ராகு - கேது பெயர்ச்சி பலன்கள்; கேட்டை  நட்சத்திர அன்பர்களே! பணம் வரும்; எடுத்ததெல்லாம் வெற்றி; பதவி உயர்வு சம்பள உயர்வு! 

ராகு - கேது பெயர்ச்சி பலன்கள்; கேட்டை  நட்சத்திர அன்பர்களே! பணம் வரும்; எடுத்ததெல்லாம் வெற்றி; பதவி உயர்வு சம்பள உயர்வு! 
Updated on
1 min read

கேட்டை: கிரகநிலை: ராகு பகவான் உங்களுடைய பதிமூன்றாவது நட்சத்திரத்தின் இரண்டாம் பாதத்திலிருந்து ஒன்றாம் பாதத்திற்கு மாறுகிறார். கேது பகவான் உங்களுடைய இருபத்தி ஆறாவது நட்சத்திரத்தின் நான்காம் பாதத்திலிருந்து மூன்றாம் பாதத்திற்கு மாறுகிறார்.

இந்தப் பெயர்ச்சியில் மிக நீண்ட காலத்திற்குப் பிறகு நல்ல பலன்களை அனுபவிக்கப் போகிறீர்கள். நீண்ட நாட்களாக எதிர்பார்த்த பணம் கைக்கு வந்து சேரும். நண்பர்களால் காரிய அனுகூலம் உண்டாகும். எல்லாவித வசதிகளும் உண்டாகும். தேடிப் போனதும் தானாகவே வந்து சேரும். அறிவுத் திறன் அதிகரிக்கும். நெருக்கமானவர்களுடன் இனிமையாகப் பேசி பொழுதைக் கழிப்பீர்கள்.

மனோ தைரியம் கூடும். மதிப்பு கூடும். தொழில் வியாபாரம் சிறப்பான முன்னேற்றம் பெறும். வாடிக்கையாளர்கள் மத்தியில் மதிப்பும், மரியாதையும் அதிகரிக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் சிறப்பாக பணிபுரிந்து பாராட்டு பெறுவார்கள். சிலருக்கு பதவி உயர்வு - சம்பள உயர்வு போன்றவை கிடைக்கலாம். பணியில் பாராட்டு கிடைக்கும்.

குடும்பத்தில் நிம்மதியும் சந்தோஷமும் அதிகரிக்கும். வீட்டிற்குத் தேவையான பொருள்களை வாங்குவீர்கள். கணவன் மனைவிக்கிடையே மகிழ்ச்சி கூடும். பிள்ளைகளின் கல்வியில் கூடுதல் கவனம் தேவை. தங்க நகை சேரும் காலகட்டம் இது. பெண்களுக்கு நீண்ட நாட்களாக செய்ய நினைத்த ஒரு காரியத்தை செய்து முடிப்பீர்கள். கலைத்துறையினருக்கு போட்டிகள் நீங்கும். உங்களுக்கு பக்கபலமாக ஒருவரது உதவி கிடைக்கும்.

அரசியல் துறையினருக்கு வாழ்க்கைத் தரம் உயர எடுக்கும் முயற்சிகள் கை கூடும். மாணவர்களுக்கு கல்வியில் எதிர்பார்த்த முன்னேற்றம் உண்டாகும்.

பரிகாரம்: மஹாவிஷ்ணு தீபம் ஏற்றி வணங்க கடன் சுமை குறையும். தொழில் முன்னேற்றம் உண்டாகும்.
மதிப்பெண்கள்: 80% நல்ல பலன்களை எதிர்பார்க்கலாம்.
***

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in