Published : 19 Apr 2020 04:42 PM
Last Updated : 19 Apr 2020 04:42 PM

ரோகிணி, மிருகசீரிடம், திருவாதிரை - (ஏப்ரல் 20 முதல் 26 வரை) இந்த வாரம் உங்களுக்கு இப்படித்தான்! 

- ‘சொல்வாக்கு ஜோதிடர்’ ஜெயம் சரவணன்


ரோகிணி -
நன்மைகள் பலவாறாக நடக்கும். தேவைகள் உடனுக்குடன் பூர்த்தியாகும்.
எடுத்துக்கொண்ட வேலைகள் அனைத்தையும் சுலபமாக செய்து முடிப்பீர்கள். அலுவலக நெருக்கடிகள் தீரும். வியாபாரத்தில் லாபம் இருமடங்காக ஏற்படும். தொழில் தொடர்பாக வேண்டிய உதவிகள் கிடைக்கும். குடும்பத்தில் ஏற்பட்ட சலசலப்புகள் ஓயும்.
சகோதர ஒற்றுமை ஏற்படும். சகோதர வகையில் ஆதாயம் ஏற்படும். சக ஊழியர் ஒருவர் உங்கள் பிரச்சினைகளுக்கு உதவி செய்ய முன்வருவார். பணத்தேவைகள் பூர்த்தியாகும். மாணவர்கள் கல்வியில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்.
பெண்கள் தங்கள் தேவைகள் அனைத்தும் பூர்த்தி ஆவதைக் கண்டு மகிழ்ச்சி அடைவார்கள். இதுவரை வேலையில்லாத பெண்களுக்கு வேலை கிடைக்கும். தாமதப்பட்டுக் கொண்டிருந்த திருமண முயற்சிகள் இப்போது உறுதியாகும் திருமணத் தேதி குறிக்கப்படும். குடும்பத்தினருடன் ஏற்பட்டிருந்த மனக்கசப்புகள் நீங்கும். கலைஞர்களுக்கு நல்ல வாய்ப்புகள் கிடைக்கும்.

இந்த வாரம் -

திங்கள்-
குடும்பத்தில் மகிழ்ச்சிகரமான சம்பவங்கள் நடக்கும். திருமணம் தொடர்பான விஷயங்கள் பேசி முடிக்கப்படும். மாமன் வகை உறவுகளால் ஆதாயம் கிடைக்கும். அலுவலகப் பணியில் சுறுசுறுப்பாக இருப்பீர்கள். தொழில் வியாபாரத்தில் சீரான வளர்ச்சி இருக்கும்.

செவ்வாய்-
எதிர்பார்த்த கடனுதவி கிடைக்கும். ஒரு சிலருக்கு தற்காலிக வேலையாவது கிடைக்கும் வாய்ப்பு உள்ளது. குழந்தைகளின் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் ஏற்படும். குடும்பத்தின் அத்தியாவசிய தேவைகளை பூர்த்தி செய்து தருவீர்கள் . திருமண வயதில் இருக்கும் மகன் அல்லது மகளுக்கு திருமணம் உள்ளிட்ட சுப விசேஷங்கள் முடிவாகும். வியாபாரத்தில் வரவேண்டிய பாக்கிகள் வசூலாகும். வருமானம் சீராக இருக்கும்.

புதன்-
பொறுமையும் நிதானமும் மிக மிக அவசியம். அவசர முடிவுகளை எடுக்க வேண்டாம். பயணங்களை தவிர்க்க வேண்டும். அலுவலக ஊழியர்களிடமும், உயர் அதிகாரிகளிடமும் தேவையில்லாத வாக்குவாதம் செய்ய வேண்டாம். கோபத்தைக் கட்டுப்படுத்த வேண்டும்.


