Published : 11 Feb 2021 11:47 am

Updated : 11 Feb 2021 11:47 am

 

Published : 11 Feb 2021 11:47 AM
Last Updated : 11 Feb 2021 11:47 AM

மகரம், கும்பம், மீனம் ; வார ராசிபலன்கள், பிப்ரவரி 11 முதல் 17ம் தேதி வரை

vaara-rasipalangal

- பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்
மகரம்
(உத்திராடம் 2, 3, 4 பாதம், திருவோணம், அவிட்டம் 1,2 பாதம்)

கிரகநிலை:


ராசியில் சூர்யன், புதன், குரு, சுக்கிரன், சனி - சுக ஸ்தானத்தில் செவ்வாய் - பஞ்சம பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் ராகு - லாப ஸ்தானத்தில் கேது - விரய ஸ்தானத்தில் சுக்கிரன் என கிரகநிலை அமைந்திருக்கிறது.

12ம் தேதி சூரிய பகவான் தனவாக்கு குடும்ப ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

இந்த வாரம் எடுத்த காரியத்தைச் சிறப்பாக செய்து முடிப்பீர்கள். கொடுத்த வாக்கைக் காப்பாற்றுவீர்கள். மற்றவர்களின் பிரச்சினைகளுக்கு வலியசென்று உதவிகள் செய்வதைத் தவிர்ப்பது நல்லது.

விருப்பம் இல்லாத இடமாற்றம் உண்டாகலாம். தொழில் வியாபாரம் முன்னேற்றம் காண மிகவும் கடுமையாக உழைக்க வேண்டி இருக்கும்.
பார்ட்னர்களுடன் அனுசரித்துச் செல்வது நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்கள் எதிர்பார்த்தபடி பணிகள் முடியாமல் மனசங்கடத்திற்கு ஆளாக நேரிடும்.

குடும்பத்தில் இருப்பவர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்ய பாடுபடுவீர்கள். கணவன் மனைவிக்கிடையே வெளியில் சொல்ல முடியாத மனக்குறைகள் வரலாம்.

பிள்ளைகள் கல்வி மற்றும் அவர்கள் எதிர்காலம் பற்றிய கவலை ஏற்பட்டு நீங்கும். பெண்களுக்கு விருப்பம் இல்லாமல் பயணம் செல்ல நேரிடலாம். கலைத்துறையினருக்கு பொருளாதாரம் அதிகரிக்கும்.

அரசியல்துறையினருக்கு வாக்குவன்மை ஏற்படும். மாணவர்களுக்கு விளையாட்டில் ஆர்வம் அதிகரிக்கும். பாடங்கள் எளிமையாகத் தோன்றினாலும் கவனமாகப் படிப்பது அவசியம்.

பரிகாரம்: சனிக்கிழமையில் சனிபகவானை வணங்கி வாருங்கள். காரியத் தடை, எதிர்ப்புகள் அகலும். உழைப்புக்கு ஏற்ற ஊதியம் கிடைக்கும்.

******************

கும்பம்
(அவிட்டம் 3, 4 பாதம், சதயம், பூரட்டாதி 1, 2, 3 பாதம்)

கிரகநிலை:

தைரிய ஸ்தானத்தில் செவ்வாய் - சுக ஸ்தானத்தில் ராகு - தொழில் ஸ்தானத்தில் கேது - லாப ஸ்தானத்தில் சுக்கிரன் - விரய ஸ்தானத்தில் சூர்யன், புதன், குரு, சுக்கிரன், சனி என கிரகநிலை அமைந்திருக்கிறது.

12ம் தேதி சூரிய பகவான் ராசிக்கு மாறுகிறார்.

இந்த வாரம் குறிக்கோளற்ற பயணங்கள் அதன் மூலம் அலைச்சல், உடல்நலக் கேடு போன்றவை ஏற்படலாம். எனவே திட்டமிட்டு எதையும் செய்வது நல்லது.

மனதில் வீண்கவலைகள் உண்டாகக் கூடும். அடுத்தவரை நம்பி எதையும் ஒப்படைப்பதைத் தவிர்ப்பது நல்லது. சுபசெலவுகள் ஏற்படும். தொழில் வியாபாரம் திட்டமிட்டபடி நடந்தாலும் சற்று நிதானமாக இருக்கும்.

