Published : 22 Apr 2021 11:55 am

Updated : 22 Apr 2021 11:55 am

 

Published : 22 Apr 2021 11:55 AM
Last Updated : 22 Apr 2021 11:55 AM

கடகம், சிம்மம், கன்னி ; ஏப்ரல் 22  முதல்  ஏப்ரல் 28ம் தேதி வரை - வார ராசிபலன்கள்

vaara-rasipalangal

- பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்

கடகம் (புனர்பூசம் 4ம் பாதம், பூசம், ஆயில்யம்)


பஞ்சம ஸ்தானத்தில் கேது - களத்திர ஸ்தானத்தில் சனி - அஷ்டம ஸ்தானத்தில் குரு (அ.சா) - தொழில் ஸ்தானத்தில் சூர்யன், சுக்ரன், புதன் - லாப ஸ்தானத்தில் ராகு - விரய ஸ்தானத்தில் செவ்வாய் என கிரக அமைப்பு உள்ளது.

இந்த மாதம் 28ம் தேதி - புதன்கிழமை அன்று புத பகவான் லாப ஸ்தானத்திற்கு மாற்றம் பெறுகிறார்.

பிரிந்து சென்றவர்கள் இந்த வாரம் மீண்டும் வந்து சேரலாம். நல்ல பலன்களையே தரும்.

எதிர்பார்த்த பணம் வந்து சேரும். விருந்து கேளிக்கை நிகழ்ச்சிகளில் பங்கேற்க நேரிடும் சாதுர்யமான பேச்சின் மூலம் காரிய வெற்றி கிடைக்கும். உடல்நலக் கோளாறு அகலும். தொழில் வியாபாரத்தில் ஈடுபட்டிருப்பவர்களுக்கு கடன் பிரச்சினைகள் தீரும்.

போட்டிகள் குறையும். நீண்ட நாட்களாக இழுபறியாக இருந்தவை நல்லபடியாக முடியும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் சில விஷயங்களை தவறாகப் புரிந்து கொண்டு சங்கடப்பட வேண்டி இருக்கும். வாக்குவன்மையால் நன்மை ஏற்படும்.

குடும்பத்தில் இருந்த குழப்பங்கள் தீரும். கணவன், மனைவிக்கிடையில் இருந்த இடைவெளி குறையும். மறைமுக எதிர்ப்புகள் நீங்கும். பிள்ளைகளிடம் அன்பு அதிகரிக்கும்.

பெண்களுக்கு பணவரத்து திருப்தி தரும். கலைத்துறையினர் வெளியூர்ப் பயணம் செல்ல நேரலாம். அரசியல்துறையினர் சக தோழர்களுடன் சுமுகமாகப் பேசி பழகுவது நல்லது. மாணவர்களுக்கு விளையாட்டில் ஆர்வம் உண்டாகும். பாடங்களை கவனமாகப் படிப்பது முன்னேற்றத்துக்கு உதவும்.

அதிர்ஷ்ட கிழமைகள்: ஞாயிறு, திங்கள், வியாழன்;
திசைகள்: வடக்கு, வடமேற்கு
நிறங்கள்: வெள்ளை, வெளிர்பச்சை
எண்கள்: 2, 5
பரிகாரம்: ஆஞ்சநேயருக்கு வெண்ணெய் சாற்றி வழிபட மனோ தைரியம் கூடும். தன்னம்பிக்கை அதிகரிக்கும்.
************

சிம்மம் (மகம், பூரம், உத்திரம் 1ம் பாதம்)

சுக ஸ்தானத்தில் கேது - ரண ருண ரோக ஸ்தானத்தில் சனி - களத்திர ஸ்தானத்தில் குரு (அ.சா) - பாக்கிய ஸ்தானத்தில் சூர்யன், சுக்ரன், புதன் - தொழில் ஸ்தானத்தில் ராகு - லாப ஸ்தானத்தில் செவ்வாய் என கிரக அமைப்பு உள்ளது.

இந்த மாதம் 28ம் தேதி - புதன்கிழமை அன்று புத பகவான் தொழில் ஸ்தானத்திற்கு மாற்றம் பெறுகிறார்.

இந்த வாரம் தேவையற்ற குற்றச்சாட்டுகளில் இருந்து சாமர்த்தியமாக விடுபடுவீர்கள். மனவருத்தம் நீங்கும்.

வாகனங்களில் செல்லும்போது கவனம் தேவை. பணத்தேவை ஏற்பட்டாலும் அதைத் திறமையாக சமாளித்து விடுவீர்கள். தொழில் வியாபாரம் தொடர்பான காரியங்களில் நெருக்கடி ஏற்பட்டு நீங்கும்.

வழக்கம்போல் வியாபாரம் இருந்தாலும் லாபம் அதிகரிக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் எந்த வேலையைச் செய்யும் முன்பும் அதுபற்றி அதிகம் யோசிப்பார்கள். சிலருக்கு புதிய வேலையும் கிடைக்கலாம். குடும்பத்தில் சகஜநிலை காணப்படும்.