வியாழன்-
நினைத்தது நிறைவேறும் நாள். புதிதாக தொழில் தொடங்குவது அல்லது புதிதாக வியாபாரம் தொடங்குவது போன்ற விஷயங்கள் சாதகமாக இருக்கும். வங்கிக் கடன் தொடர்பாக நல்ல தகவல் கிடைக்கும். பெண்களுக்கு வேலை தொடர்பான தகவல் கிடைக்கும்.உறவுகளால் உதவிகள் கிடைக்கும்.

வெள்ளி-
திட்டமிடாத காரியங்களிலும் வெற்றி கிடைக்கும். எதிர்பாராத பணம் வரும். வியாபாரத்தில் வரவேண்டிய பாக்கிகள் வசூலாகும். தொழில் தொடர்பாக எதிர்பார்த்த ஒப்பந்தங்களும் கிடைக்கும். வீடு வாங்குவது, விற்பது போன்ற விஷயங்கள் இன்று நல்ல முடிவிற்கு வரும்.

சனி-
பராமரிப்புச் செலவுகள் கூடும். வாகன மாற்றச் சிந்தனை உண்டாகும். இட மாற்றம் ஏற்படும் வாய்ப்பு உள்ளது. குடும்பத்தினர் தேவைகளைப் பூர்த்தி செய்வீர்கள். அத்தியாவசியமான பொருட்களை வாங்குவீர்கள்.

ஞாயிறு-
நல்ல வாய்ப்புகள் தேடி வரும். கலைஞர்களுக்கு புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும். வியாபார வளர்ச்சி அமோகமாக இருக்கும். தொழில் தொடர்பாக எதிர்பார்த்த ஒப்பந்தங்கள் இன்று கையெழுத்தாகும். எதிர்பார்த்த பண உதவி கிடைக்கும்.

வணங்க வேண்டிய தெய்வம்-
மகாலட்சுமி வழிபாடு செய்யுங்கள், கனகதாரா ஸ்தோத்திரம் கேளுங்கள். நன்மைகள் பெருகும்.
***************************

மிருகசீரிடம் -
நினைத்தது நிறைவேறும் வாரம். தேவைகள் பூர்த்தியாகும்.
பணவரவு தாராளமாக இருக்கும். நீண்டநாளாக மனதை வருத்திக் கொண்டிருந்த ஒரு விஷயம் இந்த வாரம் முடிவுக்கு வரும். அலுவலகத்திலிருந்து வரவேண்டிய சலுகைகள் கிடைக்கும். வியாபாரத்தில் இருந்த மந்த நிலை மாறும்.
தாயாரின் உடல்நலத்தில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் ஏற்படும். தந்தை வழி உறவினர்களால் ஏற்பட்ட பிரச்சினைகள் முடிவுக்கு வரும். தொழில் வளர்ச்சி சீராக இருக்கும். பெண்களுக்கு தேவையான உதவிகள் கிடைக்கும். சுய தொழில் தொடர்பாக கணவர் ஒத்துழைப்பு கிடைக்கும். மாணவர்கள் கல்வியில் முன்னேற்றம் ஏற்படும். கலைஞர்களுக்கு நல்ல வாய்ப்புகள் கிடைக்கும்.

இந்த வாரம்-

திங்கள்-
புதிய முயற்சிகளில் ஈடுபடும் சிந்தனை ஏற்படும். எதிர்பார்த்த பணம் கைக்கு வந்து சேரும். வரவேண்டிய பாக்கிகள் வசூலாகும். குடும்ப பிரச்சினைகள் முடிவுக்கு வரும். கணவன்-மனைவிக்குள் இருந்த கருத்து வேறுபாடுகள் மறையும். வியாபாரம் தொடர்பான பேச்சுவார்த்தைகளும் ஒப்பந்தங்களும் திருப்திகரமாக இருக்கும்.

செவ்வாய்-
மனதில் தேவையற்ற சிந்தனைகள் தோன்றும். உடல் நலத்தில் சிறிய அளவிலான பாதிப்புகள் இருக்கும். அது தொடர்பான மருத்துவச் செலவுகளும் ஏற்படும். வேலையில் ஒருவித மந்த நிலை இருக்கும். ஆர்வம் குறையும். முடிந்தவரை இயல்பாக இருக்க வேண்டும்.

