Published : 20 Apr 2020 12:09 PM
Last Updated : 20 Apr 2020 12:09 PM

அஸ்தம், சித்திரை, சுவாதி ; (ஏப்ரல் 20 முதல் 26 வரை) - இந்தவாரம் உங்களுக்கு இப்படித்தான்! 

- ‘சொல்வாக்கு ஜோதிடர்’ ஜெயம் சரவணன்


அஸ்தம் -
வருமானம் பல மடங்காக இருக்கும்.
ஆனால் மனதில் தேவையற்ற சஞ்சலம் ஏற்படும். உத்தியோகத்தில் இயல்பான நிலையே தோன்றும். ஒரு சிலருக்கு வேலை தொடர்பாக அழுத்தங்கள் அதிகரிக்கும். அதனால் மன உளைச்சலும் ஏற்படும். தொழிலில் நல்ல வளர்ச்சி இருக்கும்.
புதிய தொழில் தொடங்கும் வாய்ப்புகள் கிடைக்கும். குடும்பத்தில் அமைதி நிலவும். திருமணம் உள்ளிட்ட சுப நிகழ்வுகள் நடப்பதற்கான வாய்ப்புகள் உண்டு. வீடு மனை தொடர்பான சொத்து விஷயங்கள் சாதகமாக இருக்கும்.
பெண்களுக்கு தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். குடும்பத்தில் அமைதி நிலவும். ஒரு சில பெண்களுக்கு மனதில் தேவையற்ற அச்சம் தோன்றும். பதட்டத்தோடு காணப்படுவார்கள். கலைஞர்களுக்கு நல்ல வாய்ப்புகள் கிடைக்கும். மாணவர்கள் கல்வியில் முன்னேற்றம் ஏற்படும்.

இந்த வாரம் -

திங்கள்-
சுபச் செலவுகள் அதிகமாக ஏற்படும். சொத்து தொடர்பான ஒப்பந்தங்கள் ஏற்படும். வருமானத்திற்கு குறை இருக்காது. பெண்கள் தாங்கள் எடுக்கும் முயற்சியில் முன்னேற்றம் காண்பார்கள். வியாபாரிகளுக்கு வருமானம் இருமடங்காக இருக்கும்.

செவ்வாய்-
எடுத்துக்கொண்ட முயற்சிகளில் முன்னேற்றம் ஏற்படும். உத்தியோகத்தில் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். தாமதமாகிக் கொண்டிருந்த அலுவலக வேலைகள் சுறுசுறுப்பாக செய்து முடிப்பீர்கள். சொத்து சம்பந்தமாக எதிர்பார்த்த கடன் உதவி கிடைக்கும்.

புதன்-
அலைச்சல்களும் அதனால் உடல் அசதியும் ஏற்படும். சிறிய அளவிலான மருத்துவச் செலவு ஏற்பட வாய்ப்பு உண்டு. மற்றவர்கள் நலனுக்காக நீங்கள் அதிகம் உழைக்க வேண்டியதிருக்கும். அலுவலகத்தில் மற்றவர் வேலையைப் பார்க்க வேண்டி வரும்.

வியாழன்-
கடன் பிரச்சினைகள் முடிவுக்கு வரும். அடகு வைத்த நகைகளை மீட்க வழி கிடைக்கும். பழைய பொருட்களை மாற்றி புதிய பொருட்கள் வாங்குவீர்கள். நண்பர்களால் ஆதாயம் ஏற்படும். வியாபார வளர்ச்சி சீராக இருக்கும்.

வெள்ளி-
பயணங்களைத் தவிர்க்க வேண்டும். தொழில் தொடர்பான ஒப்பந்தங்கள் போடுவதில் அதிக கவனம் வேண்டும், முடிந்தால் ஒப்பந்தங்கள் போடுவதைத் தள்ளி வையுங்கள். வியாபாரத்தில் கடன் தொடர்பான சங்கடங்கள் உருவாகும். அலுவலகத்தில் நெருக்கடிகள் ஏற்படும்.

