

- பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்
பரணி:
கிரகநிலை:
ராகு பகவான் மூன்றாம் நட்சத்திரத்தின் 3ம் பாதம் - கேது பகவான் பதினேழாவது நட்சத்திரத்தின் 3ம் பாதத்திலும் - சனி பகவான் இருபத்தி ஒன்றாம் நட்சத்திரத்தின் 1ம் பாதத்திலும் - குரு பகவான் இருபத்தி இரண்டாம் நட்சத்திரத்தின் 3ம் பாதத்திலும் சஞ்சரிக்கிறார்கள்.
கிரக மாற்றங்கள்:
பிலவ ஆண்டு ஐப்பசி மாதம் 27ம் தேதி - 13.11.2021 - சனிக்கிழமை அன்று குரு பகவான் இருபத்தி இரண்டாம் நட்சத்திரத்தின் 3ம் பாதத்திற்கு மாறுகிறார்.
பிலவ ஆண்டு பங்குனி மாதம் 07ம் தேதி - 21.03.2022 - திங்கட்கிழமை அன்று ராகு பகவான் இரண்டாம் நட்சத்திரத்தின் 1ம் பாதத்திற்கு மாறுகிறார்.
பிலவ ஆண்டு பங்குனி மாதம் 07ம் தேதி - 21.03.2022 - திங்கட்கிழமை அன்று கேது பகவான் பதினைந்தாவது நட்சத்திரத்தின் 1ம் பாதத்திற்கு மாறுகிறார்.
பலன்கள் :
தனது அறிவார்ந்த செயல்களால் அனைத்து காரியங்களையும் செய்யும் பரணி நட்சத்திர அன்பர்களே!
இந்த வருடத்தில் சுபச்செலவுகள் ஏற்படும். சிந்தித்து செயல்படுவது நன்மை தரும். பணவரவு இருக்கும். அடுத்தவர் நலனுக்காகப் பாடுபட வேண்டி இருக்கும். பெரியோர் உதவி கிடைக்கும். குருவின் சஞ்சாரம் வழக்குகளில் சாதகமான போக்கைத் தரும். நண்பர்களிடம் கவனமாகப் பழகுவது நல்லது.
தொழில் வியாபாரம் தொடர்பாக பயணங்கள் செல்ல வேண்டி இருக்கும். பார்ட்னர்களுடன் அனுசரித்துச் செல்வது நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்கள் சக ஊழியர்களுடன் விட்டுக் கொடுத்துச் செல்வது நல்லது. வீண் அலைச்சல் உண்டாகும்.
குடும்பத்தில் இருப்பவர்களுடன் அவ்வப்போது வாக்குவாதங்கள் உண்டாகலாம். கணவன், மனைவி ஒருவருக்கொருவர் அனுசரித்துச் செல்வது கருத்து வேற்றுமை வராமல் தடுக்கும். பிள்ளைகள் நீங்கள் சொல்வதைக் கேட்டு நடப்பது மனதுக்கு திருப்தியைத் தரும். உறவினர்களுடன் வாக்குவாதத்தைத் தவிர்ப்பது நல்லது.
பெண்களுக்கு வரவுக்கு ஏற்ற செலவு இருக்கும். மற்றவர்கள் பிரச்சினை தீர பாடுபடுவீர்கள். காரியத் தடை, தாமதம் ஏற்படலாம்.
கலைத்துறையினர் பொறுமையுடன் செயல்பட வேண்டும். புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும்.
அரசியல்வாதிகள் சமூகத்தில் நல்ல மதிப்பும் மரியாதையும் பெறுவார்கள்.
மாணவர்களுக்கு கல்வியில் நாட்டம் அதிகரிக்கும். உயர்கல்வி பற்றிய சிந்தனை மேலோங்கும்.
+: சுபநிகழ்ச்சி நடக்கும்
-: பொருட்களில் கவனம் செலுத்துவது நல்லது
மதிப்பெண்: 79%
வணங்க வேண்டிய தெய்வம்: காளி
**************
| ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல. |