Published : 25 Mar 2021 11:38 am

Updated : 25 Mar 2021 11:39 am

 

Published : 25 Mar 2021 11:38 AM
Last Updated : 25 Mar 2021 11:39 AM

துலாம், விருச்சிகம், தனுசு ; வார ராசிபலன்கள்; மார்ச் 25 முதல் 31ம் தேதி வரை

vaara-rasipalangal

- பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்

துலாம்
(சித்திரை 3, 4 பாதம், சுவாதி, விசாகம் 1, 2, 3ம் பாதம்)


கிரகநிலை:
தனவாக்கு குடும்ப ஸ்தானத்தில் கேது - சுக ஸ்தானத்தில் குரு, சனி - பஞ்சம பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் புதன் - ரண ருண ஸ்தானத்தில் சூர்யன், சுக்கிரன் - அஷ்டம ஸ்தானத்தில் செவ்வாய், ராகு என கிரகநிலை அமைந்திருக்கிறது.
25ம் தேதி புத பகவான் ரண ருண ரோக ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

இந்த வாரம் ராசிநாதன் சுக்கிரன் ராசிக்கு மறைந்திருந்தாலும் உச்சமான நிலையில் சஞ்சரிக்கிறார். உங்களுக்கு அனுகூலமாக அனைத்து காரியங்களும் நடக்கும். வெளியூர் அல்லது வெளிநாட்டுப் பயணம் செல்ல நேரலாம்.

பணவரத்து எதிர்பார்த்தபடி இருக்கும். உடல் ஆரோக்கியம் உண்டாகும். குடும்பத்தில் இருப்பவர்களை அனுசரித்துச் செல்வதன் மூலம் எல்லா பிரச்சினைகளும் சரியாகும். கணவன் மனைவிக்கிடையே இருந்த மனஸ்தாபம் நீங்கும்.

பிள்ளைகளின் எதிர்கால நலனுக்காக முக்கிய பணிகளை மேற்கொள்வீர்கள். உறவினர்கள், அக்கம் பக்கத்தினரிடம் வீண் வாக்குவாதத்தைத் தவிர்ப்பது நல்லது.

தொழில் வியாபாரத்தில் வீண் அலைச்சல் ஆர்டர் கிடைப்பதில் தாமதம் போன்றவை ஏற்பட்டாலும், தொழில் வியாபாரம் சீராக நடக்கும்.
உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வேலைப்பளு, கூடுதல் பொறுப்புகள் உண்டாகலாம். அதிக உழைப்பின் பேரில் வேலைகளைச் செய்து முடிப்பீர்கள். பெண்களுக்கு எடுத்த காரியம் தடைபட்டு பின்னர் நல்லபடியாக நடந்து முடியும்.

கலைத்துறையினர் மனதில் எதைப்பற்றியாவது சிந்தித்த வண்ணம் இருப்பீர்கள். அரசியல்வாதிகள் புதிய பொறுப்புகளை ஏற்பீர்கள். மாணவர்களுக்கு கல்வியில் சீரான போக்கு காணப்படும். கூடுதல் மதிப்பெண் பெற மேற்கொள்ளும் முயற்சிகள் வெற்றிபெறும்.

பரிகாரம்: மஹாகணபதியை வணங்கி வாருங்கள். குடும்பப் பிரச்சினை, தொழிற்பிரச்சினை, கல்வியில் தடை போன்றவை விலகும். எதிலும் நன்மைகள் உண்டாகும்.
**************

விருச்சிகம்
(விசாகம் 4ம் பாதம், அனுஷம், கேட்டை)

கிரகநிலை:
ராசியில் கேது - தைரிய ஸ்தானத்தில் குரு, சனி - சுக ஸ்தானத்தில் புதன் - பஞ்சம பூர்வ ஸ்தானத்தில் சூர்யன், சுக்கிரன் - சப்தம ஸ்தானத்தில் செவ்வாய், ராகு என கிரகநிலை அமைந்திருக்கிறது.

25ம் தேதி புத பகவான் பஞ்சம பூர்வ புண்ணிய ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

இந்த வாரம் ராசிநாதன் செவ்வாய் ராசியைப் பார்ப்பதால் நல்ல பலன்கள் உண்டாகும். தந்தையின் உடல்நிலையில் முன்னேற்றம் காணப்படும். பூர்வீகச் சொத்துகளில் இருந்த பிரச்சினைகளில் சாதகமான நிலை காணப்படும்.

தானதர்மம் செய்யவும் ஆன்மிகப் பணிகளில் ஈடுபடவும் தோன்றும். நீண்ட தூர பயணங்கள் செல்ல நேரலாம். பயணத்தின்போது கவனம் தேவை. குடும்பத்தில் எதிர்பாராத செலவு உண்டாகும். கணவன் மனைவிக்கிடையே திடீர் மனவருத்தம் ஏற்படலாம்.

