Published : 18 Mar 2021 10:02 am

Updated : 18 Mar 2021 10:02 am

 

Published : 18 Mar 2021 10:02 AM
Last Updated : 18 Mar 2021 10:02 AM

துலாம், விருச்சிகம், தனுசு ; வார ராசிபலன்கள்; மார்ச் 18 முதல் 24ம் தேதி வரை

vaara-rasipalangal

- பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்

துலாம்
(சித்திரை 3, 4 பாதம், சுவாதி, விசாகம் 1, 2, 3ம் பாதம்)


கிரகநிலை:
தனவாக்கு குடும்ப ஸ்தானத்தில் கேது - சுக ஸ்தானத்தில் குரு, சனி - பஞ்சம பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் புதன், சுக்கிரன் - ரண ருண ஸ்தானத்தில் சூர்யன் - அஷ்டம ஸ்தானத்தில் செவ்வாய், ராகு என கிரகநிலை அமைந்திருக்கிறது.
18ம் தேதி சுக்கிரன் ரண ருண ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

இந்த வாரம் ராசிநாதன் சுக்கிரன் உச்சம் பெறுவது சிறப்புக்கு உரிய செயல்களையும் பலன்களையெல்லாம் தரும்.

சாமர்த்தியமான பேச்சின் மூலம் எதையும் செய்து முடிப்பீர்கள். வீண் அலைச்சல் உண்டாகும். அதேவேளையில் அடுத்தவர் செயல்களுக்கு பொறுப்பேற்காமல் இருப்பது நல்லது. குடும்பத்தில் சந்தோஷமான சூழ்நிலை ஏற்படும்.

கணவன் மனைவி ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்துச் செல்வது நல்லது. பிள்ளைகள் பற்றிய கவலை உண்டாகும்.

தொழில் வியாபாரத்தில் தேவையற்ற இடர்பாடுகள் நீங்கும். பார்ட்னர்களை அனுசரித்துச் செல்வது நல்லது. கடன் கொடுக்கும்போது கவனம் தேவை. வாகன வசதி உண்டாகும்.

உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு உழைப்புக்கேற்ற ஆதாயம் கிடைக்கும். சக ஊழியர்களுடன் சாமர்த்தியமாகப் பழகி காரிய அனுகூலம் அடைவீர்கள்.

பெண்களுக்கு சமையல் செய்யும்போது கவனம் தேவை. எதிலும் எச்சரிக்கையுடன் நடந்து கொள்வது நல்லது.

கலைத்துறையினருக்கு வெளிநாடு வாய்ப்புகள் வந்து சேரும். அரசியல்வாதிகளுக்கு தன்னம்பிக்கை அதிகரிக்கும். மாணவர்களுக்கு இருசக்கர வாகனங்களைப் பயன்படுத்தும்போது கவனம் தேவை.

அதிர்ஷ்ட கிழமைகள்: திங்கள், புதன், வெள்ளி
திசைகள்: மேற்கு, தென்மேற்கு
நிறங்கள்: வெள்ளை
எண்கள்: 2, 5, 6
பரிகாரம்: சரஸ்வதி தேவியை வணங்கி வாருங்கள். குடும்பப் பிரச்சினைகள் தீரும். காரியத் தடைகள் அனைத்தும் விலகும்.
*****************************************************************

விருச்சிகம்
(விசாகம் 4ம் பாதம், அனுஷம், கேட்டை)
கிரகநிலை:
ராசியில் கேது - தைரிய ஸ்தானத்தில் குரு, சனி - சுக ஸ்தானத்தில் புதன், சுக்கிரன் - பஞ்சம பூர்வ ஸ்தானத்தில் சூர்யன் - சப்தம ஸ்தானத்தில் செவ்வாய், ராகு என கிரகநிலை அமைந்திருக்கிறது.

18ம் தேதி சுக்கிரன் பஞ்சம பூர்வ புண்ணிய ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

இந்த வாரம் ராசியை செவ்வாய் பார்ப்பது சிறப்பு.

எடுத்துக் கொண்ட முயற்சிகளில் காரியத் தடை தாமதம் ஏற்படலாம். உஷ்ண சம்பந்தமான நோய் ஏற்படும். வீண்பயம் ஏற்படும். ஏற்கெனவே செய்த காரியங்களுக்கான பலனை அடைய வேண்டி இருக்கும்.

சிலர் வீட்டை விட்டு வெளியில் சென்று தங்க நேரிடலாம். வீண் வழக்கு விவகாரங்கள் வரலாம். எச்சரிக்கையாக செயல்படுவது நல்லது. வெளிநாட்டுப் பயண வாய்ப்புகள் வரலாம். சிலர் வெளியூர் பயணம் செல்வார்கள்.

தொழில் வியாபாரம் சுமாராக இருக்கும். எதிர்பார்த்த கடனுதவி கிடைக்கலாம். உத்தியோகத்தில் இருப்பவர்கள் மேலதிகாரிகளை பகைத்துக் கொள்ளாமல் அனுசரித்துச் செல்வது நல்லது.

