Published : 27 Apr 2020 10:06 AM
Last Updated : 27 Apr 2020 10:06 AM

அஸ்வினி, பரணி, கார்த்திகை (ஏப்ரல் 27 முதல் மே 3 வரை) - இந்தவாரம் உங்களுக்கு இப்படித்தான்! 


- ‘சொல்வாக்கு ஜோதிடர்’ ஜெயம் சரவணன்


அஸ்வினி -
எதிர்பார்ப்புகள் பூர்த்தியாகும் வாரம் .
ஆரோக்கியத்தில் இருந்த பிரச்சினைகள் குறையும். எடுத்துக்கொண்ட முயற்சிகளில் முன்னேற்றம் உண்டாகும். அலுவலகப் பணியில் இயல்பான நிலையே இருக்கும். தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்.
இதுவரை தொழில் செய்யாதவர்களும் கூட இப்போது தொழில் செய்யும் முயற்சிகளில் ஈடுபடுவார்கள். அந்த முயற்சி சாதகமாக இருக்கும். பணப்பற்றாக்குறை நீங்கும்.
வியாபாரிகள் தங்கள் வியாபாரத்தில் நல்ல வளர்ச்சி முன்னேற்றம் காண்பார்கள். பாக்கிகள் வசூலாகும். நண்பர்களும் உறவினர்களும் உங்களுக்கு உதவி செய்ய முன்வருவார்கள். திருமணம் உள்ளிட்ட சுப காரிய விசேஷங்கள் பேசி முடிக்கப்படும் வாய்ப்பு உள்ளது.
பெண்களின் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் ஏற்படும். குடும்பத்தினருடன் ஏற்பட்ட மனக்கசப்புகள் நீங்கும். சுயதொழில் தொடங்கும் வாய்ப்பு உள்ளது. முயற்சிகளில் இறங்கினால் வெற்றி காணலாம். கணவன் மனைவி ஒற்றுமை பலப்படும்.
மாணவர்களுக்கு கல்வியில் முன்னேற்றம் ஏற்படும். கலைஞர்களுக்கு உதவிகள் தேடி வரும். ஒரு சில வாய்ப்புகள் நண்பர்களால் கிடைக்கும்.

இந்த வாரம் -

திங்கள்-
எதிர்பார்த்த நல்ல தகவல் கிடைக்கும்.தாயாரின் உடல் நலத்தில் ஒருசில அச்சுறுத்தல்கள் தோன்றும். வியாபாரம் தொடர்பான விஷயங்கள் சாதகமாக இருக்கும். நீண்ட நாளாக வராமலிருந்த பாக்கிகள் வசூலாகும். சுயதொழில் தொடங்கும் முயற்சியில் முன்னேற்றம் ஏற்படும். தேவையான உதவிகள் கிடைக்கும். தொழில் தொடர்பாக கிடைக்கின்ற ஆலோசனைகள் நம்பிக்கை தருவதாக இருக்கும்.
.

செவ்வாய் -
செலவுகள் அதிகமாக ஏற்படும் நாள். உங்கள் கருத்துக்கள் தவறாக புரிந்து கொள்ளப்படும். எனவே அமைதியாக இருப்பது நல்லது. அலுவலகப் பணிகளில் கூடுதல் கவனம் வேண்டும். தொழில் மற்றும் வியாபாரத்தில் அதிக கவனம் எடுத்துக் கொள்வது நல்லது.

புதன் -
நன்மைகள் அதிகமாக நடைபெறும் நாள். தேவையான அத்தனை உதவிகளும் கிடைக்கும். வியாபாரத்தில் வளர்ச்சி உண்டாகும். எடுத்துக்கொண்ட வேலைகள் அனைத்தையும் எளிதாக செய்து முடிப்பீர்கள். தொழில் மற்றும் வியாபாரம் தொடர்பாக நல்ல தகவல் கிடைக்கும். எதிர்பார்த்த பணம் இன்று கிடைக்கும்.

