

கடகம்: (புனர் பூசம் 4ம் பாதம், பூசம், ஆயில்யம்) கிரகநிலை- தன வாக்கு ஸ்தானத்தில் கேது - ரண ருண ரோக ஸ்தானத்தில் சூரியன், செவ்வாய், புதன், சுக்கிரன் - அஷ்டம ஸ்தானத்தில் சனி, ராகு - லாப ஸ்தானத்தில் சந்திரன் - அயன சயன போக ஸ்தானத்தில் குரு(வ) என வலம் வருகிறார்கள்.
பலன்கள்: உணர்வுகளுக்கு முக்கியத்துவம் அளித்து வாழ்வில் வெற்றி பெறும் கடக ராசி அன்பர்களே நீங்கள் சந்திரனை ராசிநாதனாகக் கொண்டவர்கள். இந்த ஆண்டு குடும்ப சுபிட்சம், மக்கள், நலம், தாம்பத்திய உறவு எல்லாமே நலமாக இருக்கும். உங்களுடைய அந்தஸ்தும் சிறப்பாக இருக்கத் தடை இருக்காது.
உங்கள் முயற்சிகளை எப்போதும் நேர்வழியில் செலுத்துங்கள். குறுக்கு வழியில் பிரவேசிக்காதீர்கள். குடும்ப நலம் சீராக இருக்கும். மன கவலை, உடல் நலம் பாதிப்பு, பண விரயம் போன்ற சங்கடங்கள் ஏற்படவும் ஓர் அமைப்பு முனைந்து நிற்பதால் எச்சரிக்கையாக இருப்பது நல்லது. தெய்வப் பணி, தருமப் பணி போன்ற நற்காரியங்கள் நலம் தரும்.
உத்தியோகஸ்தர்களுக்கு ஏதேனும் ஒரு குறை உண்டாகலாம். எனினும் அன்றாட பணிகள் சரிவர நடக்கும். அளவான வருமானம் வர தடை இருக்காது. முன் விரோதம் காரணமாக ஒரு சிக்கல் ஏற்படலாம். அதையும் சமாளித்து வெற்றி காண்பீர்கள்.
வியாபாரிகளுக்கு சிறிதளவு பாதிப்பு ஏற்படலாம். விவசாயிகளுக்கு வீண் பிரச்சினை ஒன்று உருவாகலாம். காவல், ராணுவம் போன்ற துறைகளில் உள்ளோர் மிக்க பொறுப்புடன் பணியாற்றி நற்பெயரைக் காத்துக் கொள்வது அவசியம்.
அரசியல்வாதிகள் அவசரப் பட்டு எந்த முடிவுக்கும் வரத் தூண்டப்படுவார்கள். நிதானம் தேவை. எந்த பிரச்சனையையும் குறுக்கு வழியில் தீர்த்துக் கொள்ள முயற்சி செய்யாதீர்கள். நேர் வழியே நலம் பயக்கும். பொருளாதார நிலையைப் பொறுத்தமட்டில் வரவும் உண்டு; செலவும் உண்டு. செலவில் சில விரயமானதாகவும் இருக்கக் கூடும்.
கலைத்துறையினருக்கு நன்மை தீமைகள் கலந்தவாறு நடக்க இடமுண்டு. பொதுவாக பொருளாதார சங்கடம் உருவாகாது. ஆனால், அதிகப்படியான செலவு உண்டாகலாம். டெக்னீஷியன்களுக்கு கவுரவம் கிடைப்பதுடன் பண வரவு உண்டாகவும் வாய்ப்புண்டு.
பெண்களுக்கு குடும்ப நலம் அளவோடு இருக்கும். தாம்பத்தியம் மகிழ்ச்சியுடன் விளங்கும். சிறு தொல்லைகள் இருந்தாலும் மன தைரியத்தால் அவை அனைத்தையும் வென்றுவிடுவீர்கள்.
மாணவர்கள் பொறியியல்துறை, மருத்துவத் துறையில் உள்ளோருக்குப் புகழ் பெற சந்தர்ப்பம் உண்டு. உங்கள் வாழ்வில் உன்னத நிலை அடைவதற்குத் தேவையான அடிப்படை இந்த காலகட்டத்தில் அமையும்.
