

- பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்
உத்திரம்:
கிரகநிலை:
ராகு பகவான் இருபதாவது நட்சத்திரத்தின் 3ம் பாதம் - கேது பகவான் ஏழாவது நட்சத்திரத்தின் 3ம் பாதத்திலும் - சனி பகவான் பதினொன்றாவது நட்சத்திரத்தின் 1ம் பாதத்திலும் - குரு பகவான் பன்னிரெண்டாவது நட்சத்திரத்தின் 3ம் பாதத்திலும் சஞ்சரிக்கிறார்கள்.
கிரகமாற்றம்:
பிலவ ஆண்டு ஐப்பசி மாதம் 27ம் தேதி - 13.11.2021 - சனிக்கிழமை அன்று குரு பகவான் பனிரெண்டாவது நட்சத்திரத்தின் 3ம் பாதத்திற்கு மாறுகிறார்.
பிலவ ஆண்டு பங்குனி மாதம் 07ம் தேதி - 21.03.2022 - திங்கட்கிழமை அன்று ராகு பகவான் பத்தொன்பதாவது நட்சத்திரத்தின் 1ம் பாதத்திற்கு மாறுகிறார்.
இந்த ஆண்டு பங்குனி மாதம் 07ம் தேதி - 21.03.2022 - திங்கட்கிழமை அன்று கேது பகவான் ஐந்தாவது நட்சத்திரத்தின் 1ம் பாதத்திற்கு மாறுகிறார்.
பலன்கள்:
உழைப்பிற்கும் சிக்கனத்திற்கும் பெயர் பெற்ற உத்திர நட்சத்திர அன்பர்களே!
இந்த வருடத்தில் பேச்சின் இனிமை சாதுர்யத்தின் மூலம் காரியங்களில் வெற்றி காண்பீர்கள். பணவரத்து கூடும். சாமர்த்தியமான செயல்களால் மதிப்பும், அந்தஸ்தும் உயரும். மனக்கவலை நீங்கும்படியான சூழ்நிலை இருக்கும். உற்சாகம் உண்டாகும். பயணத்தின் போது ஏற்பட்ட தடங்கல் நீங்கும்.
தொழில் வியாபாரம் லாபகரமாக நடக்கும். போட்டிகள் விலகும். தன்னம்பிக்கையுடன் செயல்பட்டு முன்னேற்றம் காண்பீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பணிகளை விரைந்து முடிக்கத் தேவையான உதவிகள் கிடைக்கும். புதிய வேலை தொடர்பாக மேற்கொள்ளும் முயற்சிகளில் சாதகமான பலன் கிடைக்கும்.
குடும்பத்தில் இருப்பவர்கள் உங்களை அனுசரித்துச் செல்வார்கள். கணவன், மனைவிக்கிடையே இருந்த பிரச்சினைகள் தீரும். பிள்ளைகள் மூலம் பெருமை உண்டாகும்.
பெண்களுக்கு எதிர்பாராத பணவரத்து இருக்கும். மனக்கவலை நீங்கி உற்சாகம் உண்டாகும். கொடுக்கல் வாங்கலில் கவனம் தேவை.
கலைத்துறையினருக்கு போட்டிகள் மறையும். ஒப்பந்தங்கள் தொடர்பான காரியங்கள் சாதகமாக பலன் தரும்.
அரசியல்வாதிகளுக்கு கடன் தொடர்பான பிரச்சினைகள் தீரும். பணவரத்து கூடும்.
மாணவர்களுக்கு கல்வியில் வெற்றி பெறுவோம் என்ற தன்னம்பிக்கை அதிகரிக்கும்.
+: ஆரோக்கியத்தில் மேம்பாடு
-: உடைமைகளில் கவனம் தேவை
மதிப்பெண்: 72%
வணங்க வேண்டிய தெய்வம்: ஐயப்ப சுவாமியை வணங்கி வாருங்கள்.
********************
| ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல. |