Published : 27 Apr 2020 10:37 AM
Last Updated : 27 Apr 2020 10:37 AM

ரோகிணி, மிருகசீரிடம், திருவாதிரை (ஏப்ரல் 27 முதல் மே 3 வரை) - இந்தவாரம் உங்களுக்கு இப்படித்தான்! 

- ‘சொல்வாக்கு ஜோதிடர்’ ஜெயம் சரவணன்


ரோகிணி -
இந்த வாரம் பெருமளவு நன்மைகள் நடைபெறும்.
எதிர்பார்த்த உதவிகள் அனைத்தும் கிடைக்கும். பணியிலிருந்த அழுத்தங்கள் படிப்படியாக விலகும். வேலையில் கூடுதல் பொறுப்புகள் கிடைக்கும். பணத்தேவைகள் உடனுக்குடன் பூர்த்தியாகும்.
நீண்ட நாளாக எதிர்பார்த்திருந்த நல்ல செய்தி இந்த வாரம் கிடைக்கும். வியாபாரம், மற்றும் தொழிலில் படிப்படியான சீரான வளர்ச்சி ஏற்படும். சகோதர உறவுகளிடம் கவனமாக இருக்க வேண்டும். அவர்களிடம் தேவையில்லாத பிரச்சினைகளை ஏற்படுத்திக் கொள்ள வேண்டாம்.
திருமண வயதில் இருக்கும் எல்லோருக்கும் திருமணம் சம்பந்தமான விஷயங்கள் சாதகமாக இருக்கும்.அல்லது திருமண வயதில் பிள்ளைகள் இருந்தால் உங்கள் பிள்ளைகளுக்கு திருமண முயற்சிகள் சாதகமாக இருக்கும். அதற்கான முயற்சிகளில் முன்னேற்றம் ஏற்படும்.
பெண்களுக்கு எதிர்பார்த்த தேவையான அனைத்து உதவிகளும் கிடைக்கும். புதிதாக அறிமுகமாகும் நபர்களுடன் அதிக நெருக்கம் வேண்டாம். இதுவரை புத்திர பாக்கியம் இல்லாத பெண்களுக்கு புத்திர பாக்கியமும் உண்டாகும்.
தாயாரின் உதவி கிடைக்கும். பணத்தேவைகள் பூர்த்தியாகும். மாணவர்களுக்கு கல்வியில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். கலைஞர்களுக்கு எதிர்பாராத புதிய வாய்ப்புகள் கிடைக்கும் வாய்ப்புள்ளது. சரியாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

இந்த வாரம் -

திங்கள்-
எந்த ஒரு விஷயத்திலும் அலட்சியமாக இருக்க வேண்டாம். கோபத்தைக் கட்டுப்படுத்த வேண்டும். செய்கின்ற வேலைகளில் குளறுபடிகள் ஏற்படும். தொழில் வியாபாரத்தில் எதிர்ப்புகள் தோன்றும். அனைவரையும் அனுசரித்துச் செல்லவேண்டும். அக்கம்பக்கத்தினருடன் தேவை இல்லாத வாக்குவாதங்கள், சண்டை சச்சரவு செய்ய வேண்டாம்.

செவ்வாய் -
தேவையான உதவிகள் அனைத்தும் கிடைக்கும். பணத்தேவைகள் பூர்த்தியாகும். எதிர்பாராத பணவரவு உண்டு. தொழில் வியாபாரத்தில் முன்னேற்றம் ஏற்படும். குடும்பத்தில் ஏற்பட்டுள்ள பிரச்சினைகள் முடிவுக்கு வரும். ஆரோக்கியம் மேம்படும். குழந்தைகளுக்காக ஒரு சில செலவுகள் எடுக்கவேண்டியது வரும்.


புதன்-
தர்ம காரிய சிந்தனை ஏற்படும். உங்களாலான உதவிகளை பலருக்கும் செய்து தருவீர்கள். வேலையில் மனநிறைவு இருக்கும். தொழில் வியாபாரத்தில் சீரான வளர்ச்சி இருக்கும் சுபச்செலவுகள் ஏற்படும்.

