Published : 25 Feb 2021 09:12 am

Updated : 25 Feb 2021 09:12 am

 

Published : 25 Feb 2021 09:12 AM
Last Updated : 25 Feb 2021 09:12 AM

கடகம், சிம்மம், கன்னி; வார ராசிபலன்கள்; பிப்ரவரி 25ம் தேதி முதல் மார்ச் 3ம் தேதி வரை

vaara-rasipalangal

- பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்
.
கடகம் (புனர் பூசம் 4ம் பாதம், பூசம், ஆயில்யம்)

கிரகநிலை:


பஞ்சம பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் கேது - சப்தம களத்திர ஸ்தானத்தில் புதன், குரு, சனி - அஷ்டம ஆயுள் ஸ்தானத்தில் சூர்யன், சுக்கிரன் - லாப ஸ்தானத்தில் செவ்வாய், ராகு என கிரக நிலை அமைந்திருக்கிறது.

பலன்:
இந்த வாரம் எடுத்த காரியத்தை முடிப்பதை குறிக்கோளாகக் கொண்டு செயலாற்றுவீர்கள்.

பணவரத்து இருக்கும். மனக்கவலை நீங்கும். சாமர்த்தியமான பேச்சு இக்கட்டான நேரங்களில் கைகொடுக்கும். புதிய நண்பர்களின் சேர்க்கையும் அவர்களால் உதவியும் கிடைக்கும்.

தொழில் வியாபாரம் தொடர்பான பணிகள் தடையின்றி நடக்கும். போட்டிகள் குறையும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் பணிச்சுமை குறைந்து மன நிம்மதி அடைவார்கள்.

குடும்பத்தில் குடும்ப உறுப்பினர்களிடம் வாக்குவாதத்தை தவிர்ப்பது நன்மை தரும். கணவன், மனைவிக்கிடையே ஒற்றுமை உண்டாகும்.
பெண்களுக்கு காரியங்களில் ஏற்பட்ட தடை நீங்கி திருப்தியாக நடந்து முடியும். கலைத்துறையினருக்கு ஆன்மிக நாட்டம் அதிகரிக்கும்.
அரசியல்வாதிகள் எதிலும் கூடுதல் கவனத்துடன் செயல்படுவது நல்லது. மாணவர்களுக்கு கல்வி தொடர்பான விஷயங்களில் இருந்த போட்டிகள் குறையும். எதிர்காலம் பற்றிய சிந்தனை மேலோங்கும்.

அதிர்ஷ்ட கிழமைகள்: திங்கள், புதன்
பரிகாரம்: அம்மனை வணங்கி வாருங்கள். எல்லா நன்மைகளும் உண்டாகும். கவலைகள் நீங்கும். மனோ தைரியம் கூடும்.
***************

சிம்மம் (மகம், பூரம், உத்திரம் 1ம் பாதம்)

கிரகநிலை:

சுக ஸ்தானத்தில் கேது - ரண ருண ரோக ஸ்தானத்தில் புதன், குரு, சனி - சப்தம களத்திர ஸ்தானத்தில் சூர்யன், சுக்கிரன் - தொழில் கர்ம ஜீவன ஸ்தானத்தில் செவ்வாய், ராகு என கிரக நிலை அமைந்திருக்கிறது.

பலன்:
இந்த வாரம் காரிய தாமதம், உடல் சோர்வு, வீண்பகை ஆகியவை நீங்கும். உங்களை கண்டும் உங்கள் வளர்ச்சியைக் கண்டும் அடுத்தவர் பொறாமை படக்கூடும்.

தொழில் வியாபாரம் தொடர்பான காரியங்களுக்காக அலைய வேண்டி இருக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் மேல் அதிகாரிகளை அனுசரித்துச் செல்வதன் மூலம் நன்மைகள் கிடைக்கப் பெறுவார்கள்.

