

- பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்
ஆயில்யம்:
கிரகநிலை:
ராகு பகவான் இருபத்தி மூன்றாம் நட்சத்திரத்தின் 3ம் பாதம் - கேது பகவான் பத்தாவது நட்சத்திரத்தின் 3ம் பாதத்திலும் - சனி பகவான் பதினாலாவது நட்சத்திரத்தின் 1ம் பாதத்திலும் - குரு பகவான் பதினைந்தாவது நட்சத்திரத்தின் 3ம் பாதத்திலும் சஞ்சரிக்கிறார்கள்.
கிரகமாற்றம்:
பிலவ ஆண்டு ஐப்பசி மாதம் 27ம் தேதி - 13.11.2021 - சனிக்கிழமை அன்று குரு பகவான் பதினைந்தாவது நட்சத்திரத்தின் 3ம் பாதத்திற்கு மாறுகிறார்.
பிலவ ஆண்டு பங்குனி மாதம் 07ம் தேதி - 21.03.2022 - திங்கட்கிழமை அன்று ராகு பகவான் இருபத்தி இரண்டாம் நட்சத்திரத்தின் 1ம் பாதத்திற்கு மாறுகிறார்.
பிலவ ஆண்டு பங்குனி மாதம் 07ம் தேதி - 21.03.2022 - திங்கட்கிழமை அன்று கேது பகவான் எட்டாவது நட்சத்திரத்தின் 1ம் பாதத்திற்கு மாறுகிறார்.
பலன்கள்:
எடுத்துக் கொண்ட நிலைப்பாட்டில் உறுதியுடன் இருக்கும் ஆயில்ய நட்சத்திர அன்பர்களே!
இந்த வருடத்தில் எதிர்பார்த்தபடி காரியங்கள் நல்லபடியாக நடந்து முடியும். உடல் ஆரோக்கியம் மேம்படும். வீண் வாக்குவாதத்தால் பகை உண்டாகலாம். பயணத்தில் தடங்கல், வீண் செலவு போன்றவை ஏற்படும். பணவரத்து இருக்கும். நன்மைகள் உண்டாகும்.
பெரியோர்களின் உதவி கிடைக்கும். மனதில் தைரியம் உண்டாகும். எதிலும் தயக்கமோ, பயமோ ஏற்படாது.
தொழில் வியாபாரம் நன்றாக நடக்கும். வாக்குவன்மையால் லாபம் அதிகரிக்கும். பழைய பாக்கிகள் வசூலாகும். அரசாங்கம் தொடர்பான காரியங்கள் சாதகமான பலன்களைத் தரும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் புதிய பதவிகள் கூடுதல் பொறுப்பு கிடைக்கப் பெறுவார்கள். அலுவலகப் பணிகளை வெற்றிகரமாக செய்து முடிக்கும் சாமர்த்தியம் உண்டாகும்.
குடும்பத்தில் மகிழ்ச்சி இருக்கும். நீண்ட நாட்களாக இருந்த குடும்பம் தொடர்பான பிரச்சினைகள் சாதகமாக முடியும். கணவன், மனைவிக்கிடையே இருந்த கருத்து வேற்றுமை நீங்கும். குழந்தைகள் கல்விக்காகப் பாடுபட வேண்டி இருக்கும்.
பெண்களுக்கு பயணங்களால் செலவு ஏற்படும். துணிச்சலுடன் எதிலும் ஈடுபட்டு காரிய வெற்றி காண்பீர்கள்.
கலைத்துறையினருக்கு மனதில் துணிச்சல் ஏற்படும்.
அரசியல்வாதிகளுக்கு எதிர்பார்த்த சில தகவல்கள் தாமதமாக வரும்.
மாணவர்களுக்கு கல்வியில் முன்னேற்றம் உண்டாகும். விளையாட்டில் கவனம் செலுத்துவீர்கள்.
+: புதிய தொழில் உத்தியோகம் அமையும்
-: வாகனங்களில் செல்லும்போது கவனம் தேவை
மதிப்பெண்: 60%
வணங்க வேண்டிய தெய்வம்: நாகதேவதை
**********************
| ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல. |