புனர் பூசம் 4ம் பாதம்: இந்த ஆண்டு இயந்திரப் பணி சம்பந்தப்பட்ட தொழில், வியாபாரம் ஓரளவுக்கு உற்சாகம் தரும்படி அமையும். வியாபாரிகளுக்கு அளவான லாபம் வரத் தடை உருவாகாது. விவசாயிகளுக்கு பிரச்சனைகள் அதிகமில்லை. பணிகள் சரிவர நடக்கும். கலைத்துறை பாதிக்கப்படாது. எழுத்தாளர்களுக்கு பிரச்சினை இராது. இந்த நேரத்தில் தெய்வ வழிபாடு புரிந்து வருவது நல்லது.
பூசம்: இந்த ஆண்டு கலைத்துறை சிறப்படையும். மக்கள் நலம் நல்லவிதமாக இருக்கும். திருமண முயற்சிகள் கூடிவரும். வியாபாரிகள் கவனக் குறைவால் எந்தத் தவறையும் செய்யாதிருப்பதில் எச்சரிக்கையாக இருப்பது அவசியம். விவசாயிகளுக்கு தேவையான பண வரவு இருக்கும். கலைத்துறை சிறப்படையும். தெய்வப் பணிகளில் தங்களை ஈடுபடுத்திக் கொள்வதன் மூலம் மன அமைதி அடையும்.
ஆயில்யம்: இந்த ஆண்டு ஏற்படும் தொல்லைகளில் இருந்து நன்மைகள் உண்டாகும். நிறைய விஷயங்களைக் கற்றுக் கொள்வீர்கள். வியாபாரிகளுக்கு பாதகமில்லை. தொழிலாளர்கள் எச்சரிக்கையாகப் பணியாற்றுவது அவசியம். மனக்கவலை இருக்கும். அரசு உத்தியோகஸ்தர்களுக்கு சிறு சோதனை உண்டாகலாம். தாம்பத்தியம் மகிழ்ச்சியுடன் விளங்கும். அரசு அலுவலர்களுக்கு பணிகளில் போதிய திருப்தி கிடைக்கும்.
பரிகாரம்: திங்கட்கிழமை தோறும் அருகில் இருக்கும் அம்மன் கோவிலுக்குச் சென்று 16 முறை வலம் வரவும் | சிறப்பு பரிகாரம்: திங்கட்கிழமை தோறும் அம்மனுக்கு நெய் மற்றும் இலுப்பை எண்ணை கலந்து தீபம் ஏற்றவும். மல்லிகை மலரை ஒவ்வொரு பஞ்சமியன்றும் அம்மனுக்கு வழங்கவும் | அதிர்ஷ்ட திசைகள்: மேற்கு, வடக்கு | செல்ல வேண்டிய தலம்: சமயபுரம், திருவேற்காடு, குலசேகரன்பட்டினம், திருக்குற்றாலம் | சொல்ல வேண்டிய மந்திரம் - “ஓம் ஸ்ரீமாத்ரே நம:” |
இந்த ஆண்டு கடக ராசிக்கான கிரகங்களின் நிலை
சிம்மம்: (மகம், பூரம், உத்திரம் 1ம் பாதம்) கிரகநிலை- ராசியில் கேது - பஞசம ஸ்தானத்தில் சூரியன், செவ்வாய், புதன், சுக்கிரன் - களத்திர ஸ்தானத்தில் சனி, ராகு - தொழில் ஸ்தானத்தில் சந்திரன் - லாப ஸ்தானத்தில் குரு(வ) என வலம் வருகிறார்கள்.
பலன்கள்: தன்னம்பிக்கை சிகரமாக வாழ்வில் ஜொலிக்கும் சிம்ம ராசி அன்பர்களே நீங்கள் சூரியனை ராசிநாதனாகக் கொண்டவர்கள். இந்த ஆண்டு புதுமுயற்சிகளில் ஈடுபடும் வாய்ப்பு கிடைக்கும். வழக்குகளில் வெற்றி முகம் காண்பதற்கு உரிய சூழ்நிலையும் கனிந்து வரும். பொருளாதார சுபிட்சம் உண்டு. திருமணம் போன்ற சுப காரியங்கள் நடக்கும். தாம்பத்திய சுகம் நல்ல விதமாக அமையும். எதிர்பாராத பொருள் வரவுக்கும் இடமுண்டு. உங்களுடைய அன்றாடப் பணிகள் சிறப்பாக நடைபெறும். புதிய முயற்சிகளை தேவையறிந்து செய்யவும். உடல் நலனில் அக்கறை செலுத்துங்கள். தந்தை நலனில் கவனம் செலுத்த வேண்டியும் வரலாம். பயணத்தைத் தவிர்ப்பது நல்லது.