பிள்ளைகளின் செயல்பாடுகள் மனதுக்கு திருப்தி அளிப்பதாக இருக்கும். உறவினர்களிடம் பக்குவமாகப் பேசுவது நல்லது. வழக்குகளில் மெத்தனப் போக்கு காணப்படும்.

தொழில் வியாபாரம் தொடர்பான பணிகளில் நிதானமான போக்கு காணப்படும். வியாபாரத்தில் போட்டிகள் இருந்தாலும் அதனால் பாதிப்பு இருக்காது.

உத்தியோகத்தில் இருப்பவர்கள் கவனமாக பணிகளைச் செய்வது நல்லது. எதிர்பாராத இடமாற்றம் சிலருக்கு உத்தியோக மாற்றம் உண்டாகலாம்.

பெண்களுக்கு எதிர்பார்த்த உதவி கிடைக்கும். அரசியல்வாதிகளுக்கு பயணங்களால் அலைச்சல் உண்டாகும். கலைத்துறையினருக்கு மனதில் கவலை அகலும். மாணவர்களுக்கு தடைகளைத் தாண்டி கல்வியை கற்கச் செய்யும் முயற்சி வெற்றி பெறும். சிறப்பாக படித்து முடிப்பீர்கள்.

பரிகாரம்: பைரவரை வணங்கி வாருங்கள். எல்லா நன்மைகளும் உண்டாகும். காரிய வெற்றி கிடைக்கும். எதிர்ப்புகள் விலகும்.
************************

தனுசு

(மூலம், பூராடம், உத்திராடம் 1ம் பாதம்)
கிரகநிலை:

தனவாக்கு குடும்ப ஸ்தானத்தில் குரு, சனி - தைரிய வீர்ய ஸ்தானத்தில் புதன் - சுக ஸ்தானத்தில் சூர்யன், சுக்கிரன் - ரண ருண ரோக ஸ்தானத்தில் செவ்வாய், ராகு - விரய ஸ்தானத்தில் கேது என கிரகநிலை அமைந்திருக்கிறது.
25ம் தேதி புத பகவான் சுக ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

இந்த வாரம் வீண் அலைச்சல் குறையும். எடுத்த காரியத்தை செய்து முடிப்பதில் தடங்கல் நீங்கும்.

தேவையற்ற மனக்கவலை அகலும். வழக்கு விவகாரங்களில் இருந்த தாமதமான போக்கு நீங்கும். நிர்ப்பந்தமாக வெளியூர்ப் பயணம் செல்ல நேரலாம்.

குடும்பத்தில் இருப்பவர்களால் வீண் பழி ஏற்பட வாய்ப்பு உண்டு. எதிர்பாராத செலவு உண்டாகும். கணவன் மனைவிக்கிடையே சிறு சிறு மனஸ்தாபங்கள் வரலாம். பிள்ளைகளின் செயல்பாடுகளில் கவனம் தேவை.

ஆயுதங்களைப் பயன்படுத்தும்போது கவனம் தேவை. தொழில் வியாபாரத்தில் எதிர்பாராத சிக்கல் ஏற்பட்டு பின்னர் சரியாகும். சரக்குகளை வாடிக்கையாளர்களுக்கு அனுப்பும்போது கவனம் தேவை.

உத்தியோகத்தில் பணிகளைச் சரியாக முடிக்க வேண்டுமே என்ற கவலை உண்டாகும். சக ஊழியர்களிடம் கவனமாகப் பேசுவது நல்லது.
பெண்களுக்கு தேவையற்ற சில காரியங்களை செய்ய வேண்டி இருந்தாலும் அதன் மூலம் நன்மை உண்டாகும். அரசியல்வாதிகளுக்கு பணவரத்து திருப்தி தரும். கலைத்துறையினருக்கு தேவையான உதவி கிடைக்கும். மாணவர்களுக்கு கல்வியில் முன்னேற்றம் காண வேண்டும் என்ற ஆர்வம் உண்டாகும். விளையாட்டு போட்டிகளில் திறமை வெளிப்படும்.

பரிகாரம்: சாமுண்டீஸ்வரிக்கு நெய் தீபம் ஏற்றி வணங்கி வாருங்கள். எல்லாக் கஷ்டங்களும் நீங்கும். பொருளாதார மேம்பாடு உண்டாகும்.
*******************

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.

தவறவிடாதீர்!துலாம்விருச்சிகம்தனுசு ; வார ராசிபலன்கள்; மார்ச் 25 முதல் 31ம் தேதி வரைதனுசுவார ராசிபலன்கள்பலன்கள்ராசிபலன்கள்பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்ஜோதிடம்ஜோதிட பலன்கள்ThulamViruchigamDhanusuRasipalangalPalangalJodhidamJodhida palangalVaara rasipalangal

Sign up to receive our newsletter in your inbox every day!

More From This Category

More From this Author

x