Published : 04 Mar 2021 10:39 am

Updated : 04 Mar 2021 10:39 am

 

Published : 04 Mar 2021 10:39 AM
Last Updated : 04 Mar 2021 10:39 AM

மகரம், கும்பம், மீனம் ; வார ராசிபலன்கள், மார்ச் 4 முதல் 10ம் தேதி வரை

vaara-rasipalangal

- பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்

மகரம் (உத்திராடம் 2, 3, 4 பாதம், திருவோணம், அவிட்டம் 1,2 பாதம்)


கிரகநிலை:
ராசியில் புதன், குரு, சனி - தன வாக்கு குடும்ப ஸ்தானத்தில் சூர்யன், சுக்ரன் - பஞ்சம பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் செவ்வாய், ராகு - தொழில் ஸ்தானத்தில் சந்திரன் - லாப ஸ்தானத்தில் கேது என கிரகங்கள் வலம் வருகின்றன.

பலன்கள்:
இந்த வாரம் பலவகையிலும் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். நீண்ட நாட்களாக இருந்து வந்த வேதனையும் சோதனையும் மாறும். உடல் ஆரோக்கியம் வலுப்பெறும். வாகனங்களில் செல்லும்போது கவனம் தேவை.

அரசாங்க காரியங்களில் இருந்த தடை நீங்கும். புத்தி சாதூரியம் அதிகரிக்கும். தொழில் வியாபாரத்தில் உயர்வுகள் உண்டாகும். பணியாளர்கள் மூலம் காரிய அனுகூலம் ஏற்படும்.

அனுபவப் பூர்வமான அறிவு கைகொடுக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் எளிதாக பணிகளைச்ய்து முடிப்பார்கள். செயல்திறன் அதிகரிக்கும்.

குடும்பத்தில் இருப்பவர்கள் ஏதாவது குறை சொல்லியபடி இருப்பார்கள். வீட்டிற்கு தேவையான பொருட்கள் சேரும். கணவன் மனைவி ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டு செயல்படுவது நன்மையைத் தரும்.

பிள்ளைகள் எதிர்காலம் குறித்து தேவையான பணிகளைக் கவனிப்பீர்கள். பெண்களுக்கு புத்திசாதுர்யம் அதிகரிக்கும். பயணங்களின்போது கவனம் தேவை. வேலைக்குச் செல்லும் பெண்கள் தங்கள் பொருட்களை பத்திரமாக வைத்திருப்பது நல்லது.

கலைத்துறையினருக்கு திடீர் கோபங்கள் உண்டாகலாம். நிதானமாக இருப்பது நல்லது. புத்திசாதுர்யத்தால் எதையும் சமாளிப்பீர்கள். எந்த ஒரு விஷயத்தையும் தள்ளிப் போடாமல் உடனே முடிவு காண்பது நல்லது.

தெளிவான சிந்தனை தோன்றும். அரசியல் துறையினருக்கு சாமர்த்தியமான உங்களது செயல் கண்டு மற்றவர்கள் ஆச்சரியப்படுவார்கள். முக்கிய நபர்கள், அந்தஸ்தில் உயர்ந்தவர்கள் நட்பு கிடைக்கும். அதனால் கவுரவம் அதிகரிக்கும்.

புதிய தொடர்புகள் மகிழ்ச்சி தரும். மாணவர்களுக்கு கல்வியில் இருந்த தடைகள் நீங்கும். திறமை வெளிப்படும். ஆசிரியர்களுடன் நல்ல உறவு ஏற்படும். பெற்றோர் ஆதரவாக இருப்பார்கள்.

அதிர்ஷ்ட கிழமைகள்: ஞாயிறு, செவ்வாய், வியாழன்
பரிகாரம்: பெருமாள் ஆலயத்திற்குச் சென்று வாருங்கள். நீராஞ்சன தேங்காய் தீபம் ஏற்றவும்.
*******************

கும்பம் (அவிட்டம் 3, 4 பாதம், சதயம், பூரட்டாதி 1, 2, 3 பாதம்)

கிரகநிலை:
ராசியில் சூர்யன், சுக்ரன்- சுக ஸ்தானத்தில் செவ்வாய், ராகு - பாக்கிய ஸ்தானத்தில் சந்திரன் - தொழில் ஸ்தானத்தில் கேது - அயன சயன போக ஸ்தானத்தில் புதன், குரு, சனி என கிரகங்கள் வலம் வருகின்றன.

பலன்கள் ;
இந்த வாரம் எதிலும் ஆதாயம் கிடைக்கும்.

தன வாக்கு அதிபதி குரு வாக்கு ஸ்தானத்தைப் பார்ப்பதால் பேச்சுத் திறமை அதிகரிக்கச் செய்யும். எதிர் பாலினத்தவரிடம் பழகும்போது கவனம் தேவை.

நண்பர்கள் மூலம் வீண் அலைச்சல் குறையும். நேரம் தவறி உணவு உண்ண வேண்டி இருக்கும். வாழ்க்கைத் துணையின் உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை.

தொழில் வியாபாரத்தில் ஈடுபட்டு இருப்பவர்கள் பார்ட்னர்களை அனுசரித்துச் செல்வது நல்லது. வியாபாரம் தொடர்பாக செய்து முடிக்க நினைக்கும் காரியங்கள் தள்ளிப் போகலாம்.

உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வீண் அலைச்சல் வேலைப் பளு இருக்கும். குடும்பத்தில் அமைதி இருக்கும். கணவன் மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும். பிள்ளைகள் மூலம் மனம் மகிழும் காரியங்கள் நடக்கும்.

உறவினர்கள் வருகை இருக்கும். பெண்களுக்கு பேச்சுத் திறமையால் காரியங்களை சாதகமாக செய்து முடிப்பீர்கள். அலைச்சல் குறையும்.
கலைத்துறையினருக்கு என்றோ செய்த ஒரு வேலைக்கு இப்போது பாராட்டு கிடைக்கலாம். மனம் விட்டுப் பேசி எடுக்கும் முடிவுகள் குடும்ப முன்னேற்றமடைய உதவும்.

அரசியல் துறையினருக்கு தடைபட்டு வந்த காரியங்களில் தடை நீங்கும். சாமர்த்தியமான பேச்சால் ஆதாயம் உண்டாகும். பணவரத்து அதிகரிக்கும்.

மாணவர்களுக்கு தேவையற்ற எண்ணங்களை விட்டுவிட்டு மனதை ஒருமுகப்படுத்தி பாடங்களைப் படிப்பது வெற்றிக்கு உதவும்.

பரிகாரம்: அருகிலிருக்கும் சிவன் கோயிலுக்குச் சென்று வாருங்கள்.
அதிர்ஷ்ட கிழமைகள்: செவ்வாய், வியாழன்
********************

மீனம் (பூரட்டாதி 4ம் பாதம், உத்திரட்டாதி, ரேவதி)

கிரகநிலை:
தைரிய வீரிய ஸ்தானத்தில் செவ்வாய், ராகு - அஷ்டம ஸ்தானத்தில் சந்திரன் - பாக்கிய ஸ்தானத்தில் கேது - லாப ஸ்தானத்தில் புதன், குரு, சனி - அயன சயன போக ஸ்தானத்தில் சூர்யன், சுக்ரன் என கிரகங்கள் வலம் வருகின்றன.

பலன்கள்:
இந்த வாரம் நீண்ட நாட்களாக எதிர்பார்த்த பணம் கைக்கு வந்து சேரும்.

நண்பர்களால் காரிய அனுகூலம் உண்டாகும். எல்லாவித வசதிகளும் உண்டாகும். தேடிப் போனதும் தானாகவே வந்து சேரும். அறிவுத் திறன் அதிகரிக்கும்.

நெருக்கமானவர்களுடன் இனிமையாகப் பேசி பொழுதைக் கழிப்பீர்கள். மனோ தைரியம் கூடும். மதிப்பு கூடும்.

தொழில் வியாபாரம் சிறப்பான முன்னேற்றம் பெறும். வாடிக்கையாளர்கள் மத்தியில் மதிப்பும், மரியாதையும் அதிகரிக்கும்.
உத்தியோகத்தில் இருப்பவர்கள் சிறப்பாக பணிபுரிந்து பாராட்டு பெறுவார்கள். சிலருக்கு பதவி உயர்வு - சம்பள உயர்வு போன்றவை கிடைக்கலாம். பணியில் பாராட்டு கிடைக்கும்.

குடும்பத்தில் நிம்மதியும் சந்தோஷமும் அதிகரிக்கும். வீட்டிற்குத் தேவையான பொருள்களை வாங்குவீர்கள். கணவன், மனைவிக்கிடையே மகிழ்ச்சி கூடும். பிள்ளைகளின் கல்வியில் கூடுதல் கவனம் தேவை.

பெண்களுக்கு நீண்ட நாட்களாகச் செய்ய நினைத்த ஒரு காரியத்தைச் செய்து முடிப்பீர்கள். மதிப்பும், மரியாதையும் கூடும்.

கலைத்துறையினருக்கு போட்டிகள் நீங்கும். உங்களுக்கு பக்கபலமாக ஒருவரது உதவி கிடைக்கும். முக்கிய பொறுப்புகளில் இருப்பவர்களின் ஆதரவு கிடைக்கும்.

சாதுர்யமான பேச்சால் ஆதாயம் உண்டாகும். பணவரத்து கூடும். அரசியல் துறையினருக்கு வாழ்க்கைத் தரம் உயர எடுக்கும் முயற்சிகள் கை கூடும்.

நெருக்கமானவர்களுடன் மகிழ்ச்சியாக பொழுதைக் கழிப்பீர்கள். முன்பின் யோசிக்காமல் எதையாவது பேசி விடுவீர்கள். இதனால் வீண் மனஸ்தாபங்கள் ஏற்படலாம் கவனம் தேவை.

மாணவர்களுக்கு கல்வியில் எதிர்பார்த்த முன்னேற்றம் உண்டாகும்.

பரிகாரம்: அருகிலிருக்கும் ஏதேனும் கோயிலுக்குச் சென்று நல்லெண்ணெய் தீபம் ஏற்றவும்.
அதிர்ஷ்ட கிழமைகள்: திங்கள், வியாழன், வெள்ளி
******************************

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.

தவறவிடாதீர்!மகரம்கும்பம்மீனம் ; வார ராசிபலன்கள்மார்ச் 4 முதல் 10ம் தேதி வரைமீனம்ராசிபலன்கள்வார ராசிபலன்கள்பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்MagaramKumbumMeenamRasipalangalPalangalVaara rasipalangal

Sign up to receive our newsletter in your inbox every day!

More From This Category

More From this Author

x