குருப்பெயர்ச்சி பலன்கள் ; திருவாதிரை நட்சத்திர அன்பர்களே! தொழிலில் லாபம்; வழக்கில் வெற்றி; வேலையில் உயர்வு; மருத்துவச் செலவு! 

குருப்பெயர்ச்சி பலன்கள் ; திருவாதிரை நட்சத்திர அன்பர்களே! தொழிலில் லாபம்; வழக்கில் வெற்றி; வேலையில் உயர்வு; மருத்துவச் செலவு! 
Updated on
1 min read

- பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்


திருவாதிரை:


கிரகநிலை:
குரு பகவான் உங்களின் பதினெட்டாம் நட்சத்திரத்தின் 3ம் பாதத்திற்கு மாறுகிறார்.


பலன்கள் :


வாய் ஜாலத்தில் மற்றவரை தோற்கடிக்கும் திருவாதிரை நட்சத்திர அன்பர்களே!

இந்த குருப் பெயர்ச்சியால் தொழிலால் நன்மை நடக்கும் என்பதில் ஐயமில்லை. குடும்பத்தில் மூத்த மற்றும் இளைய சகோதர சகோதரிகள் உங்களுக்கு ஆதரவாக இருப்பார்கள். அவர்களுடன் இருந்து வந்த சச்சரவுகள் சமாதானத்தில் முடியும். பூர்வீக சொத்துகளில் இருந்த தடைகள் அனைத்தும் மாறும். வழக்குகள் உங்களுக்கு சாதகமாக முடியும்.

தொழிலில் நண்பர்களுடன் சேர்ந்து தொழில் செய்து கொண்டிருந்தாலும், அல்லது மூத்த சகோதரர்களுடன் தொழில் செய்து கொண்டிருந்தாலும் நல்ல லாபத்தைக் குரு பகவான் கொடுப்பார். வண்டி, வாகனங்கள் பழுது பார்க்கும் தொழிலில் இருப்போர் நல்ல வளர்ச்சியைக் காண முடியும்.

உத்தியோகஸ்தர்களுக்கு பண விஷயங்கள் சீராகும். வேலையில் அடிக்கடி விடுப்பு எடுக்காமல் வேலையை செவ்வனே செய்து முடித்து நற்பெயர் எடுக்க வேண்டும் என்ற எண்ணம் அதிகரித்து காணப்படும்.

பெண்களின் உடலுக்கு அவ்வப்போது மருத்துவச் செலவுகள் தேவையில்லாமல் வந்து கொண்டு தான் இருக்கும். உடனே கவனித்தால் பெரிய பிரச்சினைகளில் இருந்து தப்பிக்கலாம்.

மாணவர்களுக்கு விளையாட்டுப் போட்டிகள், கலைகள் ஆகியவற்றில் ஆர்வம் அதிகரித்து அதில் பரிசுகளும், கேடயங்களும் கிடைக்கப் பெறுவீர்கள்.
அரசியல்துறையினருக்கு மூத்த அரசியல்வாதிகள் உங்களுக்கு நல் வாக்கு வழங்குவார்கள்.

கலைத்துறையினருக்கு நாடகக் கலைஞர்களும், மேடைக் கலைஞர்களும் நல்ல உயர்வான நிலையை அடைவார்கள். மற்றவர்களின் பேச்சுக்கு முக்கியத்துவம் அளிப்பது நல்லதல்ல.

பரிகாரம்:
நடராஜரை மனதார வணங்கினால் வெளிநாடு வாய்ப்பு கிட்டும்
மதிப்பெண்கள்: 75% நல்ல பலன்களை எதிர்பார்க்கலாம்.
**********************

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in