வியாழன்-
வேண்டிய உதவிகள் சரியான நேரத்தில் கிடைக்கும். பணவரவு மனத் திருப்தியை ஏற்படுத்தும் வண்ணம் இருக்கும். தொழில் வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். புதிய வியாபார வாய்ப்பு கிடைக்க வாய்ப்புள்ளது. பெண்களுக்கு சுயதொழில் தொடர்பான உதவிகள் கிடைக்கும். சுயதொழில் தொடங்குவதற்கான அனைத்து முயற்சிகளும் சாதகமாக இருக்கும். பிள்ளைகளின் கல்வி முன்னேற்றம் திருப்திகரமாக இருக்கும். அலுவலகப் பணிகளை சரியான நேரத்தில் முடித்து நல்ல பெயர் கிடைக்கும்.

வெள்ளி-
பயணங்களைச் செய்ய வேண்டாம். கடன் வாங்காதீர்கள். உங்கள் கோபத்தை குழந்தைகளிடமும் வாழ்க்கைத்துணையிடமும் காட்ட வேண்டாம். மனசஞ்சலம் ஏற்படும்.

சனி-
முக்கியமான பிரச்சினைகள் அனைத்தும் முடிவுக்கு வரும். எதிர்பார்த்த பண உதவி கிடைக்கும். அலுவலகப் பணியில் மனநிறைவு ஏற்படும். வியாபாரத்தில் வரவேண்டிய பாக்கிகள் வசூலாகும். தொழில் தொடர்பாக தேவையான உதவிகள் கிடைக்கும்.

ஞாயிறு-
நீண்ட நாளாக எதிர்பார்த்துக் கொண்டிருந்த நல்ல தகவல் இன்று கிடைக்கும். நண்பர்களால் உதவிகள் கிடைக்கும். பணவரவு தாராளமாக இருக்கும். வியாபார விஷயங்கள் சாதகமாக இருக்கும். மனதை உறுத்திக் கொண்டிருந்த ஒரு பிரச்சினை இன்று முடிவுக்கு வரும்.

வணங்க வேண்டிய தெய்வம்-
ஸ்ரீ மகா கணபதியை வழிபடுங்கள். விநாயகர் அகவல் படியுங்கள். தேவைகள் பூர்த்தியாகும். மனநிம்மதி உண்டாகும்.
***************************************


மிருகசீரிடம் -
இந்த வாரம் உங்களுக்கு தேவையான உதவிகள் அனைத்தும் தக்க சமயத்தில் கிடைக்கும்.
குடும்பத்தில் ஏற்பட்டிருந்த குழப்பங்கள் தீரும். கணவன்-மனைவிக்குள் இருந்த சச்சரவுகள் சமாதானமாகும். அலுவலகப் பணியில் இருந்த நெருக்கடி நீங்கும். வியாபாரம் மற்றும் தொழில் தொடர்பாக தேவையான உதவிகள் கிடைக்கும்.
தொழில் தொடர்பாக புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும். லாபத்தில் சீரான வளர்ச்சி முன்னேற்றம் ஏற்படும். பணத் தேவைகள் பூர்த்தியாகும். பெண்களுக்கு நன்மைகள் பலவாறாக நடக்கும். குழந்தை பாக்கியம் உண்டாகும். கலைஞர்களுக்கு ஒப்பந்தங்கள் தொடர்பான பேச்சுவார்த்தைகள் ஏற்படும்.

இந்த வாரம் -

திங்கள்-
எடுத்துக்கொண்ட காரியத்தை கச்சிதமாக செய்து முடிப்பீர்கள். முயற்சிகளில் முன்னேற்றம் கிடைக்கும். பணவரவு தாராளமாக இருக்கும். எதிர்பார்த்த உதவிகள் தேடி வரும். நன்மைகள் பலவாறாக நடக்கும் நாள். தொழில் வியாபாரத்தில் நல்ல வளர்ச்சியும் லாபமும் கிடைக்கப் பெறுவீர்கள்.

