Published : 01 Apr 2021 10:05 am

Updated : 01 Apr 2021 10:06 am

 

Published : 01 Apr 2021 10:05 AM
Last Updated : 01 Apr 2021 10:06 AM

மேஷம், ரிஷபம், மிதுனம் ; வார ராசிபலன்கள்; ஏப்ரல் 1 முதல் 7ம் தேதி வரை

vaara-rasipalangal

- பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்

மேஷம் (அஸ்வினி, பரணி, கார்த்திகை 1ம் பாதம்)


தன வாக்கு குடும்ப ஸ்தானத்தில் செவ்வாய், ராகு - களத்திர ஸ்தானத்தில் சந்திரன் - அஷ்டம ஸ்தானத்தில் கேது - தொழில் ஸ்தானத்தில் குரு, சனி - அயன சயன போக ஸ்தானத்தில் சூர்யன், சுக்ரன், புதன் என கிரக அமைப்பு உள்ளது.

இந்த வாரம் எடுக்கும் காரியங்களில் வெற்றி வந்து சேரும். சிக்கலான பிரச்சினைகளில் சுமுகமான முடிவைக் காண முற்படுவீர்கள். மனதில் இருந்த தடுமாற்றம் நீங்கும்.

தொழில் ஸ்தானம் நன்றாக இருக்கிறது. தொழில் வியாபாரம் நிதானமாக நடக்கும். பணவரத்து எதிர்பார்த்த அளவு இல்லாவிட்டாலும் தேவைகள் பூர்த்தியாகும். புதிய ஆர்டர்கள் பற்றி உடனடியாக முடிவு எடுக்க முடியாமல் தடுமாற்றமான நிலை உண்டாகலாம்.

உத்தியோகத்தில் இருப்பவர்கள் வேலையில் கவனமாக இருப்பது நல்லது. வேறு வேலைக்கு முயற்சி செய்பவர்களுக்கு நல்ல செய்தி காத்திருக்கிறது. குடும்ப ஸ்தானத்தை ராசிநாதன் செவ்வாய் பார்க்கிறார். குடும்பத்தில் இருந்த பிரச்சினைகள் நீங்கும்.

கணவன், மனைவிக்கிடையே இருந்த கருத்து வேற்றுமை அகலும். பிள்ளைகளிடம் அன்பாகப் பழகுவது நன்மைகளைத் தரும். பெண்கள் அனுகூலமற்ற விஷயங்களைக் கூட சுமுகமாக முடித்து விடுவீர்கள்.

கலைத்துறையினருக்கு நன்மைகள் நடக்கும் காலகட்டம். அரசியல்வாதிகளுக்கு எதிர்காலம் தொடர்பாக முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள். மாணவர்களுக்கு கல்விக்குத் தேவையான புத்தகங்கள் மற்றும் உபகரணங்கள் வாங்குவது பற்றிய கவலைகள் நீங்கும். படிப்பில் ஆர்வம் உண்டாகும்.

பரிகாரம்: முருகப் பெருமானை வணங்கி வர பல நாட்களாக இழுபறியான காரியம் வெற்றிகரமாக முடியும். மனக்கவலை நீங்கும்.
*******************************

ரிஷபம் (கார்த்திகை 2, 3, 4 பாதம், ரோகிணி, மிருக சிரீஷம் 1, 2, பாதம்)

ராசியில் செவ்வாய், ராகு - ரண ருண ரோக ஸ்தானத்தில் சந்திரன் - களத்திர ஸ்தானத்தில் கேது - பாக்கிய ஸ்தானத்தில் குரு, சனி - லாப ஸ்தானத்தில் சூர்யன், சுக்ரன், புதன் என கிரக அமைப்பு உள்ளது.

இந்த வாரம் பொன் பொருள் சேர்க்கை வரும்.

புதிய நபர்கள், எதிர்பாலினத்தவர் ஆகியோருடன் பேசும்போது கவனமாகப் பேசிப் பழகுவது நல்லது. விருந்து நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வேண்டி வரலாம்.

தொழில் வியாபாரம் செய்பவர்கள் பழைய பாக்கிகள் வசூல் செய்வதில் வேகம் காண்பிப்பார்கள். போட்டிகள் விலகும். எதிர்பார்த்த ஆர்டர்கள் கிடைக்கும்.

உத்தியோகத்தில் இருப்பவர்கள் நீண்ட நாட்களாக இருந்த இழுபறியான காரியங்களை சிறப்பாக செய்து முடிப்பீர்கள். பணி நிமித்தமாக அலைச்சல் இருக்கும்.