வியாழன்-
நீங்களே எதிர்பார்க்காத நல்ல விஷயங்கள் நடக்கும். உறவினர்களின் உதவிகள் கிடைக்கும். நண்பர்களால் பணத்தேவைகள் பூர்த்தியாகும். தொலைபேசி வழித் தகவல் உற்சாகத்தைத் தரும். அலுவலகப் பணிகளில் மன நிறைவு உண்டாகும்.குடும்பத்திற்குத் தேவையான அத்தியாவசிய செலவுகள் ஏற்படும்.

வெள்ளி -
பணத்தேவைகள் உடனுக்குடன் பூர்த்தியாகும். தொழில் தொடர்பான ஒப்பந்தங்கள் ஏற்படும். சுபகாரியப் பேச்சு வார்த்தைகள் மனநிறைவைத் தரும். அசையாச் சொத்துக்கள் தொடர்பான பிரச்சினைகளை பேசித் தீர்ப்பீர்கள். அலுவலக உயர் அதிகாரியின் உதவியால் நன்மைகள் கிடைக்கும்.

சனி-
நினைத்த காரியத்தை நினைத்தபடி செய்து முடிப்பீர்கள். பணவரவு தாராளமாக இருக்கும். முயற்சிகளில் முன்னேற்றம் ஏற்படும். குடும்ப உறவுகள் பலப்படும். குழந்தைகளின் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் ஏற்படும். தாயாரின் உடல் நலத்தில் ஏற்பட்டிருந்த பின்னடைவுகள் சரியாகும். தொழில் மற்றும் வியாபாரத்தில் சீரான வளர்ச்சி உண்டாகும்.

ஞாயிறு -
எந்த விஷயத்திலும் நிதானம் மற்றும் பொறுமை தேவை. அவசர முடிவுகள் எடுக்க வேண்டாம். வீண் வாக்குவாதங்களில் ஈடுபடாதீர்கள். மன உளைச்சல் ஏற்படும். தேவையற்ற கற்பனைகள் செய்ய வேண்டாம்.

வணங்க வேண்டிய தெய்வம்-
ஆறுமுகத்தானை வணங்குங்கள். கால பைரவரையும் வணங்கி வாருங்கள். நன்மைகள் அதிகமாகும். தேவைகள் பூர்த்தியாகும்.
************************************


பரணி -
நன்மைகள் அதிகமாக நடைபெறும் வாரம்.
மனக் குழப்பங்கள் தீரும். பணத்தேவைகள் உடனுக்குடன் பூர்த்தியாகும். எதிர்ப்புகள் குறையும். ஆரோக்கியத்தில் சிறுசிறு அச்சுறுத்தல் வந்துபோகும்.
உத்தியோகத்தில் இயல்பான நிலையே தொடரும். புதிய பணிகள் கொடுக்கப்படலாம். தொழில் தொடர்பான அனைத்து உதவிகளும் கிடைக்கும். தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். புதிதாக தொழில் தொடங்கும் எண்ணம் உடையவர்களுக்குத் தேவையான உதவிகள் கிடைக்கும். வியாபார வளர்ச்சி சீராக இருக்கும், புதிய வியாபார வாய்ப்புகள் கிடைக்கும்.
பெண்களின் தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். குடும்பத்தினர் தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். திருமணமாகாத பெண்களுக்கு திருமணம் உறுதியாகும். மாணவர்களுக்கு கல்வியில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். கலைஞர்களுக்கு புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும் வாய்ப்பு உள்ளது.

இந்த வாரம் -

திங்கள் -
எதிர்பாராத தேவையற்ற செலவுகள் ஏற்படும். அலுவலகப் பணிகளில் தேக்க நிலை ஏற்படும். எடுத்துக்கொண்ட வேலைகளை செய்து முடிப்பதில் தடையும் தாமதமும் ஏற்படும். தொழில் வியாபாரம் சீராக இருக்கும். எதிர்பார்த்த பண உதவி தாமதமாகலாம். குழந்தைகள் அதிக பிடிவாதம் பிடிப்பார்கள்.