உத்தியோகஸ்தர்களுக்குப் பிரச்சினை உருவாக வாய்ப்பில்லை. ஆனால், எதிர்பார்த்த முன்னேற்றம் சிறிது தாமதத்திற்குப் பிறகு கிடைக்கும். பெரிய நிறுவன நிர்வாகிகளுக்கும் - தொழிலாளர்களுக்கும் நல்லிணக்கம் உண்டாகி ஸ்தாபன வளர்ச்சி இருக்கும்.
வியாபாரிகள் நல்ல லாபம் பெறுவர். விவசாயிகள் மகிழ்ச்சி அடைவர். மருத்துவர்களுக்கு நல்ல செல்வாக்கு உருவாகும். இயந்திரப் பணி தான் சற்று சிக்கல் தரும். மிகுந்த அலைச்சல் உண்டாகும். அதற்கேற்ற லாபம் கிடைக்கும். வேலைகளை முடிப்பதற்கு அரும்பாடு படவேண்டியிருக்கும்.
அரசியல்வாதிகள் ஏற்றம் பெறுவர். அரசாங்க காரியங்களும், துரிதமுடன் நடைபெற வாய்ப்புண்டு. உடல் நலம், குடும்ப நலம். பொருளாதார நலம் எல்லாமே சிறப்பாக அமையும். சில தொல்லைகள் ஏற்படலாம். ஆனால், அவற்றைச் சமாளிக்கும் ஆற்றல் ஏற்படவும் வாய்ப்புண்டு.
கலைத்துறை நல்ல விதமாக அமையும். கற்றறிந்த மேலோர் கவுரவிக்கப் படுவர். கணிசமான பொருள் பாக்கியமும் பெற இடமுண்டு. பலவிதமான நன்மைகள் உண்டாகக் கூடிய நல்ல நேரம். உங்களுடைய அந்தஸ்து சிறப்பாக இருக்கும். பொருளாதார சுபிட்சமும் சீராகவே இருக்கும்.
பெண்களுக்கு உற்றார் உறவினர் வருகையும், அதனால் மகிழ்ச்சியும் உண்டு. குறிப்பாகத் திருமண ஏற்பாடு கைகூடி வர வாய்ப்புண்டு. பெற்றோரால் பிள்ளைகளும், பிள்ளைகளால் பெற்றோரும் நலம் காண்பர்.
மாணவர்- ஆசிரியர் உறவு மகோன்னதமாக விளங்கும். கல்விப் பயனைப் பெறுவதில் இடையூறு இருக்கலாம். எனினும் அதனை சிறப்பாக கையாண்டு வெற்றி காண்பீர்கள்.
மகம்: இந்த ஆண்டு சற்று சுறுசுறுப்பு குறையலாம். விவசாயிகளுக்கு ஏதேனும் ஒரு வகையில் லாபம் உண்டாகலாம். வியாபாரிகளுக்கு நஷ்டம் இருந்தாலும் அதை ஈடுகட்டும் வகையில் வளர்ச்சி இருக்கும். உடல் நலனில் அக்கறை காட்டுங்கள். வீடு, நிலம் போன்ற இடங்களில் வழக்கு இருந்தால் அதனைச் சமாதான முறையில் தீர்த்துக் கொள்ள முயல்வது நல்லது. இயந்திரத்தொழிலில் ஈடுபட்டுள்ளோருக்கு ஏற்றம் உண்டாகும்.
பூரம்: இந்த ஆண்டு சுறுசுறுப்புடன் காணப்படுவீர்கள். விவசாயிகளுக்கு உற்சாகமாக இருக்கும். கொடுக்கல் - வாங்கல் திருப்தி தரும். நில புலன்களில் ஆதாயம் காணலாம். வியாபாரிகளுக்கு அளவான லாபம் இருக்கும். கவலை வேண்டாம். மகிழ்ச்சி உண்டு, கொடுக்கல் வாங்கல் திருப்தி தரும். காவல், ராணுவம் போன்ற துறைகளில் உள்ளோர் ஏற்றம் பெறுவர். கலைத்துறையினருக்கு சிறப்பாக இருக்கும். கணவன் - மனைவி உறவு களிப்புடன் விளங்கும்.
உத்திரம் 1ம் பாதம்: இந்த ஆண்டு அரசு அலுவலர்களுக்குப் பதவி உயர்வுக்கான வாய்ப்பு கிட்டும். வியாபாரிகளுக்கு இரட்டிப்பு லாபம் வருவதற்கு கிரக அமைப்பு உதவக்கூடும். விவசாயிகளுக்கு வில்லங்கம் ஏதும் உருவாகாது. வழக்குகளில் வெற்றி வாய்ப்பு பெறவும் ஆதாய சூழ்நிலை உண்டு. இயந்திரப் பணி புரிவோருக்கு ஒரு சிக்கல் உருவாகலாம். இரும்பு, பித்தளை போன்ற உலோகத் தொடர்புடையவர்களுக்கு ஓரிரு பிரச்சினைகள் உருவாகலாம். சனி பகவானைத் தொழுது வந்தால் தொல்லை குறையும்.
