

- பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்
மகம்:
கிரகநிலை:
ராகு பகவான் இருபத்தி இரண்டாம் நட்சத்திரத்தின் 3ம் பாதம் - கேது பகவான் ஒன்பதாவது நட்சத்திரத்தின் 3ம் பாதத்திலும் - சனி பகவான் பதிமூன்றாவது நட்சத்திரத்தின் 1ம் பாதத்திலும் - குரு பகவான் பதினான்காவது நட்சத்திரத்தின் 3ம் பாதத்திலும் சஞ்சரிக்கிறார்கள்.
கிரகமாற்றம்:
பிலவ ஆண்டு ஐப்பசி மாதம் 27ம் தேதி - 13.11.2021 - சனிக்கிழமை அன்று குரு பகவான் பதினான்காவது நட்சத்திரத்தின் 3ம் பாதத்திற்கு மாறுகிறார்.
பிலவ ஆண்டு பங்குனி மாதம் 07ம் தேதி - 21.03.2022 - திங்கட்கிழமை அன்று ராகு பகவான் இருபத்தி ஒன்றாம் நட்சத்திரத்தின் 1ம் பாதத்திற்கு மாறுகிறார்.
பிலவ ஆண்டு பங்குனி மாதம் 07ம் தேதி - 21.03.2022 - திங்கட்கிழமை அன்று கேது பகவான் ஏழாவது நட்சத்திரத்தின் 1ம் பாதத்திற்கு மாறுகிறார்.
பலன்கள்:
வாழ்க்கையில் சுயம்புவாக வெற்றி பெறும் மக நட்சத்திர அன்பர்களே!
இந்த வருடத்தில் மனோதைரியம் கூடும். எல்லா வகையிலும் சுகம் உண்டாகும். முயற்சிகளில் சாதகமான பலன்கள் கிடைக்கும். பணவரத்து திருப்திகரமாக இருக்கும். வயிற்றுக் கோளாறு உண்டாகலாம். தூக்கம் குறையும். எதிர்பாலினத்தாரின் நட்பு கிடைக்கும். அரசாங்கம் தொடர்பான பணிகள் சாதகமாக நடக்கும். முக்கிய நபர்களின் உதவியும் கிடைக்கும்.
தொழில் வியாபாரத்தில் இருந்த மெத்தனப் போக்கு மாறும். வியாபாரம் தொடர்பான பயணங்கள் சுமாரான பலன்களைத் தரும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் திட்டமிட்டபடி பணிகளை முடிக்க முடியாமல் தாமதம் ஏற்படலாம். சக ஊழியர்களுடன் கவனமாகப் பழகுவது நல்லது.
குடும்பத்தில் இருப்பவர்களால் சிறுசிறு பிரச்சினைகள் ஏற்பட்டாலும் அதை வளரவிடாமல் சமாளித்து விடுவீர்கள். கணவன் மனைவிக்கிடையே இடைவெளி காணப்படும். பிள்ளைகள் புத்திசாதுர்யமாக நடந்து கொள்வது மன மகிழ்ச்சியைத் தரும்.
பெண்களுக்கு உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. முயற்சிகளில் சாதகமான பலன் கிடைக்கும். எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும்.
கலைத்துறையினருக்கு புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்திடும் முன் ஆலோசனைகளில் ஈடுபடுவது நல்லது.
அரசியல்வாதிகள் முக்கிய நபர்களைச் சந்திக்க வேண்டி இருக்கும். பொறுப்புகள் அதிகரிக்கும்.
மாணவர்களுக்கு திட்டமிட்டபடி பாடங்களைப் படித்து கூடுதல் மதிப்பெண் பெறுவீர்கள். உயர்கல்விக்காக எடுக்கும் முயற்சிகள் சாதகமான பலன்களைத் தரும்.
+: நீண்ட நாள் தடைகள் அகலும்
-: சொத்து சார்ந்த விஷயங்களில் முயற்சி தேவை
மதிப்பெண்: 71%
வணங்க வேண்டிய தெய்வம்: குபேரனை வழிபடுங்கள். விநாயகப் பெருமானை வழிபடுங்கள்.
***********************
| ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல. |