Published : 28 Jan 2021 12:49 pm

Updated : 28 Jan 2021 12:49 pm

 

Published : 28 Jan 2021 12:49 PM
Last Updated : 28 Jan 2021 12:49 PM

கடகம், சிம்மம், கன்னி; வார ராசிபலன்கள்; ஜனவரி 28 முதல் பிப்ரவரி 3ம் தேதி வரை

vaara-rasipalangal

- பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்

கடகம் (புனர்பூசம் 4ம் பாதம், பூசம், ஆயில்யம்)


கிரகநிலை:

பஞ்சம பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் கேது - ரண ருண ரோக ஸ்தானத்தில் சுக்கிரன் - சப்தம ஸ்தானத்தில் சூர்யன், புதன், குரு, சனி - தொழில் ஸ்தானத்தில் செவ்வாய் - லாப ஸ்தானத்தில் ராகு என கிரகநிலை அமைந்திருக்கிறது.

30ம் தேதி சுக்கிர பகவான் சப்தம ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

இந்த வாரம் எல்லா முயற்சிகளும், காரியங்களும் சாதகமான பலன்களைத் தரும்.

பணவரத்து அதிகரிக்கும். கடினமான வேலைகளையும் எளிதாகச் செய்து முடிக்கும் திறமை உண்டாகும். மனதில் இருந்த தயக்கம், பயம் நீங்கும்.

வெளியூர், வெளிநாடு பயணங்கள் செல்ல எடுக்கும் முயற்சிகள் சாதகமான முடியும். தொழில் வியாபாரம் முன்னேற்ற மடையும். லாபம் அதிகரிக்கும். தேவையான பண உதவி கிடைக்கும்.

உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பதவி உயர்வும் கூடுதல் பொறுப்புகளும் கிடைக்கும். வரவேண்டிய பணம் வந்து சேரும். குடும்பத்தில் மகிழ்ச்சியான நிலை காணப்படும். சுப காரியங்கள் நடக்கலாம்.

சகோதரர்கள் மூலம் உதவிகள் கிடைக்கும். கணவன் மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும். சந்தோஷமாக காணப்படுவார்கள். குழந்தைகள் மூலம் பெருமை கிடைக்கும்.

பெண்களுக்கு எந்த வேலையையும் எளிதாக செய்து விடுவீர்கள். கலைத்துறையினருக்கு சக கலைஞர்களைப் பகைத்துக் கொள்ளாமல் சுமுகமாகப் பழகி வருவது அவசியம். வெளியூர்ப் பயணங்களின்போது கவனம் தேவை.

அரசியல்வாதிகளுக்கு உங்களுக்குத் தரப்பட்டுள்ள பொறுப்புகளைத் திறம்பட நிறைவேற்றி தலைமையின் பாராட்டுகளைப்பெறுவது இப்போதைய நிலையில் மிகக் கடினமான இருக்ககக்கூடும்.

மாணவர்களுக்கு கல்வியில் கூடுதல் கவனம் செலுத்துவது நன்மைகளைத் தரும். திறமை வெளிப்படும்.

அதிர்ஷ்ட கிழமைகள்: திங்கள், புதன்
திசைகள்: வடக்கு, வடமேற்கு
நிறங்கள்: வெள்ளை, வெளிர்பச்சை
எண்கள்: 2, 5
பரிகாரம்: பிரத்தியங்கரா தேவியை வணங்கி வர எதிர்ப்புகள் விலகும். மனோ தைரியம் அதிகரிக்கும்.
************************

சிம்மம் (மகம், பூரம், உத்திரம் 1ம் பாதம்)

கிரகநிலை:

சுக ஸ்தானத்தில் கேது - பஞ்சம பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் சுக்கிரன் - ரண ருண ரோக ஸ்தானத்தில் சூர்யன், புதன், குரு, சனி - பாக்கிய ஸ்தானத்தில் செவ்வாய் - தொழில் ஸ்தானத்தில் ராகு என கிரகநிலை அமைந்திருக்கிறது.

30ம் தேதி சுக்கிர பகவான் ரண ருண ரோக ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

இந்த வாரம் எதிலும் கவனமாக இருப்பது நல்லது.

காரியங்களில் தடை தாமதம் உண்டாகாமல் இருக்க எதையும் திட்டமிட்டுச் செய்வது நன்மைகளைத் தரும். எதிலும் தலையிடாமல் ஒதுங்கிச் சென்றாலும் மற்றவர்கள் வலிய வந்து உங்களையும் இழுப்பார்கள்.

வாகனங்களில் செல்லும்போது கவனம் தேவை. தொழில் வியாபாரம் இருந்த மந்தமாக நிலை மாறும். பழைய பாக்கிகள் வசூலாகும். வாடிக்கையாளர்களிடம் அனுசரித்துச் செல்வது நல்லது.

உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வீண் அலைச்சலும், வேலைப் பளுவும் ஏற்படலாம். குடும்பத்தில் இருப்பவர்களுடன் அனுசரித்துச் செல்வது நல்லது. கணவன் மனைவிக்கிடையே விட்டுக் கொடுத்து செல்வது நன்மைகளைத் தரும்.