சனி-
சங்கடங்கள் ஏற்படுத்திக் கொண்டிருந்த முக்கியமான பிரச்சினைகள் இன்று முடிவுக்கு வரும். தொழில் தொடர்பான ஒப்பந்தங்கள் கிடைக்கும். வெளிநாடு செல்லும் முயற்சியில் முன்னேற்றமான தகவல் கிடைக்கும். தாமதமாகிக் கொண்டிருந்த பணம் கைக்கு வந்து சேரும்.

ஞாயிறு-
நீண்ட நாளாக சந்திக்க நினைத்துக் கொண்டிருந்த ஒரு நபரை இன்று சந்திப்பீர்கள். வியாபார ஒப்பந்தங்கள் நிறைவேறும். கடைகள் வணிக நிறுவனங்கள் நடத்திக் கொண்டிருப்பவர்களுக்கு புதிய கிளைகளை தொடங்கும் சிந்தனை உருவாகும். திருமணம் உள்ளிட்ட சுப காரிய பேச்சுவார்த்தைகள் முடிவுக்கு வரும்.

வணங்க வேண்டிய தெய்வம்-
மகாலட்சுமி தாயாரை வணங்கி வாருங்கள். ஸ்ரீ லக்ஷ்மி ஸஹஸ்ரநாமம் கேளுங்கள். நன்மைகள் அதிகமாகும். செலவுகள் குறையும். ஆரோக்கியம் மேம்படும்.
****************************************

சித்திரை -
பண வரவுகளால் மன நிறைவு உண்டாகும்.
புதிதாக தொழில் தொடங்கும் முயற்சியில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். உத்தியோகத்தில் இடமாற்றம் ஏற்பட வாய்ப்பு உண்டு. பணவரவு மட்டுமல்லாமல் புதிய தொழில் ஒப்பந்தங்களும் கிடைக்கும்.
திருமணம் ஆகாதவர்களுக்கு திருமணம் நடக்கும். திருமண வயதில் பிள்ளைகள் இருந்தால் பிள்ளைகளுக்கு திருமணம் நடக்கும். ஆரோக்கியத்தில் முன்னேற்றம் ஏற்படும். பெண்களுக்கு கணவர் குடும்பத்தாருடன் ஏற்பட்டிருந்த வருத்தங்கள் அகலும்.
சுயதொழில் தொடங்குவதற்கான உதவிகள் கிடைக்கும். வியாபார வளர்ச்சி அமோகமாக இருக்கும். சொத்து சம்பந்தமான பிரச்சினைகள் ஏதும் இருந்தால் இந்த வாரம் தீரும். கலைஞர்களுக்கு எதிர்பாராத அதிர்ஷ்ட வாய்ப்புகள் கிடைக்கும். பொருளாதார பிரச்சினைகள் தீரும்.மாணவர்களுக்கு கல்வியில் எதிர்பார்த்த முன்னேற்றம் கிடைக்கும்.

இந்த வாரம் -

திங்கள்-
வருமானம் இரு மடங்காக இருக்கும். எதிர்பார்த்த உதவிகள் அனைத்தும் கிடைக்கும். உத்தியோகத்தில் பதவி உயர்வு, ஊதிய உயர்வு உள்ளிட்டவை கிடைக்கும். நீண்ட நாட்களாக வராமலிருந்த பணம் வசூலாகும். புதிதாக தொழில் தொடங்கும் முயற்சி சாதகமாக இருக்கும்.

செவ்வாய்-
வருமானம் திருப்திகரமாக இருக்கும். செலவுகள் கட்டுக்குள் இருக்கும். ஆடம்பரப் பொருட்கள் வாங்குவீர்கள். நண்பர்களால் செலவுகள் உண்டு. அவசியச் செலவுகள் தவிர மற்ற செலவுகளை குறைக்க வேண்டும்.

புதன்-
வியாபாரத்தில் எதிர்பார்த்த வருமானம் உண்டாகும். நீண்ட நாள் மனதை வருத்திக் கொண்டிருந்த கடன் பிரச்சினை இன்று முடிவுக்கு வரும். வங்கிக் கடன் தொடர்பான சிக்கல்கள் தீரும். தொழில் தொடர்பான ஒப்பந்தங்கள் ஏற்படும்.அரசு வழியில் இருந்த நிர்ப்பந்தங்கள் விலகும். சுப காரிய பேச்சுக்கள் நல்ல முடிவுக்கு வரும். மாணவர்களுக்கு எதிர்பார்த்த கல்வி தொடர்பான உதவிகள் கிடைக்கும்.

