Published : 23 Dec 2021 06:39 PM
Last Updated : 23 Dec 2021 06:39 PM

கடகம், சிம்மம், கன்னி ராசி அன்பர்களே! இந்த வாரம் உங்களுக்கு இப்படித்தான்! டிசம்பர் 23ம் தேதி முதல் 29ம் தேதி வரை

- பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்


கடகம் (புனர் பூசம் 4ம் பாதம், பூசம், ஆயில்யம்)


கிரகநிலை:


ராசியில் சந்திரன் - பஞ்சம ஸ்தானத்தில் கேது, செவ்வாய் - ரண ருண ரோக ஸ்தானத்தில் புதன், சூர்யன் - களத்திர ஸ்தானத்தில் சனி, சுக்ரன் (வ, ஆ) - அஷ்டம ஸ்தானத்தில் குரு - லாப ஸ்தானத்தில் ராகு என கிரக நிலவரம் உள்ளது.

28-12-2021 அன்று புதன் பகவான் ரண ருண ரோக ஸ்தானத்தில் இருந்து களத்திர ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
பலன்கள்:

கடின உழைப்பில் ஸ்திரமான வளர்ச்சியைப் பெறும் கடக ராசி அன்பர்களே!
இந்த வாரம் எதிலும் முன்னேற்றம் காணப்படும். இஷ்டத்திற்கு விரோதமாக காரியங்கள் நடந்தாலும் முடிவு சாதகமாக இருக்கும். வீண் ஆசைகள் மனதில் தோன்றும். கட்டுப்பாட்டுடன் இருப்பது நல்லது. வீண் விவகாரங்களில் தலையிடாமல் இருப்பதும் நன்மை தரும்.


தொழில் வியாபாரம் தொடர்பான காரியங்களில் திடீர் தடை ஏற்படலாம். உத்தியோகஸ்தர்கள் சக ஊழியர்களை அனுசரித்து செல்வது நல்லது.
குடும்பம் பற்றிய கவலைகள் ஏற்பட்டாலும் தீர்வு ஏற்படும். மனதில் பக்தி உண்டாகும். சகோதரர்கள் மற்றும் உறவினர்களிடம் பேசும்போதும் கவனம் தேவை.
பெண்களுக்கு எந்த ஒரு செயலையும் யோசித்து செய்வது நல்லது.
மாணவர்களுக்கு கல்வியில் வெற்றி பெற திட்டமிட்டு பாடங்களை படிப்பதும் தேவையற்ற பிரச்சனைகளில் தலையிடாமல் இருப்பதும் நல்லது.
பரிகாரம்: திங்களன்று அம்மனை வணங்கி வருவது எல்லா நன்மைகளையும் தரும். மனோதிடம் உண்டாகும்.
**************************************************************


சிம்மம் (மகம், பூரம், உத்திரம் 1ம் பாதம்)


கிரகநிலை:


சுக ஸ்தானத்தில் கேது, செவ்வாய் - பஞ்சம ஸ்தானத்தில் புதன், சூர்யன் - ரண் ருண ரோக ஸ்தானத்தில் சனி, சுக்ரன் (வ, ஆ) - களத்திர ஸ்தானத்தில் குரு - தொழில் ஸ்தானத்தில் ராகு அயன சயன போக ஸ்தானத்தில் சந்திரன் என கிரக நிலவரம் உள்ளது.

28-12-2021 அன்று புதன் பகவான் பஞ்சம ஸ்தானத்தில் இருந்து ரண ருண ரோக ஸ்தானத்திற்கு மாறுகிறார்.


பலன்கள்:
வாழ்க்கையில் பலவகை சோதனைகளையும், தடைகளையும் தகர்த்தெறியும் திறனுடைய சிம்ம ராசி அன்பர்களே!
இந்த வாரம் எல்லாக் காரியங்களிலும் சாதகமான பலன் கிடைக்கும். எதிலும் லாபம் கிடைக்கும். கடன்கள், நோய்கள் தீரும். திருமணம் தொடர்பான காரியங்கள் நல்லபடியாக நடந்து முடியும். நன்மை, தீமை பற்றிய கவலை இல்லாமல் தலை நிமிர்ந்து நடப்பீர்கள்.
தொழில், வியாபாரம் தொடர்பான விஷயங்களில் சாதகமான பலன் கிடைக்கும். கடன் பிரச்சனைகள் குறையும். உத்தியோகஸ்தர்கள் எடுத்த வேலையை கொடுத்த நேரத்தில் முடித்து பாராட்டு பெறுவீர்கள்.


