Published : 27 Apr 2020 11:17 AM
Last Updated : 27 Apr 2020 11:17 AM

புனர்பூசம், பூசம், ஆயில்யம் (ஏப்ரல் 27 முதல் மே 3 வரை) - இந்தவாரம் உங்களுக்கு இப்படித்தான்! 


- ‘சொல்வாக்கு ஜோதிடர்’ ஜெயம் சரவணன்


புனர்பூசம்-
நன்மைகள் நடைபெறும் வாரம்.
புதிய முடிவுகளை எடுக்கும் முன் ஒருமுறைக்கு இருமுறை ஆலோசனை செய்து எடுக்கவேண்டும். பணியிடத்தில் பணிச்சுமை அதிகரிக்கும். ஒரு சில வேலைகளை ஒருமுறைக்கு இருமுறை செய்ய வேண்டியது வரும்.
சக ஊழியர்கள் மற்றும் உயர் அதிகாரிகளின் மனவருத்தத்தை சந்திக்க வேண்டியது வரும், பொறுமையை இழக்காமல் நிதானமாக அனைத்து விஷயங்களையும் கையாளுங்கள். குடும்ப உறவுகளிடம் அதிலும் குறிப்பாக மாமன் வகை உறவுகளிடம் கவனமாக இருக்க வேண்டும்.
அவர்களுடைய வருத்தத்திற்கு ஆளாகாமல் பார்த்துக் கொள்ளுங்கள்.கணவன்-மனைவிக்குள் விட்டுக் கொடுத்து செல்வது நல்லது, சிறிய விஷயத்தைப் பெரிதாக மாற்றி சண்டை சச்சரவுகளில் ஈடுபட வேண்டாம்.
திருமண வயதில் இருக்கும் உங்கள் பிள்ளைகளுக்கு திருமண முயற்சிகள் கைகூடும். சகோதரர்களுடன் சமாதானமாகச் செல்லுங்கள். சொத்து விஷயங்களில் வீண் பிடிவாதம் பிடிக்க வேண்டாம்.
தொழிலில் சீரான முன்னேற்றம் ஏற்படும். தொழில் தொடர்பாக தேவையான உதவிகள் கிடைக்கும், வங்கிக் கடன் கிடைக்கும் வாய்ப்பு உள்ளது. பெண்கள் தங்கள் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்த வேண்டும். திருமண முயற்சிகள் கைகூடும்.

இந்த வாரம் -

திங்கள் -
நீண்ட நாளாக எதிர்பார்த்த நல்ல தகவல் கிடைக்கும். குடும்பத்தில் இருந்த பிரச்சினைகள் தீரும். எதிர்பார்த்த பணவரவு கிடைக்கும். கணவன்-மனைவிக்குள் ஒற்றுமை ஏற்படும். தொழில் மற்றும் வியாபாரத்தில் சீரான வளர்ச்சி உண்டாகும். மாணவர்கள் கல்வியில் முன்னேற்றம் காண்பார்கள்.

செவ்வாய் -
நீண்ட நாளாக முடிக்காமல் இருந்த வேலைகளை இன்று சுறுசுறுப்பாக செய்து முடிப்பீர்கள். குடும்பத்தில் அமைதி நிலவும். குடும்பத்தினர் தேவைகளை பூர்த்தி செய்து தருவீர்கள். வியாபாரத்தில் வரவேண்டிய பாக்கிகள் வசூலாகும். தொழில் வளர்ச்சி சீராக இருக்கும். பிள்ளைகளால் பெருமை கிடைக்கும். திருமண வயதில் இருக்கும் பிள்ளைகளுக்கு திருமணம் உள்ளிட்ட விஷயங்கள் முடிவாகும்.

புதன்-
தேவைகள் பூர்த்தியாகும். உதவிகள் தேடிவரும். வியாபார வளர்ச்சி சீராக இருக்கும்.எதிர்பார்த்த பணவரவு கிடைக்கும்.எதிர்பாராத உதவிகளும் கிடைக்கும். பணத்தேவைகள் உடனுக்குடன் பூர்த்தியாகும். தூரத்து உறவினர் ஒருவரால் நன்மைகள் நடைபெறும்.