குடும்பத்தில் இருப்பவர்களின் செயல்களால் டென்ஷன் உண்டாகலாம். கோபமான பேச்சை விடுத்து அமைதியாக எதையும் எடுத்துச் சொல்வது நல்லது. பிள்ளைகளின் நலனுக்காக செலவு செய்ய வேண்டி இருக்கும்.

பெண்களுக்கு மன அமைதி பாதிக்கும்படியான சூழ்நிலை இருக்கும். திடீர் செலவு உண்டாகும். கலைத்துறையினருக்கு வெளியூர் பயணம் அதன் மூலம் அலைச்சல் உண்டாகலாம்.

அரசியல்வாதிகள் மற்றவர்களுக்கு உதவிகள் செய்யும்போது ஆலோசித்துச் செய்வது நல்லது. மாணவர்களுக்கு பாடங்களை மிகவும் கவனமாக படிப்பது கூடுதல் மதிப்பெண் பெற உதவும். சக மாணவர்களுடன் அனுசரித்துச் செல்வது நல்லது.

அதிர்ஷ்ட கிழமைகள்: ஞாயிறு, வியாழன், வெள்ளி
பரிகாரம்: நந்தீஸ்வரரையும், சிவனையும் வணங்க எல்லா இடையூறும் விலகும். முற்பிறவி பாவம் நீங்கும்.
**************


கன்னி (உத்திரம் 2, 3, 4 பாதம், அஸ்தம், சித்திரை 1, 2, பாதம்)

கிரகநிலை:

தைரிய வீர்ய ஸ்தானத்தில் கேது - பஞ்சம பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் புதன், குரு, சனி - ரண ருண ரோக ஸ்தானத்தில் சூர்யன், சுக்கிரன் - பாக்கிய ஸ்தானத்தில் செவ்வாய், ராகு என கிரக நிலை அமைந்திருக்கிறது.

பலன்:
இந்த வாரம் நோய் நீங்கி உடல் ஆரோக்கியம் உண்டாகும். மற்றவர்களுக்கு உதவிகள் செய்வதன் மூலம் நன்மதிப்பு பெறுவீர்கள். உங்களுடன் கருத்து வேற்றுமை ஏற்பட்டு பிரிந்து சென்றவர்கள் மீண்டும் உங்களை நாடி வருவார்கள்.

தொழில் வியாபாரம் தொடர்பான காரியங்களில் சாதகமான பலன் கிடைக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் அலுவலக பணிகளை சிரமமின்றி செய்து முடிப்பார்கள். பயணங்கள் செல்ல வேண்டி இருக்கும்.

குடும்பத்தில் சகஜநிலை காணப்படும். சுமுக உறவு இருக்கும். வீட்டிற்குத் தேவையான ஆடை அணிகலன்கள் வாங்கி கொடுப்பீர்கள். பெண்களுக்கு பணவரத்து திருப்தி தரும். காரிய அனுகூலம் உண்டாகும்.

கலைத்துறையினருக்கு எளிதில் முடிய வேண்டிய காரியம் கூட தாமதமாகலாம். சூரியன் சஞ்சாரத்தால் அரசியல்வாதிகளுக்கு மனதில் தைரியம் உண்டாகும்.

மாணவர்களுக்கு கல்வி தொடர்பான செலவு கூடும். கல்வியில் முன்னேற வேண்டும் என்பதை குறிக்கோளாக கொண்டு பாடங்களை படிப்பீர்கள்.

அதிர்ஷ்ட கிழமைகள்: திங்கள், புதன், வியாழன்
பரிகாரம்: குலதெய்வத்தை வணங்கி வர எல்லா நன்மைகளும் உண்டாகும். எதிர்ப்புகள் அகலும்.
***************

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.

தவறவிடாதீர்!கடகம்சிம்மம்கன்னி; வார ராசிபலன்கள்; பிப்ரவரி 25ம் தேதி முதல் மார்ச் 3ம் தேதி வரைகன்னிவார ராசிபலன்கள்ராசிபலன்கள்பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்KadagamSimmamKanniVaara rasipalangalRasipalangal

Sign up to receive our newsletter in your inbox every day!

More From This Category

More From this Author

x