செவ்வாய் -
குடும்பத்திற்குத் தேவையான விஷயங்களை செய்து தருவீர்கள். பணவரவு எதிர்பார்த்தபடியே இருக்கும். அலுவலகப் பணிகளில் ஏற்பட்டிருந்த குழப்பங்கள் தீரும். வியாபாரத்தில் வளர்ச்சி இருக்கும் தேவையான உதவிகள் கிடைக்கும். தொழில் தொடர்பாக தேவையான உதவிகள் கிடைக்கப் பெறுவீர்கள்.

புதன்-
பொறுமையும் நிதானமும் மிக மிக அவசியம். செலவுகள் எதிர்பாராத அளவுக்கு ஏற்படும். எந்த வேலை செய்து கொண்டிருந்தாலும் அதில் கண்ணும்கருத்துமாக இருக்க வேண்டும். குடும்பத்தினரிடம் கோபத்தைக் காட்டாதீர்கள். மனதை ஒருநிலைப்படுத்த வேண்டும்.

வியாழன்-
நேற்றைய பிரச்சினைகள் அனைத்தும் முடிவுக்கு வரும். கணவன்-மனைவிக்குள் ஏற்பட்டிருந்த சச்சரவுகள் நீங்கும். குழந்தைகளிடம் காட்டிய கோபத்தைத் தணிக்க அவர்களுக்கு மகிழ்ச்சியூட்டும் படியாக செயல்படுவீர்கள்.


வெள்ளி -
தொலைபேசி வழித் தகவல் மனதிற்கு உற்சாகத்தைத் தரும்.தொழில் தொடர்பாக புதிய வாய்ப்புகள் ஏற்படும். வியாபார பேச்சுவார்த்தைகள் சாதகமாக இருக்கும். நண்பர்களால் உதவிகள் கிடைக்கப் பெறுவீர்கள். அவர்களால் ஆதாயமும் கிடைக்கும்.

சனி-
அதிக நன்மைகள் நடைபெறும் நாள். பண வரவு தாராளமாக இருக்கும். வியாபாரத்தில் வளர்ச்சி உண்டாகும். குடும்பப் பிரச்சினைகள், குழப்பங்கள் யாவும் தீரும். வருமானம் திருப்திகரமாக இருக்கும்.

ஞாயிறு -
சுபகாரிய பேச்சுவார்த்தைகள் சுமுகமாக முடிவடையும். நண்பர்களாலும் உறவினர்களாலும் ஆதாயம் ஏற்படும். பணவரவு எதிர்பார்த்தபடியே இருக்கும்.

வணங்கவேண்டிய தெய்வம் -
"ஓம் நமோ நாராயணாய" என்னும் எட்டெழுத்து மந்திரத்தை தினமும் 108 முறை எழுதி வாருங்கள், நன்மைகள் அதிகமாகும். தேவைகள் உடனுக்குடன் பூர்த்தியாகும்.
************************************


கார்த்திகை -
எதிர்பாராத நன்மைகள் கிடைக்கும். தேவைகள் உடனுக்குடன் பூர்த்தியாகும்.
முயற்சிகளில் முன்னேற்றம் ஏற்படும். நெருங்கிய உறவினர்களுக்கு ஒரு சில உதவிகளைச் செய்து தருவீர்கள். அலுவலகப் பணியில் சிறப்பாக பணியாற்றி வேலைகள் அனைத்தையும் உடனுக்குடன் முடித்து விடுவீர்கள்.
தொழில் தொடர்பான அனைத்து உதவிகளும் கிடைக்கும். புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கப் பெறுவீர்கள். தொழில் வளர்ச்சிக்காக எதிர்பார்த்த வங்கிக் கடன் கிடைக்கும். பெண்களின் ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்.
குடும்பத்தில் ஏற்பட்டிருந்த மனக்கசப்புகள் நீங்கும். குழந்தைகளின் கல்வி வளர்ச்சியில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். வியாபாரிகள் தங்கள் வியாபாரத்தில் நல்ல வளர்ச்சி காண்பார்கள். கலைஞர்களுக்கு எதிர்பாராத உதவிகள் கிடைக்கும்.