பரிகாரம்: ஞாயிறுக்கிழமை தோறும் அருகில் இருக்கும் சிவன் கோவிலுக்குச் சென்று 9 முறை வலம் வரவும் | சிறப்பு பரிகாரம்: பிரதோஷம் தோறும் அபிஷேகத்திற்கு நெய் மற்றும் தேன் கொடுக்கவும். தினமும் சூரிய நமஸ்காரம் செய்யவும் | அதிர்ஷ்ட திசைகள்: கிழக்கு, வடக்கு | செல்ல வேண்டிய தலம்: சூரியனார் கோவில், பாபநாசம், திருவண்ணாமலை | சொல்ல வேண்டிய மந்திரம் - “ஓம் நமோ பகவதே ஸ்ரீருத்ராய நம:” |
இந்த ஆண்டு சிம்ம ராசிக்கான கிரகங்களின் நிலை
கன்னி: (உத்திரம் 2, 3, 4 பாதங்கள், அஸ்தம், சித்திரை 1, 2, பாதங்கள்) கிரகநிலை- சுக ஸ்தானத்தில் சூரியன், செவ்வாய், புதன், சுக்கிரன் - ரண ருண ரோக ஸ்தானத்தில் சனி, ராகு - பாக்கிய ஸ்தானத்தில் சந்திரன் - தொழில் ஸ்தானத்தில் குரு(வ) - விரைய ஸ்தானத்தில் கேது என வலம் வருகிறார்கள்.
பலன்கள்: உழைப்பின் மூலம் உன்னத நிலையை அடையும் கன்னி ராசி அன்பர்களே நீங்கள் புதனை ராசிநாதனாகக் கொண்டவர்கள். இந்த ஆண்டு பலவிதமான சங்கடங்கள் வந்தாலும் மனோதிடத்துடன் அணுகி வெற்றி காண்பீர்கள். மனச் சங்கடங்களைச் சமாளித்து விடுவீர்கள். என்றாலும், பெரியோர் நல்லாசியை விரும்பிப் பெறுங்கள். குடும்ப நலம், தாம்பத்திய வாழ்க்கை சீராக இருக்கும். உங்களுக்கு ஏற்படும் பல கஷ்டங்கள் பலமிழந்து போக வாய்ப்புண்டு. எனினும் சான்றோரை சந்தித்து வாருங்கள். உடல் நலனைப் பார்த்துக் கொள்ளுங்கள். கணவன் - மனைவி உறவு கெட இடமில்லை. துன்பங்களைச் சமாளிக்கும் ஆற்றலைப் பெறுவீர்கள்.
உத்தியோகஸ்தர்களுக்கு விரும்பிய உத்தரவு கிடைக்க வாய்ப்புண்டு. உத்தரவைப் பெற பொறுமை காப்பது அவசியம். பொருளாதாரச் சங்கடம் உருவாகாது. அன்றாடப் பணிகளில் குந்தகம் விளையாது.
வியாபாரிகளுக்கு நல்ல லாபம் வருவதற்கான அமைப்பு உண்டு. நல்லோர் நேசமும், சாதுக்களின் தரிசனமும் கிடைக்கும். விவசாயிகளுக்கு மகிழ்ச்சி உண்டு. நில புலன்களில் எந்த விதமான வில்லங்கமும் உருவாக இடமில்லை. மெத்தப் படித்த மேலோர் சமூகத்தில் உரிய மரியாதையுடன் நடத்தப்படுவதோடு, கணிசமான பொருளும் பெற்றும்.
கலைத்துறையில் மகிழ்ச்சி உண்டு. அவர்களின் அன்றாடப் பணி தொய்வின்றி நடக்க வாய்ப்புண்டு. எழுத்தாளர்களுக்கு உரிய வாய்ப்பு கிட்டும். கொடுக்கல் - வாங்கலில் நிதானம் இருக்கட்டும்.
அரசியல்வாதிகள் ஒரு குறிப்பிட்ட பிரச்சினையில் புத்திசாலித்தனமாக நடந்து கொண்டு நற்பெயர் பெற வாய்ப்புண்டு. பொதுவாக கெடுதல்கள் ஏற்படுமானாலும், அந்தக் கெடுதல்கள் அவ்வளவாக பாதிக்காது. உழைப்பு வீண் போனது போலத் தோன்றலாம். ஆனால், அந்த உழைப்புக்கு ஏற்ற பலனை பெறவும் வாய்ப்புண்டு.