வியாழன் -
தொழில் மற்றும் வியாபாரத்தில் அகலக்கால் வைக்க வேண்டாம். குறைந்தளவு முதலீடுகளை மட்டும் செய்து வாருங்கள். இன்று, எதிர்பார்த்த உதவிகள் தள்ளிப்போகும். பணவரவு தாமதமாகும். கோபத்தைக் கட்டுப்படுத்திக் கொள்ள வேண்டும். நிதானத்தை இழக்கக்கூடாது.

வெள்ளி -
நண்பர்களுக்கும் உறவினர்களுக்கும் ஒரு சில உதவிகளை செய்து கொடுப்பீர்கள். எதிர்பார்த்த பணவரவு உண்டு. வியாபார வளர்ச்சி சீராக இருக்கும். தொழில் தொடர்பான எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். மாணவர்களுக்கு கல்வி தொடர்பான ஒரு சில உதவிகள் கிடைக்கும்.

சனி-
செலவுகள் அதிகமாக இருக்கும். மருத்துவச் செலவு ஏற்படும் வாய்ப்புண்டு. குறிப்பாக தாயாரின் உடல்நலத்தில் கவனம் செலுத்துங்கள். சகோதரர்களுடன் இணக்கமாக இருங்கள். மனைவிவழி உறவினர்களால் சர்ச்சைகள் ஏற்படும் வாய்ப்பு உண்டு.

ஞாயிறு -
நன்மைகள் அதிகமாக நடக்கும். மனதில் உற்சாகம் பிறக்கும். ஆரோக்கிய குறைபாடுகள் தீரும். மருத்துவ செலவு குறையும். குடும்பத்தாருடன் மகிழ்ச்சிகரமாக இருப்பீர்கள்.

வணங்க வேண்டிய தெய்வம் -
ஸ்ரீ முருகப் பெருமானை வணங்குங்கள். குறைகள் தீரும். எதிர்ப்புகள் அகலும். நன்மைகள் நடக்கும்.
**************************************


பூசம் -
அதிக அளவிலான நன்மைகள் நடைபெறும் வாரம்.
எடுத்துக் கொண்ட முயற்சிகள் அனைத்தும் வெற்றியாகும். ஆனாலும் எந்த ஒரு விஷயத்திலும் ஒருமுறைக்கு இருமுறை யோசித்து செயல்பட வேண்டும்.
யாரை மிகவும் அதிகம் நம்புகிறீர்களோ அவர்களால் ஒரு சில இடைஞ்சல்கள் ஏற்படும் வாய்ப்பு உள்ளது, குறிப்பாக நண்பர்கள் மூலமாக ஒரு சில தொந்தரவுகள், சிக்கல்கள் ஏற்படலாம். வாழ்க்கைத் துணையிடம் எந்த வகையிலும் சண்டை சச்சரவுகளில் ஈடுபடாமல் இருக்க வேண்டும். இல்லை என்றால் பெரிய அளவிலான பாதிப்புகளை ஏற்படுத்தும்.
உத்தியோகத்தில் பெரிய மாறுதல்கள் ஏதும் இருக்காது. தொழில் வளர்ச்சி நம்பிக்கைத் தரும். தேவையான ஒப்பந்தங்கள் கிடைக்கும். வியாபாரத்தில் எதிர்பாராத லாபம் கிடைக்கும்.
பெண்கள் தங்கள் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் ஏற்படும். மருத்துவச் செலவுகள் குறையும். சகோதர வகையில் உதவிகள் கிடைக்கும். குழந்தைகளைப் பற்றிய கவலை நீங்கும்.
பூர்வீகச் சொத்து விஷயங்கள் பேசி முடிக்கப்படும். திரைத்துறை கலைஞர்களுக்கு புதிய வாய்ப்புகள் கிடைக்கும் வாய்ப்பு உள்ளது.

இந்த வாரம் -

திங்கள் -
எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். பணத்தேவைகள் பூர்த்தியாகும். தொலைபேசி வழித் தகவல் மகிழ்ச்சியைத் தரும். தொழில் வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். தொழில் தொடர்பாகவோ அல்லது வியாபார நிமித்தமாகவோ ஒரு சில உதவிகள் கிடைக்கும். வங்கி தொடர்பான பிரச்சினைகள் முடிவுக்கு வரும். கணக்கு வழக்குகளில் இருந்த குளறுபடிகள் இன்று தீரும்.

