குருப்பெயர்ச்சி பலன்கள்; அஸ்வினி நட்சத்திர அன்பர்களே! பதவி உயர்வு; பணியிட மாற்றம்;பண வரவு உண்டு; காரியத்தில் வெற்றி! 

குருப்பெயர்ச்சி பலன்கள்; அஸ்வினி நட்சத்திர அன்பர்களே! பதவி உயர்வு; பணியிட மாற்றம்;பண வரவு உண்டு; காரியத்தில் வெற்றி! 
Updated on
1 min read

- பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்


அஸ்வினி:


கிரகநிலை:
குரு பகவான் உங்களின் இருபத்தி மூன்றாம் நட்சத்திரத்தின் 3ம் பாதத்திற்கு மாறுகிறார்.


பலன்கள் :


கேதுவை நட்சத்திர நாயகனாகவும் - செவ்வாய் ராசிநாதனாகவும் கொண்ட அஸ்வினி நட்சத்திர அன்பர்களே!

இந்த குருப் பெயர்ச்சியால் பொதுவாக வருமானம் அதிகரிக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டாகும். வெளியிடங்களில் செல்வாக்கு உயரும். குடும்பத்தில் சகோதர சகோதரிகளுக்கு இதுவரை தடைபட்டிருந்த காரியங்கள் அனைத்தும் நடக்கும். திருமணத் தடை, குழந்தை பாக்கியத்தில் தடை போன்றவை சரியாகும். சுப நிகழ்ச்சிகள் அனைத்தும் இனிதே நடந்தேறும். வீட்டிற்கு தேவையான அனைத்து பொருள்களையும் வாங்கி மகிழ்வீர்கள்.

தொழிலில் சில நஷ்டங்களையும், நலிவுகளையும் சந்தித்திருப்பீர்கள். இதுவரை விரயமான பணம் திரும்பக் கிடைக்கும்.

உத்தியோகஸ்தர்களுக்கு இதுவரை வரவேண்டிய பணம் வந்து சேரும். ஊதிய உயர்வுடன் கூடிய பணி இடமாற்றம் அல்லது பதவி உயர்வு கிடைக்கலாம்.
பெண்களுக்கு எடுத்த காரியங்களில் உடனே வெற்றி ஏற்படும். சில காரியங்களில் தாமதமாக வெற்றி ஏற்படும்.

மாணவர்களுக்கு உங்கள் விடாமுயற்சிதான் உங்களுக்கு வெற்றியைத் தேடித்தரும். பழகும் நண்பர்களை எடைபோட முடியாது.

கலைத்துறைகளைச் சார்ந்த துறைகளில் ஈடுபட்டு இருப்பவர்கள் நல்ல முன்னேற்றம் காண்பர். புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கப் பெறுவீர்கள்.

அரசியல்துறையினருக்கு மேலிடத்தில் இருப்பவர்களிடம் இருந்து மனம் நோகும்படியான வார்த்தைகள் வெளிப்படலாம்.அனுசரித்துச் செல்வது நல்லது. எதிர்பாராத மனவருத்தம் ஏற்பட்டு நீங்கும்.

பரிகாரம்:

மஹாகணபதி வழிபாடு ஏற்றம் தரும்

மதிப்பெண்கள்: 74% நல்ல பலன்களை எதிர்பார்க்கலாம்.

**********************

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in