச் செலவுகள் ஏற்படும்.

வணங்க வேண்டிய தெய்வம்-
சூரிய வழிபாடு நன்மை தரும். ஆதித்ய ஹிருதயம் கேட்டு வாருங்கள். நன்மைகள் நடக்கும். தேவைகள் பூர்த்தியாகும்.
********************************


சதயம் -
எடுத்துக்கொண்ட முயற்சிகளில் வெற்றியைக் காண்பீர்கள்.
முக்கியமான விஷயங்களில் அதிக கவனம் எடுத்துக்கொள்ள வேண்டும். குடும்பத்தினருக்காக அதிக செலவுகளை செய்ய வேண்டியதிருக்கும். சுப காரியச் செலவுகள் உண்டு.
சொத்து சம்பந்தமான பிரச்சினைகளை பேசித் தீர்க்க முற்படுவீர்கள். பாகப்பிரிவினைகள் ஒழுங்காகும். சகோதரர்களுடன் ஏற்பட்ட சச்சரவுகள் நீங்கும். அலுவலக வேலைகள் இயல்பான நிலையே இருக்கும்.
தொழில் வளர்ச்சி சீராக இருக்கும். ஒப்பந்தங்கள் கிடைக்கப் பெறுவீர்கள். வியாபார வளர்ச்சி சீராக இருக்கும். பெண்களுக்கு திருமண முயற்சிகள் கைகூடும். கணவன் மனைவிக்குள் இருந்த மனவருத்தங்கள் அகன்று குடும்ப ஒற்றுமை பலப்படும். மாணவர்களுக்கு கல்வியில் எதிர்பார்த்த நன்மைகள் கிடைக்கும். கலைஞர்களுக்கு நண்பர்களால் உதவிகள் கிடைக்கும்.

இந்த வாரம் -

திங்கள்-
உத்தியோகத்தில் மனநிறைவு தரும்படியாக சூழல் உருவாகும். பதவி மாற்றம் ஏற்பட வாய்ப்பு உள்ளது. தொழில் வளர்ச்சி சீராக இருக்கும். எதிர்பார்த்த கடனுதவி கிடைக்கும். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். புதிய வியாபார வாய்ப்புகளும் உண்டாகும்.

செவ்வாய் -
கடந்த சில நாட்களாக நிலவி வந்த பிரச்சினைகள் முடிவுக்கு வரும். வியாபாரத்தில் லாபம் உண்டாகும். குடும்ப பிரச்சினைகள் தீரும். தொழில் வளர்ச்சி மனநிறைவைத் தரும். கடன் பிரச்சினைகள் கட்டுக்குள் இருக்கும்.

புதன் -
தேவையற்ற சர்ச்சையில் சிக்க வேண்டாம். அடுத்தவர்கள் விஷயத்தில் தலையிடுவது பிரச்சினையை உண்டு பண்ணும். சிறிய விஷயம் கூட உங்களுக்கு கோபத்தை ஏற்படுத்துவதாக இருக்கும், சுய கட்டுப்பாடு தேவை.

வியாழன்-
லாபகரமான நாளாக இருக்கும். தொழில் வளர்ச்சி சிறப்பாக இருக்கும். வியாபாரத்தில் புதிய முயற்சிகளில் ஈடுபட்டு வெற்றி காணக்கூடியதாக இருக்கும். சகோதர வழி பிரச்சினைகள் முடிவுக்கு வரும். சொத்து பிரச்சினைகளைப் பேசித் தீர்க்க இன்று சிறப்பான நாளாக இருக்கும்.

வெள்ளி-
குடும்பத்தினர் தேவைகளைப் பூர்த்தி செய்வீர்கள். குடும்பத்திற்குத் தேவையான பொருட்களை வாங்குவீர்கள். குழந்தைகளுடன் நேரத்தை செலவிடுவீர்கள். கணவன்-மனைவிக்குள் இருந்த பிணக்குகள் தீரும். வியாபார வளர்ச்சி நன்றாக இருக்கும். பணத்தேவைகள் உடனுக்குடன் பூர்த்தியாகும். இல்லத்தில் சுப காரியம் தொடர்பான பேச்சுவார்த்தைகள் நடக்கும்.

சனி-
வரவும் செலவும் சமமாக இருக்கும். எதிர்பார்த்த பண உதவி கிடைக்கும். வியாபாரம் தொடர்பாக ஆதாயம் ஏற்படும். குடும்பத்தினர் ஒத்துழைப்பு சிறப்பாக இருக்கும். தொழில் தொடர்பான சந்திப்புகள் மன நிறைவைத்தரும்.

ஞாயிறு-
எதிர்பார்ப்புகள் சற்று ஏமாற்றம் தரும். வீண் விவாதம் வேண்டாம். எதிர்பாராத செலவுகள் ஏற்படும். தேவையற்ற அலைச்சல்களை ஏற்படுத்திக் கொள்ள வேண்டாம். கொடுக்கல் வாங்கல் போன்ற பிரச்சினைகளில் கவனமாக இருக்க வேண்டும்.

வணங்க வேண்டிய தெய்வம்-
ஸ்ரீநரசிம்மரை வழிபாடு செய்யுங்கள். நன்மைகள் அதிகமாகும். நினைத்தது நிறைவேறும்.
************************

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x