Published : 12 Nov 2021 09:04 AM
Last Updated : 12 Nov 2021 09:04 AM

துலாம், விருச்சிகம், தனுசு ராசி அன்பர்களே! இந்த வாரம் உங்களுக்கு இப்படித்தான்! நவம்பர் 11 முதல் 17ம் தேதி வரை


- பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்


துலாம் (சித்திரை 3, 4 பாதம், சுவாதி, விசாகம் 1, 2, 3ம் பாதம்)


கிரகநிலை:
ராசியில் செவ்வாய், சூரியன், புதன் - தன ஸ்தானத்தில் கேது - தைரிய வீரிய ஸ்தானத்தில் சுக்ரன் - சுக ஸ்தானத்தில் குரு, சனி, சந்திரன் - அஷ்டம ஸ்தானத்தில் ராகு என கிரக நிலவரம் உள்ளது.

13-11-2021 அன்று குரு பகவான் சுக ஸ்தானத்தில் இருந்து பஞ்சம ஸ்தானத்திற்கு மாறுகிறார்.


17-11-2021 அன்று புதன் பகவான் ராசியில் இருந்து தன வாக்கு குடும்ப ஸ்தானத்திற்கு மாறுகிறார்.


பலன்கள்:

அளவான பேச்சும், அதிக நண்பர்கள் இல்லாமல் இருந்தாலும் மற்றவர்கள் என்ன செய்கிறார்கள் என்பதில் ஆர்வம் காட்டும் துலா ராசியினரே!

இந்த வாரம் எதிலும் தன்னம்பிக்கையுடன் ஈடுபட்டு காரியங்களை வெற்றிகரமாக செய்து முடிப்பீர்கள். புதிய தொடர்புகள் மூலம் மகிழ்ச்சி உண்டாகும். முக்கிய நபர்களின் அறிமுகமும் நட்பும் கிடைக்கப் பெறுவீர்கள். எதிர்பார்த்தபடி எல்லாம் நடந்தாலும் மற்றவர்கள் தவறாக புரிந்து கொள்ள நேரலாம், கவனம் தேவை.
தொழில் வியாபாரத்தில் வேகம் அதிகரிக்கும். எதிர்பார்த்தபடி பொருட்களை அனுப்புவதில் இருந்த தாமதம் நீங்கும். பார்ட்னர்களிடம் இருந்து வந்த மனக்கிலேசல்கள் மாறும்.

உத்தியோகத்தில் இருப்பவர்கள் திடீர் பயணத்தை சந்திக்க நேரலாம். மேல் அதிகாரிகளிடம் அனுசரித்துச் செல்வது நல்லது. புதிய வேலைக்கு முயற்சி செய்தவர்களுக்கு தக்க பலன் கிடைக்கும். எதிர்பார்த்த இடமாற்றம் ஏற்படும்.

குடும்பத்தில் ஒற்றுமை அதிகரிக்கும். ஆனாலும் கவனமாக எல்லோரிடமும் அனுசரித்து செல்வது நல்லது. கணவன், மனைவி ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்து செல்வது நன்மை தரும். பிள்ளைகளிடம் கவனமாக இருப்பதும் அன்பாகப் பேசுவதும் நல்லது. நண்பர்கள் மற்றும் உறவினர்கள் ஆதரவாக இருப்பார்கள்.
பெண்களுக்கு மனதில் தன்னம்பிக்கையும் தைரியமும் உண்டாகும். அடுத்தவர்களிடம் பழகும் போது கவனம் தேவை.

மாணவர்களுக்கு கல்வி தொடர்பான விஷயங்களில் திடீர் தடை, தாமதம் ஏற்படலாம். மற்றவர்களை அனுசரித்து செல்வது நல்லது. பெரியோர், ஆசிரியர் அரவணைப்பு இருக்கும்.

பரிகாரம்: லட்சுமி அஷ்டோத்திரம் படித்து மகாலட்சுமியை வணங்க செல்வம் சேரும். செல்வாக்கு உயரும்.
அதிர்ஷ்ட கிழமைகள்: ஞாயிறு, புதன், வெள்ளி;
********************


விருச்சிகம் (விசாகம் 4ம் பாதம், அனுஷம், கேட்டை)


கிரகநிலை:


ராசியில் கேது - தன வாக்கு குடும்ப ஸ்தானத்தில் சுக்ரன் - தைரிய வீரிய ஸ்தானத்தில் குரு, சனி, சந்திரன் - களத்திர ஸ்தானத்தில் ராகு - அயன சயன போக ஸ்தானத்தில் செவ்வாய், சூர்யன், புதன் என கிரக நிலவரம் உள்ளது.

13-11-2021 அன்று குரு பகவான் தைரிய வீரிய ஸ்தானத்தில் இருந்து சுக ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

17-11-2021 அன்று புதன் பகவான் அயன சயன போக ஸ்தானத்தில் இருந்து ராசிக்கு மாறுகிறார்.

பலன்கள்:


சொன்னாற்போல் இருக்க வேண்டும். அது சுட்டாற்போலும் இருக்க வேண்டும் என்பது போன்று திறமையாக பேசும் குணமுடைய விருச்சிக ராசியினரே!

