Published : 05 Apr 2020 15:57 pm

Updated : 05 Apr 2020 15:57 pm

 

Published : 05 Apr 2020 03:57 PM
Last Updated : 05 Apr 2020 03:57 PM

மகம், பூரம், உத்திரம் ; இந்த வாரம் உங்களுக்கு இப்படித்தான்!  (ஏப்ரல் 6 முதல் 12 வரை) 

indha-vaara-natchatira-palangal


- ’சொல்வாக்கு ஜோதிடர்’ ஜெயம் சரவணன்


மகம் -
முயற்சிகளில் முன்னேற்றம் ஏற்படும் வாரம்.
உத்தியோகத்தில் எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும். தொழிலில் நல்ல வளர்ச்சி இருக்கும். வியாபாரம் வளர்ச்சி சீராக இருக்கும். வியாபாரம் தொடர்பாக புதிய வாய்ப்புகள் கிடைக்கும். குடும்பத்தில் அமைதி நிலவும்.
திருமணம் உள்ளிட்ட சுப நிகழ்வுகள் நடப்பதற்கான வாய்ப்புகள் உண்டு. வீடு மனை தொடர்பான சொத்து விஷயங்கள் சாதகமாக இருக்கும். கலைஞர்களுக்கு நல்ல வாய்ப்புகள் கிடைக்கும். மாணவர்கள் கல்வியில் முன்னேற்றம் ஏற்படும்.


இந்த வாரம் -

திங்கள்-
செலவுகள் அதிகமாக ஏற்படும். சொத்து தொடர்பான விஷயங்கள் பேசி தீர்க்கப்படும். வருமானத்திற்கு குறை இருக்காது. பெண்கள் தாங்கள் எடுக்கும் முயற்சியில் முன்னேற்றம் காண்பார்கள். வியாபாரிகளுக்கு வருமானம் இருமடங்காக இருக்கும்.

செவ்வாய்-
எடுத்துக்கொண்ட முயற்சிகளில் முன்னேற்றம் ஏற்படும். உத்தியோகத்தில் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். தாமதமாகிக் கொண்டிருந்த அலுவலக வேலைகளை சுறுசுறுப்பாக செய்து முடிப்பீர்கள். சொத்து சம்பந்தமாக எதிர்பார்த்த கடன் உதவி கிடைக்கும்.

புதன்-
அலைச்சல்களும் அதனால் உடல் உபாதைகளும் ஏற்படும். சிறிய அளவிலான மருத்துவச் செலவு ஏற்பட வாய்ப்பு உண்டு. மற்றவர்கள் நலனுக்காக நீங்கள் அதிகம் உழைக்க வேண்டியதிருக்கும்.

வியாழன்-
கடன் பிரச்சினைகள் முடிவுக்கு வரும். பழைய பொருட்களை மாற்றி புதிய பொருட்கள் வாங்குவீர்கள். நண்பர்களால் ஆதாயம் ஏற்படும். வியாபார வளர்ச்சி சீராக இருக்கும்.

வெள்ளி-
பயணங்களைத் தவிர்த்து விடுங்கள். பேச்சு வார்த்தைகளில் கவனமாக இருக்கவேண்டும். தொழில் தொடர்பாக புதிய முயற்சிகளில் இறங்க வேண்டாம். அலுவலகப் பணிகளில் கவனமாக இருங்கள். தேவையற்ற விவாதங்களை செய்ய வேண்டாம்.

சனி-
மனதை வருத்திக் கொண்டிருந்த முக்கியமான பிரச்சினைகள் இன்று முடிவுக்கு வரும். தொழில் தொடர்பான ஒப்பந்தங்கள் கிடைக்கும். எதிர்பார்த்த கடனுதவி கிடைக்கும். குடும்பத்தினரின் தேவைகளை பூர்த்தி செய்து தருவீர்கள். அத்தியாவசியப் பொருட்களை வாங்குவீர்கள்.

