Published : 13 Apr 2020 03:08 PM
Last Updated : 13 Apr 2020 03:08 PM

திருவோணம், அவிட்டம், சதயம் -  நட்சத்திரப் பலன்கள் (ஏப்ரல் 13 முதல் 19 வரை) - இந்த வாரம் உங்களுக்கு இப்படித்தான்! 


- ‘சொல்வாக்கு ஜோதிடர்’ ஜெயம் சரவணன்

திருவோணம் -
உங்கள் அனைவருக்கும் எனது இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்களை கூறிக்கொள்கிறேன்.
இந்த வாரம் பெருமளவு நன்மைகள் நடைபெறும்.
எதிர்பார்த்த உதவிகள் அனைத்தும் கிடைக்கும். பணியிலிருந்த அழுத்தங்கள் படிப்படியாக விலகும். வேலை தொடர்பாக புதிய வாய்ப்புகள் கிடைக்கும். பணத்தேவைகள் உடனுக்குடன் பூர்த்தியாகும்.
நீண்ட நாளாக எதிர்பார்த்திருந்த நல்ல செய்தி இந்த வாரம் கிடைக்கும். வியாபாரம், தொழிலில் படிப்படியான சீரான வளர்ச்சி ஏற்படும். குடும்பப் பிரச்சினைகள் அனைத்தும் முடிவுக்கு வரும். சகோதரர்கள் வழியில் மட்டும் சற்று கவனமாக இருக்கவேண்டும்.
தேவையில்லாத வாக்குவாதங்கள் ஏதும் செய்ய வேண்டாம். மாணவர்கள் கலைகள் சம்பந்தமான விஷயங்களில் ஆர்வம் காட்டுவார்கள். பெண்களுக்கு எதிர்பார்த்த தேவையான அனைத்து உதவிகளும் கிடைக்கும்.

இந்த வாரம் -

திங்கள்-
எதிர்பாராத புதிய வாய்ப்புகள் கிடைக்கும். வேலையில் இருந்த ஒரு சில பிரச்சினைகளும் இன்று முடிவுக்கு வரும். வியாபாரத்தில் புதிய முயற்சிகளை கையாளுவீர்கள். பெண்கள் தங்கள் எடுக்கின்ற முயற்சிகளில் முன்னேற்றம் ஏற்படும். தேவையான உதவிகளும் ஆதரவும் கிடைக்கும்.

செவ்வாய்-
எந்த ஒரு விஷயத்திலும் விழிப்புணர்வு தேவை, அலட்சியமாக இருக்க வேண்டாம். கோபத்தை கட்டுப்படுத்த வேண்டும். நாம் நினைப்பது போல் எதுவும் நடக்கவில்லையே என்ற ஆதங்கமும் எரிச்சலும் அதிகமாகும். பொறுமையாக இருக்க வேண்டும்.

புதன்-
ஆதாயம் தரும் விஷயங்கள் அனைத்தும் சாதகமாக இருக்கும். பணவரவு எதிர்பார்த்தபடியே இருக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் தேவையான உதவிகளும், சலுகைகளும் கிடைக்கும். அலுவலகப் பணிகள் எளிதாக முடியும்.

வியாழன்-
பலரும் உங்களிடம் உதவிகள் கேட்டு வருவார்கள், நீங்களும் உங்களாலான உதவிகளைச் செய்து தருவீர்கள். குடும்பச் செலவுகள் அதிகமாக இருக்கும். வியாபாரத்தில் கடன் கொடுக்க வேண்டிய சூழ்நிலை உருவாகும்.

வெள்ளி-
எந்தக் காரணத்தைக் கொண்டும் பயணங்களை செய்ய வேண்டாம். கடன் வாங்காதீர்கள். உங்கள் எரிச்சலையும் கோபத்தையும் குழந்தைகளிடமும் வாழ்க்கைத்துணையிடமும் காட்ட வேண்டாம். மனசஞ்சலம் ஏற்படுத்தும் தகவல் கிடைக்கும்.

