Published : 18 Mar 2021 09:46 am

Updated : 18 Mar 2021 09:46 am

 

Published : 18 Mar 2021 09:46 AM
Last Updated : 18 Mar 2021 09:46 AM

கடகம், சிம்மம், மீனம் ; வார ராசிபலன்கள்; மார்ச் 18 முதல் 24ம் தேதி வரை

vaara-rasipalangal

- பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்

கடகம்
(புனர் பூசம் 4ம் பாதம், பூசம், ஆயில்யம்)


கிரகநிலை:
பஞ்சம பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் கேது - சப்தம ஸ்தானத்தில் குரு, சனி - அஷ்டம ஸ்தானத்தில் புதன், சுக்கிரன் - பாக்கிய ஸ்தானத்தில் சூர்யன் - லாப ஸ்தானத்தில் செவ்வாய், ராகு என கிரகநிலை அமைந்திருக்கிறது.
18ம் தேதி சுக்கிரன் பாக்கிய ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

இந்த வாரம் திருப்தி அளிக்கும் வகையில் அனைத்தும் நடந்தேறும். மற்றவர்களுக்கு ஆலோசனை சொல்லும்போது கவனம் தேவை.
எதிர்பாலினரால் லாபம் கிடைக்கும். வீட்டை விட்டு வெளியில் தங்க நேரிடலாம். குடும்பத்தில் கலகலப்பு அதிகரிக்கும். கணவன் மனைவிக்கிடையே கருத்துவேற்றுமை ஏற்பட்டு நீங்கும். பிள்ளைகள் சொல்வதைக் கேட்டு நிதானமாகவும் கனிவாகவும் பேசுவது நல்லது.
தொழில் வியாபாரத்தில் ஈடுபட்டு இருப்பவர்கள் போட்டியைச் சந்திக்க வேண்டி இருக்கும். வாடிக்கையாளர்களிடம் கடுமையானப் பேச்சைத் தவிர்ப்பது நல்லது.

உத்தியோகத்தில் இருப்பவர்கள் கவனமாக பணிகளை மேற்கொள்வது நல்லது. எந்த இக்கட்டான சூழ்நிலையையும் மன உறுதியுடன் சமாளித்து வெற்றி காண்பீர்கள்.

பெண்களுக்கு எந்த முயற்சியிலும் சாதகமான பலன்கள் கிடைப்பதில் தாமதமாகும். கலைத்துறையினருக்கு வாக்குவாதத்தைத் தவிர்ப்பது நல்லது. அரசியல்வாதிகளுக்கு வீண் பேச்சைக் குறைப்பது நல்லது.

மாணவர்களுக்கு கல்வி பற்றிய கவலை உண்டாகும். தடையைத் தாண்டி முன்னேற முயற்சிப்பீர்கள்.

அதிர்ஷ்ட கிழமைகள்: திங்கள், புதன்
திசைகள்: வடக்கு, வடமேற்கு
நிறங்கள்: வெள்ளை, வெளிர்பச்சை
எண்கள்: 2, 5
பரிகாரம்: ஆதிபராசக்தியை வணங்கி வாருங்கள். எல்லா நன்மைகளும் உண்டாகும். கவலைகள் நீங்கும். மனோ தைரியம் கூடும்.
*****************************************************************

சிம்மம்
(மகம், பூரம், உத்திரம் 1ம் பாதம்)

கிரகநிலை:
சுக ஸ்தானத்தில் கேது - ரண ருண ரோக ஸ்தானத்தில் குரு, சனி - சப்தம ஸ்தானத்தில் புதன், சுக்கிரன் - அஷ்டம ஸ்தானத்தில் சூர்யன் - தொழில் ஸ்தானத்தில் செவ்வாய், ராகு என கிரகநிலை அமைந்திருக்கிறது.
18ம் தேதி சுக்கிரன் அஷ்டம ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

இந்த வாரம் நீங்கள் பொறுமையைக் கடைபிடித்தால் அனைத்து காரியங்களிலும் வெற்றிதான்.

தடைபட்டிருந்த பணவரத்து வந்து சேரும். உடல் ஆரோக்கியம் சீராகும். அதிக கோபத்தால் வீண்பகை உண்டாகலாம். அடுத்தவர் விவகாரங்களில் தலையிடாமல் ஒதுங்கிச் செல்வது நல்லது.

ஆடம்பரச் செலவுகள் ஏற்படும். வாகனம் மூலம் செலவு உண்டாகலாம். பயண சுகம் கிடைக்கும். தொழில், வியாபாரம் சற்று நிதானமாக நடக்கும்.

உத்தியோகத்தில் இருப்பவர்கள் கூடுதலாகப் பணியாற்ற வேண்டி இருக்கும். பதவி உயர்வு கிடைக்கலாம். குடும்பத்தில் இருப்பவர்களுடன் கோபப்படாமல் நிதானமாகப் பேசி அனுசரித்துச் செல்வது நல்லது.

