பிலவ வருட பலன்கள் 2021 - 2022 ; மிருகசீரிஷம் நட்சத்திர அன்பர்களே! தடைகள் அகலும்; மனக்கவலை தீரும்; எதிர்ப்பு குறையும்; பாராட்டு குவியும்! 

பிலவ வருட பலன்கள் 2021 - 2022 ; மிருகசீரிஷம் நட்சத்திர அன்பர்களே! தடைகள் அகலும்; மனக்கவலை தீரும்; எதிர்ப்பு குறையும்; பாராட்டு குவியும்! 
Updated on
2 min read

- பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்

மிருகசீரிஷம்:

கிரகநிலை:
ராகு பகவான் இருபத்தி ஏழாம் நட்சத்திரத்தின் 3ம் பாதம் - கேது பகவான் பதினாலாவது நட்சத்திரத்தின் 3ம் பாதத்திலும் - சனி பகவான் பதினெட்டாம் நட்சத்திரத்தின் 1ம் பாதத்திலும் - குரு பகவான் பத்தொன்பதாவது நட்சத்திரத்தின் 3ம் பாதத்திலும் சஞ்சரிக்கிறார்கள்.


கிரகமாற்றம்:
பிலவ ஆண்டு ஐப்பசி மாதம் 27ம் தேதி - 13.11.2021 - சனிக்கிழமை அன்று குரு பகவான் பத்தொன்பதாவது நட்சத்திரத்தின் 3ம் பாதத்திற்கு மாறுகிறார்.
பிலவ ஆண்டு பங்குனி மாதம் 07ம் தேதி - 21.03.2022 - திங்கட்கிழமை அன்று ராகு பகவான் இருபத்தி ஆறாம் நட்சத்திரத்தின் 1ம் பாதத்திற்கு மாறுகிறார்.
பிலவ ஆண்டு பங்குனி மாதம் 07ம் தேதி - 21.03.2022 - திங்கட்கிழமை அன்று கேது பகவான் பன்னிரெண்டாவது நட்சத்திரத்தின் 1ம் பாதத்திற்கு மாறுகிறார்.

பலன்கள் :

எந்த வேலையாக இருந்தாலும் தனது வேகமான நடவடிக்கைகளால் சரியான நேரத்தில் செய்யும் மிருகசீர்ஷ நட்சத்திர அன்பர்களே!

இந்த வருடத்தில் சுபகாரியங்களில் இருந்த தடங்கல்கள் நீங்கும். ஆன்மிக நாட்டம் அதிகரிக்கும். பயணங்கள் சாதகமான பலன்களைத் தரும். மனக்கவலை நீங்கி தெளிவு உண்டாகும். எதிர்பாராத திருப்பங்களால் சிலரது வாழ்க்கைத் தரம் உயரும். நீண்ட நாட்களாக இழுபறியாக இருந்த காரியம் நன்கு முடியும். புதிய நண்பர்கள் கிடைப்பார்கள்.

தொழில் வியாபாரத்தில் முன்னேற்றம் உண்டாகும். வியாபாரம் சிறக்க கடுமையாக உழைக்க வேண்டி இருக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் அலுவலகப் பணிகளை சிறப்பாக செய்து முடித்து மேல் அதிகாரிகளின் பாராட்டுகளைப் பெறுவார்கள்.

குடும்பத்தில் இருப்பவர்களால் நன்மை உண்டாகும். கணவன் மனைவிக்கிடையே சந்தோஷமான நிலை காணப்படும். பிள்ளைகளின் முன்னேற்றத்தில் அக்கறை காட்டுவீர்கள். உறவினர்கள் மூலம் அலுகூலம் உண்டாகும்.

பெண்களுக்கு மனக்குழப்பம் நீங்கி தெளிவான சிந்தனைகள் உண்டாகும். இழுபறியாக இருந்த காரியங்கள் சாதகமாக முடியும்.
கலைத்துறையினருக்கு சக கலைஞர்களிடம் திடீர் கருத்து வேற்றுமை ஏற்பட்டு நீங்கும்.

அரசியல்வாதிகளுக்கு எதிர்ப்புகள் குறையும். மேலிடத்தை அனுசரித்துச் செல்வது நல்லது.

மாணவர்களுக்கு தேர்வில் கூடுதல் மதிப்பெண் பெற நன்கு படிக்க வேண்டி இருக்கும். ஆசிரியர்கள் சக மாணவர்களின் ஆதரவும் கிடைக்கும்.

+: குடும்பத்தில் மகிழ்ச்சி
-: கோபத்தால் பிரச்சினைகள் வரலாம்.
மதிப்பெண்: 71%
வணங்க வேண்டிய தெய்வம்: மஹாலக்ஷ்மி மற்றும் வாராஹியை வழிபடுங்கள்.
*******************

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in