சனி-
மனதை வருத்திக் கொண்டிருந்த பிரச்சினைகள் அனைத்தும் முடிவுக்கு வரும். எதிர்பார்த்த பண உதவி கிடைக்கும் வாய்ப்பு உள்ளது. அலுவலகப் பணியில் சில சலுகைகள் கிடைக்கும். வியாபாரத்தில் வரவேண்டிய பாக்கிகள் வசூலாகும். தொழில் தொடர்பாக தேவையான உதவிகள் கிடைக்கும். சகோதரர்கள் ஒற்றுமை ஏற்படும். சகோதரர்களால் ஒரு சில உதவிகளும் ஆதாயமும் ஏற்படும்.

ஞாயிறு-
நீண்ட நாளாக எதிர்பார்த்துக் கொண்டிருந்த நல்ல தகவல் இன்று கிடைக்கும். நண்பர்களால் உதவிகள் கிடைக்கும். பணவரவு தாராளமாக இருக்கும். வியாபார விஷயங்கள் சாதகமாக இருக்கும். மனதை உறுத்திக் கொண்டிருந்த ஒரு பிரச்சினை இன்று முடிவுக்கு வரும்.

வணங்கவேண்டிய தெய்வம்-
மஹாவிஷ்ணு வழிபாடு செய்யுங்கள். மகாவிஷ்ணுவுக்கு துளசியால் அர்ச்சனை செய்யுங்கள். விஷ்ணு சகஸ்ரநாமம் பாராயணம் செய்யுங்கள். தேவைகள் பூர்த்தியாகும். மனநிம்மதி உண்டாகும்.
*******************************************

அவிட்டம் -
உங்கள் அனைவருக்கும் சார்வரி தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.
இந்த வாரம் உங்களுக்குத் தேவையான உதவிகளும் அனைத்தும் தக்க சமயத்தில் கிடைக்கும். மனக் குழப்பங்களும் மனபாரமும் தீரும். அலுவலகப் பணியில் இருந்த நெருக்கடியான நிலை நீங்கும்.
வியாபாரம் மற்றும் தொழில் தொடர்பாக தேவையான உதவிகள் கிடைக்கும். தொழில் தொடர்பாக புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும். லாபத்தில் சீரான வளர்ச்சி முன்னேற்றம் ஏற்படும். பணத் தேவைகள் பூர்த்தியாகும். குடும்ப உறவுகள் பலப்படும். ஒரு சில கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டாலும் குடும்ப ஒற்றுமைக்கு குறைவிருக்காது.
பெண்களுக்கு நன்மைகள் பலவாறாக நடக்கும், குழந்தைகள் பற்றிய கவலை நீங்கும். மாணவர்கள் புதிய கல்வி கற்கும் ஆர்வமும் புதிய மொழிகளைக் கற்கும் ஆர்வமும் ஏற்படும். கலைஞர்களுக்கு ஒப்பந்தங்கள் தொடர்பான பேச்சுவார்த்தைகள் ஏற்படும்.

இந்த வாரம் -

திங்கள்-
எதிர்பார்த்த தேவையான உதவிகள் கிடைக்கும். பணவரவு தாராளமாக இருக்கும். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். புதிய வியாபார வாய்ப்புகள் உருவாகும். தொழில் தொடர்பாக அரசு சலுகை கிடைக்கும்.

செவ்வாய்-
எதிர்காலத் திட்டங்களை வகுப்பீர்கள். குடும்ப நலன் கருதி ஒரு சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். நன்மைகள் பெருகும். குடும்ப ஒற்றுமை அதிகரிக்கும்.

புதன்-
தேவையற்ற பயணங்கள் மேற்கொள்ள வேண்டாம். சர்ச்சைக்குரிய கருத்துக்களை தெரிவிக்காமல் இருப்பது நல்லது. குடும்பத்தினரிடம் கோபத்தை வெளிப்படுத்தக்கூடாது. எதிர்பார்த்த சில விஷயங்கள் காரணமின்றி தள்ளிப் போகும்.