செவ்வாய்-
உங்கள் கடமை எதுவோ அதை மட்டும் செய்து வாருங்கள். அடுத்தவர் விஷயத்தில் தலையிட வேண்டாம். பொது விஷயங்களில் உங்கள் கருத்துக்களை வெளியிட வேண்டாம், அவை உங்களுக்கு எதிராகத் திரும்பும். குடும்பத்தினரிடம் கோபத்தை வெளிப்படுத்தக்கூடாது.

வியாழன்-
பணவரவு தாராளமாக இருக்கும். வியாபார விஷயங்கள் சாதகமாக இருக்கும். தொழில் மற்றும் வணிகத்தில் லாபம் கிடைக்கும். பெண்களுக்கு எதிர்பார்த்த உதவிகள், சுய தொழில் முயற்சிகள் அனைத்தும் சாதகமாக இருக்கும்.

வெள்ளி-
எதிர்பார்த்த பண உதவிகள் உள்ளிட்ட சில விஷயங்கள் தாமதமாகலாம். தேவையில்லாத மன உளைச்சல் மற்றும் மனக் குழப்பங்கள் ஏற்படும். எதிர்காலம் பற்றிய அச்சம் தோன்றும். பணி நிரந்தரம் பற்றிய கவலை அதிகரிக்கும். வேறு வேலை தேடலாமா? என்கிற எண்ணம் ஏற்படும்.

சனி-
கடன் உள்ளிட்ட பிரச்சினைகளில் நல்ல முடிவு ஏற்படும். எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். நண்பர்களால் ஆதாயம் கிடைக்கப் பெறுவீர்கள். தொழிலிலும் வியாபாரத்திலும் சீரான வளர்ச்சி இருக்கும். அலுவலகத்தில் இருந்து வரவேண்டிய நிலுவைத் தொகைகள் இன்று கிடைக்கும் வாய்ப்பு உள்ளது.

ஞாயிறு-
குடும்பத்தாருடன் நேரத்தை செலவிடுங்கள். அடுத்தவர் பிரச்சினைகளில் தலையிட வேண்டாம். எவருடனும் பேசும்போது கவனமாக இருக்க வேண்டும்.

வணங்க வேண்டிய தெய்வம்-
வீட்டிலேயே மகா விஷ்ணு வழிபாடு செய்யுங்கள், மகாவிஷ்ணுவுக்கு பால் பாயசம் நைவேத்தியம் செய்யுங்கள். நன்மைகள் அதிகமாகும். பிரச்சினைகள் தீரும். மனம் தெளிவாகும்.
*******************************


திருவாதிரை -
நல்ல பலன்கள் நடக்கும் என்று எதிர்பார்க்கலாம். அவசர முடிவுகளை எடுக்க வேண்டாம்.
குறிப்பாக வேலை தொடர்பான விஷயங்களில் நிதானம் காக்க வேண்டும். வழக்கு தொடர்பான விஷயங்களை முடிந்தவரை தள்ளி வையுங்கள்.
கணவன் மனைவிக்குள் கருத்து வேறுபாடுகள் வராமல் பார்த்துக்கொள்ளவும். குழந்தைகளிடம் கோபத்தைக் காட்டாமல் அன்பை மட்டும் காட்டுங்கள். பெண்கள் எந்த ஒரு முடிவையும் எடுப்பதற்கு முன் முழுமையாக விசாரித்து ஆராய்ந்து அதன் பிறகு முடிவெடுக்க வேண்டும். அவசர கோலத்தில் ஏதேனும் முடிவுகளை எடுத்தால், உங்களுக்கு எதிராக மாறும்.
மாணவர்கள் கல்வியில் மட்டும் கவனத்தைச் செலுத்துங்கள். கலைஞர்களுக்கு வாய்ப்புகள் கிடைத்தாலும் அதில் உள்ள ஒப்பந்த விவரங்களை முழுமையாக புரிந்து கொண்டு புதிய வாய்ப்புகளை ஏற்றுக் கொள்ளுங்கள்.

