Published : 30 Mar 2020 10:08 AM
Last Updated : 30 Mar 2020 10:08 AM

புனர்பூசம், பூசம், ஆயில்யம் ; இந்த வாரம் உங்களுக்கு இப்படித்தான்! (மார்ச் 30 முதல் ஏப்ரல் 5 வரை) 

- ‘சொல்வாக்கு ஜோதிடர்’ ஜெயம் சரவணன்

புனர்பூசம் -
நன்மைகள் அதிகமாக நடைபெறும் வாரம். எதிர்பார்த்த பணவரவு கிடைக்கும்.
வியாபார பேச்சுவார்த்தைகள் வெற்றிகரமாக நடக்கும். வேலையில் பெரிய மாறுதல்கள் ஏதும் இருக்காது. தொழிலில் முன்னேற்றம் ஏற்படும். பெண்கள் தங்கள் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்த வேண்டும்.திருமண முயற்சிகள் கைகூடும். சகோதர வழியில் இருந்த வருத்தங்கள் நீங்கி ஒற்றுமை ஏற்படும். மாணவர்கள் தேர்வுகளில் நல்ல மதிப்பெண் கிடைக்கப் பெறுவார்கள். அடுத்த ஆண்டு கல்விக்காக இப்போதே தங்களை தயார் செய்து கொள்வார்கள்.

இந்த வாரம் -

திங்கள் -
யாரிடம் பேசினாலும் நிதானமாக பேச வேண்டும். குடும்பத்தாருடன் இணக்கமாக இருக்க வேண்டும். குழந்தைகளிடம் கோபத்தை வெளிப்படுத்தாதீர்கள். மனம் பரபரப்பாக இருக்கும், பதட்டம் அடைய வேண்டாம்.

செவ்வாய் -
எடுத்துக்கொண்ட வேலைகள் அனைத்தும் வெற்றியை தரும். முயற்சி எடுக்காத விஷயங்கள் கூட இப்பொழுது தானாக முடியும். நீண்ட நாளாக பேசி வந்த ஒரு பிரச்சினை இன்று பேசி முடிவு எடுக்கப்படும்.

புதன்-
தேவைகள் பூர்த்தியாகும். உதவிகள் தேடிவரும். வியாபார வளர்ச்சி சீராக இருக்கும்.எதிர்பார்த்த பணவரவு கிடைக்கும்.

வியாழன் -
எதிர்கால சிந்தனை அதிகரிக்கும். வருங்காலத்தில் வருமானத்திற்கு என்ன வழி என்ற சிந்தனை ஏற்படும். பலவித வாய்ப்புகளை நீங்களாகவே உருவாக்க முயற்சி செய்வீர்கள்.

வெள்ளி -
நண்பர்களுக்கும் உறவினர்களுக்கும் ஒரு சில உதவிகளை செய்து கொடுப்பீர்கள். எதிர்பார்த்த பணவரவு உண்டு. வியாபார வளர்ச்சி சீராக இருக்கும். தொழில் தொடர்பான எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும்.

சனி-
பயணங்கள் செய்ய வேண்டாம். செலவுகள் அதிகமாக இருக்கும். மருத்துவச் செலவு ஏற்படும் வாய்ப்புண்டு. எதிலும் நிதானமாகவும் கவனமாகவும் இருந்தால் பிரச்சினைகளை எளிதாக சமாளிக்கலாம்.

ஞாயிறு -
நன்மைகள் அதிகமாக நடக்கும். மனதில் உற்சாகம் பிறக்கும். ஆரோக்கிய குறைபாடுகள் தீரும். மருத்துவச் செலவு குறையும். குடும்பத்தாருடன் மகிழ்ச்சிகரமாக இருப்பீர்கள்.