செவ்வாய் -
எடுத்துக் கொண்ட அனைத்து செயல்களிலும் வெற்றி கிடைக்கும். பணவரவு எதிர்பார்த்த படியே கிடைக்கும். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். சகோதர ஆதரவு கிடைக்கும். மூத்த சகோதரியால் ஆதாயம் கிடைக்கப் பெறுவீர்கள்.

புதன்-
குடும்பத்தில் அமைதி நிலவும். குழந்தைகளின் ஆரோக்கியம் முன்னேற்றம் ஏற்படும் தாயாரின் மருத்துவச் செலவுகள் குறையும். அலுவலகப் பணிகளில் சுமுகமான நிலை தொடரும் வியாபார வளர்ச்சி சீராக இருக்கும். யாருக்காவது உங்களால் முடிந்த ஒரு சில உதவிகளை செய்து தருவீர்கள்.

வியாழன் -
திட்டமிட்ட காரியங்கள் அனைத்தும் உங்களின் எதிர்பார்ப்புக்குத் தகுந்தவாறு நடக்கும். முயற்சிகளில் முன்னேற்றம் ஏற்படும். தேவையான பண வரவு கிடைக்கும். தொழில் வியாபாரத்தில் லாபம் இருமடங்காக இருக்கும். அலுவலகப் பணிகளை முடித்து அடுத்த கட்டத்தை நோக்கி நகர்வீர்கள். புதிய புராஜக்ட் உங்களை நம்பிக் கொடுப்பார்கள்.


வெள்ளி-
அதிக கவனத்துடன் இருக்க வேண்டிய நாள். எதிர்பார்ப்புகளை குறைத்துக் கொள்ளுங்கள். உங்களுக்கு சம்பந்தமில்லாத பிரச்சினைகளில் தலையிடாதீர்கள். தொழில் மற்றும் வியாபாரத்தில் லாபம் கிடைக்கும் வாய்ப்பு இல்லை. அதில் சிக்கல்கள் வராமல் பார்த்துக் கொள்வது முக்கியம். குடும்பத்தில் எவரிடமும் எரிச்சலையும் கோபத்தையும் வெளிக்காட்டாமல் இருப்பது நல்லது.

சனி-
நன்மைகள் அதிகமாக ஏற்படும். எதிர்பார்த்த அனைத்து விஷயங்களும் உங்களுக்கு சாதகமாகவே இருக்கும். பணவரவு தாராளமாக இருக்கும். குடும்ப ஒற்றுமை மேலோங்கும். குழந்தைகள் உங்கள் பேச்சைக் கேட்டு நடப்பதால் மனம் திருப்தியாக இருக்கும்.

ஞாயிறு -
நிதானமும் பொறுமையும் மிக மிக அவசியம். குடும்பத்தாருடனும் நண்பர்களிடமும் பொறுமையாகப் பேசுங்கள். நிதானத்தை இழக்க வேண்டாம். அமைதியாக இருப்பது அல்லது மன உளைச்சலை போக்க குழந்தைகளோடு நேரத்தை செலவிடுங்கள்.

வணங்க வேண்டிய தெய்வம்-
தட்சிணாமூர்த்தி குரு பகவானை வழிபாடு செய்யுங்கள். மனதில் நம்பிக்கை பிறக்கும். நன்மைகள் கிடைக்கும்.
**********************************


ஆயில்யம் -
இந்த வாரம் நீங்கள் எடுத்துக்கொண்ட முயற்சிகள் அனைத்திலும் வெற்றி கிடைக்கும்.
குடும்பத்தில் சில பிரச்சினைகள் கடந்த சில நாட்களாக இருந்திருக்கும். அந்த பிரச்சினைகள் அனைத்தும் இப்போது முடிவுக்கு வரும். நண்பர்களால் ஒரு சில நெருக்கடிகள் ஏற்படும். நண்பர்களிடம் இருந்து பெறப்பட்ட கடன் தொகை திரும்பக் கேட்டு நெருக்கடி தருவார்கள்.
உத்தியோகத்தில் நெருக்கடி அதிகமாக இருந்தாலும் சற்றும் மனம் தளராமல் எடுத்துக்கொண்ட வேலைகளை சிறப்பாக செய்து முடிப்பீர்கள். தொழிலில் எதிர்பாராத நன்மைகள் நடக்கும். தேவையான உதவிகள் கிடைக்கும்.
வியாபார வளர்ச்சி சீராக இருக்கும். இந்த வாரத்தில் புதிய வியாபாரத்திற்கான முயற்சியில் ஈடுபடுவீர்கள். பெண்கள் தங்கள் ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் காண்பார்கள். திருமண முயற்சிகள் கைகூடும். இதுவரை புத்திரபாக்கியம் இல்லாதவர்களுக்கு புத்திரபாக்கியம் உண்டாகும்.கலைத்துறையினருக்கு ஒருசில வாய்ப்புகள் கிடைக்கலாம்.பணத்தேவைகள் பூர்த்தியாகும்.

