Published : 25 Feb 2021 09:36 am

Updated : 25 Feb 2021 09:36 am

 

Published : 25 Feb 2021 09:36 AM
Last Updated : 25 Feb 2021 09:36 AM

​​​​​​​துலாம், விருச்சிகம், தனுசு ; வார ராசிபலன்கள்; பிப்ரவரி 25ம் தேதி முதல் மார்ச் 3ம் தேதி வரை

vaara-rasipalangal

- பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்

துலாம் (சித்திரை 3, 4 பாதம், சுவாதி, விசாகம் 1, 2, 3ம் பாதம்)


கிரகநிலை:
தன வாக்கு குடும்ப ஸ்தானத்தில் கேது - சுக ஸ்தானத்தில் புதன், குரு, சனி - பஞ்சம பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் சூர்யன், சுக்கிரன் - அஷ்டம ஆயுள் ஸ்தானத்தில் செவ்வாய், ராகு என கிரக நிலை அமைந்திருக்கிறது
பலன்:

இந்த வாரம் தன்னம்பிக்கை அதிகரிக்கும். துணிச்சலுடன் செயல்பட்டு எடுத்த காரியத்தை சிறப்பாக செய்து முடிப்பீர்கள்.

பணவரத்து இருக்கும். இடமாற்றம். வெளியூர் பயணங்கள், அலைச்சல் ஆகியவை இருக்கும். தொழில் வியாபாரம் முன்னேற்றப் பாதையில் செல்லும்.

அரசு தொடர்பான காரியங்களில் சாதகமான பலன் கிடைக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு கட்டளை இடுகின்ற பதவி கிடைக்கும். புதிய வேலைக்கு முயற்சி செய்கிறவர்களுக்கு வேலை கிடைக்கும்.

குடும்பத்தில் மகிழ்ச்சியான நிலை காணப்படும். யாரிடமும் எதிர்த்துப் பேசி விரோதத்தை வளர்த்துக் கொள்ளாமல் இருப்பது நன்மை தரும். கணவன் மனைவிக்கிடையே இருந்த பிரிவு நீங்கி ஒன்று சேர்வார்கள்.

பெண்களுக்கு எந்தச் செயலையும் தைரியமாக செய்து முடிப்பீர்கள். கலைத்துறையினருக்கு வீண் ஆசைகள் மனதில் தோன்றும்.

அரசியல்வாதிகளுக்கு காரியங்களில் திடீர் தடை ஏற்படலாம். திட்டமிட்டு செய்வதன்மூலம் சாதகமான பலன் கிடைக்கும். மாணவர்களுக்கு கல்வியில் வெற்றி பெற வேண்டும் என்ற நோக்கத்தில் கஷ்டமான பாடங்களையும் மனம் துவளாமல் படிப்பீர்கள்.

அதிர்ஷ்ட கிழமைகள்: திங்கள், புதன், வெள்ளி
பரிகாரம்: நவக்கிரகங்களை வணங்க குடும்பப் பிரச்சினைகள் தீரும். காரியத் தடை விலகும்.
********************

விருச்சிகம் (விசாகம் 4ம் பாதம், அனுஷம், கேட்டை)

கிரகநிலை:
ராசியில் கேது - தைரிய வீர்ய ஸ்தானத்தில் புதன், குரு, சனி - சுக ஸ்தானத்தில் சூர்யன், சுக்கிரன் - சப்தம களத்திர ஸ்தானத்தில் செவ்வாய், ராகு என கிரக நிலை அமைந்திருக்கிறது

பலன்:
இந்த வாரம் நற்பெயரும் புகழும் உண்டாகும்.

புண்ணிய காரியங்களில் ஈடுபாடு இருக்கும். வாழ்க்கையில் எதிர்பாராத திருப்பங்களை சந்திக்க நேரலாம். எப்படிப்பட்ட பிரச்சினை வந்தாலும் சமாளித்துவிடும் திறமை இருக்கும்.

தொழில் வியாபாரத்தில் ஈடுபட்டு இருப்பவர்கள் வியாபார வளர்ச்சிக்காக துணிச்சலுடன் சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள்.
உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு முன்னேற வாய்ப்புகள் வந்து சேரும். சக ஊழியர்கள் மேல் அதிகாரிகளின் ஆதரவுடன் பணிகளை திறமையாக செய்து முடிப்பீர்கள். குடும்பத்தில் நெருக்கம் அதிகரிக்கும்.

