குருப்பெயர்ச்சி பலன்கள் ; கிருத்திகை நட்சத்திர அன்பர்களே! மனநிம்மதி; பதவி உயர்வு; தொழிலில் ஏற்றம்; உத்தியோகத்தில் சந்தோஷம்! 

குருப்பெயர்ச்சி பலன்கள் ; கிருத்திகை நட்சத்திர அன்பர்களே! மனநிம்மதி; பதவி உயர்வு; தொழிலில் ஏற்றம்; உத்தியோகத்தில் சந்தோஷம்! 
Updated on
1 min read


- பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்

கிருத்திகை:


கிரகநிலை:


குரு பகவான் உங்களின் இருபத்தி ஒன்றாம் நட்சத்திரத்தின் 3ம் பாதத்திற்கு மாறுகிறார்.


பலன்கள் :


நல்ல உள்ளத்தால் உயர்ந்த நிலையைப் பெறும் கிருத்திகை நட்சத்திர அன்பர்களே!

இந்த குருப்பெயர்ச்சியால் தந்தைக்கும் உங்களுக்கும் இருந்த பகைமை உணர்வு மாறும். தொழிலிலும் ஏற்றம் உண்டாகும். குடும்பத்தில் தந்தை வழி உறவினர்களால் இருந்த சில பிரச்சினைகள் அகலும். சிலருக்கு தந்தையின் உடல் நிலையில் பிரச்சினைகள் இருந்திருக்கும். அதிலும் முன்னேற்றம் இருக்கும். உறவினர்களுடன் இருந்து வந்த பிரச்சினைகள் விலகி மன நிம்மதி அடைவீர்கள்.

தொழில் செய்பவர்கள் காரியங்களை நீங்களே முன்னின்று நடத்துவதால் இடைத்தரகர்களால் ஏற்படும் விரயத்தையும் குறைக்கலாம். புதிய தொழில் தொடங்குவதாக இருந்தாலும் அதிக முதலீடு செய்யாமல் தொடங்க சூழல் உருவாகும்.

உத்தியோகஸ்தர்களுக்கு நிம்மதியாக வேலை செய்யும் சூழல் உருவாகும். உங்கள் வாய் சாமர்த்தியத்தால் சில காரியங்களை சாதித்துக் கொள்வீர்கள். தவறைத் தட்டிக்கேட்கிறேன் என்ற பெயரில் அடிதடியில் இறங்க வேண்டாம்.

பெண்களுக்கு நீங்கள் விரும்பிய பதவி உயர்வு, பணி இடமாற்றம் போன்ற அனைத்தும் கிடைக்கும். சுப நிகழ்ச்சிகள் இனிதே நடைபெறும்.

மாணவர்களுக்கு கல்வியில் முன்னேற்றம் உண்டு உங்களுக்குத் தெரிந்ததை மற்றவர்களுக்கு சொல்லிக் கொடுங்கள். தேர்வில் வெற்றி பெறலாம்.

அரசியல்துறையினர் தொகுதி மக்கள் கோரிக்கைகளை மனமுவந்து நிறைவேற்றுவீர்கள். இதனால் மக்கள் மனதில் நீங்கா இடம் பிடிப்பீர்கள்.

கலைத்துறையினர் இந்த காலகட்டத்தினை பயன் படுத்திக் கொண்டால் உங்கள் வாழ்க்கையின் மிகப் பெரிய திருப்புமுனையான காலமாக இருக்கும்.


பரிகாரம்:

முருகப் பெருமானை பிரார்த்திதால் மனோபலம் அதிகரிக்கும்

மதிப்பெண்கள்: 76% நல்ல பலன்களை எதிர்பார்க்கலாம்.

***************

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in