

- பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்
திருவோணம்:
கிரகநிலை:
ராகு பகவான் பத்தாவது நட்சத்திரத்தின் 3ம் பாதம் - கேது பகவான் இருபத்தி நான்காம் நட்சத்திரத்தின் 3ம் பாதத்திலும் - சனி பகவான் உங்கள் நட்சத்திரத்தின் 1ம் பாதத்திலும் - குரு பகவான் இரண்டாம் நட்சத்திரத்தின் 3ம் பாதத்திலும் சஞ்சரிக்கிறார்கள்.
கிரக மாற்றம்:
பிலவ ஆண்டு ஐப்பசி மாதம் 27ம் தேதி - 13.11.2021 - சனிக்கிழமை அன்று குரு பகவான் இரண்டாம் நட்சத்திரத்தின் 3ம் பாதத்திற்கு மாறுகிறார்.
பிலவ ஆண்டு பங்குனி மாதம் 07ம் தேதி - 21.03.2022 - திங்கட்கிழமை அன்று ராகு பகவான் ஒன்பதாவது நட்சத்திரத்தின் 1ம் பாதத்திற்கு மாறுகிறார்.
இந்த ஆண்டு பங்குனி மாதம் 07ம் தேதி - 21.03.2022 - திங்கட்கிழமை அன்று கேது பகவான் இருபத்தி இரண்டாம் நட்சத்திரத்தின் 1ம் பாதத்திற்கு மாறுகிறார்.
பலன்கள் :
சொல் செயல் புத்தி ஆகிய அனைத்திலும் தூய்மையைக் கடைபிடிக்கும் திருவோண நட்சத்திர அன்பர்களே!
இந்த வருடத்தில் மனக்கவலைகள் நீங்கும். எதிர்பாராத செலவு ஏற்படும். மற்றவர்களுடன் வாக்குவாதங்களைத் தவிர்ப்பதால் பகை ஏற்படாமல் இருக்கும். எவ்வளவு திறமையாக செயல்பட்டாலும் பாராட்டு கிடைப்பது அரிது. சிலரது எதிர்பாராத பேச்சு மனவருத்தத்தைத் தரலாம் கவனம் தேவை.
தொழில் வியாபாரம் தொடர்பான முக்கிய முடிவுகள் எடுக்கும் போது தீர ஆலோசித்த பின் முடிவு எடுப்பது நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்கள் மேல் அதிகாரிகள், சக ஊழியர்களின் கருத்துக்கு மாற்று கருத்து சொல்லாமல் இருப்பது நன்மை தரும்.
குடும்பத்தில் இருப்பவர்களுடன் கருத்து மோதல் உண்டாகலாம். கணவன், மனைவிக்கிடையே இருந்த பூசல்கள் சரியாகும். பிள்ளைகளுக்குத் தேவையான பொருட்களை வாங்குவது மற்றும் அவர்களது நலனுக்காக பாடுபட வேண்டியும் இருக்கும்.
பெண்கள் உங்களது கருத்துக்கு சிலர் மாற்று கருத்து கூறலாம். எதிர்த்து பேசாமல் அமைதியாக இருப்பது நல்லது.
கலைத்துறையினருக்கு மனதில் இருந்த குழப்பம் நீங்கி நிம்மதி உண்டாகும். கடன் பிரச்சினை தீரும்.
அரசியல்வாதிகளுக்கு நிதானமாக எதையும் செய்தால் வெற்றி நிச்சயம். பிடிவாதத்தை விடுவது நன்மை தரும்.
மாணவர்கள் எவ்வளவு திறமையாக படித்தாலும் பாடங்கள் கடினமானவை போல தோன்றும். மனதை தளரவிடாமல் படிப்பது வெற்றியைத் தரும்.
+: பணவரவில் இருந்து வந்த சுணக்க நிலை மாறும்
-: வியாபாரம் மந்தமாக இருக்கும்
மதிப்பெண்: 68%
வணங்க வேண்டிய தெய்வம்: திருப்பதி பெருமாளை வழிபடுங்கள்.
**************************************
| ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல. |