பிள்ளைகளுக்காக அலைய வேண்டி இருக்கும். குடும்பத்திற்காக கூடுதலாக உழைக்க வேண்டி இருக்கும். பெண்களுக்கு மற்றவர்களின் பேச்சைக் கேட்டு எதிலும் ஈடுபடுவதைத் தவிர்ப்பது நல்லது.

கலைத்துறையினருக்கு பல முன்னணி நிறுவனங்கள் உங்களைத் தேடி வாய்ப்புகளைப் பெறுவீர்கள். உங்கள் திறமைகள் முழுவதையும் வெளிப்படுத்தி ஆதரவை பெருவாரியாகப் பெறுவீர்கள்.

அரசியல்வாதிகளுக்கு உங்கள் தன்னலமற்ற தொண்டுக்குப் பாரட்டுகள் குவியும். உங்கள் செல்வாக்கும் சொல்வாக்கும் உங்களூக்குத் தனி மரியாதையைப் பெற்றுத் தரும்.

மாணவர்களுக்கு கல்வி பற்றிய பயத்தை விலக்கி விட்டு ஆர்வமாக படிப்பது வெற்றிக்கு உதவும்.

அதிர்ஷ்ட கிழமைகள்: ஞாயிறு, வியாழன், வெள்ளி
திசைகள்: கிழக்கு, தெற்கு
நிறங்கள்: வெள்ளை, மஞ்சள்
எண்கள்: 1, 3, 6
பரிகாரம்: முருகப் பெருமானை வணங்கி வாருங்கள். காரியத் தடைகள் நீங்கும். குடும்பத்தில் அமைதி உண்டாகும்.
********************

கன்னி
(உத்திரம் 2, 3, 4 பாதம், அஸ்தம், சித்திரை 1, 2, பாதம்)

கிரகநிலை:

தைரிய ஸ்தானத்தில் கேது - சுக ஸ்தானத்தில் சுக்கிரன் - பஞ்சம பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் சூர்யன், புதன், குரு, சனி - அஷ்டம ஸ்தானத்தில் செவ்வாய் - பாக்கிய ஸ்தானத்தில் ராகு என கிரகநிலை அமைந்திருக்கிறது.

30ம் தேதி சுக்கிர பகவான் பஞ்சம பூர்வ புண்ணிய ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

இந்த வாரம் பணவரத்து, பொருள்வரத்து அதிகரிக்கும்.

கொடுத்த வாக்கைக் காப்பாற்றுவீர்கள். நண்பர்கள் மூலம் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். மற்றவர்களால் கைவிடப்பட்ட காரியத்தைச் செய்து முடிப்பீர்கள். அரசாங்கம் மூலம் நடக்க வேண்டிய காரியங்கள் அனுகூலமாக நடந்து முடியும்.

தொழில் வியாபாரத்திற்கு தேவையான பண உதவி கிடைக்கும். புதிய ஆர்டர்கள் கிடைப்பதில் சாதகமான நிலை காணப்படும்.

உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு விருப்பமில்லாத இடமாற்றம் உண்டாகலாம். குடும்பத்தில் இருந்த சண்டைகள் நீங்கும். கணவன் மனைவிக்கிடையே இருந்த இடைவெளி குறையும்.

திருமணம் தொடர்பாக எடுக்கும் முயற்சிகள் கைகூடும். வீட்டிற்குத் தேவையான பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். பிள்ளைகள் மகிழ்ச்சியாக காணப்படுவார்கள்.
பெண்களுக்கு எடுத்த காரியத்தை வெற்றிகரமாகச் செய்து முடிப்பீர்கள். கலைத்துறையினருக்கு பல முயற்சிக்குப் பிறகு புதிய வாய்ப்புகள் உங்களைத் தேடி வரும். சக கலைஞர்களின் போட்டி உங்கள் வாய்ப்புகளுக்கு சவாலாக இருக்கும்.

அரசியல்வாதிகளுக்கு உங்களுக்குத் தேவையற்ற வீண் சோதனைகள் வரலாம். உங்களைப் பாராட்டியவர்களே இப்போது தரக்குறைவாக பேசலாம்.
மாணவர்களுக்கு கல்வியில் இருந்த மந்தநிலை மாறும். சுறுசுறுப்பாக பாடங்களைப் படிப்பீர்கள்.

அதிர்ஷ்ட கிழமைகள்: திங்கள், புதன், வியாழன்
திசைகள்: தெற்கு, தென்கிழக்கு, வடகிழக்கு
நிறங்கள்: பச்சை, மஞ்சள்
எண்கள்: 2, 3, 5
பரிகாரம்: நவக்கிரகங்களை வணங்கி வாருங்கள். எல்லா நலன்களும் உண்டாகும். வாழ்வில் சுபிட்சம் ஏற்படும்.
**********************************

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.

தவறவிடாதீர்!கடகம்சிம்மம்கன்னி; வார ராசிபலன்கள்; ஜனவரி 28 முதல் பிப்ரவரி 3ம் தேதி வரைகன்னிவார ராசிபலன்கள்பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்KadagamSimmamKanniVaara rasipalangal

Sign up to receive our newsletter in your inbox every day!

More From This Category

More From this Author

x