

- பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்
பூராடம்:
கிரகநிலை:
ராகு பகவான் பனிரெண்டாவது நட்சத்திரத்தின் 3ம் பாதம் - கேது பகவான் இருபத்தி ஆறாம் நட்சத்திரத்தின் 3ம் பாதத்திலும் - சனி பகவான் மூன்றாம் நட்சத்திரத்தின் 1ம் பாதத்திலும் - குரு பகவான் நான்காம் நட்சத்திரத்தின் 3ம் பாதத்திலும் சஞ்சரிக்கிறார்கள்.
கிரக மாற்றம்:
பிலவ ஆண்டு ஐப்பசி மாதம் 27ம் தேதி - 13.11.2021 - சனிக்கிழமை அன்று குரு பகவான் நான்காம் நட்சத்திரத்தின் 3ம் பாதத்திற்கு மாறுகிறார்.
பிலவ ஆண்டு பங்குனி மாதம் 07ம் தேதி - 21.03.2022 - திங்கட்கிழமை அன்று ராகு பகவான் பதினொன்றாவது நட்சத்திரத்தின் 1ம் பாதத்திற்கு மாறுகிறார்.
இந்த ஆண்டு பங்குனி மாதம் 07ம் தேதி - 21.03.2022 - திங்கட்கிழமை அன்று கேது பகவான் இருபத்தி நான்காம் நட்சத்திரத்தின் 1ம் பாதத்திற்கு மாறுகிறார்.
பலன்கள்:
கலைநயம் அதிகம் கொண்ட பூராட நட்சத்திர அன்பர்களே!
இந்த வருடத்தில் பணவரத்து எதிர்பார்த்ததை விட கூடுதலாக வரும். பேச்சின் இனிமை சாதுர்யத்தால் எடுத்த காரியத்தை திறம்படச் செய்து முடிப்பீர்கள். எதிலும் கவனமாக இருப்பது நல்லது. அக்கம்பக்கத்தினரிடம் சில்லறைச் சண்டைகள் உண்டாகலாம். எதையும் சமாளிக்கும் மனநிலை ஏற்படும்.
தொழில் வியாபாரம் தொடர்பான காரியங்களில் சிறு தடங்கல்கள் உண்டாகலாம். பார்ட்னர் மூலம் நன்மை உண்டாகும். நிதி உதவி எதிர்பார்த்தபடி கிடைக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் கூடுதலாக உழைத்து அலுவலகப் பணிகளை முடிக்க வேண்டி இருக்கும்.
குடும்பத்தில் இதமான சூழ்நிலை காணப்படும். கணவன் மனைவிக்கிடையே ஒருவருக்கொருவர் அனுசரித்துச் செல்வதன் மூலம் நல்ல பலன்கள் கிடைக்கும். பிள்ளைகள் உங்களது கருத்துகளை கேட்டு அதன்படி நடப்பது மனதுக்கு மகிழ்ச்சியைத் தரும்.
பெண்கள் சாமர்த்தியமானப் பேச்சின் மூலமும் சூழ்நிலையைப் புரிந்து கொண்டு நடப்பதன் மூலம் காரிய அனுகூலம் உண்டாகும்.
கலைத்துறையினருக்கு பழைய பாக்கிகள் வசூலாகும். புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும்.
அரசியல்வாதிகளுக்கு எதிர்காலம் பற்றிய சிந்தனை அதிகரிக்கும். பொருளாதார விபரங்களை கவனமாக வைத்துக் கொள்வது நல்லது.
மாணவர்கள் கல்வியில் எதிர்பார்த்த முன்னேற்றமடைய கூடுதலாக நேரம் எடுத்துக்கொண்டு கவனத்தைச் சிதற விடாமல் படிப்பது அவசியம்.
+: தன்னம்பிக்கை அதிகரிக்கும்
-: வீண் செலவு எற்படும்
மதிப்பெண்: 71%
வணங்க வேண்டிய தெய்வம்: மஹாலக்ஷ்மியை வழிபடுங்கள். பாலா திரிபுரசுந்தரியை வழிபடுங்கள்.
**************************************
| ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல. |