இந்த வாரம் -

திங்கள் -
நிதானத்தை இழக்காமல் இருக்க வேண்டும். எந்த ஒரு விஷயத்தையும் பொறுமையாகக் கையாளவும். கோபத்தை கட்டுப்படுத்த வேண்டும். தொழில் மற்றும் வியாபாரத்தில் அதிக கவனம் செலுத்த வேண்டும். குடும்பத்தாருடன் இணக்கமாக இருங்கள். தேவையில்லாத பிரச்சினைகளை நீங்களாகவே வளர்த்துக் கொள்ளாதீர்கள்.

செவ்வாய் -
அதிக ஆதாயம் கிடைக்கும் நாள். தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். வருமானம் இரு மடங்காக இருக்கும். தொலைதூர நண்பர்களால் உதவிகள் கிடைக்கும். மூத்த சகோதரங்களால் ஆதாயம் கிடைக்கும். மனைவி வழி உறவினர்களுக்கு உதவி செய்ய வேண்டிய சூழ்நிலை உருவாகும்.

புதன் -
அதிக நன்மைகள் நடக்கும் நாள். பணவரவு திருப்திகரமாக இருக்கும். தொழில் வியாபாரத்தில் நல்ல வளர்ச்சி முன்னேற்றம் ஏற்படும். நண்பர்கள் உறவினர்கள் தேடி வந்து உதவி செய்வார்கள்.

வியாழன் -
திட்டமிட்ட காரியங்கள் அனைத்தும் திட்டமிட்டபடி நடக்கும். பணவரவு தாராளமாக இருக்கும். எதிர்பார்த்த வங்கிக் கடன் கிடைக்கும். நீண்ட நாளாக வராமலிருந்த பணம் இப்போது திரும்ப கிடைக்கும் வாய்ப்பு உள்ளது. திருமண முயற்சிகள் முடிவாகும்.

வெள்ளி -
அதிக நன்மைகள் நடைபெறும். தொழில் மற்றும் வியாபாரத்தில் லாபம் இருமடங்காக இருக்கும் குடும்பத்தின் தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும் சொத்து சம்பந்தமான பிரச்சினைகளை பேசித் தீர்ப்பீர்கள். பாகப்பிரிவினை செய்து உங்களுக்கான பங்கு திருப்திகரமாக இருக்கும். சுப காரிய பேச்சுக்கள் மனதிற்கு நிறைவைத்தரும். வருமானம் அதிகரிக்கும். தேவைகள் நிறைவேறும்.

சனி-
தொழில் தொடர்பான ஒரு சில பிரச்சினைகளை முடிவுக்குக் கொண்டு வருவீர்கள். ஆதாயம் ஏற்படும் ஒரு வியாபார வருவாய் ஏற்படும். எதிர்பார்த்த பணம் கிடைக்கும். குடும்பத்தினர் ஒத்துழைப்பு சிறப்பாக இருக்கும். வாழ்க்கைத்துணையின் உடல்நலத்தில் முன்னேற்றம் ஏற்படும் குடும்பத்தார் மீதான அக்கறை கூடும்.

ஞாயிறு -
நண்பர்களுக்கு அல்லது உறவினர்களுக்கு உதவி செய்து கொடுப்பீர்கள். தர்ம காரியங்களில் ஈடுபடுவீர்கள். வீட்டு பராமரிப்புச் செலவுகள் கூடும்.

வணங்கவேண்டிய தெய்வம்-
கருமாரி அம்மனை வழிபாடு செய்யுங்கள். அம்மன் துதி பாராயணம் செய்யுங்கள். நன்மைகள் நடக்கும். முயற்சிகளில் வெற்றி கிடைக்கும்.
******************************

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.


FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x