கணவன் மனைவிக்கிடையே இருந்த கருத்து வேற்றுமை நீங்கும். பிள்ளைகள் உங்கள் சொல்படி நடப்பது மனதுக்கு மகிழ்ச்சியைத் தரும். பெண்கள் மற்றவர்களுக்கு உதவி செய்வதால் வீண் அலைச்சல் உண்டாகலாம். கலைத்துறையினருக்கு காரிய வெற்றி, பணவரவு எதிர்பார்த்தபடி இருக்கும்.

அரசியல்வாதிகளுக்கு மிகப் பெரிய மாற்றம் ஏற்படும். மாணவர்கள் புத்தி சாதுர்யத்துடன் நடந்து கொண்டு மற்றவர்களின் பாராட்டைப் பெறுவீர்கள். கல்வியில் மேன்மை உண்டாகும்.

அதிர்ஷ்ட கிழமைகள்: ஞாயிறு, வியாழன்
திசைகள்: கிழக்கு, தெற்கு
நிறங்கள்: வெள்ளை, மஞ்சள்
எண்கள்: 1, 3, 6
பரிகாரம்: சிவபெருமானை வணங்கி வர மனக்கவலை நீங்கும். எதிர்பார்த்த காரிய வெற்றி உண்டாகும். குடும்பத்தில் மகிழ்ச்சி ஏற்படும்.
~~~~~~~~~~~~~~~~~

கன்னி (உத்திரம் 2, 3, 4 பாதம், அஸ்தம், சித்திரை 1, 2, பாதம்)

தைரிய ஸ்தானத்தில் கேது - பஞ்சம பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் சனி - ரண ருண ரோக ஸ்தானத்தில் குரு (அ.சா) - அஷ்டம ஸ்தானத்தில் சூர்யன், சுக்ரன், புதன் - பாக்கிய ஸ்தானத்தில் ராகு - தொழில் ஸ்தானத்தில் செவ்வாய் என கிரக அமைப்பு உள்ளது.

இந்த மாதம் 28ம் தேதி - புதன்கிழமை அன்று புத பகவான் பாக்கிய ஸ்தானத்திற்கு மாற்றம் பெறுகிறார்.

இந்த வாரம் புண்ணிய காரியங்களில் ஈடுபட்டு மனதிருப்தியடைவீர்கள்.

எல்லாவற்றிலும் சாதகமான பலன் கிடைக்கும். காரியங்கள் அனுகூலமாக நடக்கும். புத்தி தெளிவு ஏற்படும். உடல் ஆரோக்கியம் பெறும். மனதில் தன்னம்பிக்கையும், தைரியமும் அதிகரிக்கும்.

மனக்குழப்பம் நீங்கும். பணவரவு அதிகமாகும். தொழிலதிபர்கள் அதிக பொருளாதார வரவுகளைப் பெறுவார்கள். உத்தியோகஸ்தர்களும் அரசு தனியார் துறைகளில் உள்ளவர்களும் இது வரை இருந்த ஆடம்பரச் செலவினங்களைத் தவிர்த்து தங்களின் குடும்பத்தினர் மகிழ்ச்சிக்காக சுபமங்கலச் செலவுகளை செய்யும் வாய்ப்புகள் உருவாகும்.

குடும்பத்தில் கணவன் மனைவி குடும்ப ஒற்றுமையில் சீரான நிலையே காணப்படும். ஆயுள் அபிவிருத்தி பெறுவதற்கான வகையில் உங்கள் நற்செயல்கள் இருக்கும். தந்தை வழி சார்ந்த உறவினர்கள் உங்கள் முன்னேற்றத்தைக் கண்டு தங்களுக்குத் தேவையான உதவிகளை உங்களிடம் கேட்டுப் பெற வருவார்கள்.

பெண்களுக்கு காரிய அனுகூலம் உண்டாகும். கலைத்துறையினருக்கு எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். அரசியல்வாதிகளுக்கு பணத்தேவை உண்டாகலாம். மாணவர்களுக்கு கல்வியில் வேகம் காணப்படும். சக மாணவர்களிடம் சுமுகமாக அனுசரித்துப் போவது நல்லது.

அதிர்ஷ்ட கிழமைகள்: திங்கள், புதன், வியாழன்;
திசைகள்: தெற்கு, தென்கிழக்கு, வடகிழக்கு
நிறங்கள்: பச்சை, மஞ்சள்
எண்கள்: 2, 3, 5
பரிகாரம்: முடிந்த வரை அருகிலிருக்கும் முருகன் கோயிலுக்குச் சென்று வலம் வரவும்.
~~~~~~~~~~~~

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.

தவறவிடாதீர்!கடகம்சிம்மம்கன்னி ; ஏப்ரல் 22  முதல்  ஏப்ரல் 28ம் தேதி வரை - வார ராசிபலன்கள்கன்னிவார ராசிபலன்கள்பலன்கள்ராசிபலன்கள்பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்KadagamSimmamKanniPalangalRasipalangalVaara rasipalangal

Sign up to receive our newsletter in your inbox every day!

More From This Category

More From this Author

x