குடும்பத்தில் இருந்து வந்த சுணக்க நிலை மாறும். குடும்ப உறவினர்களால் வீண் அலைச்சல் உண்டாகலாம். மன வலிமை அதிகரிக்கும். உறவினர்கள் மத்தியில் மதிப்பு கூடும். பெண்களுக்கு நன்மை தீமை பற்றிய கவலை இல்லாமல் எதையும் செய்ய முற்படுவீர்கள். மாணவர்களுக்கு பாடங்களில் இருந்த சந்தேகம் நீங்கும். உற்சாகமாக படிப்பீர்கள்.
பரிகாரம்: ஸ்ரீருத்திரமூர்த்தியை ஞாயிற்றுக்கிழமை அன்று வணங்கி வர எதிலும் வெற்றி கிடைக்கும். செயல்களில் வேகம் உண்டாகும்.
**************************************************************


கன்னி (உத்திரம் 2, 3, 4 பாதங்கள், அஸ்தம், சித்திரை 1, 2, பாதங்கள்)


கிரகநிலை:
தைரிய வீரிய ஸ்தானத்தில் கேது, செவ்வாய் - சுக ஸ்தானத்தில் புதன், சூர்யன் - பஞ்சம ஸ்தானத்தில் சனி, சுக்ரன் (வ, ஆ) - ரண ருண ரோக ஸ்தானத்தில் குரு - பாக்கிய ஸ்தானத்தில் ராகு - லாப ஸ்தானத்தில் சந்திரன் என கிரக நிலவரம் உள்ளது.

28-12-2021 அன்று புதன் பகவான் சுக ஸ்தானத்தில் இருந்து பஞ்சம ஸ்தானத்திற்கு மாறுகிறார்.


பலன்கள்:
தனது சிக்கனமான நடவடிக்கையினால் உயரும் கன்னி ராசி அன்பர்களே!
இந்த வாரம் புத்தி சாதுர்யமும் அறிவுத் திறனும் அதிகரிக்கும். எதைச் செய்வது எதை விடுவது என்ற மனத் தடுமாற்றம் ஏற்பட்டு நீங்கும். எதிர்பார்த்த பண வரவு தாமதப்படும். திடீர் சோர்வு உண்டாகும். அடுத்தவரிடம் உங்களது செயல்திட்டங்களைப் பற்றி கூறுவதை தவிர்ப்பது நல்லது.
தொழில் வியாபாரத்தில் இருப்பவர்கள் அவசரமான முடிவுகள் எடுப்பதை தவிர்ப்பது நல்லது. பேச்சாற்றல் மூலம் தொழில் லாபம் கூடும். உத்தியோகஸ்தர்கள் மேல் அதிகாரிகள் கூறுவதை கேட்டு தடுமாற்றம் அடையலாம்.


குடும்பத்தில் நடைபெறும் சில விஷயங்கள் உங்கள் கோபத்தை தூண்டலாம். வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். உறவினர்கள் மத்தியில் இருந்த பழைய பகைகள் மாறும்.பெண்களுக்கு அவசர முடிவுகளை தவிர்ப்பது நன்மை தரும். மாணவர்களுக்கு எதிர்கால கல்வி பற்றி முக்கிய முடிவுகளை எடுக்க நினைப்பீர்கள். அடுத்தவர் யோசனைகளை கேட்டு தடுமாற்றம் அடையாமல் இருப்பது நல்லது.
பரிகாரம்: ஸ்ரீதுர்கை அம்மனை செவ்வாய்க்கிழமை ராகுகாலத்தில் அர்ச்சனை செய்து வழிபடுவது எல்லா பிரச்சினைகளையும் தீர்க்கும். எதிர்ப்புகள் அகலும்
**************************************************************

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

 
x