புதன்-
மனதில் நினைத்த செயல்கள் அனைத்தும் இன்று முழுமை பெறும். வேலையில் சுறுசுறுப்பாக பணியாற்றி உயரதிகாரிகளிடம் நல்ல பெயர் எடுப்பீர்கள். தொழிலுக்குத் தேவையான உதவிகள் கிடைக்கும். வியாபாரம் வளர்ச்சி அமோகமாக இருக்கும். வங்கிக் கடன் கிடைக்கும் வாய்ப்பு உள்ளது. உறவினர்களிடம் பண உதவி பெற்று புதிதாக தொழில் தொடங்கும் முயற்சியில் ஈடுபடுவீர்கள்.

வியாழன்
எதிலும் அவசரப்படக்கூடாது. நிதானமான போக்கைக் கடைப்பிடிக்க வேண்டும். பணச்செலவு தாறுமாறாக இருக்கும். செலவுகளை கட்டுக்குள் வைக்கவேண்டும். ஆரோக்கியத்தில் சிறுசிறு அச்சுறுத்தல் தோன்றி மறையும். தேவையில்லாத வாக்குவாதங்கள், விவாதங்கள் எதிலும் ஈடுபடாமல் இருக்க வேண்டும். பிரச்சினைகள் எதிர் வரும், அதைத் தவிர்க்க என்ன வழியோ அதை செய்ய வேண்டும்.


வெள்ளி-
எடுத்துக்கொண்ட வேலைகள் அனைத்தும் சிறப்பாக செய்து முடிப்பீர்கள். பணவரவு எதிர்பார்த்த படி இருக்கும். சொத்து வாங்குவது விற்பது தொடர்பான விஷயங்கள் ஆதாயம் தருவதாக இருக்கும். வியாபாரத்தில் எதிர்பார்த்த உதவி கிடைக்கும்.

சனி-
வியாபாரத்தில் லாபம் இருமடங்காக இருக்கும். புதிய நண்பர்கள் அறிமுகமாவார்கள். அவர்களால் ஆதாயம் கிடைக்கும். தொழில் தொடர்பான ஒப்பந்தங்கள் கிடைக்கும். இந்த நாளாக எதிர்பார்த்திருந்த விஷயங்கள் இன்று நல்ல முடிவிற்கு வரும். பணவரவும் நினைத்தபடியே கிடைக்கும்.

ஞாயிறு-
செலவுகள் அதிகமாக ஏற்படும். நண்பர்களால் சங்கடங்கள் ஏற்படும். வாழ்க்கைத்துணையின் உடல் நலத்தில் சற்று பாதிப்பு ஏற்படும். மருத்துவச் செலவு உண்டு. பயணங்களைத் தவிர்க்க வேண்டும்.

வணங்க வேண்டிய தெய்வம்-
மகாவிஷ்ணு வழிபாடு செய்யுங்கள். விஷ்ணுசஹஸ்ரநாமம் கேளுங்கள். நன்மைகள் நடக்கும்.தேவைகள் பூர்த்தியாகும்.
****************************************

திருவாதிரை-
எடுத்துக்கொண்ட வேலைகள் அனைத்தும் சிறப்பாக செய்து முடிப்பீர்கள்.
முக்கியமான வேலைகளில் அதிக கவனம் எடுத்துக்கொள்ள வேண்டும். அலுவலக வேலைகளில் பிறகு பார்த்துக்கொள்ளலாம் என்கிற மன நிலையை தவிர்க்க வேண்டும். அன்றைய வேலையை அன்றன்றைக்கே செய்து முடிப்பது நல்லது.
தொழில் வளர்ச்சி சீராக இருக்கும். அரசு வகையில் இருந்த நிர்ப்பந்தங்கள் தொழில் தொடர்பாக ஏதேனும் வழக்குகள் இருந்தால் தள்ளிப்போகும். கடன் பிரச்சினைகள் நெருக்கடி தரும்.
பெண்களுக்கு வேலை கிடைக்கும். திருமண முயற்சிகள் கைகூடும். மாணவர்களுக்கு கல்வியில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். புதிய நம்பிக்கை பிறக்கும். கலைஞர்களுக்கு புதிய ஒப்பந்தங்கள், வாய்ப்புகள் எளிதாக கிடைக்கும்.