ஞாயிறு-
குடும்பத்தில் ஒற்றுமை இருக்கும். மனவருத்தங்கள் நீங்கும். வியாபாரத்தில் வளர்ச்சி எதிர்பார்த்தபடியே இருக்கும். லாபம் கிடைக்கப் பெறுவீர்கள். தொழிலுக்குத் தேவையான சலுகைகளும் உதவிகளும் கிடைக்கும்.திருமணம் உள்ளிட்ட சுபகாரிய பேச்சுவார்த்தைகள் முடிவுக்கு வரும்.

வணங்க வேண்டிய தெய்வம்-
ஸ்ரீ மகாலட்சுமி வழிபாடு செய்யுங்கள். ஸ்ரீ கனகதாரா ஸ்தோத்திரம் பாராயணம் செய்யுங்கள். நன்மைகள் அதிகமாகும். செலவுகள் குறையும்.
************************************************

பூரம் -
பண வரவுகளால் மன நிறைவு உண்டாகும். குடும்பத்தில் ஒற்றுமை நிலவும். குடும்பத்தில் இதுவரை இருந்துவந்த பிரச்சினைகள் நல்ல முடிவுக்கு வரும். குழப்பமான மனநிலையில் இருந்து வெளியே வருவீர்கள். குழந்தைகளின் திறமைகளைக் கண்டு வியப்பு ஏற்படும். அலுவலகப் பணியில் கூடுதல் பொறுப்புகள் கிடைக்கும்.
வழக்கமாக செய்யும் வேலையை விட அதிகமாக வேலைகளைச் செய்ய வேண்டியது வரும். வியாபார வளர்ச்சி அமோகமாக இருக்கும். சொத்து சம்பந்தமான பிரச்சினைகள் ஏதும் இருந்தால் இந்த வாரம் அந்தப் பிரச்சினைகள் அனைத்தும் தீரும். மாணவர்களுக்கு கல்வியில் எதிர்பார்த்த முன்னேற்றம் கிடைக்கும்.

இந்த வாரம் -

திங்கள்-
வருமானம் இரு மடங்காக இருக்கும். எதிர்பார்த்த உதவிகள் அனைத்தும் கிடைக்கும். உத்தியோகத்தில் ஊதிய உயர்வு கிடைக்கும். நீண்ட நாட்களாக வசூலாகாத பணம் வசூலாகும். புதிதாக தொழில் தொடங்கும் முயற்சி சாதகமாக இருக்கும்.

செவ்வாய்-
வீண் விரயங்கள் ஏற்படும் வாய்ப்பு உண்டு. வீட்டு உபயோகப் பொருட்கள் பழுது ஏற்படும். செலவுகள் எதிர்பாராத அளவிற்கு இருக்கும். அலுவலகம் மற்றும் பணிபுரியும் இடங்களில் வீண் விவாதங்கள் செய்ய வேண்டாம்.

புதன்-
வரவும் செலவும் சமமாக இருக்கும். நீண்ட நாளாக மனதை வருத்திக் கொண்டு இருந்த பிரச்சினை இன்று முடிவுக்கு வரும். வங்கிக் கடன் தொடர்பான சிக்கல்கள் தீரும். தொழில் தொடர்பான ஒப்பந்தங்கள் ஏற்படும். மாணவர்களுக்கு எதிர்பார்த்த கல்வி தொடர்பான உதவிகள் கிடைக்கும்.

வியாழன்-
அலுவல வேலையில் சக ஊழியர்களுக்கு உதவுவீர்கள். நண்பர்களுடனான தொழில் தொடர்பான பேச்சுவார்த்தைகள் சாதகமாக இருக்கும். வியாபாரத்தில் நீண்டநாளாக எதிர்பார்த்துக் கொண்டிருந்த நல்ல தகவல் கிடைக்கும்.

