

- பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்
ஆயில்யம்:
புதனை நட்சத்திரநாதனாகக் கொண்ட ஆயில்யம் நட்சத்திரத்தில் பிறந்த அன்பர்களே!
இந்த ஆண்டு ஏதாவது ஒரு கவலை மனதில் இருக்கும். எதிலும் எச்சரிக்கையாக செயல்படுவது நல்லது. வாகனங்களில் செல்லும்போது கவனம் தேவை. மற்றவர் விவகாரங்களில் தலையிடுவதை தவிர்ப்பது நல்லது. பணவரத்து தாமதமாகும். கொடுத்த வாக்கை காப்பாற்றுவதற்கு பாடுபட வேண்டி இருக்கும். தொழில் வியாபாரத்தில் ஈடுபட்டு இருப்பவர்கள் எதிலும் எடுத்தோம் கவிழ்த்தோம் என்று செயல்படாமல் ஆலோசித்து செயல்படுவது வெற்றிக்கு உதவும்.
உத்தியோகத்தில் இருப்பவர்கள் பக்குவமாகச் செயல்படுவது நல்லது. குடும்பத்தில் உங்களது வார்த்தைக்கு மதிப்பு இருக்கும். கணவன், மனைவிக்கிடையே சகஜநிலை காணப்படும். பிள்ளைகள் மூலம் நன்மை உண்டாகும். பெண்கள் எந்த ஒரு வேலையில் ஈடுபட்டாலும் எச்சரிக்கையுடன் செயல்படுவது நல்லது. கலைத்துறையினர் அடுத்தவருக்கு உதவிகள் செய்யும் போது கவனம் தேவை.
அரசியல்வாதிகளுக்கு புகழ், கௌரவம் அதிகரிக்கும். மாணவர்களுக்கு பாடங்களைப் படிப்பதில் கூடுதல் கவனம் செலுத்துவது நல்லது. சக மாணவர்களுடன் நிதானமாகப் பழகுவது நன்மை தரும்.
பொதுவாக இந்த ஆண்டு உங்களுக்கு வீடு மனை வாங்கும் யோகம் கிடைக்கும்.
பரிகாரம்: நாகதேவதையை தரிசனம் செய்வது மன அமைதியைத் தரும். எதிலும் முன்னேற்றம் உண்டாகும்.
மதிப்பெண்கள்: 75% நல்ல பலன்களை எதிர்பார்க்கலாம்.
*********************************************
|