

- பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்
உத்திரம்:
கிரகநிலை:
குரு பகவான் உங்களின் பனிரெண்டாம் நட்சத்திரத்தின் 3ம் பாதத்திற்கு மாறுகிறார்.
பலன்கள்:
எதிலும் சாதிக்கும் திறமையும், சிறந்த நிர்வாகத் திறனும் உடைய உத்திர நட்சத்திர அன்பர்களே!
இந்த குருப்பெயர்ச்சியால் நல்ல சுமுகமான வாழ்க்கையை வாழப் போகிறீர்கள். சுபச் செய்திகளும் வரலாம். உண்மையான உறவுகளுக்கு மதிப்பு கொடுத்து அவர்களை உங்கள் அருகில் வைத்துக் கொள்வீர்கள். குடும்பத்தில் சுமுகமான உறவு இருக்கும். இதனால் உங்களுக்குள் ஒரு தன்னம்பிக்கை பிறக்கும். இவை அனைத்தையும் நல்ல முறையில் பயன்படுத்துவது மிக முக்கியமானதாகும்.
தொழில் செய்வபர்களுக்கு சில சவாலான சூழ்நிலைகள் அமையும். ஆனாலும் குருபகவானின் துணையால் அதைச் சமாளித்து வெற்றி பெறுவீர்கள். இதனால் உங்கள் புகழ் மட்டுமின்றி தொழிலும் லாபத்தை நோக்கி உயரும்.
உத்தியோகஸ்தர்களுக்கு வழக்குகள் உங்களுக்கு சாதகமாக அமையும். வர வேண்டிய பணம் வந்து சேரும். வேலையை இடையில் நின்றவர்கள் மீண்டும் தொடருவார்கள்.
பெண்களில் திருமணம் ஆகாதவர்களுக்கு திருமணம் நடக்கும். பயணத்தின் போது கவனமாக இருப்பது அவசியம். சோம்பல் நீங்கும். பிள்ளைகளுக்குத் தேவையானதை வாங்கிக்கொடுத்து மகிழ்வீர்கள்.
மாணவர்கள் வெளியூர் சென்று சில சான்றிதழ் படிப்புகளை படிப்பீர்கள். இது உங்களின் எதிர்கால வேலைக்கு உதவிகரமாக இருக்கும்.
அரசியல்துறையினர் வார்த்தைகளை சரியான முறையில் பிரயோகப்படுத்துவது அவசியம். தேவையில்லாமல் பேசுவதைத் தவிர்த்தாலே சில பிரச்சினைகளில் இருந்து தப்பிக்கலாம்.
கலைத்துறையினருக்கு உங்களின் வாழ்க்கையில் முக்கியமான காலகட்டமாக இது இருக்கும். பிரபலங்களுடன் இணைந்து வேலை செய்யும் வாய்ப்பு கிடைக்கும்.
பரிகாரம்:
ஐயப்பனை வழிபட்டால் தன்னம்பிக்கை அதிகரிக்கும்.
மதிப்பெண்கள்: 74% நல்ல பலன்களை எதிர்பார்க்கலாம்.
**********************
| ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல. |