வியாழன்-
பணவரவு தாராளமாக இருக்கும். வியாபார விஷயங்கள் சாதகமாக இருக்கும். தொழில் மற்றும் வணிகத்தில் லாபம் கிடைக்கும்.பெண்களுக்கு எதிர்பார்த்த உதவிகள், சுய தொழில் முயற்சிகள் அனைத்தும் சாதகமாக இருக்கும்.

வெள்ளி-
பலரும் உதவிகள் கேட்டு வருவார்கள். நீங்களும் உங்களாலான உதவிகளைச் செய்து தருவீர்கள். எதிர்பார்த்த பண உதவிகள் உள்ளிட்ட சில விஷயங்கள் தாமதமாகலாம். தேவையில்லாத மன உளைச்சல் மற்றும் மன குழப்பங்கள் ஏற்படும். ஆரோக்கியத்தில் சிறிய பின்னடைவு ஏற்படும்.

சனி-
கடன் உள்ளிட்ட பிரச்சினைகளில் நல்ல முடிவு ஏற்படும். எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். நண்பர்களால் ஆதாயம் கிடைக்கப் பெறுவீர்கள். தொழிலிலும் வியாபாரத்திலும் சீரான வளர்ச்சி இருக்கும். அலுவலகத்தில் இருந்து வரவேண்டிய நிலுவைத் தொகைகள் இன்று கிடைக்கும் வாய்ப்பு உள்ளது.

ஞாயிறு-
குடும்பத்தாருடன் நேரத்தைச் செலவிடுங்கள். அடுத்தவர் பிரச்சினைகளில் தலையிட வேண்டாம். சமூக வலைதள பயன்பாட்டைக் குறைத்துக் கொள்ளுங்கள். நண்பர்களுடன் பேசும் பொழுது கவனமாக இருக்க வேண்டும் உறவினர்களின் வருத்தத்திற்கு ஆளாக நேரிட வாய்ப்பு உள்ளது.

வணங்க வேண்டிய தெய்வம்-
அரசமர பிள்ளையாரை வணங்குங்கள். நன்மைகள் அதிகமாகும். பிரச்சினைகள் தீரும். மனம் தெளிவாகும்.
*****************************************

சதயம் -
அனைவருக்கும் இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துகள்.
இந்த வாரம் எடுக்கின்ற முயற்சிகள் அனைத்திலும் முன்னேற்றம் ஏற்படும்.
தேவைகள் உடனுக்குடன் பூர்த்தியாகும். உத்தியோகத்தில் எதிர்பார்த்த அத்தனை உதவிகளும் கிடைக்கும். சக ஊழியர்களின் உதவி தானாக தேடி வரும். ஒரு சிலருக்கு பதவி உயர்வு கிடைக்கும் வாய்ப்பு உள்ளது.
குடும்பத்தில் சுப விசேஷங்கள் பற்றிய பேச்சு வார்த்தைகள் முடிவடையும். சுபச்செலவுகள் ஏற்படும் நேரமிது. தொழிலில் நல்ல வளர்ச்சியும் முன்னேற்றமும் ஏற்படும். புதிய வாய்ப்புகள் கிடைக்கும்.
வியாபாரத்தில் லாபம் பெருகும். புதிய வியாபார யுக்திகளை கையாளுவீர்கள். பெண்களுக்கு தேவையான உதவிகள் அனைத்தும் கிடைக்கும். புத்திரபாக்கியம் இல்லாதவர்களுக்கு புத்திரபாக்கியம் உண்டாகும். திருமண முயற்சிகள் கைகூடும்.
மாணவர்களுக்கு கல்வியில் நல்ல முன்னேற்றம், புதிய வாய்ப்புகள் கிடைக்கும். கலைஞர்களுக்கு நண்பர்களால் உதவிகள் கிடைக்கப்பெற்று வாய்ப்புகளையும் பெறும் நேரம் இது.

