2022 எப்படி இருக்கும்? திருவாதிரை நட்சத்திர அன்பர்களே! முன்னேற்றம்; அனுசரித்துச் செல்லவும்; மனதில் குழப்பம்! 

2022 எப்படி இருக்கும்? திருவாதிரை நட்சத்திர அன்பர்களே! முன்னேற்றம்; அனுசரித்துச் செல்லவும்; மனதில் குழப்பம்! 
Updated on
1 min read

- பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்


திருவாதிரை:


ராகுவை நட்சத்திரநாதனாகக் கொண்ட திருவாதிரை நட்சத்திரத்தில் பிறந்த அன்பர்களே!


இந்த ஆண்டு சாமர்த்தியமான பேச்சின் மூலம் எதையும் செய்து முடிப்பீர்கள். நற்பலன்கள் உண்டாகும். வீண் அலைச்சல் உண்டாகும். அடுத்தவர் செயல்களுக்கு பொறுப்பேற்காமல் இருப்பது நல்லது. தொழில் வியாபாரத்தில் இருந்த சிக்கல்கள் நீங்கி முன்னேற்றம் உண்டாகும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வேலைப்பளு குறையும்.

குடும்பத்தில் இருப்பவர்களின் நலனில் அக்கறைகாட்ட வேண்டி இருக்கும். கணவன், மனைவிக்கிடையே மறைமுக மனவருத்தம் இருக்கும். ஏதாவது ஒரு காரணமாக வாக்குவாதம் ஏற்படலாம். அக்கம்பக்கத்தினரை அனுசரித்துச் செல்வது நல்லது. பெண்களுக்கு காரியங்களை செய்து முடிப்பதில் தாமதம் ஏற்படும். பயணம் செல்ல நேரலாம்.

கலைத்துறையினருக்கு செலவுகள் அதிகரிக்கும். அரசியல்வாதிகளுக்கு வீண் அலைச்சல் உண்டாகும். மாணவர்கள் பாடங்களை ஒருமுறைக்கு பலமுறை மனதில் வாங்கி படிப்பது வெற்றிக்கு உதவும். அலைச்சல், காரியத் தடை, மனக்குழப்பம் ஏற்படலாம். கவனம் தேவை.

பொதுவாக இந்த ஆண்டு உங்களுக்கு அனைத்திலும் லாபம் ஏற்படும்.
பரிகாரம்: நடராஜரை தரிசித்து வணங்கிவர எதிர்பார்த்த காரிய நன்மைகள் உண்டாகும். செல்வம் சேரும்.
மதிப்பெண்கள்: 75% நல்லபலன்களை எதிர்பார்க்கலாம்.
*************************************

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in