2022 எப்படி இருக்கும்?  திருவோணம் நட்சத்திர அன்பர்களே! வீண் செலவு; ஆரோக்கியத்தில் கவனம்; வேலைப்பளு!

2022 எப்படி இருக்கும்?  திருவோணம் நட்சத்திர அன்பர்களே! வீண் செலவு; ஆரோக்கியத்தில் கவனம்; வேலைப்பளு!
Updated on
1 min read


- பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்


திருவோணம்:


சந்திரனை நட்சத்திரநாதனாகக் கொண்ட திருவோணம் நட்சத்திரத்தில் பிறந்த அன்பர்களே!


இந்த ஆண்டு வீண் செலவு ஏற்படும். காரியங்களில் தாமதம் உண்டாகும். உடற்சோர்வு, மனச் சோர்வு வரலாம். மிகவும் வேண்டியவரைப் பிரிய நேரிடும். கண்மூடித்தனமாக எதையும் செய்யாமல் யோசித்து செய்வது நல்லது. தாய், தந்தையின் உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. இருக்கும் இடத்தை விட்டு வெளியேற வேண்டி இருக்கும். தொழில் வியாபாரம் தொடர்பான அலைச்சல் அதிகரிக்கும்.

எதிர்பார்த்த லாபம் தாமதப்படும். புதிய ஆர்டர்கள் கிடைப்பதில் தடைகள் உண்டாகலாம். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வேலைப் பளு அதிகரிக்கும். குடும்பத்தில் நிம்மதி குறையும்படியான ஏதாவது சம்பவங்கள் நடக்கலாம். கணவன், மனைவிக்கிடையே மன வருத்தம் ஏற்படலாம்.

பிள்ளைகள் நலனில் அக்கறை தேவை. நண்பர்கள் உறவினர்களிடம் கவனமாக பேசிப் பழகுவது நல்லது. பெண்கள் எந்த ஒரு காரியத்தையும் செய்யும் முன் தீர ஆலோசனை செய்வது நல்லது. கலைத்துறையினருக்கு செலவு அதிகரிக்கும். அரசியல்வாதிகளுக்கு சாதகமான சூழ்நிலை காணப்படும். மாணவர்களுக்கு கல்வியில் முன்னேற்ற மடைய கடின உழைப்பு தேவை.

பொதுவாக இந்த ஆண்டு உங்களுக்கு சுபநிகழ்ச்சிகள் நடக்கும்.

பரிகாரம்: திருப்பதி பெருமாளை வணங்கி வர உடல் ஆரோக்கியமடையும். வீண் அலைச்சல் குறையும். கடினமான பணிகள் எளிதாக முடியும்.

மதிப்பெண்கள்: 68% நல்லபலன்களை எதிர்பார்க்கலாம்.

***********

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in