இந்த வாரம் மறைமுக எதிர்ப்புகள் குறையும். எடுத்த காரியத்தில் ஏற்பட்ட தடை, தாமதம் நீங்கும். உடல் ஆரோக்கியம் பெறும். வழக்குகள், தகராறுகளில் சாதகமான பலன் கிடைக்கும். எந்த ஒரு விஷயத்திலும் மிகவும் அக்கறை காட்டுவீர்கள். அதேவேளையில் கடுமையான முயற்சிகளும் தேவை.
தொழில் வியாபாரம் தொடர்பான போட்டிகள் நீங்கும். மனதில் உற்சாகம் உண்டாகும். புதிய ஆர்டர்கள் பிடிப்பதில் வேகம் காட்டுவீர்கள். பொருளாதார உயர்வு உண்டாகும்.

உத்தியோகத்தில் இருப்பவர்களும் உற்சாகமாக காணப்படுவார்கள். சக ஊழியர்களின் உதவியும் கிடைக்கும். மறைமுக எதிர்ப்புகள் விலகும். அரசாங்க ரீதியிலான காரியங்கள் மிகச்சிறப்பாக இருக்கும்.

குடும்பத்தில் இருந்த சண்டை சச்சரவுகள் நீங்கும். கணவன், மனைவிக்கிடையில் இருந்த மனக்கசப்பு மாறும். குழந்தைகளின் நலனில் அக்கறை காட்டுவதன் மூலம் அவர்களிடம் நன்மதிப்பை பெறுவீர்கள். மனநிம்மதி உண்டாகும். உறவினர்கள் வருகை இருக்கும். தாய்வழி உறவினர்களிடம் இருந்து வந்த மனக்கசப்புகள் நீங்கும்.
பெண்கள் எந்த ஒரு செயலையும் மிகவும் அக்கறையுடன் செய்து முடிப்பீர்கள். மற்றவர்களுடன் இருந்த தகராறுகள் தீரும். உடல் ஆரோக்கியம் உண்டாகும்.
மாணவர்கள் கல்வியில் முன்னேற்றம் காண்பதில் வேகம் காட்டுவீர்கள். எதிலும் உற்சாகத்துடன் ஈடுபடுவீர்கள்.

பரிகாரம்: பழநி முருகனை வணங்கி வர குடும்பப் பிரச்சினை தீரும். காரிய வெற்றி உண்டாகும். தொழில் வியாபாரம் சிறக்கும்.
அதிர்ஷ்ட கிழமைகள்: திங்கள், புதன், வெள்ளி;
**************************


தனுசு (மூலம், பூராடம், உத்திராடம் 1ம் பாதம்)


கிரகநிலை:
ராசியில் சுக்ரன் - தன ஸ்தானத்தில் குரு, சனி, சந்திரன் - ரண் ருண ரோக ஸ்தானத்தில் ராகு - லாப ஸ்தானத்தில் செவ்வாய், சூர்யன், புதன் - அயன சயன போக ஸ்தானத்தில் கேது என கிரக நிலவரம் உள்ளது.

13-11-2021 அன்று குரு பகவான் தன வாக்கு குடும்ப ஸ்தானத்தில் இருந்து தைரிய வீரிய ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
17-11-2021 அன்று புதன் பகவான் லாப ஸ்தானத்தில் இருந்து அயன சயன போக ஸ்தானத்திற்கு மாறுகிறார்.


பலன்கள்:

யார் எந்த பிரச்சினை என்று வந்தாலும் அவர்களுக்கு தகுந்த ஆலோசனை கூறி சிக்கலை தீர்க்கும் குணமுடைய தனுசு ராசியினரே!

இந்த வாரம் எல்லா முயற்சிகளிலும் வெற்றி உண்டாகும். புதிய நபர்களின் அறிமுகமும் அவர்களால் நன்மையும் ஏற்படும். சுபச்செலவுகள் இருக்கும். பணவரத்து திருப்தி தரும். உங்களது செயல்களுக்கு யாராவது ஒருவர் உறுதுணையாக இருப்பார்கள். பேச்சுத் திறமை கை கொடுக்கும்.

தொழில் வியாபாரம் மிதமாக இருக்கும். எதிர்பார்த்த பணவரத்து தாமதப்பட்டாலும் கைக்கு வந்து சேரும். தொழில், வியாபாரம் பற்றிய கவலை ஏற்பட்டு நீங்கும்.
உத்தியோகத்தில் இருப்பவர்கள் கடினமான பணிகளை செய்ய வேண்டி இருக்கும். உங்களது பேச்சு திறமையால் மேலிடத்தில் இருப்பவர்களிடம் நல்ல பெயர் பெறுவீர்கள். சக ஊழியர்களிடம் கவனமாக இருப்பது நல்லது.

குடும்பத்தில் இருப்பவர்கள் உங்களை ஏதாவது குறை கூறுவார்கள். அனுசரித்துச் செல்வது நன்மை தரும். கணவன் மனைவிக்கிடையே தேவையில்லாத விஷயத்தால் மன வருத்தம் ஏற்படலாம் கவனம் தேவை. குழந்தைகளின் ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுவீர்கள்.

பெண்களது செயல்களுக்கு பக்கபலமாக யாராவது இருப்பார்கள். திறமையான பேச்சின் மூலம் எதிலும் வெற்றி காண்பீர்கள். செலவுகளை குறைப்பது நன்மை தரும்..
மாணவர்கள் கல்வியில் வெற்றிபெற கடினமாக உழைக்க வேண்டி இருக்கும். எல்லோரிடமும் அனுசரித்து செல்வது நல்லது.

பரிகாரம்: ஸ்ரீபைரவரை வணங்கி வர எல்லா நன்மைகளும் உண்டாகும். மன அமைதி கிடைக்கும்.
அதிர்ஷ்ட கிழமைகள்: திங்கள், வெள்ளி;
*******************

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x