2022 எப்படி இருக்கும்?  உத்திராடம் நட்சத்திர அன்பர்களே! பண வரவு திருப்தி; புதிய பதவி; நல்ல இடத்தில் வேலை! 

2022 எப்படி இருக்கும்?  உத்திராடம் நட்சத்திர அன்பர்களே! பண வரவு திருப்தி; புதிய பதவி; நல்ல இடத்தில் வேலை! 
Updated on
1 min read

- பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்


உத்திராடம்:


சூரியனை நட்சத்த்திரநாதனாகக் கொண்ட உத்திராடம் நட்சத்திரத்தில் பிறந்த அன்பர்களே!


இந்த ஆண்டு தன்னம்பிக்கை வளரும். பணவரவு திருப்தி தரும். வாய்க்கு ருசியான உணவு கிடைக்கும். வாக்கு வன்மை அதிகரிக்கும். சொன்ன சொல்லைக் காப்பாற்றுவீர்கள். அறிவுத்திறன் அதிகரிக்கும். பெயரும், புகழும் கூடும். தொழில் வியாபாரம் வளர்ச்சி பெறும்.

இதுவரை இருந்த தொய்வு நீங்கும். லாபம் அதிகரிக்கும். இனிமையான பேச்சின் மூலம் வாடிக்கையாளர்களை தக்க வைத்துக்கொள்வீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு புதிய பதவி தேடிவரும். வேலை தேடுபவர்களுக்கு வேலை கிடைக்கும். குடும்பத்தில் இருந்த பிரச்சினைகள் தீரும். கணவன், மனைவிக்கிடையே திருப்தியான உறவு காணப்படும். பிள்ளைகள் கல்வியிலும் மற்ற வகையிலும் சிறந்து விளங்குவார்கள்.

பகைவர்களால் ஏற்பட்ட தொல்லை நீங்கும். பெண்கள் திட்டமிட்டபடி எதையும் செய்து முடிப்பீர்கள். மனோதிடம் கூடும். கலைத்துறையினர் அவசர முடிவுகளை தவிர்ப்பது நன்மை தரும். அரசியல்வாதிகள் எதிர்காலம் பற்றி முக்கிய முடிவுகளை எடுக்க நினைப்பீர்கள்.

மாணவர்கள் கல்வியில் வெற்றி பெற எடுக்கும் முயற்சிகள் சாதகமான பலன் தரும். சக மாணவர்களுடன் நல்லுறவு காணப்படும்.

பொதுவாக இந்த ஆண்டு அரசாங்க அனுகூலங்களைப் பெறுவீர்கள்.

பரிகாரம்: சிவபெருமானை வணங்க எதிர்பார்த்த பணவரத்து இருக்கும். செயல் திறமை அதிகரிக்கும்.

மதிப்பெண்கள்: 69% நல்லபலன்களை எதிர்பார்க்கலாம்.
***********

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in