

- பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்
சித்திரை:
கிரகநிலை:
ராகு பகவான் பதினெட்டாவது நட்சத்திரத்தின் 3ம் பாதம் - கேது பகவான் ஐந்தாவது நட்சத்திரத்தின் 3ம் பாதத்திலும் - சனி பகவான் ஒன்பதாவது நட்சத்திரத்தின் 1ம் பாதத்திலும் - குரு பகவான் பத்தாவது நட்சத்திரத்தின் 3ம் பாதத்திலும் சஞ்சரிக்கிறார்கள்.
கிரக மாற்றம்:
பிலவ ஆண்டு ஐப்பசி மாதம் 27ம் தேதி - 13.11.2021 - சனிக்கிழமை அன்று குரு பகவான் பத்தாவது நட்சத்திரத்தின் 3ம் பாதத்திற்கு மாறுகிறார்.
பிலவ ஆண்டு பங்குனி மாதம் 07ம் தேதி - 21.03.2022 - திங்கட்கிழமை அன்று ராகு பகவான் பதினேழாவது நட்சத்திரத்தின் 1ம் பாதத்திற்கு மாறுகிறார்.
இந்தாண்டு பங்குனி மாதம் 07ம் தேதி - 21.03.2022 - திங்கட்கிழமை அன்று கேது பகவான் மூன்றாம் நட்சத்திரத்தின் 1ம் பாதத்திற்கு மாறுகிறார்.
பலன்கள் :
பணத்தை விட மனத்திற்கு முக்கியத்துவம் அளிக்கும் சித்திரை நட்சத்திர அன்பர்களே!
இந்த வருடத்தில் பணவரத்து இருக்கும். மனக்கவலை நீங்கும். எடுத்த காரியத்தை திருப்தியுடன் செய்து முடிப்பீர்கள். சாமர்த்தியமான பேச்சு இக்கட்டான நேரங்களில் கைகொடுக்கும். எதிலும் கவனம் தேவை. புதிய நண்பர்களின் சேர்க்கையும் அவர்களால் உதவியும் கிடைக்கும்.
தொழில் வியாபாரம் தொடர்பான பணிகள் தடையின்றி நடக்கும். புதிய ஆர்டர் தொடர்பான காரியங்கள் சாதகமான பலன்களைத் தரும். வியாபாரப் போட்டிகள் குறையும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் பணிச்சுமை குறைந்து மனநிம்மதி அடைவார்கள்.
குடும்ப உறுப்பினர்களிடம் வாக்குவாதத்தைத் தவிர்ப்பது நன்மை தரும். கணவன், மனைவிக்கு இடையே ஒற்றுமை உண்டாகும். பிள்ளைகள் வழியில் நிம்மதி கிடைக்கும்.
பெண்களுக்கு காரியங்களில் ஏற்பட்ட தடைகள் நீங்கி திருப்தியாக நடந்து முடியும். சாதுர்யமான பேச்சின் மூலம் பிரச்சினைகள் தீரும். பணவரத்து திருப்தி தரும்.
கலைத்துறையினர் நிதானமாகச் செயல்படுவது நல்லது.
அரசியல்வாதிகள் வளர்ச்சி பெற மிகவும் கவனமாக இருப்பது நல்லது.
மாணவர்களுக்கு கல்வி தொடர்பான விஷயங்களில் இருந்த போட்டிகள் குறையும். எதிர்காலம் பற்றிய சிந்தனை மேலோங்கும்.
+: புதிய முயற்சிகளில் வெற்றி
-: வாகனங்களை பிரயோகப்படுத்தும்போது கவனம் தேவை
மதிப்பெண்: 64%
வணங்க வேண்டிய தெய்வம்: வாராஹி தேவியை வழிபடுங்கள். முருகப்பெருமானை வழிபடுங்கள்.
*************************
| ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல. |