Published : 04 Mar 2021 09:03 AM
Last Updated : 04 Mar 2021 09:03 AM

மேஷம், ரிஷபம், மிதுனம்; வார ராசிபலன்கள், மார்ச் 4 முதல் 10ம் தேதி வரை

- பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்


மேஷம் (அஸ்வினி, பரணி, கார்த்திகை 1ம் பாதம்)

கிரகநிலை:
தன வாக்கு குடும்ப ஸ்தானத்தில் செவ்வாய், ராகு - களத்திர ஸ்தானத்தில் சந்திரன் - அஷ்டம ஸ்தானத்தில் கேது - தொழில் ஸ்தானத்தில் புதன், குரு, சனி - லாப ஸ்தானத்தில் சூர்யன், சுக்ரன் - என கிரகங்கள் வலம் வருகின்றன.

பலன்கள்:
இந்த வாரம் உங்களுக்கு அனுகூலமாக இருப்பதால் நினைத்த காரியத்தை நினைத்தபடி நடத்தி முடிக்க முயற்சிகளை மேற்கொள்வீர்கள்.
புதிய நபர்களின் அறிமுகம் கிடைப்பதுடன் அவர்களால் நன்மையும் உண்டாகும். ஆனாலும் தேவையற்ற மனக்கவலை உண்டாகும். வீண் ஆடம்பரச் செலவுகளைத் தவிர்ப்பது நலம் தரும்.

தொழில், வியாபாரம் சுமாராக நடக்கும் பழைய பாக்கிகளை வசூல் செய்வதில் வேகம் இருக்கும். ஆர்டர்கள் பெறுவதில் தாமதம் ஏற்பட்டு நீங்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் மேல் அதிகாரிகள் கொடுத்த வேலையை செய்து முடித்து நன்மைகளைப் பெறுவீர்கள்.

குடும்பத்தில் சிறு பிரச்சினைகள் ஏற்பட்டு நீங்கும். உறவினர் மூலம் நடக்க வேண்டிய காரியங்களில் தாமதம் ஏற்படலாம். கணவன் மனைவிக்கிடையே மனம் வருந்தும்படியான சூழ்நிலை ஏற்படும்.

பிள்ளைகள் நீங்கள் சொல்வதை காதில் வாங்காதவர்போல் இருப்பார்கள் எனவே எல்லோரையும் அனுசரித்துச் செல்வதால் நன்மைகள் உண்டாகும்.

பெண்களுக்கு நினைத்த காரியத்தை செய்து முடிக்க எடுக்கும் முயற்சிகள் சாதகமான பலன்களைத் தரும். வீண் மனக்கவலை உண்டாகும்.
கலைத்துறையினருக்கு சக கலைஞர்களிடம் திடீர் கருத்து வேற்றுமை ஏற்பட்டு நீங்கும். ஒப்பந்தங்களில் சரியான முடிவுக்கு வர முடியாத தடுமாற்றம் ஏற்படலாம்.

அரசியல் துறையினருக்கு திறமையான பேச்சின்மூலம் எதையும் வெற்றிகரமாக செய்து முடித்து ஆதாயம் அடைவீர்கள். எதிர்ப்புகள் குறையும். பணவரத்து கூடும்.

மாணவர்களுக்கு சோம்பேறித்தனத்தை விட்டுவிட்டு பாடங்களை நன்கு படிப்பது வெற்றிக்கு வழிவகுக்கும்.

அதிர்ஷ்ட கிழமைகள்: புதன், வெள்ளி
பரிகாரம்: அருகிலிருக்கும் பெருமாள் கோயிலில் உள்ள கருடாழ்வாரை வணங்கவும்.
***********

ரிஷபம் (கார்த்திகை 2, 3, 4 பாதம், ரோகிணி, மிருக சிரீஷம் 1, 2, பாதம்)

கிரகநிலை:
ராசியில் செவ்வாய், ராகு - ரண ருண ரோக ஸ்தானத்தில் சந்திரன் - களத்திர ஸ்தானத்தில் கேது - பாக்கிய ஸ்தானத்தில் புதன், குரு, சனி - தொழில் ஸ்தானத்தில் சூர்யன், சுக்ரன் - என கிரகங்கள் வலம் வருகின்றன.

பலன்கள்:

இந்த வாரம் அறிவுத்திறன் அதிகரிக்கும்.

உங்களது பேச்சு மற்றவரை மயக்குவதுபோல் இருக்கும். ருசியான உணவை உண்டு மகிழ்வீர்கள். சாமர்த்தியமாக காரியங்களைச் செய்து வெற்றி பெறுவீர்கள்.

தொழில் வியாபாரம் முன்னேற்றம் காணும். தொழில் வளர்ச்சிக்காக சில திட்டங்களைச் செயல்படுத்த முடிவெடுப்பீர்கள். பணவரத்து திருப்தி தரும். வியாபார ஸ்தலத்திற்காக புதிதாக இடம் வாங்குவீர்கள்.

உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு செயல்திறமை கூடும். பயணங்களும் செல்ல நேரிடலாம். பணி நிமித்தமாக அலைய வேண்டியதிருக்கும். குடும்பத்தில் சிறிது நிம்மதிக் குறைவு ஏற்படலாம். சுற்றத்தினர் வருகை இருக்கும்.

கணவன் மனைவிக்கிடையே சிறிது பிணக்கு வரலாம். பிள்ளைகள் மூலம் மனமகிழ்ச்சி ஏற்படும். குடும்ப வருமானம் அதிகரிக்கும். பெண்களுக்கு அறிவுத்திறன் அதிகரிக்கும்.

இனிமையான வார்த்தைகளால் சிக்கலான காரியத்தைக் கூட எளிதாக செய்து முடிப்பீர்கள். கலைத்துறையினருக்கு பணவரத்து இருக்கும். எடுத்த முடிவை செயல்படுத்தும் முன் ஒருமுறைக்கு இருமுறை ஆலோசிப்பது நல்லது.

எந்தவொரு காரியத்திலும் அவசர முடிவு எடுக்கத் தூண்டும். அரசியல் துறையினருக்கு வீண் அலைச்சலுக்குப் பிறகே எந்தக் காரியமும் நடந்து முடியும்.

வேலை தொடர்பாக அலைய வேண்டி இருக்கும். வரவேண்டிய பாக்கிகள் தாமதமாக வந்து சேரும்.

மாணவர்களுக்கு கல்வியில் முன்னேற்றம் உண்டாகும். எதிர்காலத்தை கருத்தில் கொண்டு சில திட்டங்களை ஆலோசிப்பீர்கள்.

அதிர்ஷ்ட கிழமைகள்: ஞாயிறு, திங்கள், வியாழன்
பரிகாரம்: சிவன் கோயிலை வலம் வருவது நன்மைகளைத் தரும்.
****************

மிதுனம் (மிருக சிரீஷம் 3, 4 பாதங்கள் திருவாதிரை, புனர்பூசம் 1, 2, 3 பாதம்)

கிரகநிலை:
பஞ்சம பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் சந்திரன் - ரண ருண ரோக ஸ்தானத்தில் கேது - அஷ்டம ஸ்தானத்தில் புதன், குரு, சனி - பாக்கிய ஸ்தானத்தில் சூர்யன், சுக்ரன் - அயன சயன போக ஸ்தானத்தில் செவ்வாய், ராகு என கிரகங்கள் வலம் வருகின்றன.

பலன்கள்:
இந்த வாரம் எதிர்பார்த்த பணம் கிடைக்கும்.

பாக்கியஸ்தானத்தில் கேது இருக்கிறார். தொழில் ஸ்தானத்தை சூரியன் பார்க்கிறார். நீண்ட நாட்களாக முயற்சி செய்த காரியங்கள் வெற்றியைத் தரும்.

வாகனங்கள் வாங்கும் யோகம் உண்டாகும். சிலருக்கு மருத்துவச் செலவு ஏற்படும். வீட்டை விட்டு வெளியில் தங்க நேரிடும். தொழில் வியாபாரம் நிதானமாக நடக்கும். கடன் விவகாரங்களில் கவனம் தேவை. தொழில் தொடர்பான காரியங்கள் தாமதமாக நடக்கும்.

உத்தியோகத்தில் இருப்பவர்கள் பயந்து வேலை செய்ய வேண்டி இருக்கும். குடும்பத்தில் உறவினருடன் கருத்துவேறுபாடு உண்டாகலாம். வீட்டில் உள்ள பொருட்களை கவனமாகப் பார்த்துக் கொள்வது நல்லது. சொத்து விவகாரங்களில் கவனம் தேவை.

கணவன் மனைவிக்கிடையில் இருந்த இடைவெளி குறையும். பிள்ளைகள் நலனில் கவனம் செலுத்துவீர்கள். உறவினர்கள் - நண்பர்களிடம் கருத்து வேறுபாடுகள் ஏற்படலாம்.

பெண்களுக்கு எதிர்பாராத செலவு உண்டாகும். எதிர்பார்த்த காரிய வெற்றி கிடைக்கும். சுப நிகழ்ச்சிகள் ஏற்பாடுகள் நடக்கும். கலைத்துறையினருக்கு திடீர் செலவுகள் ஏற்படலாம். வெளிவட்டார பழக்க வழக்கங்களை குறைத்துக் கொள்வது நல்லது.

அரசியல் துறையினருக்கு எந்த காரியத்திலும் அவசர முடிவு எடுக்காமல் இருப்பதும் வீண் வாக்குவாதங்களைத் தவிர்ப்பதும் நல்லது.
மாணவர்களுக்கு கல்விக்கான பணிகளில் தாமதம் உண்டாகும். உழைப்பு அதிகரிக்கும்.

அதிர்ஷ்ட கிழமைகள்: ஞாயிறு, செவ்வாய்
பரிகாரம்: பெருமாளுக்கு நல்லெண்ணெய் மற்றும் நெய் கலந்து விளக்கு ஏற்றி வழிபடவும்.
******************

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

 
x