குடும்பத்தில் இதமான சூழ்நிலை காணப்படும். கணவன் மனைவிக்கிடையே இருந்த மனவருத்தம் நீங்கும். குழந்தைகள் மூலம் மனநிம்மதி கிடைக்கும். உறவினர்கள், நண்பர்களிடம் இருந்த மனக்கசப்பு மாறும். குடும்பத்தில் சுப நிகழ்வுகள் இருக்கும்.

பெண்கள் எதைப்பற்றியாவது நினைத்து கவலைப்படுவீர்கள். கலைத்துறையினருக்கு எதிர்பார்த்த வாய்ப்புகள் வந்து சேரும். அரசியல்வாதிகள் எந்த வேலையும் செய்து முடிக்க கூடுதலாக உழைக்க வேண்டி இருக்கும்.

மாணவர்களுக்கு கல்வியில் வெற்றி பெற திட்டமிட்டு படிக்க முற்படுவீர்கள். சக மாணவர்கள் மூலம் உதவிகள் கிடைக்கும்.

பரிகாரம்: அம்மனை வணங்கி வாருங்கள். எல்லாக் காரியங்களும் நல்லபடியாக நடக்கும் மனக்கவலைகள் நீங்கும்.
******************************************************************
மிதுனம் (மிருக சிரீஷம் 3, 4 பாதங்கள் திருவாதிரை, புனர்பூசம் 1, 2, 3 பாதம்)

பஞ்சம ஸ்தானத்தில் சந்திரன் - ரண ருண ரோக ஸ்தானத்தில் கேது - அஷ்டம ஸ்தானத்தில் குரு, சனி - தொழில் ஸ்தானத்தில் சூர்யன், சுக்ரன், புதன் - அயன சயன போக ஸ்தானத்தில் செவ்வாய், ராகு என கிரக அமைப்பு உள்ளது.

இந்த வாரம் நெருக்கடி நிலை அகலும். புதிய முயற்சிகளில் எதிர்பார்த்த வெற்றி கிடைக்கும். பயணங்களால் நன்மைகள் ஏற்படும்.
தொழில் வியாபாரம் வழக்கம் போல் நடக்கும். வாடிக்கையாளர்களிடம் அனுசரித்துப் பேசுவது நல்லது. லாபம் குறைவது போல் இருந்தாலும் பணவரத்து திருப்தி தரும்.

உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு உழைப்பு வீணாகும். மேல் அதிகாரிகளிடம் அனுசரித்துச் செல்வது நல்லது. சக பணியாளர்கள் உங்களுக்கு ஆதரவாக இருப்பார்கள். குடும்பத்தில் இருப்பவர்களிடம் கோபமாகப் பேசுவதைத் தவிர்த்து இதமாகப் பேசுவது நல்லது.

கணவன் மனைவிக்கிடையே ஒருவரை ஒருவர் அனுசரித்துச் செல்வது நன்மைகளைத் தரும். குழந்தைகளின் எதிர்கால நலன் பற்றி சிந்திப்பீர்கள். உங்களது உடைமைகளை கவனமாக பாதுகாத்துக் கொள்வது நல்லது. நண்பர்கள் மூலம் அனுகூலம் ஏற்படும்.

பெண்களுக்கு பணவரத்து திருப்தி தரும். அரசியல்வாதிகள், தொண்டர்களின் தேவைகளை முழுமையாகப் பூர்த்தி செய்வீர்கள். கலைத்துறையினருக்கு புதிய வாய்ப்புகள் தேடி வரும். செல்வாக்கு உயரும். மாணவர்களுக்கு பாடங்களைப் படிக்க வேண்டிய கட்டாயம் உண்டாகும். ஆசிரியர் மற்றும் சக மாணவர்களிடம் அனுசரித்துச் செல்வது நல்லது.

பரிகாரம்: பெருமாளை வணங்கி வாருங்கள். முன் ஜென்ம பாவங்கள் நீங்கும். குடும்பம் சுபிட்சமடையும்.
***********************

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.


தவறவிடாதீர்!மேஷம்ரிஷபம்மிதுனம் ; வார ராசிபலன்கள்; ஏப்ரல் 1 முதல் 7ம் தேதி வரைமிதுனம்வார ராசிபலன்கள்ராசிபலன்கள்பலன்கள்பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்ஜோதிடம்ஜோதிட பலன்கள்MeshamRishabamMidhunamRasipalangalVaara rasipalangalPalangalJodhidamJodhida palangal

Sign up to receive our newsletter in your inbox every day!

More From This Category

More From this Author

x