சகோதரர் வகையில் உதவி கிடைப்பதில் தாமதம் உண்டாகலாம். பெண்களுக்கு ஆடை, ஆபரணங்கள் வாங்கும் எண்ணம் அதிகரிக்கும்.
கலைத்துறையினருக்கு எதிர்காலத்தை கருத்தில் கொண்டு சில திட்டங்களை ஆலோசிப்பீர்கள். அரசியல்வாதிகள் மேலிடத்திற்கு பயந்து வேலை செய்ய வேண்டி இருக்கும்.

மாணவர்கள் கல்விக்குத் தேவையான உபகரணங்கள், புத்தகங்கள் வாங்குவீர்கள். கூடுதலாக நேரம் ஒதுக்கிப் பாடங்களைப் படிக்க வேண்டி இருக்கும்.

அதிர்ஷ்ட கிழமைகள்: ஞாயிறு, வியாழன், வெள்ளி
திசைகள்: கிழக்கு, தெற்கு
நிறங்கள்: வெள்ளை, மஞ்சள்
எண்கள்: 1, 3, 6, 9
பரிகாரம்: சிவபெருமானை வணங்கி வாருங்கள். எல்லா இடையூறுகளும் விலகும். முற்பிறவி பாவம் அனைத்தும் நீங்கும்.
*****************************************************************

கன்னி
(உத்திரம் 2, 3, 4 பாதம், அஸ்தம், சித்திரை 1, 2, பாதம்)

கிரகநிலை:
தைரிய ஸ்தானத்தில் கேது - பஞ்சம பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் குரு, சனி - ரண ருண ரோக ஸ்தானத்தில் புதன், சுக்கிரன்- சப்தம ஸ்தானத்தில் சூர்யன் - பாக்கிய ஸ்தானத்தில் செவ்வாய், ராகு என கிரகநிலை அமைந்திருக்கிறது

18ம் தேதி சுக்கிரன் சப்தம ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

இந்த வாரம் எடுத்த முயற்சிகளில் சாதகமான பலன் கிடைக்கும்.

பணவரத்து அதிகரிக்கும். மற்றவர்கள் செய்யத் தயங்கும் வேலையைச் செய்து முடித்து பாராட்டு கிடைக்கப் பெறுவீர்கள். எண்ணியபடி செயல்களைச் செய்து காரிய வெற்றி காண்பீர்கள்.

நண்பர்கள் மூலம் உதவிகள் கிடைக்கும். ஆன்மிகப் பணிகளில் ஈடுபாடு அதிகரிக்கும். விரும்பிய பொருள்களை வாங்கி மகிழ்வீர்கள். திருமண முயற்சிகளில் சாதகமான பலன்கள் கிடைக்கும்.

தொழில் வியாபாரம் தொடர்பாக அலைய வேண்டி இருந்தாலும் முடிவில் லாபம் கிடைக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் உழைப்புக்கு ஏற்ற பலனை அடைவார்கள்.

நிலுவையில் உள்ள பணம் வந்துசேரும். புதிய வேலை தேடுபவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். குடும்பத்தில் இதமான சூழ்நிலை காணப்பட்டாலும் மனதில் இறுக்கம் இருக்கும்.

குடும்பத்தினரின் முயற்சிகளுக்கு உறுதுணையாக இருப்பீர்கள். பெண்களுக்கு பயணங்கள் செல்ல நேரலாம். கலைத்துறையினருக்கு எதிர்பாராத நல்ல திருப்பங்கள் ஏற்படும்.

அரசியல்வாதிகளுக்கு புதிய பதவிகள் கிடைக்கும். மாணவர்கள் நீண்ட நேரம் கண்விழிப்பதை தவிர்க்கவும். அன்றைய பாடங்களை அன்றைய தினமே படித்து விடுவது வெற்றிக்கு வழிவகுக்கும்.

அதிர்ஷ்ட கிழமைகள்: திங்கள், புதன், வியாழன்
திசைகள்: தெற்கு, தென்கிழக்கு, வடகிழக்கு
நிறங்கள்: பச்சை, மஞ்சள்
எண்கள்: 2, 3, 5
பரிகாரம்: கருடாழ்வாரை வணங்கி வர எல்லா நன்மைகளும் உண்டாகும். எதிர்ப்புகள் அகலும்.
*****************************************************************

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.

தவறவிடாதீர்!கடகம்சிம்மம்மீனம் ; வார ராசிபலன்கள்; மார்ச் 18 முதல் 24ம் தேதி வரைமீனம்வார ராசிபலன்கள்ராசிபலன்கள்பலன்கள்பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்MeenamKadagamSimmamRasipalangalVaara rasipalangal

Sign up to receive our newsletter in your inbox every day!

More From This Category

More From this Author

x