குருப்பெயர்ச்சி பலன்கள் ; அஸ்தம் நட்சத்திர அன்பர்களே! அவமான நிலை மாறும்; மனதில் நிம்மதி; தொழிலில் ஏற்றம்;வேலையில் தொந்தரவு இல்லை!  

குருப்பெயர்ச்சி பலன்கள் ; அஸ்தம் நட்சத்திர அன்பர்களே! அவமான நிலை மாறும்; மனதில் நிம்மதி; தொழிலில் ஏற்றம்;வேலையில் தொந்தரவு இல்லை!  
Updated on
1 min read

- பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்


அஸ்தம்:


கிரகநிலை:


குரு பகவான் உங்களின் பதினொன்றாம் நட்சத்திரத்தின் 3ம் பாதத்திற்கு மாறுகிறார்.


பலன்கள்:


நளினமாகப் பேசி காரியத்தை முடிக்கும் அஸ்த நட்சத்திர அன்பர்களே!


இந்த குருப்பெயர்ச்சியால் பொதுவாக நிம்மதி கிடைக்கும். வாழ்க்கைத் துணையால் சில ஆதாயங்களையும் கிடைக்கப் பெறுவீர்கள். குடும்பத்தில் சிறு சிறு கருத்து வேறுபாடுகள், கணவன் - மனைவியிடையே சரியான புரிதல் இல்லாமை போன்ற பிரச்சினைகளை சந்தித்து வருகிறீர்கள். இவை அனைத்தும் இந்த குருப் பெயர்ச்சிக்குப் பிறகு மாறும். உங்களுக்கு குடும்பத்தில் ஏற்பட்ட அவமானங்கள் மாறும். மனதில் நிம்மதி பிறக்கும். இதனால் நிம்மதியான தூக்கம் வரும்.


தொழிலில் முன்னேற்றம் உண்டாகும். தொழிலில் ஏற்பட்டிருந்த தொய்வுகள் அகலும். நிறைய போராட்டத்திற்கு பிறகு நல்ல செய்திகள் தொழிலில் கிடைக்கப் பெறுவீர்கள்.


உத்தியோகஸ்தர்கள் தங்கள் உடன் பணி புரிபவர்களிடம் கவனமாகப் பழகவும். மற்றவர்களுக்கு வாக்கு கொடுக்கும் போது கவனம் அவசியம்.
பெண்களைப் பொறுத்தவரை வேலை செய்யும் பெண்கள் லாபமடைவார்கள். வேலைச் சூழல் உங்களுக்கு ஏற்றதாக அமையும். வேலை செய்யும் இடத்தில் இருந்த சிறு சிறு தொந்தரவுகள் தானாக மறையும்.


மாணவர்களுக்கு கல்வியில் இருந்த தடைகள் அனைத்தும் நீங்கும். மேல்படிப்பு படிக்க விரும்புபவர்களுக்கு அதற்கான வாய்ப்புகள் அமையும்.


அரசியல்துறையினருக்கு இருந்து வந்த பணக்கஷ்டங்கள் நீங்கும். உங்களின் குடும்ப உறுப்பினர்கள் உங்கள்முடிவுக்கு ஒத்துழைக்காமல் இருந்த நிலை மாறும்.
கலைத்துறையினருக்கு முக்கியமான காலகட்டம் இது. உங்கள் துறையில் சிறப்பான வரவேற்பை எதிர்பார்க்கலாம்.


பரிகாரம்:


குலதெய்வ பிரார்த்தனை அதிர்ஷ்டத்தைக் கொடுக்கும்.


மதிப்பெண்கள்: 69% நல்ல பலன்களை எதிர்பார்க்கலாம்.


**********************

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in