பிலவ வருட தமிழ்ப்புத்தாண்டு பலன்கள்  2021 -2022; சுவாதி நட்சத்திர அன்பர்களே! வீண் செலவு உண்டு; அனுசரித்துச் செல்லவும்; கோபம் வேண்டாம்; உடல் சோர்வு! 

பிலவ வருட தமிழ்ப்புத்தாண்டு பலன்கள்  2021 -2022; சுவாதி நட்சத்திர அன்பர்களே! வீண் செலவு உண்டு; அனுசரித்துச் செல்லவும்; கோபம் வேண்டாம்; உடல் சோர்வு! 
Updated on
2 min read

- பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்

ஸ்வாதி:

கிரகநிலை:
ராகு பகவான் பதினேழாவது நட்சத்திரத்தின் 3ம் பாதம் - கேது பகவான் நான்காம் நட்சத்திரத்தின் 3ம் பாதத்திலும் - சனி பகவான் எட்டாவது நட்சத்திரத்தின் 1ம் பாதத்திலும் - குரு பகவான் ஒன்பதாவது நட்சத்திரத்தின் 3ம் பாதத்திலும் சஞ்சரிக்கிறார்கள்.


கிரக மாற்றம்:

பிலவ ஆண்டு ஐப்பசி மாதம் 27ம் தேதி - 13.11.2021 - சனிக்கிழமை அன்று குரு பகவான் ஒன்பதாவது நட்சத்திரத்தின் 3ம் பாதத்திற்கு மாறுகிறார்.
பிலவ ஆண்டு பங்குனி மாதம் 07ம் தேதி - 21.03.2022 - திங்கட்கிழமை அன்று ராகு பகவான் பதினாறாவது நட்சத்திரத்தின் 1ம் பாதத்திற்கு மாறுகிறார்.
இந்தாண்டு பங்குனி மாதம் 07ம் தேதி - 21.03.2022 - திங்கட்கிழமை அன்று கேது பகவான் இரண்டாம் நட்சத்திரத்தின் 1ம் பாதத்திற்கு மாறுகிறார்.

பலன்கள்:

குணத்திலும் நடவடிக்கையிலும் அடிக்கடி மாற்றங்களுடன் தோற்றமளிக்கும் ஸ்வாதி நட்சத்திர அன்பர்களே!

இந்த வருடத்தில் பணத்தேவை அதிகரிக்கும். வீண்செலவு, மனஅமைதி பாதித்தல் ஆகியவை இருக்கும். விருந்து நிகழ்ச்சியில் கலந்து கொண்டு வாய்க்கு ருசியாக உணவு உண்பீர்கள். காரிய தாமதம், உடல் சோர்வு, வீண்பகை போன்றவை ஏற்படலாம் உங்களைக் கண்டு அடுத்தவர்கள் பொறாமை படக்கூடும்.

தொழில் வியாபாரம் தொடர்பான காரியங்களுக்காக அலைய வேண்டி இருக்கும். வாடிக்கையாளர்களிடம் அனுசரித்துப் பேசுவது நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்கள் மேல் அதிகாரிகளை அனுசரித்துச் செல்வதன் மூலம் நன்மைகள் கிடைக்கப் பெறுவார்கள்.

குடும்பத்தில் இருப்பவர்களின் செயல்களால் டென்ஷன் உண்டாகலாம். கணவன், மனைவிக்கிடையே கோபமான பேச்சை விடுத்து அமைதியாக எதையும் எடுத்துச் சொல்வது நல்லது. பிள்ளைகளின் நலனுக்காக செலவு செய்ய வேண்டி இருக்கும்.

பெண்களுக்கு மனஅமைதி பாதிக்கும்படியான சூழ்நிலை இருக்கும். திடீர் செலவு உண்டாகும். விருந்து நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள்.
கலைத்துறையினர் விருந்து கேளிக்கை நிகழ்ச்சிகளில் பங்கேற்க நேரிடும்.

அரசியல்வாதிகளுக்கு வளர்ச்சியில் இருந்த முட்டுக்கட்டைகள் நீங்கும்.

மாணவர்கள் பாடங்களை மிகவும் கவனமாகப் படிப்பது கூடுதல் மதிப்பெண் பெற உதவும். சக மாணவர்களுடன் அனுசரித்துச் செல்வது நல்லது.

+: எந்த திட்டமிடுதலிலும் வெற்றி
-: அடுத்தவர்கள் பிரச்சினைகளில் தலையிடுவதைத் தவிர்க்கவும்
மதிப்பெண்: 65%
வணங்க வேண்டிய தெய்வம்: ஸ்ரீநரசிம்மரை வழிபட்டு வாருங்கள்.
*******************

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in