இந்த வாரம் -

திங்கள்-
பொருளாதாரத் தேவைகள் பூர்த்தியாகும். பணவரவு திருப்திகரமாக இருக்கும். சகோதரர்கள் உதவிக்கரம் நீட்டுவார்கள். ஆதாயம் தரக்கூடிய வியாபார விஷயங்கள் சாதகமாக இருக்கும். ஆரோக்கியம் மேம்படும். மன அழுத்தம் நீங்கும். நீண்ட நாளாக குழப்பிக் கொண்டிருந்த ஒரு பிரச்சினையில் இன்று தீர்வு கிடைக்கும்.


செவ்வாய்-
அலைச்சல் அதிகரிக்கும். உடலில் அசதி ஏற்படும். தேவையற்ற செலவுகள் ஏற்படும். கடினமாக உழைத்த உழைப்பு கடைசி நேரத்தில் வீணாகும்.

புதன் -
எதிர்பார்த்த அனைத்து உதவிகளும் கிடைக்கும். பணத்தேவைகள் உடனுக்குடன் பூர்த்தியாகும். வியாபார வளர்ச்சி சீராக இருக்கும். வங்கி தொடர்பான முக்கியமான பிரச்சினைகள் தீரும். தொழிலுக்கு அரசுச் சலுகை கிடைக்கும்.

வியாழன் -
அலுவலக வேலைகளில் அதிக நெருக்கடி ஏற்படும். குறித்த நேரத்தில் எந்த வேலையையும் செய்து முடிக்க முடியாமல் தடுமாற்றம் ஏற்படும். எரிச்சலும் கோபமும் வெளிப்படும். மனதில் தேவையில்லாத பயம் தோன்றும். நிதானம் தவற வேண்டாம்.

வெள்ளி-
எதிர்பார்த்த உதவிகள் மட்டுமல்லாமல் எதிர்பாராத உதவிகளும் கிடைக்கும். பணவரவு தாராளமாக இருக்கும். வியாபாரப் பேச்சுவார்த்தைகளில் முன்னேற்றம் ஏற்படும். புதிதாக தொழில் தொடங்கும் முயற்சிக்கு தேவையான உதவிகள் கிடைக்கும். பெண்களுக்கு திருமணம் உள்ளிட்ட சுப விசேஷங்கள் முடிவாகும்.

சனி -
உதவிகள் உடனுக்குடன் கிடைக்கும். தேவைகள் பூர்த்தியாகும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். குடும்ப உறவுகள் பலப்படும் .சகோதரர்கள் ஒற்றுமை ஏற்படும். குழந்தைகளின் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் ஏற்படும். தொழில் மற்றும் வியாபாரத்தில் வருமானம் திருப்திகரமாக இருக்கும்.


ஞாயிறு -
எதிர்பார்த்த பணவரவு எதிர்பார்த்தபடி கிடைக்கும். சகோதரர்கள் சொத்துப் பிரச்சினையில் உங்களுக்கு இணக்கமாக இருப்பார்கள். திருமணம் உள்ளிட்ட சுப காரிய பேச்சுவார்த்தைகள் முடிவுக்கு வரும்.புதிய வியாபார ஒப்பந்தங்கள் ஏற்படும்.

வணங்க வேண்டிய தெய்வம் -
சூரிய வழிபாடு செய்யுங்கள், ஆதித்ய ஹிருதயம் கேளுங்கள். நன்மைகள் அதிகரிக்கும். தேவைகள் பூர்த்தியாகும்.

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.


FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x