வியாழன்-
அலுவலகப் பணியில் சக ஊழியர்களுக்கு உதவுவீர்கள். ஆலயவழிபாடு ஏற்படும். தொழில் தொடர்பான பேச்சுவார்த்தைகள் சாதகமாக இருக்கும். வியாபாரத்தில் நீண்டநாளாக எதிர்பார்த்துக் கொண்டிருந்த தகவல் கிடைக்கும். புதிய வியாபாரம் தொடங்குவது தொடர்பான விஷயங்கள் சாதகமாக இருக்கும்.

வெள்ளி-
சிறப்பான பலன்கள் நடைபெறும் நாள். ஆரோக்கிய பிரச்சினைகள் தீரும். கடன் தொடர்பான முக்கியமான பிரச்சினை ஒன்று முடிவுக்கு வரும். சொத்து சம்பந்தமான பாகப்பிரிவினைகள் சுமுகமாக முடிவடையும். தரகு மற்றும் கமிஷன் தொடர்பான தொழில் செய்து கொண்டிருப்பவர்களுக்கு புதிய வாய்ப்புகள் கிடைத்து லாபம் ஏற்படும்.

சனி-
தேவையற்ற பயணங்கள் ஏற்படும். அலைச்சல் அதிகமாக இருக்கும். செலவுகள் எதிர்பாராத வகையில் ஏற்படும். சிக்கனமாக இருக்க வேண்டியது அவசியம்.

ஞாயிறு-
நீண்ட நாளாக எதிர்பார்த்துக் கொண்டிருந்த நல்ல தகவல் கிடைக்கும். சுபகாரிய பேச்சுவார்த்தைகள் சுமுகமாக முடிவடையும். வியாபார ஒப்பந்தங்கள் நிறைவேறும். தொழில் தொடர்பான முக்கிய சந்திப்புகளில் புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கப் பெறுவீர்கள். வெளிநாட்டிலிருந்து நல்ல தகவல் வரும்.

வணங்க வேண்டிய தெய்வம்-
ஸ்ரீ ஐயப்பனை வழிபாடு செய்யுங்கள், ஐயப்பனுக்கு நெய் தீபம் ஏற்றி வழிபடுங்கள். ஆரோக்கியம் சீராகும். வருமானம் பெருகும்.
**********************************

சுவாதி-
நன்மைகள் பலவாறாக நடக்கும். தேவைகள் பூர்த்தியாகும்.
வருமானம் இருமடங்காக ஏற்படும். எதிர்பார்த்த அனைத்து உதவிகளும் கிடைக்கும். பணத்தேவைகள் உடனுக்குடன் பூர்த்தியாகும். கடன் தொடர்பான பிரச்சினைகள் முடிவுக்கு வரும்.
அலுவலகத்தில் எதிர்பார்த்த இடமாற்றம் கிடைக்கும். வேறு நிறுவனங்களுக்கு மாறும் முயற்சி முழு வெற்றியைத். இதுவரை வேலை இல்லாமல் இருந்தவர்களுக்கு நல்ல நிறுவனத்தில் வேலை கிடைக்கும். பெண்களுக்கு எடுத்துக்கொண்ட முயற்சிகளில் வெற்றி கிடைக்கும்.
சுயதொழில் தொடர்பான விஷயங்களில் ஆதரவு கிடைக்கும். சொத்துக்கள் பிரச்சினை சாதகமாக இருக்கும். சகோதரர்கள் வலிய வந்து உதவுவார்கள். பத்திரிகை மற்றும் ஊடகப் பணியில் இருப்பவர்களுக்கு பணிச்சுமை கூடினாலும் அதற்குத் தகுந்த ஆதாயம் கிடைக்கும் அளவுக்கு வருமானம் பெருகும். மாணவர்களுக்கு கல்வியில் எதிர்பாராத அளவுக்கு முன்னேற்றம் மற்றும் தேர்வுகளில் நல்ல மதிப்பெண்கள் கிடைக்கும். கலைஞர்களுக்கு நண்பர்களால் வாய்ப்புகள் கிடைக்கும்.