குடும்பத்தினரின் செயல்பாடுகள் திருப்திகரமாக இருக்கும். மனவருத்தத்துடன் சென்ற உறவினர்கள் வருத்தம் நீங்கி மீண்டும் வந்து சேருவார்கள். பெண்களுக்கு எந்த பிரச்சனை வந்தாலும் அதை சமாளிக்கும் திறமை உண்டாகும்.

கலைத்துறையினருக்கு பணிகளில் கவலைகள் இருந்தாலும் நிறைவாக முடியும். அரசியல்வாதிகளுக்கு தேவையற்ற பிரச்சினைகளில் தலையிடாமல் இருப்பது நல்லது. மனோதிடம் உண்டாகும்.

மாணவர்களுக்கு கல்வியில் முன்னேற்றம் காணப்படும். விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி வாய்ப்பு உண்டாகும்.

அதிர்ஷ்ட கிழமைகள்: திங்கள், செவ்வாய்
பரிகாரம்: மாரியம்மனை தீபம் ஏற்றி வழிபட காரியத் தடை தாமதம் முதலானவை நீங்கும். குடும்பத்தில் இருக்கும் குழப்பம் நீங்கும்.
**************

தனுசு (மூலம், பூராடம், உத்திராடம் 1ம் பாதம்)

கிரகநிலை:
தன வாக்கு குடும்ப ஸ்தானத்தில் புதன், குரு, சனி - தைரிய வீர்ய ஸ்தானத்தில் சூர்யன், சுக்கிரன் - ரண ருண ரோக ஸ்தானத்தில் செவ்வாய், ராகு - விரய ஸ்தானத்தில் கேது என கிரக நிலை அமைந்திருக்கிறது.

பலன்:
இந்த வாரம் மனக்குழப்பம் உண்டாகலாம்.

பொருட்களை கவனமாக பார்த்துக் கொள்வது நல்லது. அடுத்தவருடன் சில்லறைச் சண்டைகள் ஏற்படலாம். வயிறு தொடர்பான நோய் ஏற்படலாம். பணவரத்து இருக்கும். பயணங்கள் மகிழ்ச்சி தருவதாக இருக்கும்.

தொழில் வியாபாரத்தில் ஈடுபட்டு இருப்பவர்கள் கடுமையாக உழைக்க வேண்டி இருக்கும். பழைய பாக்கிகள் வசூலாகும்.
உத்தியோகத்தில் இருப்பவர்கள் சக ஊழியர்களுடன் வாக்குவாதங்களைத் தவிர்ப்பது நல்லது. குடும்பத்தில் இருப்பவர்களின் செயல்பாடுகள் உங்களுக்கு கோபத்தை தூண்டுவதாக இருக்கலாம்.

அனுசரித்துச் செல்வது நல்லது. கருத்து வேறுபாடு ஏற்பட்டு நீங்கும். பெண்களுக்கு காரியத் தடையால் மனக்குழப்பம், டென்ஷன் உண்டாகலாம்.
கலைத்துறையினருக்கு நட்பு வகையில் நிதானத்தை கடைபிடிப்பது நல்லது. அரசியல்வாதிகளுக்கு எதிர்பார்த்த பண உதவி கிடைக்கும்.

மாணவர்களுக்கு யாரிடமும் வாக்குவாதம் செய்யாமல் அனுசரித்துச் செல்வது நல்லது. மிகவும் கவனமாக பாடங்களைப் படிப்பது வெற்றிக்கு உதவும்.

அதிர்ஷ்ட கிழமைகள்: ஞாயிறு, வியாழன், வெள்ளி
பரிகாரம்: முன்னோர்களை வணங்கி வர மனஅமைதி உண்டாகும். பசுவுக்கு அகத்திக்கீரை வழங்குங்கள். எல்லோரும் உங்களிடம் அன்புடன் நடந்து கொள்வார்கள்.
***************

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.

தவறவிடாதீர்!வார ராசிபலன்கள்பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்S​​​​​​​துலாம்விருச்சிகம்தனுசு ; வார ராசிபலன்கள்; பிப்ரவரி 25ம் தேதி முதல் மார்ச் 3ம் தேதி வரைThulamViruchigamDhanusuVaara rasipalangalRasipalangal

Sign up to receive our newsletter in your inbox every day!

More From This Category

More From this Author

x