இந்த வாரம் -

திங்கள்-
எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். அலுவலகப் பணிகளில் அதிக கவனம் செலுத்துவீர்கள். வியாபாரத்தில் சீரான வளர்ச்சி இருக்கும். தொழில் போட்டி அதிகமாக இருந்தாலும் உங்கள் திறமையால் அவற்றை முறியடிக்கும் ஆற்றல் ஏற்படும்.

செவ்வாய்-
வேண்டிய உதவிகள் கிடைக்கும். எதிர்பார்த்த பணம் கிடைக்கும். தொழில் மற்றும் வியாபாரம் தொடர்பான விஷயங்கள் சாதகமாக இருக்கும். குடும்பத்தினர் தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். பெண்களுக்கு சகோதர வழியில் உதவிகள் கிடைக்கும்.

புதன்-
மனக்குழப்பம் அதிகரிக்கும். எதிர்காலம் பற்றிய பயம் தோன்றும். தேவையில்லாத கற்பனைகள் மனதில் தோன்றும். மன சஞ்சலத்திற்கு இடம் கொடுக்காதீர்கள். ஆரோக்கியம் பற்றிய கவலை தோன்றி மறையும். குழந்தைகளின் எதிர்காலம் கருதி ஒரு சில நல்ல முடிவுகளை எடுப்பீர்கள்.

வியாழன்-
எதிர்பார்த்த உதவிகள் மட்டுமல்லாமல் எதிர்பாராத உதவிகள் கிடைக்கும். பணவரவு தாராளமாக இருக்கும். வியாபாரத்தில் நல்ல வளர்ச்சியும் லாபமும் கிடைக்கப் பெறுவீர்கள். குடும்பத்தினர் மகிழ்ச்சிகரமாக இருப்பார்கள். குடும்பத்தின் தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும்.வேலை தொடர்பான நல்ல தகவல் கிடைக்கும்.

வெள்ளி-
தேவையற்ற பயணங்கள் வேண்டாம். நண்பர்களுடனும் உறவினர்களுடனும் தேவையில்லாத சர்ச்சை பேச்சுவார்த்தைகளை வைத்துக் கொள்ள வேண்டாம். குழந்தைகளிடம் அன்பு பாராட்டுங்கள். வாழ்க்கைத் துணையிடம் தேவை இல்லாத வார்த்தைப் போர் வைத்துக்கொள்ள வேண்டாம்.

சனி-
ஆரோக்கியத்தில் முன்னேற்றம் ஏற்படும். மருத்துவச் செலவுகள் குறையும். கடன் தொடர்பான பிரச்சனைகள் சமாதானம் ஆகும். சொத்துக்கள் சம்பந்தமான விஷயங்கள் பேசி முடிவாகும். தாயாரின் உடல் நலத்தில் முன்னேற்றம் ஏற்படும். எதிரிகள் தொல்லை குறையும்.

ஞாயிறு-
குழந்தைகளின் கல்வி பற்றிய அக்கறை தோன்றும். அவர்களின் கல்வி தொடர்பான விஷயங்களில் புது முயற்சிகள் எடுப்பீர்கள். வீட்டில் தேவையில்லாத பொருட்களை அனைத்தையும் ஒதுக்கி வைப்பீர்கள். பழுதான பொருட்களை சரி செய்து மீண்டும் பயன்பாட்டுக்குக் கொண்டு வருவீர்கள்.

வணங்க வேண்டிய தெய்வம்-
கால பைரவர் வழிபாடு செய்யுங்கள். பைரவர் அஷ்டோத்திரம் பாராயணம் செய்யுங்கள். நன்மைகள் அதிகமாகும்.
************************************************

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.


FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x