சரக்குகளை வாடிக்கையாளர்களுக்கு அனுப்புவதில் தாமதம் ஏற்படலாம். போட்டிகள் தலைதூக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் கூடுதலான வேலைப் பளுவால் உடல் சோர்வடைவார்கள். குடும்பத்தில் இறுக்கமான சூழ்நிலை காணப்படும். மனதில் இருப்பதை வெளியில் சொல்லாமல் செயல்பாட்டின் மூலம் காட்டுவார்கள்.

கணவன் மனைவிக்கிடையில் இணக்கமான போக்கு காணப்படும். பெண்களுக்கு வீண்கவலைகள், எதிர்பாராத அலைச்சல் ஏற்படலாம். கலைத்துறையினர் எதையும் திட்டமிட்டுச் செய்வது நன்மை தரும்.

அரசியல்துறையினருக்கு புதிய முயற்சிகள் கை கொடுக்கும். மாணவர்களுக்கு கல்வி பற்றிய பயம் ஏற்பட்டு நீங்கும். தெளிவாக பாடங்களைப் படிப்பது நல்லது.

பரிகாரம்: விநாயக பெருமானை தேங்காய் உடைத்து தீபம் ஏற்றி வணங்கி வாருங்கள். வீண் அலைச்சல் குறையும். காரியத் தடை நீங்கும். கல்வி அறிவு அதிகரிக்கும்.
***********************


மீனம்
(பூரட்டாதி 4ம் பாதம், உத்திரட்டாதி, ரேவதி)

கிரகநிலை:

தனவாக்கு குடும்ப ஸ்தானத்தில் செவ்வாய் - தைரிய வீர்ய ஸ்தானத்தில் ராகு - பாக்கிய ஸ்தானத்தில் கேது - தொழில் ஸ்தானத்தில் சுக்கிரன் - லாப ஸ்தானத்தில் சூர்யன், புதன், குரு, சுக்கிரன், சனி என கிரகநிலை அமைந்திருக்கிறது.

12ம் தேதி சூரிய பகவான் விரய ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

இந்த வாரம் நிலுவையில் இருந்த பணம் வந்து சேரும். நீண்ட நாட்களாக வாங்க திட்டமிட்ட வாகனம் சொத்து மற்றும் வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள்.

பயணங்கள் சாதகமான பலன் தருவதாக இருக்கும். எதிர்பாராத அதிர்ஷ்டமும் கிடைக்கலாம். உடல் ஆரோக்யம் உண்டாகும். தெய்வ பக்தி அதிகரிக்கும்.

தொழில் வியாபாரம் சிறப்பாக நடக்கும். பழைய பாக்கிகள் வசூலாகும். எதிர்பார்த்த கடனுதவி கிடைக்கும். வியாபாரத்தை விரிவுபடுத்த முயற்சிகள் மேற்கொள்வீர்கள்.

உத்தியோகத்தில் இருப்பவர்கள் வேலைபளு குறைந்து மன மகிழ்ச்சியடைவார்கள். மேலதிகாரிகளின் உதவியும் ஆலோசனையும் கிடைக்கும்.
புதிய வேலைக்கான முயற்சிகளில் சாதகமான போக்கு காணப்படும். குடும்பத்தில் இதமான சூழ்நிலை காணப்படும். உறவினர்கள் வருகை அதனால் நன்மையும் இருக்கும்.

கணவன் மனைவிக்கு இடையே நெருக்கம் அதிகரிக்கும். பிள்ளைகளின் அறிவுத்திறன் அதிகரிக்கும்.

பெண்களுக்கு பயணங்களின் மூலம் நன்மை உண்டாகும். கலைத்துறையினருக்கு முயற்சிகள் நல்ல பலன் தரும்.

அரசியல்துறையினருக்கு பணவரத்து திருப்தி தரும். மாணவர்களுக்கு கல்வியில் முன்னேற்றம் காணப்படும். கஷ்டமாக தோன்றிய பாடங்களை எளிதாக படித்து முடிப்பீர்கள்.

பரிகாரம்: முருகப் பெருமானை வணங்கிவர எல்லா நன்மைகளும் உண்டாகும். தேவையான நேரத்தில் எதிர்பார்த்த உதவி கிடைக்கும்.
*****************************

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.

தவறவிடாதீர்!


மகரம்கும்பம்மீனம் ; வார ராசிபலன்கள்பிப்ரவரி 11 முதல் 17ம் தேதி வரைமீனம்வார ராசிபலன்கள்ராசிபலன்கள்பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்MagaramKumbumMeenamVaara rasipalangalRasipalangal

Sign up to receive our newsletter in your inbox every day!

More From This Category

More From this Author

x