இந்த வாரம் -

திங்கள்-
அலுவலகத்தில் சக ஊழியர்களின் வேலையைப் பார்க்க வேண்டியது வரும். தொழில் தொடர்பான சந்திப்புகள் தாமதமாகும். குடும்பத்தில் ஒரு சில மன வருத்தங்கள் ஏற்படும். வியாபாரம் சீராக இருக்கும்.

செவ்வாய்-
வியாபாரத்தில் சீரான வளர்ச்சி இருக்கும். தொழில் அல்லது வியாபாரம் தொடர்பாக எதிர்பார்த்த வங்கிக் கடன் கிடைக்கும். எதிர்பார்த்த பண உதவி கிடைக்கும். உத்தியோகத்தில் சக ஊழியர்களின் உதவியோடு ஒரு முக்கியமான பணியை செய்து முடிப்பீர்கள்.

புதன்-
தேவையான உதவிகள் அனைத்தும் தானாக தேடிவரும். பணவரவு.தாராளமாக இருக்கும். நண்பர்களுடன் ஏற்பட்ட மன வருத்தங்கள் அகலும்.குடும்ப பிரச்சினைகள் முடிவுக்கு வரும். வியாபார வளர்ச்சி சீராக இருக்கும்.

வியாழன்-
தேவையற்ற பயணங்களைத் தவிர்க்க வேண்டும். எந்த விஷயத்திலும் கவனமாக இருக்கவேண்டும். அலுவலகத்தில் பணிச்சுமை கூடும். மற்றவர்கள் உங்களை கோபப்படுத்தி பார்ப்பார்கள். உணர்ச்சிவசப்படாமல் பொறுமையாக இருப்பது நல்லது.

வெள்ளி-
அலுவலக பிரச்சினைகள் முடிவுக்கு வரும். வியாபார வளர்ச்சி நன்றாக இருக்கும். பணத்தேவைகள் உடனுக்குடன் பூர்த்தியாகும். இல்லத்தில் சுப காரியம் தொடர்பான பேச்சுவார்த்தைகள் முடிவுக்கு வரும். வியாபார விஷயமாக ஏற்படும் சந்திப்புகள் மனநிறைவைத் தரும்.

சனி-
வரவும் செலவும் சமமாக இருக்கும். எதிர்பார்த்த பண உதவி கிடைக்கும். வியாபாரம் தொடர்பாக பயணம் ஏற்படும். குடும்பத்தினர் ஒத்துழைப்பு சிறப்பாக இருக்கும்.

ஞாயிறு-
பணவரவு தாராளமாக இருக்கும். எடுத்துக்கொண்ட முயற்சிகள் அனைத்தும் வெற்றி பெறும். வியாபார ஒப்பந்தங்கள் ஏற்படும். தொழில் தொடர்பான சந்திப்புகள் மனநிறைவைத் தரும். எதிர்ப்புகள் விலகிப் போகும். நண்பர்களாலும் உறவினர்களாலும் ஆதாயம் ஏற்படும். வேலைக்கான முயற்சிகளில் வெற்றி கிடைக்கும்.

வணங்கவேண்டிய தெய்வம்-
ஸ்ரீ பிரத்தியங்கிரா அம்மனை வணங்குங்கள். நன்மைகள் அதிகமாகும்.எதிர்ப்புகள் அகலும். நினைத்தது நிறைவேறும்.
*****************************

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.


FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x