வணங்க வேண்டிய தெய்வம் -
கோளறு பதிகம் படித்து வாருங்கள். பிரச்சினைகள் தீரும். மனக்குழப்பங்கள் அகலும். எதிர்பார்த்த உதவிகள் அனைத்தும் கிடைக்கும்.
***********************************************************

பூசம் -
அதிக அளவிலான நன்மைகள் நடைபெறும். எடுத்துக் கொண்ட முயற்சிகள் அனைத்தும் வெற்றியாகும்.
உத்தியோகத்தில் பெரிய மாறுதல்கள் ஏதும் இருக்காது. ஒரு சிலருக்கு கூடுதல் பொறுப்புகள் கிடைக்கும். தொழில் வளர்ச்சி நம்பிக்கைத் தரும். வியாபாரத்தில் எதிர்பாராத லாபம் கிடைக்கும். பெண்கள் தங்கள் ஆரோக்கியத்தில் இருந்த பின்னடைவு நீங்கி, ஆரோக்கியத்தில் முன்னேற்றம் ஏற்படும். மருத்துவச் செலவுகள் குறையும். குழந்தைகளைப் பற்றிய கவலை நீங்கும். பூர்வீகச் சொத்து விஷயங்கள் பேசி முடிக்கப்படும். திரைத்துறை கலைஞர்களுக்கு புதிய வாய்ப்புகள் தொடர்பான பேச்சுவார்த்தைகள் நடக்கும்.

இந்த வாரம் -

திங்கள் -
ஒரு சில நல்ல முடிவுகளை எடுத்து அதை செயல்படுத்துவீர்கள். எடுத்த காரியத்தை வெற்றிகரமாக முடிப்பீர்கள். எதிர்பார்த்த பணம் வரும். கடன் கேட்டிருந்தால் கடன் கிடைக்கும் வாய்ப்பு உண்டு.

செவ்வாய் -
நிதானம் அவசியம். பயணங்கள் ஏதும் செய்ய வேண்டாம். தேவையில்லாத பிரச்சினைகளில் தலையிட வேண்டாம். அக்கம்பக்கத்தினருடன் அனுசரித்துச் செல்லுங்கள். யாரிடமும் எதற்காகவும் வாக்குவாதம் செய்ய வேண்டாம்.

புதன் -
எடுத்துக் கொண்ட அனைத்து செயல்களிலும் வெற்றி கிடைக்கும். பணவரவு எதிர்பார்த்தபடியே கிடைக்கும். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் தொடர்பான விஷயங்கள் சாதகமாக இருக்கும்.

வியாழன் -
அலுவலகப் பணி சுமை கூடும். கடுமையாக உழைத்து வேலைகளை முடிப்பீர்கள். தொழில் தொடர்பாக அரசு வழியில் உதவிகள் கிடைக்கும். குடும்பத்தினர் தேவைகளை பூர்த்தி செய்து தருவீர்கள். குழந்தைகளின் எதிர்காலத்திற்காக ஒருசில முதலீடுகள் செய்யும் எண்ணம் தோன்றும். நண்பர்களால் ஆதாயம் ஏற்படும்.

வெள்ளி-
வியாபாரத்தில் லாபம் இருக்கும். தொழிலுக்காக எடுத்துக் கொள்ளும் முயற்சியில் முன்னேற்றம் ஏற்படும். எதிர்ப்புக் காட்டிய நபர்கள் உங்களிடமே உதவி கேட்டு வருவார்கள். தொலைபேசி வழித் தகவல் மன மகிழ்ச்சி தரும்.

சனி-
நன்மைகள் அதிகமாக ஏற்படும். எதிர்பார்த்த அனைத்து விஷயங்களும் உங்களுக்கு சாதகமாகவே இருக்கும். பணவரவு தாராளமாக இருக்கும். குடும்ப ஒற்றுமை மேலோங்கும். குழந்தைகள் உங்கள் பேச்சைக் கேட்டு நடப்பதால் மனம் திருப்தியாக இருக்கும்.

ஞாயிறு -
தேவையில்லாமல் வெளியே செல்ல வேண்டாம். பயணங்களைத் தவிர்க்க வேண்டும். எரிச்சல் ஏற்படுத்தும் சம்பவங்கள் நடக்கும். நிதானமும் பொறுமையும் மிக மிக அவசியம். குடும்பத்தாருடனும் நண்பர்களிடமும் பொறுமையாக பேசுங்கள். நிதானத்தை இழக்க வேண்டாம்.

