

- பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்
உத்திரட்டாதி:
கிரகநிலை:
ராகு பகவான் ஆறாவது நட்சத்திரத்தின் 3ம் பாதம் - கேது பகவான் இருபதாவது நட்சத்திரத்தின் 3ம் பாதத்திலும் - சனி பகவான் இருபத்தி நான்காம் நட்சத்திரத்தின் 1ம் பாதத்திலும் - குரு பகவான் இருபத்தி ஐந்தாம் நட்சத்திரத்தின் 3ம் பாதத்திலும் சஞ்சரிக்கிறார்கள்.
கிரகமாற்றம்:
பிலவ ஆண்டு ஐப்பசி மாதம் 27ம் தேதி - 13.11.2021 - சனிக்கிழமை அன்று குரு பகவான் இருபத்தி ஐந்தாம் நட்சத்திரத்தின் 3ம் பாதத்திற்கு மாறுகிறார்.
பிலவ ஆண்டு பங்குனி மாதம் 07ம் தேதி - 21.03.2022 - திங்கட்கிழமை அன்று ராகு பகவான் ஐந்தாவது நட்சத்திரத்தின் 1ம் பாதத்திற்கு மாறுகிறார்.
இந்த ஆண்டு பங்குனி மாதம் 07ம் தேதி - 21.03.2022 - திங்கட்கிழமை அன்று கேது பகவான் பதினெட்டாவது நட்சத்திரத்தின் 1ம் பாதத்திற்கு மாறுகிறார்.
பலன்கள் ;
குறுக்கு வழியைப் பின்பற்றாமல் நேர் வழியைப் பின்பற்றி வாழ்க்கையில் வெற்றி பெறும் உத்திரட்டாதி நட்சத்திர அன்பர்களே!
இந்த வருடத்தில் பணவரத்து கூடும். ஆன்மிகச் செலவுகள் உண்டாகும். காரியத் தடை, தாமதம் விலகும். ஆனாலும் அந்த காரியத்தை செய்து முடிக்க கூடுதலாக உழைக்க வேண்டி இருக்கும். அந்நிய மொழி பேசுபவர்களால் உதவி கிடைக்கும். வசிக்கும் இடத்தில் மதிப்பும், மரியாதையும் அதிகரிக்கும்.
தொழில் வியாபாரத்தில் முன்னேற தேவையான வாய்ப்பு கிடைக்கும். தொழில் போட்டிகள் விலகும். தேவையான நிதியுதவி கிடைக்கக்கூடும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் உற்சாகமாக பணிகளை கவனித்தாலும் அலுவலக வேலைகளில் தாமதம் இருக்கும். புதிய வேலைக்கு முயற்சி செய்பவர்களுக்கு சாதகமான பலன்கள் கிடைக்கும்.
குடும்பத்தில் இருந்த சண்டைகள் நீங்கும். கணவன், மனைவி ஒருவருக்கொருவர் புரிந்து கொண்டு செயல்படுவார்கள். பிள்ளைகள் மூலம் பெருமை உண்டாகும். புத்திசாதுர்யத்தால் பொருள் சேர்க்கை ஏற்படும். தாய்வழி உறவினர் மூலம் உதவிகள் கிடைக்கும்.
பெண்களுக்கு தடைபட்ட காரியங்களில் தடைகள் நீங்கும். பணவரத்து எதிர்பார்த்தபடி இருக்கும். ஆன்மிக எண்ணம் அதிகரிக்கும்.
கலைத்துறையினருக்கு மனதில் திடீர் குழப்பம் ஏற்பட்டு நீங்கும். வாகனங்களில் செல்லும் போதும் வெளியூர்களுக்கு செல்லும்போதும் கூடுதல் கவனம் தேவை.
அரசியல் துறையினர் வளர்ச்சி பெற மிகவும் கவனமாக இருப்பது நல்லது. செலவைக் குறைப்பதன் மூலம் பணத் தட்டுப்பாடு குறையலாம்.
மாணவர்களுக்கு கல்வியில் இருந்த தடை விலகும். தேவையான பண உதவி கிடைக்கும்.
+: பணவரத்து நன்றாக இருக்கும்
-: பிடிவாதத்தை தளர்த்த வேண்டும்
மதிப்பெண்: 71%
வணங்க வேண்டிய தெய்வம்: குலதெய்வ வழிபாடு செய்யுங்கள். கருடாழ்வாரை வணங்கி வழிபடுங்கள்.
**************************************
| ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல. |