இந்த வாரம் -

திங்கள்-
தொழில் தொடர்பான நல்ல வாய்ப்புகள் கிடைக்கும். வியாபார வளர்ச்சி அமோகமாக இருக்கும். பெண்களின் திருமணம் தொடர்பான விஷயங்கள் சாதகமாக இருக்கும். எதிர்பார்த்த பண உதவி கிடைக்கும். அலுவலகத்தில் வரவேண்டிய சலுகைகள் கிடைக்கும்.

செவ்வாய்-
எடுத்துக்கொண்ட வேலைகள் அனைத்தும் முழு வெற்றியை கொடுக்கக் கூடியதாக இருக்கும். பணவரவு தாராளமாக இருக்கும். எதிர்பார்த்த விஷயங்கள் அனைத்தும் உங்களுக்கு சாதகமாக இருக்கும். வியாபாரத்தில் வரவேண்டிய பாக்கிகள் வசூலாகும். உறவினர்களிடம் ஏற்பட்ட வருத்தங்கள் நீங்கும்.

புதன்-
அலுவலக அலுவலகப் பணிகளை சரியான நேரத்தில் முடித்துக் கொடுத்து பாராட்டுகளைப் பெறுவீர்கள். தொழில் தொடர்பான சந்திப்புகள் ஏற்படும். வியாபார வளர்ச்சியும் லாபமும் அமோகமாக இருக்கும். சுபகாரிய பேச்சு வார்த்தை சுபமாக முடியும்.

வியாழன்-
நல்ல சம்பவங்கள் அதிகமாக ஏற்படும் நாள். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். தொலைபேசி வழித் தகவல் ஆனந்தத்தைத் தரும். தொழில் தொடர்பான ஒப்பந்தங்கள் நிறைவேறும். வியாபாரத்தில் புதிய வியாபார வாய்ப்புகள் கிடைக்கும். .

வெள்ளி-
குடும்பத்தினர் தேவைகள் அனைத்தும் பூர்த்தி செய்து தரக்கூடிய நாளாக இருக்கும். தொழில் தொடர்பான புதிய நிறுவனங்களுடன் ஒப்பந்தம் ஏற்படும். வியாபார வளர்ச்சி சீராக இருக்கும்.நீண்ட நாளாக வராமலிருந்த பணம் ஒன்று கைக்கு வந்து சேரும். தொழில் தொடர்பாக வங்கிக்கடன் எதிர்பார்த்திருந்தால் இன்று நல்ல தகவல் கிடைக்கும்.

சனி-
சகோதரர்களுடன் மனம்விட்டுப் பேசி முக்கியமான பிரச்சினைகளில் தீர்வு காண்பீர்கள். அலுவலக வேலைகளில் கூடுதலான பொறுப்புகள் புதிய திட்டத்தை தயாரிப்பது போன்றவை உங்கள் பொறுப்புக்கு விடப்படும். வியாபாரத்தில் புதிய வாடிக்கையாளர்கள் அறிமுகமாவார்கள்.

ஞாயிறு-
தேவையற்ற பயணங்களை மேற்கொள்ள வேண்டாம். வாகனப் பழுது சரி செய்வீர்கள். வீட்டு உபயோகப் பொருட்களில் ஏற்பட்ட பழுதுகளை சரி செய்வீர்கள் அல்லது புதிதாக வாகனம் வாங்குவீர்கள். செலவுகள் அதிகமாக ஏற்படும் நாள்.

வணங்க வேண்டிய தெய்வம்-
பைரவர் வழிபாடு செய்யுங்கள். பைரவருக்கு செவ்வரளி மாலை சூட்டி வழிபாடு செய்யுங்கள், தேவைகள் பூர்த்தியாகும். வருமானம் அதிகரிக்கும்.
***************************

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.


FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x