வெள்ளி-
நல்ல பலன்கள் நடைபெறும் நாள். ஆரோக்கிய பிரச்சினைகள் தீரும். கடன் தொடர்பான முக்கியமான பிரச்சினை ஒன்று முடிவுக்கு வரும். சொத்து சம்பந்தமான பாகப்பிரிவினைகள் சுமுகமாக முடிவடையும். தொழில் தொடர்பாக தேவையான உதவிகள் கிடைக்கும். வியாபார வளர்ச்சி சீராக இருக்கும். லாபம் கிடைக்கப் பெறுவீர்கள்.

சனி-
செலவுகள் எதிர்பாராத வகையில் ஏற்படும். சிக்கனமாக இருக்க வேண்டியது அவசியம். நண்பர்களுடனும் உறவினர்களுடனும் பேசும்போது கவனமாக இருங்கள். வார்த்தைகளில் கவனம் தேவை. குடும்பத்தாருடன் இணக்கமாக இருங்கள். அவர்களிடம் தேவையில்லாத வாக்கு வாதங்கள் செய்து கொண்டிருக்க வேண்டாம்.

ஞாயிறு-
நீண்ட நாளாக எதிர்பார்த்துக் கொண்டிருந்த நல்ல தகவல் கிடைக்கும். சுபகாரிய பேச்சுவார்த்தைகள் சுமுகமாக முடிவடையும். வியாபார ஒப்பந்தங்கள் நிறைவேறும். தொழில் தொடர்பான முக்கிய சந்திப்புகளில் புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கப் பெறுவீர்கள்.

வணங்க வேண்டிய தெய்வம்-
விநாயகப்பெருமானுக்கு தீபம் ஏற்றி வழிபடுங்கள். நன்மைகள் அதிகரிக்கும். தேவைகள் பூர்த்தியாகும். தாமதமான விஷயங்கள் அனைத்தும் எளிதாக முடியும்.
*******************************************

உத்திரம்-
எதிர்பார்த்த அனைத்து உதவிகளும் கிடைக்கும். பணத்தேவைகள் உடனுக்குடன் பூர்த்தியாகும்.
கடன் தொடர்பான பிரச்சினைகள் முடிவுக்கு வரும். அலுவலகத்தில் எதிர்பார்த்த சலுகைகள், நிலுவைத் தொகை கிடைக்கும். பெண்களுக்கு புதிய முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். சுய தொழில் தொடர்பான விஷயங்களில் ஆதரவு கிடைக்கும்.
வியாபாரத்தில் நல்ல வளர்ச்சியும் முன்னேற்றமும் ஏற்படும் வரவேண்டிய பாக்கிகள் வசூலாகும்.வியாபார இடத்தை இடமாற்றம் செய்ய வேண்டிய சூழ்நிலை உருவாகும் அதுவும் நன்மைக்கே என்பதை உணருங்கள்.
குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் பற்றிய பேச்சுவார்த்தைகளில் முன்னேற்றம் ஏற்படும். உங்கள் முயற்சிகளுக்கு குடும்பத்தினர் ஆதரவு தருவார்கள். மாணவர்களுக்கு கல்வியிலும் புதிதாக எதையாவது கற்க வேண்டும் என்ற ஆர்வமும் ஏற்படும்.கலைத் துறை சார்ந்தவர்களுக்கு தேவையான உதவிகள் கிடைக்கும். புதிய வாய்ப்புகளுக்கான பேச்சுவார்த்தைகள் தொடங்கும்.

இந்த வாரம் -

திங்கள்-
பணிச்சுமை அதிகரிக்கும். தாமதமாகிக் கொண்டிருந்த வேலைகளை இன்று முழு மூச்சாக செய்து முடிக்க வேண்டும் என்ற எண்ணம் தோன்றும். தொழில் தொடர்பான நல்ல வாய்ப்புகள் கிடைக்கும். வியாபார வளர்ச்சி அமோகமாக இருக்கும். பெண்களின் திருமணம் தொடர்பான விஷயங்கள் சாதகமாக இருக்கும்.

