Published : 25 Feb 2021 08:52 am

Updated : 25 Feb 2021 08:52 am

 

Published : 25 Feb 2021 08:52 AM
Last Updated : 25 Feb 2021 08:52 AM

மேஷம், ரிஷபம், மிதுனம்; வார ராசிபலன்கள்; பிப்ரவரி 25ம் தேதி முதல் மார்ச் 3ம் தேதி வரை

vaara-rasipalangal

- பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்


மேஷம் (அஸ்வினி, பரணி, கார்த்திகை 1ம் பாதம்)


கிரகநிலை:

தன வாக்கு குடும்ப ஸ்தானத்தில் செவ்வாய், ராகு - அஷ்டம ஆயுள் ஸ்தானத்தில் கேது - தொழில் கர்ம ஜீவன ஸ்தானத்தில் புதன், குரு, சனி - லாப ஸ்தானத்தில் சூர்யன், சுக்கிரன் என கிரக நிலை அமைந்திருக்கிறது.

பலன்:
இந்த வாரம் ராசிநாதன் செவ்வாய் புத்தி சாதுர்யத்துடன் காரியங்களைச் செய்து மற்றவர்களின் பாராட்டைப் பெறுவீர்கள்.
பணவரவு இருக்கும். எதிர்ப்புகள் விலகும். எந்தக் காரியம் செய்தாலும் அதிலுள்ள தடைகளை சமாளிப்பீர்கள். புதிய நபர்களின் நட்பு உண்டாகும்.

வீடு வாகனம் தொடர்பான விஷயங்களில் இருந்து வந்த சுணக்க நிலை மாறும். தொழில் வியாபாரத்தில் லாபகரமான போக்கு காணப்படும். வியாபாரம் தொடர்பான பயணங்களை திட்டமிட்டபடி மேற்கொள்வீர்கள்.

உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு அலுவலக வேலைகளால் இருந்த டென்ஷன் நீங்கும். சக ஊழியர்களின் ஒத்துழைப்பு இருக்கும். குடும்பத்தில் இருப்பவர்களால் நிம்மதிக் குறைவு உண்டாகலாம்.

முக்கியமான காரியங்களில் நல்ல முடிவு எடுக்க முடியும். பெண்களுக்கு வாக்குவாதங்கள் அடுத்தவர் பற்றிய விமர்சனங்கள் முதலானவற்றைத் தவிர்ப்பது நல்லது. கலைத்துறையினருக்கு எல்லோரையும் எளிதில் வசீகரிக்கும் திறமை அதிகரிக்கும்.

அரசியல்வாதிகளுக்கு முட்டுக்கட்டை போட்டவர்கள் விலகி விடுவார்கள். மாணவர்களுக்கு கல்வி பற்றிய கவலை அதிகரிக்கும். திடமான மனதுடன் படிப்பது வெற்றியைத் தரும்.

அதிர்ஷ்ட கிழமைகள்: ஞாயிறு, செவ்வாய், வியாழன்
பரிகாரம்: செவ்வாய்கிழமையில் அங்காரகனுக்கு தீபம் ஏற்றி வணங்கி வர எல்லா நன்மைகளும் உண்டாகும். மனோ பயம் விலகும்.
*************

ரிஷபம் (கார்த்திகை 2, 3, 4 பாதம், ரோகிணி, மிருக சிரீஷம் 1, 2, பாதம்)

கிரகநிலை:
ராசியில் செவ்வாய், ராகு - சப்தம களத்திர ஸ்தானத்தில் கேது - பாக்கிய ஸ்தானத்தில் புதன், குரு, சனி - தொழில் கர்ம ஜீவன ஸ்தானத்தில் சூர்யன், சுக்கிரன் என கிரக நிலை அமைந்திருக்கிறது.

பலன்:
இந்த வாரம் தனாதிபதி புதன் சஞ்சாரத்தால் பணவரத்து கூடும். சாமர்த்தியமான செயல்களால் மதிப்பும், அந்தஸ்தும் உயரும். மனக்கவலை நீங்கும்படியான சூழ்நிலை இருக்கும்.

உற்சாகம் உண்டாகும். பயணத்தின்போது ஏற்பட்ட தடங்கல் நீங்கும். தொழில் வியாபாரம் லாபகரமாக நடக்கும். தன்னம்பிக்கையுடன் செயல்பட்டு முன்னேற்றம் காண்பீர்கள்.

உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பணிகளை விரைந்து முடிக்கத் தேவையான உதவிகள் கிடைக்கும். புதிய வேலை தொடர்பாக மேற்கொள்ளும் முயற்சிகளில் சாதகமான பலன் கிடைக்கும்.

குடும்பத்தில் இருப்பவர்கள் உங்களை அனுசரித்துச் செல்வார்கள். நீண்ட நாட்களாக இருந்த பிரச்சினைகள் தீரும்.

பெண்களுக்கு கொடுக்கல்வாங்கலில் கவனம் தேவை. கலைத்துறையினருக்கு இருந்த போட்டிகள் அகலும். தடைப்பட்ட பண உதவி கிடைக்கும். அரசியல்வாதிகளுக்கு நீங்கள் செய்யும் காரியங்களுக்கு இருந்த தடை நீங்கும்.

மாணவர்களுக்கு கல்வியில் வெற்றி பெறுவோம் என்ற தன்னம்பிக்கை அதிகரிக்கும்.

அதிர்ஷ்ட கிழமைகள்: புதன், வெள்ளி
பரிகாரம்: மகாலட்சுமியை வணங்க செல்வம் சேரும். மனமகிழ்ச்சி உண்டாகும். குடும்பப் பிரச்சினை தீரும்.
***************************

மிதுனம் (மிருக சிரீஷம் 3, 4 பாதங்கள் திருவாதிரை, புனர்பூசம் 1, 2, 3 பாதம்)

கிரகநிலை:
ரண ருண ரோக ஸ்தானத்தில் கேது - அஷ்டம ஆயுள் ஸ்தானத்தில் புதன், குரு, சனி - பாக்கிய ஸ்தானத்தில் சூர்யன், சுக்கிரன் - விரைய ஸ்தானத்தில் செவ்வாய், ராகு என கிரக நிலை அமைந்திருக்கிறது.

பலன்:

இந்த வாரம் எதிலும் கவனமாக இருப்பது நல்லது.

ஏதேனும் மனக்கஷ்டம் உண்டாகும். வீண்செலவு ஏற்படும். உடல்சோர்வு வரலாம். ஆனாலும் மனோதைரியம் கூடும். தன்னம்பிக்கை அதிகரிக்கும். முயற்சிகள் சாதகமான பலன் தரும்.

தொழில் வியாபாரத்தில் முன்னேற்றமடைய பாடுபடுவீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்கள் பணி நிமித்தமாக அலைய வேண்டி இருக்கும். அதற்கான ஊதியமும் கிடைக்கும்.

குடும்பத்தில் நிம்மதி குறையும்படியான சூழ்நிலை வரலாம். எதிலும் விட்டுக் கொடுத்துச் செல்வது நல்லது. வாக்குவாதங்களைத் தவிர்ப்பது நல்லது. பிள்ளைகளிடம் அன்பாக நடந்து கொள்வது அவர்களின் வெற்றிக்கு உதவும்.

பெண்களுக்கு மனோ தைரியம் கூடினாலும் பழைய சம்பவங்களின் நினைவால் மனமகிழ்ச்சி குறையும். கலைத்துறையினருக்கு நீண்ட நாட்களாக இழுபறியாக இருந்த ஒரு வேலையை செய்து முடிப்பீர்கள்.

அரசியல்வாதிகளுக்கு தேவையான நிதியுதவி கிடைக்கும் வாய்ப்பு உள்ளது. மாணவர்களுக்கு பாடங்களைப் படிப்பதில் அக்கறை தேவை. திட்டமிட்டபடி செயல்பட முடியாத வகையில் தடங்கல்கள் ஏற்படலாம்.

அதிர்ஷ்ட கிழமைகள்: திங்கள், புதன்
பரிகாரம்: கருமாரியம்மனை வணங்க எல்லா பிரச்சினைகளும் தீரும். குடும்பத்தில் அமைதி உண்டாகும்.
****************

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.

தவறவிடாதீர்!



மேஷம்ரிஷபம்மிதுனம்; வார ராசிபலன்கள்; பிப்ரவரி 25ம் தேதி முதல் மார்ச் 3ம் தேதி வரைமிதுனம்வார ராசிபலன்கள்ராசிபலன்கள்பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்RasipalangalPalangalMeshamRishabamMidhunam

Sign up to receive our newsletter in your inbox every day!

More From This Category

More From this Author

x