

- பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்
பூரட்டாதி:
கிரகநிலை:
குரு பகவான் உங்களின் இருபத்தி ஆறாம் நட்சத்திரத்தின் 3ம் பாதத்திற்கு மாறுகிறார்.
பலன்கள்:
எதிலும் கண்ணியத்தைத் தவறவிடாத பூரட்டாதி நட்சத்திர அன்பர்களே!
இந்த குருப்பெயர்ச்சி உங்களின் எல்லா வித இன்னல்களையும் களையப் போகிறது என்பதில் எந்த ஐயமும் உங்களுக்கு வேண்டாம். வழக்கு விவகாரங்களில் உங்களுக்குத் தான் வெற்றி நிச்சயம். குடும்பத்தில் இதுவரை இருந்து வந்த பிரச்சினைகள் மறையும். உங்கள் பேச்சைக் கேட்காதவர்களும் உங்களிடம் ஆலோசனை கேட்பார்கள். தாயார் மற்றும் தாய் வழி உறவினர்கள் உங்களுடன் உறவாட வரலாம். அவர்களுடனான பிரச்சினைகள் அனைத்தும் தீரும்.
தொழில் - வியாபாரத்தைப் பொறுத்தவரை சில புதிய முதலீடுகளைச் செய்வீர்கள். அவை பிற்காலத்தில் லாபம் தரக்கூடியனவாகவே இருக்கும். கவலை வேண்டாம். நீங்கள் எதிர்பார்த்திருந்த கடன் கிடைக்கும்.
உத்தியோகஸ்தர்களுக்கு லாபமான காலமாக இருக்கும். எதிர்பார்த்திருந்த இடமாற்றம் கிடைக்கும். குடும்பத்தை விட்டுப் பிரிந்து சில காலம் வெளியூரில் தங்க நேரிடலாம்.
பெண்களுக்கு காரியங்களில் வெற்றி கிடைக்கும். தாய் வழி உதவிகள் கிடைக்கப் பெறுவீர்கள். உடல் நலனில் முன்னேற்றம் உண்டாகும்.
மாணவர்களுக்கு கல்விக்குத் தேவையான அனைத்து உதவிகளும் கிடைக்கும். கல்விக் கடன் கிடைக்கப் பெறுவீர்கள்.
அரசியல்துறையினருக்கு சாதகமான காலமாக இருக்கும். பண வரவு எதிர்பார்த்தபடி இருந்தாலும், எதிர்பாராத செலவுகளும் இருக்கும்.
கலைத்துறையினர் தங்களின் முன்னேற்றத்திற்காக செலவிட வேண்டி இருக்கும். மேலும் வாய்ப்புகளும் தேடி வரும் என்பதால் கவலை வேண்டாம்.
பரிகாரம்:
தட்சிணாமூர்த்தியை வழிபாடு செய்தால் வழக்குகளில் சாதக நிலை காணப்படும்.
மதிப்பெண்கள்: 68% நல்ல பலன்களை எதிர்பார்க்கலாம்.
**********************
| ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல. |