செவ்வாய்-
எடுத்துக்கொண்ட வேலைகள் அனைத்தும் முழு வெற்றியை கொடுக்க கூடியதாக இருக்கும். பணவரவு தாராளமாக இருக்கும். எதிர்பார்த்த விஷயங்கள் அனைத்தும் உங்களுக்கு சாதகமாக இருக்கும். வியாபாரத்தில் வரவேண்டிய பாக்கிகள் வசூலாகும். உறவினர்களிடம் ஏற்பட்ட வருத்தங்கள் நீங்கும்.

புதன்-
எதிர்காலம் பற்றிய கவலை தோன்றும். குறிப்பாக குழந்தைகளின் எதிர்காலம் பற்றிய அச்ச உணர்வு தோன்றுவதால் அவர்களின் எதிர்காலம் பற்றிய கவலை தோன்றும். வாழ்க்கைத்துணையின் ஆரோக்கிய பாதிப்புகள் குறையும். நீண்டநாள் நண்பரின் உதவிகள் கிடைக்கும்.

வியாழன்-
மனம் மகிழும் சம்பவங்கள் அதிகமாக ஏற்படும் நாள். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். வியாபார வளர்ச்சி மன நிறைவைத் தரும். தொழில் தொடர்பாக தேவையான உதவிகள் தானாக தேடி வரும். அரசு சலுகைகளும் உதவிகளும் கிடைக்கும் வாய்ப்பு உள்ளது . தொலைபேசி வழித் தகவல் ஆனந்தத்தைத் தரும். மொத்தத்தில் மகிழ்ச்சிகரமான நாள்.

வெள்ளி-

குடும்பத்தினர் தேவைகள் அனைத்தும் பூர்த்தி செய்து தரக்கூடிய நாளாக இருக்கும். தொழில் தொடர்பான புதிய தொழில்நுட்பங்களை பயன்படுத்த ஆரம்பிப்பீர்கள். வியாபார வளர்ச்சி சீராக இருக்கும். தொழில் தொடர்பாக அல்லது வியாபாரம் தொடர்பாக ஒப்பந்தங்கள் ஏற்படும் வாய்ப்பு உள்ளது.

சனி-
வாழ்க்கைத் துணையிடம் மனம்விட்டுப் பேசி முக்கியமான பிரச்சினைகளில் தீர்வு காண்பீர்கள். அலுவலக வேலைகளில் இருந்த சுணக்கமான நிலை மாறி, எளிதாக செய்து முடிப்பீர்கள். வியாபாரத்தில் புதிய வாடிக்கையாளர்கள் கிடைக்கப்பெறுவீர்கள். நீண்ட நாள் தொடர்பில் இல்லாத நண்பர் ஒருவரின் தொடர்பு ஏற்படும்.

ஞாயிறு-
தேவையற்ற பயணங்களை மேற்கொள்ள வேண்டாம். வாகனப் பழுது சரி செய்வீர்கள்.சமூக வலைதள பயன்பாட்டை குறைத்துக் கொள்ளுங்கள். அக்கம்பக்கத்தினருடனும், நண்பர்களுடனும் தேவையற்ற வாக்குவாதங்கள் செய்ய வேண்டாம். செலவுகள் அதிகமாக ஏற்படும் நாள்.

வணங்க வேண்டிய தெய்வம்-
சிவபெருமானை வழிபாடு செய்யுங்கள். சிவ ஸ்தோத்திரம் உச்சரித்துக் கொண்டே இருங்கள். ’நமசிவாய’ மந்திரத்தை தினமும் 108 முறை எழுதி வாருங்கள். மனக்குழப்பம் தீரும். பணத்தேவைகள் பூர்த்தியாகும். மனதில் நம்பிக்கை பிறக்கும்.
***********************************************

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.

தவறவிடாதீர்!


மகம்பூரம்உத்திரம் ; இந்த வாரம் உங்களுக்கு இப்படித்தான்!  (ஏப்ரல் 6 முதல் 12 வரை)'சொல்வாக்கு ஜோதிடர்’ ஜெயம் சரவணன்

Sign up to receive our newsletter in your inbox every day!

You May Like

More From This Category

More From this Author