இந்த வாரம் -

திங்கள்-
அதிக நன்மைகள் நடைபெறும் நாள். எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். அலுவலகப் பணிகளில் அதிக கவனம் செலுத்துவீர்கள். வியாபாரத்தில் சீரான வளர்ச்சி இருக்கும். பங்கு வர்த்தகத்தில் இருப்பவர்களுக்கு ஆறுதல் தரும்படியான தகவல் கிடைக்கும்.

செவ்வாய்-
நண்பர்களால் அதிக உதவிகள் கிடைக்கும். எதிர்பார்த்த பண உதவி கிடைக்கும் வாய்ப்பு உள்ளது. தொழில் மற்றும் வியாபாரம் தொடர்பான விஷயங்கள் சாதகமாக இருக்கும். குடும்பத்தினர் தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். பெண்களுக்கு சகோதர வழியில் உதவிகள் கிடைக்கும்.

புதன்-
மனக்குழப்பம் அதிகரிக்கும். எதிர்காலம் பற்றிய பயம் தோன்றும். தேவையில்லாத கற்பனைகள் மனதில் தோன்றும். மன சஞ்சலத்திற்கு இடம் கொடுக்காதீர்கள். ஆரோக்கியம் பற்றிய கவலை தோன்றி மறையும். குழந்தைகளின் எதிர்காலம் கருதி ஒரு சில நல்ல முடிவுகளை எடுப்பீர்கள்.

வியாழன்-
எதிர்பார்த்த உதவிகள் மட்டுமல்லாமல் எதிர்பாராத உதவிகள் கிடைக்கும். பணவரவு தாராளமாக இருக்கும். வியாபாரத்தில் நல்ல வளர்ச்சியும் லாபமும் கிடைக்கப் பெறுவீர்கள். குடும்பத்தினர் மகிழ்ச்சிகரமாக இருப்பார்கள். குடும்பத்தின் தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும்.வேலை தொடர்பான நல்ல தகவல் கிடைக்கும்.

வெள்ளி-
தேவையற்ற பயணங்கள் வேண்டாம். நண்பர்களுடனும் உறவினர்களுடனும் தேவையில்லாத சர்ச்சை பேச்சு வார்த்தைகளை வைத்துக் கொள்ள வேண்டாம். குழந்தைகளிடம் அன்பு பாராட்டுங்கள். வாழ்க்கை துணையிடம் தேவை இல்லாத வார்த்தை போர் வைத்துக்கொள்ள வேண்டாம்.

சனி-
ஆரோக்கியத்தில் முன்னேற்றம் ஏற்படும். மருத்துவச் செலவுகள் குறையும். கடன் தொடர்பான பிரச்சனைகள் சமாதானம் ஆகும். சொத்துக்கள் சம்பந்தமான விஷயங்கள் பேசி முடிவாகும். தாயாரின் உடல் நலத்தில் முன்னேற்றம் ஏற்படும். எதிரிகள் தொல்லை குறையும்.

ஞாயிறு-
குழந்தைகளின் கல்வி பற்றிய அக்கறை தோன்றும். அவர்களின் கல்வி தொடர்பான விஷயங்களில் புது முயற்சிகள் எடுப்பீர்கள். வீட்டில் தேவையில்லாத பொருட்களை அனைத்தையும் ஒதுக்கி வைப்பீர்கள். பழுதான பொருட்களை சரி செய்து மீண்டும் பயன்பாட்டுக்குக் கொண்டு வருவீர்கள்.

வணங்க வேண்டிய தெய்வம்-
கால பைரவர் வழிபாடு செய்யுங்கள். பைரவர் அஷ்டோத்திரம் பாராயணம் செய்யுங்கள், நன்மைகள் அதிகமாகும் .
************************************

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x