குடும்பத்தில் எதிர்பாராத விருந்தினர் வருகையால் விரும்பத்தகாத வாக்குவாதங்கள் ஏற்படலாம். அக்கம்பக்கத்தினருடன் பேசும்போது கவனம் தேவை.

பெண்கள் திட்டமிட்டு செய்தாலும் காரியங்களில் தடை ஏற்படும். கலைத்துறையினருக்கு உடன் பணிபுரிபவர்களுடன் வீண் வாக்குவாதங்கள் ஏற்படலாம். அரசியல்வாதிகள் அவசரப்படாமல் நிதானமாக எதையும் செய்தால் வெற்றி நிச்சயம்.

மாணவர்களுக்கு கல்வி தொடர்பான விஷயங்கள் தாமதமாக நடக்கும்.

அதிர்ஷ்ட கிழமைகள்: திங்கள், செவ்வாய்
திசைகள்: வடக்கு, வடகிழக்கு, தென்கிழக்கு
நிறங்கள்: சிவப்பு, அடர் நீலம்
எண்கள்: 2, 9
பரிகாரம்: பைரவருக்கு தீபம் ஏற்றி வழிபட்டு வாருங்கள். செவ்வரளி மாலை சார்த்துங்கள். காரியத் தடையும் தாமதமும் நீங்கும். குடும்பத்தில் இருக்கும் குழப்பம் நீங்கும்.
*****************************************************************

தனுசு
(மூலம், பூராடம், உத்திராடம் 1ம் பாதம்)

கிரகநிலை:
தனவாக்கு குடும்ப ஸ்தானத்தில் குரு, சனி - தைரிய வீர்ய ஸ்தானத்தில் புதன், சுக்கிரன் - சுக ஸ்தானத்தில் சூர்யன் - ரண ருண ரோக ஸ்தானத்தில் செவ்வாய், ராகு - விரய ஸ்தானத்தில் கேது என கிரகநிலை அமைந்திருக்கிறது.
18ம் தேதி சுக்கிரன் சுக ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

இந்த வாரம் மற்றவர்களுடன் இருந்து வந்த பகை நீங்கும். முடங்கிக் கிடந்த காரியங்கள் அனைத்தும் வேகம் பிடிக்கும். நெருக்கடியான நேரத்தில் உறவினர்கள், நண்பர்கள் உங்களுக்கு கை கொடுப்பார்கள்.

மனதில் இருந்து வந்த சஞ்சல மனநிலையில் மாற்றம் இருக்கும். தரும சிந்தனைகள் மேலோங்கும். பணநெருக்கடி குறையும். எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும்.

தொழில் வியாபாரத்தில் ஈடுபட்டு இருப்பவர்கள் சற்று விழிப்புடன் இருப்பது நல்லது. பொருட்களை வாடிக்கையாளர்களுக்கு அனுப்பும்போது கூடுதல் கவனம் செலுத்துவது நல்லது.

உத்தியோகத்தில் இருப்பவர்கள் அலைச்சலையும், வேலைப் பளுவையும் சந்திக்க நேரிடும். சிலருக்கு இட மாற்றம் உண்டாகலாம். குடும்பத்தில் திடீர் கருத்து வேற்றுமை ஏற்படலாம். சகோதரர்களுடன் கருத்து வேற்றுமை உண்டாகலாம்.

பெண்கள் அடுத்தவர்களுக்கு உதவிகள் செய்யும்போது கவனமாக இருப்பது நல்லது. கலைத்துறையினர் சோம்பேறித்தனத்தை விட்டுவிட்டு நன்கு உழைப்பது வெற்றிக்கு வழிவகுக்கும். அரசியல்வாதிகள் தங்கள் வளர்ச்சிக்காக சில திட்டங்களை செயல்படுத்த முடிவெடுப்பீர்கள்.
மாணவர்கள் கல்வி பற்றிய கவலையைத் தவிர்த்து கூடுதல் கவனத்துடன் படிப்பது நல்லது. வீண் அலைச்சல் இருக்கும்.

அதிர்ஷ்ட கிழமைகள்: ஞாயிறு, வியாழன், வெள்ளி
திசைகள்: கிழக்கு, தென்மேற்கு
நிறங்கள்: வெள்ளை, மஞ்சள்
எண்கள்: 1, 3, 6
பரிகாரம்: முன்னோர்களை வணங்கி வாருங்கள். மனஅமைதி உண்டாகும். எல்லோரும் உங்களிடம் அன்புடன் நடந்து கொள்வார்கள்.
*****************************************************************

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.

தவறவிடாதீர்!துலாம்விருச்சிகம்தனுசு ; வார ராசிபலன்கள்; மார்ச் 18 முதல் 24ம் தேதி வரைதனுசுவார ராசிபலன்கள்ராசிபலன்கள்பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்பலன்கள்வார பலன்கள்ThulamViruchigamDhanusuPalangalRasipalangalVaara rasipalangal

Sign up to receive our newsletter in your inbox every day!

More From This Category

More From this Author

x