பெண்களுக்கு மனம் மகிழும் சம்பவங்கள் நடக்கும். குடும்ப சுபிட்சம், தாம்பத்திய உறவு சீராக இருக்கும். சுப காரியங்கள் நடக்க இடமுண்டு. குறிப்பாக திருமணம் நடக்கும். மக்கட்பேறு உண்டாகவும் இடமுண்டு. பயணத்தைத் தவிர்ப்பது நல்லது.
மாணவர்கள் ஏற்றம் பெறுவர். உடல் நலம் நல்ல விதமாக இருக்கும். மனதில் சலனம் ஏற்படலாம். தேவையில்லாத எண்ணங்கள் தோன்றலாம். நிதானத்தைக் கடைப் பிடியுங்கள்.
உத்திரம் 2, 3, 4 பாதங்கள்: இந்த ஆண்டு அலுவலர்கள் விரும்பத்தகாத உத்தரவுகள் பெற இடமுண்டு. குறிப்பாக இடமாற்றம் ஏற்படலாம். அரசியல்வாதிகள் அவசரப்பட்டால் அவப்பெயரையே சம்பாதிக்க நேரும். அரசு விரோதத்தைச் சம்பாதிக்காதிருப்பதில் கவனமாய் இருங்கள். தீமைகளைத் தோற்றுவிப்பதில் உங்களைச் சுற்றி உள்ளவர்கள் முனைந்து நிற்பார்கள். கவனம் தேவை. தெளிவான ஆலோசனையும், முயற்சியும் உங்களை அனைத்து கஷ்டங்களில் இருந்தும் காப்பாற்றும்.
அஸ்தம்: இந்த ஆண்டு வியாபாரிகள் லாபம் காண்பர். விவசாயிகளுக்குச் சிறு சோதனை உண் டாகலாம். நன்மைகள் சற்றுத் தூக்கலாக நடக்கும். அரசு அலுவலர்களுக்குப் பிரச்சினை உருவாக இட மில்லை. வியாபாரிகளுக்கு அளவான லாபம் உண்டு. வேதம் அறிந்த விற்பனர்கள் போற்றப்படுவார்கள். எனினும் உஷார் தேவை. கலைத்துறையில் உள்ளவர்களுக்கு அன்றாடப் பணிகள் தட்டுத் தடுமாறி நடக்கும்.
சித்திரை 1, 2, பாதங்கள்: இந்த ஆண்டு வியாபாரிகள் மிகுந்த அலைச்சல் பட்டே சிறிதளவு லாபம் காண்பர். தொழில் மாற்றம் அல்லது தொழிலில் சலனம் ஏற்படலாம். பயணத்தைத் தவிர்ப்பது நல்லது. கலைத்துறையில் பாதிப்பு உண்டாகாது. நன்மைகள் உண்டாக குரு அருள்வார். மாணவர் - ஆசிரியர் உறவு நல்லிணக்கம் பெறும். விவசாயிகள் எச்சரிக்கையுடன் இருப்பது அவசியம். கலைத் துறை சுறுசுறுப்படையும். குடும்பத்தில் சுமுகம் நிலவும். சுப காரியம் ஒன்று நடக்கலாம். நன்மைகளும், தீமைகளும் கலந்தவாறு நடக்கவே செய்யும்.
பரிகாரம்: புதன்கிழமை தோறும் அருகில் இருக்கும் ஐயப்பன் அல்லது சாஸ்தான் கோவிலுக்குச் சென்று நெய் தீபம் ஏற்றிவரவும் | சிறப்பு பரிகாரம்: புதன்ஹோரைகளில் பெருமாள் அல்லது விநாயகர் அல்லது சாஸ்தா கோவிலில் 11 நெய் தீபம் ஏற்றி வழிபட வேண்டும். மரிக்கொழுந்தை அர்ப்பணிக்கவும் | அதிர்ஷ்ட திசைகள்: மேற்கு, தெற்கு | செல்ல வேண்டிய தலம்: திருவெண்காடு, சபரிமலை, பாபநாசம் சொரிமுத்தையனார் | சொல்ல வேண்டிய மந்திரம் - “ஓம் சம் ஸ்ரீசாஸ்தாயை நம:” |
இந்த ஆண்டு கன்னி ராசிக்கான கிரகங்களின் நிலை