2022 எப்படி இருக்கும்? கிருத்திகை நட்சத்திர அன்பர்களே! கோபம் குறைக்கவும்; பதவி உயர்வில் தாமதம்; வாக்குவாதம் வேண்டாம்! 

2022 எப்படி இருக்கும்? கிருத்திகை நட்சத்திர அன்பர்களே! கோபம் குறைக்கவும்; பதவி உயர்வில் தாமதம்; வாக்குவாதம் வேண்டாம்! 
Updated on
1 min read

- பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்


கிருத்திகை:


சூரியனை நட்சத்திரநாதனாகக் கொண்ட கிருத்திகை நட்சத்திரத்தில் பிறந்த அன்பர்களே!

இந்த ஆண்டு விருப்பங்கள் நிறைவேறும். மற்றவர்களுக்கு ஆலோசனை சொல்லும்போது கவனம் தேவை. எதிர்பாலினத்தாரால் லாபம் கிடைக்கும். வீட்டை விட்டு வெளியில் தங்க நேரிடலாம்.

தொழில் வியாபாரத்தில் ஈடுபட்டு இருப்பவர்கள் கோபத்தைக் குறைத்து வாடிக்கையாளர்களை அனுசரித்துச் செல்வதன் மூலம் முன்னேற்றம் காண முடியும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் கடுமையாக உழைக்க வேண்டி இருக்கும். பதவி உயர்வு நிலுவைத் தொகை வருவதில் தாமதம் ஏற்படும்.

குடும்பத்தில் ஏதாவது பிரச்சினை தலைதூக்கும். கணவன், மனைவிக்கிடையே வாக்குவாதங்கள் உண்டாகலாம். பிள்ளைகளை அவர்கள் போக்கிலேயே விட்டுப்பிடிப்பது நல்லது. பெண்கள் வாக்குவாதங்களைத் தவிர்ப்பது நன்மை தரும். எடுத்த காரியங்களைச் செய்து முடிப்பது பற்றிய மனசஞ்சலம் ஏற்பட்டு நீங்கும்.

கலைத்துறையினர் செலவுகளைக் குறைக்க திட்டமிடுவது நல்லது. அரசியல்வாதிகளுக்கு கவுரவம் உயரும். மாணவர்கள் கல்வியில் முன்னேற்றம் காண கடுமையாகப் படிக்க வேண்டி இருக்கும்.

பொதுவாக இந்த ஆண்டு உங்கள் முயற்சிகள் பலிதமாகும் ஆண்டாக இருக்கும்.

பரிகாரம்: முருகப் பெருமானை தரிசித்து அர்ச்சனை செய்து வழிபட குழப்பம் நீங்கி மனநிம்மதி கிடைக்கும். சொத்துப் பிரச்சினை தீரும்.

மதிப்பெண்கள்: 76% நல்லபலன்களை எதிர்பார்க்கலாம்.

******

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in