வணங்கவேண்டிய தெய்வம்-
சிவ புராணம் வாசியுங்கள். மனதில் நம்பிக்கை பிறக்கும். நன்மைகள் கிடைக்கும்.
****************************************************************

ஆயில்யம் --
எடுத்துக்கொண்ட முயற்சிகள் அனைத்திலும் வெற்றி கிடைக்கும்.
உத்தியோகத்தில் செய்கின்ற வேலைகளில் மனத் திருப்தி உண்டாகும். தொழிலில் எதிர்பாராத நன்மைகள் நடக்கும். தேவையான உதவிகள் கிடைக்கும். வியாபார வளர்ச்சி சீராக இருக்கும். இந்த வாரத்தில் புதிய பொருட்களை வியாபாரத்திற்காக வாங்கும் முயற்சியில் ஈடுபடுவீர்கள். பெண்கள் தங்கள் ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் காண்பார்கள்.வீட்டிலிருந்தே செய்யக்கூடிய சில சிறு தொழில்களை செய்யும் ஆர்வம் ஏற்படும். திருமண முயற்சிகள் கைகூடும். இதுவரை புத்திரபாக்கியம் இல்லாதவர்களுக்கு புத்திரபாக்கியம் உண்டாகும். மாணவர்களுக்கு கல்வியில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். தேர்வுகளில் நல்ல மதிப்பெண் கிடைக்கப் பெறுவார்கள்.

இந்த வாரம் -
திங்கள் -

குடும்பத்தாரும் குழந்தைகள் உங்கள் பேச்சைக் கேட்கவில்லையே என்ற மன வருத்தம் ஏற்படும். அவர்களுக்கு புரியும்படி நிதானமாக எந்த ஒரு விஷயத்தையும் எடுத்துச் சொல்லுங்கள். கோபப்பட வேண்டாம். நிறைய நண்பர்கள் உங்களிடம் உதவி கேட்டு வருவார்கள். முடிந்ததை செய்து கொடுப்பீர்கள்.

செவ்வாய் -
சொத்து சம்பந்தமான பிரச்சினைகள் முடிவுக்கு வந்து தீர்வு ஏற்படும். பண வரவு உண்டு. குடும்பத்திற்காக செலவு செய்ய வேண்டியதிருக்கும். வியாபார வளர்ச்சி சீராக இருக்கும். தேவைகள் பூர்த்தியாகும்.

புதன் -
அவசர முடிவுகள் எடுக்க வேண்டாம். தேவையில்லாத பிரச்சினைகளில் தலையிடாதீர்கள். சமூக வலைதள பயன்பாட்டில் இருந்து விலகியிருங்கள். நண்பர்களிடமும் உறவினர்களிடமும் கவனமாக பேசுங்கள். கோபத்தை முற்றிலுமாகத் தவிர்க்க வேண்டும்.

வியாழன் -
திட்டமிட்ட காரியங்கள் அனைத்தும் திட்டமிட்டபடி நடக்கும். பணவரவு தாராளமாக இருக்கும். எதிர்பார்த்த வங்கிக் கடன் கிடைக்கும். நீண்ட நாளாக வராமலிருந்த பணம் இப்போது திரும்ப கிடைக்கும் வாய்ப்பு உள்ளது. திருமண முயற்சிகள் முடிவாகும்.

வெள்ளி -
அதிக நன்மைகள் நடைபெறும்.சுப காரிய பேச்சுக்கள் மனதிற்கு நிறைவைத்தரும். வருமானம் அதிகரிக்கும். தேவைகள் நிறைவேறும்.

சனி-
தொழில் தொடர்பான ஒரு சில பிரச்சினைகளை முடிவுக்குக் கொண்டு வருவீர்கள். ஆதாயம் ஏற்படும் ஒரு வியாபார வருவாய் ஏற்படும். எதிர்பார்த்த பணம் கிடைக்கும்.

ஞாயிறு -
நண்பர்களுக்கு அல்லது உறவினர்களுக்கு ஒரு உதவி செய்து கொடுப்பீர்கள். தர்ம காரியங்களில் ஈடுபடுவீர்கள். வீட்டு பராமரிப்புச் செலவுகள் கூடும்.

வணங்கவேண்டிய தெய்வம்-
லலிதா சகஸ்ரநாமம் பாராயணம் செய்யுங்கள். நன்மைகள் நடக்கும். முயற்சிகளில் வெற்றி கிடைக்கும்.
***********************************************

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x