குருப்பெயர்ச்சி பலன்கள் ;   சதய  நட்சத்திர அன்பர்களே; எதிலும் வெற்றி; மனதில் சங்கடம்; தொழிலில் கவனம்; பணப்பிரச்சினை தீரும்! 

குருப்பெயர்ச்சி பலன்கள் ;   சதய  நட்சத்திர அன்பர்களே; எதிலும் வெற்றி; மனதில் சங்கடம்; தொழிலில் கவனம்; பணப்பிரச்சினை தீரும்! 
Updated on
1 min read

- பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்

சதயம்:

கிரகநிலை:

குரு பகவான் உங்களின் இருபத்தி ஏழாம் நட்சத்திரத்தின் 3ம் பாதத்திற்கு மாறுகிறார்.

பலன்கள்:

எப்போதும் விழிப்புடன் இருக்கும் சதய நட்சத்திர அன்பர்களே!

குருபகவானின் அருளால் உங்களுக்கு வாழ்க்கையில் கிடைக்க வேண்டிய அனைத்தும் தவறாமல் கிடைப்பதற்கு வழி செய்யப் போகிறார். முக்கிய தருணங்கள் வாழ்வில் வரும்போது தெய்வ நம்பிக்கையுடன் அதை நாடுங்கள். வெற்றி நிச்சயம். குடும்பத்தில் மற்றவர்களிடம் தேவையில்லாமல் கருத்து சொல்வதை தவிர்ப்பது நல்லது. தாய் வழி உறவினர்களுடன் கொஞ்சம் தள்ளி இருப்பது நல்லது. மனச் சங்கடங்கள் வர வாய்ப்பு உள்ளது. பூர்வீகச் சொத்துகள் கைக்குக் கிடைக்கும்.

தொழிலில் நீங்கள் கவனமுடன் செயல்பட்டால் எந்த வித நஷ்டமும் இல்லாமல் இருக்கும். மற்றவர்களை தொழிலில் ஈடுபடுத்தும்போது உங்கள் கண் பார்வையில் அவர்களை வைத்துக்கொள்வது நல்லது.

உத்தியோகஸ்தர்களுக்கு முக்கிய விஷயங்களில் அனைவரிடமும் கருத்து கேட்டாலும் தீர ஆலோசித்து முடிவெடுப்பது உங்களுக்கு வெற்றியைத் தரும்.

பெண்களுக்கு கணவருடனான மனவருத்தங்கள் நீங்கும். பிள்ளைகள் உங்களுடன் பொழுதைக் கழிக்க நினைப்பார்கள். அவர்களுடன் வெளியூர் சென்று வருவீர்கள்.

மாணவர்கள் தந்தையின் அறிவுரையைக் கேட்டு நடந்தால் சிறந்த மாணவராக திகழலாம். செய்முறைக் கல்வியின் சிறந்து விளங்குவீர்கள்.

அரசியல்துறையினருக்கு பணப்பிரச்சினைகள் தீரும். பெண் பொறுப்பாளர்களுக்கு புதிய பதவிகள் கிடைக்கும். பிறரின் பாராட்டுகளைப் பெறுவீர்கள்.

கலைத்துறையினருக்கு அதிக வாய்ப்புகள் கிடைக்கும் என்பதால் கிடைத்த வாய்ப்பைப் பயன்படுத்தி வாழ்வில் முன்னேற குரு பகவான் துணை நிற்பார்.

பரிகாரம்:

பைரவர் வழிபாடு உடல்நலத்தில் நல்ல முன்னேற்றத்தைக் கொடுக்கும்.

மதிப்பெண்கள்: 70% நல்ல பலன்களை எதிர்பார்க்கலாம்.

**********************

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in